Prime Video
  1. உங்கள் கணக்கு

தி பாத்

எடி நிகழ்த்திய அற்புதம் உடனே காட்டுத்தீ போல வளர்ந்து, மேயரிஸத்தை உலகெங்கும் பரப்பியிருந்தது. இந்த இயக்கத்தை, ஒரு மத குருவாகிவிடாமல் வழி நடத்திச்செல்ல முடியுமா என்றகேள்வி, புதிய ஒளி விளக்காக பொறுப்பேற்ற எடியை வந்து மோதிய வண்ணம் இருந்தது.
201813 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - இது துவக்கம்
    16 ஜனவரி, 2018
    54நிமி
    18+
    ஒளி விளக்காகிவிட்ட எடி, புதிய கொள்கை பரப்புச் செயலர் வேராவின் உதவியுடன், இயக்கத்தை மேலும் விரிவாக்குகிறான்; ஆனால் சீடர்களோ அவன் பாதுகாப்பை தடை செய்ததைப் பற்றி அதிருப்தி அடைகின்றனர். அச்சுருத்தலுக்கு பலியாகி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பின், ஸாரா அதற்கு தண்டனை வழங்க கோருகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - மிருகம், மடிந்தது
    16 ஜனவரி, 2018
    53நிமி
    18+
    எடியின் மானம் ஊரறிய காற்றில் பறக்க, அவன் அதை பொருத்துக் கொள்ள வேண்டும் அல்லது வேராவின் மூலம் அதற்கு பதிலடி தரவேண்டும். சில பழைய மேயரிஸச் சடங்குகள் காலின் உள், அடக்கி வைத்திருந்த ஞாபகங்களை கிளறுகின்றன. ஸாரா தன் நம்பிக்கையைச் சிதறடிக்கும் ஒரு பேராசிரியரைச் சந்தித்ததும் இன்னும் குழம்புகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - வெட்டுக்கிளிகள்
    16 ஜனவரி, 2018
    47நிமி
    18+
    தி காம்பௌண்டு என்ற கோட்டையை பயமுறுத்தி வந்த ஒரு மனிதனின் ஆன்மாவை எடி காப்பாற்ற முயற்சி செய்கிறான். தன் தாயிடமிருக்கும் விஸ்வாசத்திற்கும் எடிமீதுள்ள காதலுக்கும் இடையே வேரா தத்தளிக்கிறாள். கால் தன் குடும்பத்தை மீண்டும் தி காம்பௌண்டுக்கே கொண்டுவர தீர்மானிக்கிறான், ஆனால் மேரியோ அவர்களின் எதிர்காலத்தை பற்றி கவலை கொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - இயற்கைத் தன்மை
    23 ஜனவரி, 2018
    57நிமி
    16+
    தி காம்பௌண்டுக்குள்ளே ஒரு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவல் எல்லாரையும் அச்சத்தில் ஆழ்த்துகிறது, எடி அந்நிலையில் பொறுப்பேற்கிறான். கால், மேயரிஸத்தின் முதன்மை செயலராக தன்னை அறிவிக்கும்படி வேராவை அச்சுருத்துகிறான். தி லாடர் எனப்படும் மேயரிஸ வேத நூலின் ஆசிரியர், வாய் அடைக்கப்பட்ட வேரொருவராக, ஒரு பெண்மணியாக இருக்கக்கூடும் என ஸாரா கண்டறிகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - ஆண்டுவிழா
    30 ஜனவரி, 2018
    51நிமி
    16+
    ஸ்டீவைப்பற்றிய உண்மைகள் தெரிந்தவுடன், ஸாரா தன் மகள் ஸம்மரை ஆண்டுத்திருவிழாவில் பங்கெடுப்பதை தடை செய்து, குடும்பத்தின் எதிர்ப்பை சந்திக்கிறாள். லிலித்தின் சூளுறையை நிறைவேற்றவும், மேயரிஸத்தைப் பரப்பவும் வேரா ஒரு யூயெஸ் சுற்றுப்பயணத்தை குறிக்கிறாள். ஆனால் அவ்வூரிலோ அவர்களுக்கு வரவேற்பில்லை, எடியின் உயிருக்கே ஆபத்தாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - தூதுவன்
    6 பிப்ரவரி, 2018
    55நிமி
    18+
    ஸாராவின் ஆராய்ச்சி அவளை பேராசிரியர் நீயலுடன் இன்னும் நெருக்கமாக்குகிறது. ஆனால் குடும்பத்தில் ஒரு எதிர்பாராத சாவினால் அவள் எடியுடன் அடுத்து வர, ஸாரா தன் நம்பிக்கையை இன்னும் உறுதியாக்க ஏங்குகிறாள். ஹேரால்டு தன் சாம்பியன்ஷிப் வளையங்களுக்காக திரும்புகிறான், காலும் மேரியைக் காப்பாற்ற அவற்றைத் தேடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - ஜிவர்ணி தோட்டங்கள்
    13 பிப்ரவரி, 2018
    53நிமி
    16+
    எடியும் வேராவும் ஐரோப்பாவின் முதல் மேயரிஸ மையத்தை பாரீஸில் திறக்க பயணிக்கிறார்கள். ஸாராவின் நம்பிக்கையை மீட்க்கும் நோக்கத்தோடு அவளையும் உடன் அழைத்து வருகிறான் எடி; ஆனால் லிலித்தை தேடும் முயற்ச்சியில் இருக்கும் ஸாரா, நம்பிக்கையை இழந்துவிட்டாள் போலும். கால், மேரி, இருவரின் பாரிஸ் திட்டங்களே வேறு.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - நுழைவாசல்
    20 பிப்ரவரி, 2018
    53நிமி
    16+
    தங்களுக்கு பிரியமானவற்றை த்யாகம் செய்யத்தூண்டி "திருத்தங்கள்" கொண்டு வர, எடி இயக்கத்தை வற்புறுத்துகிறான். ஸாராவும் பேராசிரியர் ஜாக்சனும் லிலித்தை தேட, ஸாராவின் பழைய சகாவின் உதவியை நாட, அவரைத்தேடுகின்றனர்வேரா, மேயரிஸத்திலிருந்தும், தன் தாயின் வழியிலிருந்தும் வேறுபட்ட ஒரு வழியில் செல்ல முனைகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - திரையை விலக்க
    27 பிப்ரவரி, 2018
    51நிமி
    16+
    எடுபடி வேலைகளைச் செய்ய வேரா இல்லாத நிலையில், மதத்தலைவனாக இருப்பதன் ஆபத்துகளை எடி சந்திக்கிறான். அந்த இயக்கத்தையே பாதிக்ககூடிய ரகசியத்தைக்கூறி வேரா, ஒரு விஷப்பரீக்ஷையை நடத்துகிறாள். தனக்கு இதுவரை இருந்த நம்பிக்கையை தகர்த்தெரிந்துவிட்டு, ஸாரா லிலித்தின் சூளுறையில் ஆழ்ந்துவிடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - ஆத்ம பலசாலிகள்
    6 மார்ச், 2018
    52நிமி
    16+
    எடி அந்த இயக்கத்தை புதுச் சட்டங்களின் மூலம் பாதுகாக்கும் முயற்ச்சியில் இறங்கி, தன் குடும்பத்தினரின் கோபத்திற்கும் சீடர்களின் கோபத்திற்கும் ஆளாகிறான். தன் கடந்தகால நினைவுகளை விடுவிக்க வழியை தேடுகிறான் கால். வேரா எடியிடம் தனக்குள் வைத்திருந்ததை விஷயத்தைப் பகிர்ந்து கொள்கிறாள், அதே சமயம் உலகம் அழியப்போவதைப் பற்றி லிலித்திற்கு ஒரு புதிய கண்ணோட்டம் கிடைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - தவறான மதநம்பிக்கை
    13 மார்ச், 2018
    50நிமி
    18+
    காலபின் கிஸ்துவ மதமாற்றப்பயிற்சியை உடைக்க, எடியும் ஹாக்கும் சேர்ந்து போகிறார்கள். அடைக்கப்பட்டிருந்த காலின் நினைவுகள், அவனை தன் கடந்தகாலத்துடன் எதிர்நோக்கச்செய்கிறதுஸாராவிற்கும் வேராவிற்கும் இடையே லிலித்தைப்பற்றிய ஒரு வாக்குவாதம் நடக்கிறது. இயக்கத்திற்கு வெளியே, பல புதிய வாழ்க்கைக் கோணங்கள் மேரியின் முன் தெரிகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - அமெரிக்காவின் நவீன மதநெறி
    20 மார்ச், 2018
    52நிமி
    16+
    பேராசிரியர் ஜாக்சன் மேயரிஸத்தைப்பற்றிய உண்மைகளை உடைத்து பத்திரிகையில் எழுதி, தேசிய தொலைக்காட்சியில் சீடர்களை அவதுராக விமர்சித்தப் பின்னர், தன் மதத்திற்கும், ஸ்டீவிற்கும் வக்காலத்து வாங்குவதைப்பற்றி கால் தீர்மானிக்கிறான். எடியும் ஸாராவும் தங்கள் மத கோட்பாடுகளுக்கும், லிலித்தைப்பற்றிய உண்மைக்கும் உள்ள முறண்பாடுகளை அலசுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - சிகப்பு நிலா
    27 மார்ச், 2018
    56நிமி
    16+
    அனைவரின் ஆட்சேபனைகளையும் மீறி எடி, ஸ்டீஃபன் மேயரைப் பற்றியும் அந்த இயக்கத்தின் துவக்கத்தைப்பற்றிய எல்லா உண்மைகளையும் கூறிவிட தீர்மானிக்கிறான். ஆனால், அவனைத்தடுத்து, மேயரிஸத்தையே ஒரேடியாக ஒழிக்க ஒரு தீய சக்தி முனைகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
தயாரிப்பாளர்கள்
மிஷேல் லீஜேஸன் காடிம்ஸ்ஜெஸ்சிக்கா கோல்டுபர்கு
நடித்தவர்கள்
ஆரன் பால்மிஷேல் மோனகன்ஹ்யூக் டான்சி
ஸ்டுடியோ
NBCUniversal
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.