குச் குச் ஹோத்தா ஹை பால்லிவுட்டில் மிகச்சிறப்பாக ஓடிய படம். வாழ்க்கையின் வெவ்வேறு தருணத்தில் நிகழ்ந்த இரு முக்கோண காதல் கதைகளை மைய்யமா வைத்து எடுத்தத் திரைப்படம். அஞ்சலி மற்றும் ராகுல் வாழ்க்கையில் டினா என்ற பெண் நுழைகிறார். அதற்கு பிறகு அவர்கள் வாழ்க்கை வேறு விதமாக மாறுகிறது. டினாவின் பெண் பிரிந்த இந்தக் காதலர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்குகிறார்.