சம்பக் சிப்லுங்கர் (ரித்தீஷ் தேஷ்முக்) டெல்லியிலிருந்து இருவரை அமர்த்தி ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கத் தேர்ந்தெடுத்த நாள் மோசமான நாளாக அமைகிறது. விநோதமான பிணைக்கைதிகள், போலீசாக இருப்பாரோ என்று ஐயப்பட வைக்கும் பாபா சேகல், கிறுக்கு சி பி ஐ அதிகாரி அம்ஜத் கான் (விவேக் ஆனந்த் ஓபிராய்), குற்ற நிருபர் காயத்ரி கங்குலியால் வழி நடத்தப்படும் மீடியா ஆகியோரால் நிலைமை மோசமாகிறது