உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

மைக் & மாலி

நிர்வாக தயாரிப்பாளர்களான சக் லோரி (தி பிக் பேங் தியரி), மார்க் ராபர்ட்ஸ் (டூ அன்ட் எ ஹாஃப் மென்) வழங்கும் காமெடியில், பில்லி கார்டெல், மெலிசா மெக்கார்த்தி சிக்காகோவின் உழைக்கும் வர்க்க ஜோடிகள் (காவல்துறை அதிகாரி, பள்ளி ஆசிரியை). ஓவர் ஈட்டர்ஸ் அனானிமஸ் கூட்டத்தில் சந்தித்து காதலிக்கிறார்கள். எதிர்பாராமல் சந்திக்கும் இவர்கள், தோழமைக்கான தங்கள் தேடல் தங்களை எங்கே இட்டு செல்கிறது என்பதைக் கண்டறிவர்.

நடித்தவர்கள்
ரெனோ வில்சன், காட்டி மிக்ஸன், க்ளியோ கிங்
வகைகள்
நகைச்சுவை
சப்டைட்டில்
English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
ஆடியோ
English
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (24)

 1. 1. விமானி

  Not available20 நிமிடங்கள்19 செப்டம்பர், 201016+சப்டைட்டில்

  தொடரின் பிரீமியர் பகுதியில், மாலி ஒரு ஓவர் ஈட்டர்ஸ் அனானிமஸ் கூட்டத்தில் மைக்கின் "பங்கை"க் கேட்க நேர்கிறது. அந்தக் கணமே அதில் ஈர்க்கப்பட்டு, தன்னுடைய நாலாம் நிலை வகுப்புக்கு வந்து பேசும்படி அவள் அவனை அழைக்கிறாள்.

 2. 2. முதல் டேட்டிங்

  Not available20 நிமிடங்கள்26 செப்டம்பர், 201016+சப்டைட்டில்

  மைக்குடனான முதல் டேட்டிங்கிற்கு முன், மாலிக்கு ஜலதோஷம் பிடிக்கிறது. சற்று உடல்நலம் தேறுவதற்காக அவள் ஜலதோஷத்திற்கான மருந்து எடுத்துக்கொள்கிறாள். அதன் விளைவு விபரீதமாகிறது.

 3. 3. முதல் முத்தம்

  Not available20 நிமிடங்கள்3 அக்டோபர், 201116+சப்டைட்டில்

  மாலியுடன் பௌலிங் டேட் சென்றிருக்கையில் மைக்கின் தலைக்கனம் தட்டி அமர்த்தப்படுகிறது. பாஸ்டன் பப்லிக்கின் க்ளியோ கிங் கார்லின் பாட்டியாகக் கௌரவ வேடமேற்கிறார்.

 4. 4. மைக் தயாராக இல்லை

  Not available21 நிமிடங்கள்10 அக்டோபர், 201116+சப்டைட்டில்

  தங்கள் மூன்றாவது டேட்டிங்கிற்குப் பின் உள்ளே வருமாறு அவள் அழைத்தபோது அவன் மறுக்கிறான். மைக்கிற்கு இனிமேலும் ஆர்வமில்லை என்று மாலி நினைத்துக்கொள்கிறாள் - ஆனால் அவர்களுடைய சங்கேதங்கள் இப்போதுதான் சந்தித்துக்கொண்டிருக்கின்றன.

 5. 5. கார்ல் பொறாமை கொள்கிறான்

  Not available20 நிமிடங்கள்17 அக்டோபர், 201016+சப்டைட்டில்

  மைக் கார்லை ஓர் இரட்டை டேட்டிங்கிற்கு அழைக்கிறான். மைக் மாலியுடன் செலவிடும் நேரத்தை எண்ணி கார்லுக்குப் பொறாமை ஏற்படுகிறது.

 6. 6. மைக்கின் அபார்ட்மென்ட்

  Not available21 நிமிடங்கள்24 அக்டோபர், 201016+சப்டைட்டில்

  மைக் மாலியைத் தன் குடியிருப்புக்கு வந்து தங்குமாறு அழைக்கிறான். ஒரு காதல் அனுபவத்திற்கு அவன் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறான். பூஜை வேளையில் கரடி போல அவனுடைய தாய் பெக்கியின் தொலைபேசி அழைப்பு வருகிறது. அது அவனுடைய திட்டங்களை இடைமறிக்கிறது.

 7. 7. காதலுக்குப் பின்னால்

  Not available20 நிமிடங்கள்31 அக்டோபர், 201016+சப்டைட்டில்

  மாலியுடன் வார இறுதியைக் கழித்தபின், மைக் தன்னுடைய பாச உணர்வுகளை மிக வலிமையாகக் காட்டுகிறான். பின், சற்று அடக்கி வாசிக்குமாறு கார்ல் அறிவுறுத்தியதை ஏற்றுக்கொண்டு, அத்துமீறாமல் இருக்க முயற்சிக்கிறான்.

 8. 8. மைக் குறட்டை விடுகிறான்

  Not available20 நிமிடங்கள்7 நவம்பர், 201016+சப்டைட்டில்

  மைக்கின் குடியிருப்பிலேயே அவள் முழுநேரத்தையும் செலவிடும்பொழுது, மாலி எரிச்சலடைகிறாள். தன்னுடைய வீட்டில் அவன் ஓர் இரவைச் செலவிடவேண்டும் என்று வலியுறுத்துகிறாள் - மாலியின் தாய் மற்றும் சகோதரியுடன் வாழ்வது எப்படிப்பட்ட அனுபவம் என்பதை அவனுக்கு உணர்த்துவதற்காக.

 9. 9. மைக்கின் புதிய பூட்ஸ்

  Not available20 நிமிடங்கள்14 நவம்பர், 201016+சப்டைட்டில்

  மைக் ஒரு பெண்ணிடம் (கௌரவ வேடம் ரெபெக்கா ஃபீல்ட்) மாலியைத் தன்னுடைய "தோழி" என்று அறிமுகப்படுத்திவைக்கிறான். அவள் மைக்குடன் உல்லாசமாகச் சுற்றுவது மிகத் தெளிவாகத் தெரிகிறது. மாலி பொறாமை கொள்கிறாள்.

 10. 10. மாலிக்கு ஒரு தொப்பி கிடைக்கிறது

  Not available20 நிமிடங்கள்21 நவம்பர், 201016+சப்டைட்டில்

  மைக்கின் ஆணவக்காரத் தாய் (கௌரவ வேடம் ராண்டி ரீட்) மாலிக்கு நல்லுறவுச் சின்னமாக ஒரு புதிய தொப்பியை வாங்கித் தருகிறாள். மாலியும் பதிலுக்கு தன்னுடைய குடும்பத்துடன் தாங்க்ஸ்கிவிங் கொண்டாட அவளை அழைக்கக் கடமைப்பட்டுள்ளதாக உணர்கிறாள்.

 11. 11. கார்லுக்கு ஒரு பெண் கிடைக்கிறாள்

  Not available21 நிமிடங்கள்5 டிசம்பர், 201016+சப்டைட்டில்

  கார்ல் மைக்கின் குடியிருப்பைத் தன்னுடைய டேட்டிங்கிற்காக இரவல் பெறுகிறான். அப்போது மைக் மாலியின் வீட்டில் அதிக நேரம் செலவிடுகிறான். முடிவில் மாலியின் தாய் மற்றும் சகோதரியுடன் அவனுக்கு நல்ல உறவு ஏற்படுகிறது - அவனுடைய பெண்மையான மறுபக்கம்.

 12. 12. முதல் கிறிஸ்துமஸ்

  Not available20 நிமிடங்கள்12 டிசம்பர், 201016+சப்டைட்டில்

  மைக் மாலிக்கு கச்சிதமான பரிசைத் தேர்ந்தெடுக்க முயல்கிறான். ஆனால் தங்கள் முதல் ஒருமித்த கிறிஸ்துமஸுக்கு என்ன வாங்குவது என்று அவனுக்குத் தெரியவில்லை.

 13. 13. மைக் ஓபராவிற்குச் செல்கிறான்

  Not available18 நிமிடங்கள்2 ஜனவரி, 201116+சப்டைட்டில்

  மாலியுடன் இரவு ஆபெரா சென்ற மைக் உடல்நலமின்றி இருக்கிறான். மைக்கை யார் மேலும் நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்கள் என்பதில் மைக்கின் தாய்க்கும் மாலிக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது.

 14. 14. மாலி சூப் செய்கிறாள்

  Not available20 நிமிடங்கள்16 ஜனவரி, 201116+சப்டைட்டில்

  வின்ஸ் மைக்கை ஒரு மாபெரும் கூடைப்பந்து ஆட்டத்திற்கு அழைப்பதன் மூலம் அவனுடன் நட்புக்கொள்ள முயல்கிறான். அவர்களுடைய புதிய நட்பு மாலிக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.

 15. 15. ஜிம் சாப்பிடமாட்டான்

  Not available21 நிமிடங்கள்6 பிப்ரவரி, 201116+சப்டைட்டில்

  மைக்கின் தாய் பெக்கிக்கு பித்தப்பைக் கற்களுக்கான அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது. அப்போது தன்னுடைய நாய்யைப் பார்த்துக்கொள்ளுமாறு அவள் மாலியிடம் கூறுகிறாள். மாலி அதிர்ச்சியடைகிறாள். இதற்கிடையில், தான் இறக்கும்பொழுது மாலிக்கு அருகிலேயே புதைக்கப்படுவது பற்றி மைக் பேசாத தொடங்குகிறான். மாலி குழப்பமடைகிறாள்.

 16. 16. முதல் காதலர் தினம்

  Not available21 நிமிடங்கள்13 பிப்ரவரி, 201116+சப்டைட்டில்

  மைக் மாலியுடன் தன்னுடைய முதல் காதலர் தினத்தைக் கொண்டாடத் திட்டமிடுகிறான். தற்செயலாக அவன் மாலியின் முன்னாள் தோழனைச் சந்திக்கநேரும்பொழுது, திட்டம் தலைகீழாக மாறிவிடுகிறது.

 17. 17. ஜாய்ஸ் & வின்ஸ் மற்றும் பீச்சஸ் & ஹெர்ப்

  Not available19 நிமிடங்கள்20 பிப்ரவரி, 201116+சப்டைட்டில்

  சோஃபாதான் தன்னுடைய புதிய சிறந்த நண்பன் என்றும், இனி வீட்டைவிட்டு வெளியே எங்கும் செல்வதில்லை என்றும் மைக் முடிவெடுக்கிறான். மாலி தன் சகோதரி விக்டோரியாவுடன் நகருக்குள் செல்கிறாள்.

 18. 18. மைக்கின் பாதங்கள்

  Not available20 நிமிடங்கள்27 பிப்ரவரி, 201116+சப்டைட்டில்

  ப்ரோ மான்ஸ் அபாயத்தில் உள்ளது! ஒரு பனிச் சூறாவளியின்போது மிக அதிக எண்ணிக்கையில் இரட்டை ஷிஃப்டுகள் வேலை செய்தபின், மைக்கும் கார்லும் தீவிரமாக மோதிக்கொள்கிறார்கள்.

 19. 19. பெக்கி கால்களை ஷேவ் செய்துகொள்கிறாள்

  Not available21 நிமிடங்கள்20 மார்ச், 201116+சப்டைட்டில்

  பெக்கியும் மாலியும் ஒன்றாக மதிய உணவு அருந்துகிறார்கள். தன்னுடைய குழந்தைப்பருவம் குறித்த புகழ்ச்சியற்ற கதைகளைத் தன் தாய் மாலியிடம் கூறுவதாக மைக் கவலைப்படுகிறான்.

 20. 20. திறப்புவிழா நாள்

  Not available20 நிமிடங்கள்10 ஏப்ரல், 201116+சப்டைட்டில்

  ஷிகாகோ க்ளப் திறப்புவிழா நாளுக்கு மைக்கும் கார்லும் ஆண்டுதோறும் செல்வது வழக்கம். மாலி வரும்பொழுது அது தடைபடுகிறது.

 21. 21. சாமுவேல் பணிநீக்கம் செய்யப்படுகிறார்

  Not available20 நிமிடங்கள்17 ஏப்ரல், 201116+சப்டைட்டில்

  சாமுவேல் தன்னுடைய வேலை மற்றும் குடியிருப்பை இழக்கிறான். மைக் தன்னுடன் வந்து தங்கிக்கொள்ள அனுமதி அளிக்க முன்வருகிறான். இது சுவாரசியமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

 22. 22. சிகார் பேச்சு

  Not available20 நிமிடங்கள்1 மே, 201116+சப்டைட்டில்

  தன்னுடைய உயர்நிலைப்பள்ளி ஒன்றிணைதலுக்கு வருமாறு ஜாய்ஸ் வின்ஸை அழைக்கிறாள். தான் ஒருபோதும் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை என்று வின்ஸ் மைக்கிடம் ஒப்புக்கொள்கிறான். உயர்நிலைப்பள்ளிப் படிப்புக்கு நிகரான தேர்வுக்குப் படிக்கத் தனக்கு உதவுமாறு கூறி மைக்கைச் சம்மதிக்கவைக்கிறான்.

 23. 23. விக்டோரியாவின் பிறந்தநாள்

  Not available20 நிமிடங்கள்8 மே, 201116+சப்டைட்டில்

  தன்னுடைய 30 வது பிறந்தநாள் நெருங்கி வருகையில் விக்டோரியா பதற்றமடைகிறாள். தன்னுடைய "வாழ்க்கை நெருக்கடி" நாடகத்திற்குள் மைக்கையும் மாலியையும் வலிய இழுக்கிறாள்.

 24. 24. பெக்கியின் புதிய தோழன்

  Not available21 நிமிடங்கள்15 மே, 201116+சப்டைட்டில்

  முதல் சீசன் முடிவில், தனக்கும் மாலிக்கும் வருங்காலத்தில் திருமணம் நடக்கும் என்று தாங்கள் கருதுகிறோமா என்று பெக்கியின் புதிய தோழன் கேட்கும்பொழுது, மைக் கட்டாயப்படுத்தப்படுவதாக உணர்கிறான்.

Additional Details

Amazon Maturity Rating
16+ Young Adults. Learn more
Supporting actors
Sarah Shahi, Amy Acker