த க்ரேட்டெஸ்ட் ஷோ நெவர் மேட்
prime

த க்ரேட்டெஸ்ட் ஷோ நெவர் மேட்

சீசன் 1
2002ல் ஆறு இளைஞர்கள் புகழையும் அதிர்ஷ்டத்தையும் தேடி ஒரு புதிய பரம ரகசிய ரியாலிட்டி டிவி நிகழ்ச்சிக்கு விண்ணப்பித்தனர். வீடு, வேலை, துணைகளை விட்டு சாகசத்திற்காக லண்டனுக்குச் சென்றனர். தம் கனவுகள் சிதைந்த இருபது ஆண்டுகளுக்குப் பிறகும், இன்னும் விடைகளைத் தேடுகின்றனர்; இல்லாத ஒரு நிகழ்ச்சி, அதன் பின்னணியிலிருந்த மனிதனின் மறைவு, அவர்களது வாழ்க்கையை எப்படி மாற்றியது எனப் புரிந்துகொள்ள முயல்கின்றனர்.
IMDb 5.820233 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - த க்ரேட்டெஸ்ட் ஷோ நெவர் மேட்

    10 அக்டோபர், 2023
    42நிமி
    16+
    ஜூன் 2002. லூசி, ஜேன், டிம், டேனியல், ரோஸி மற்றும் ஜானிற்கு வாழ்க்கை மாறும் கனவு. ஒரு புதிய டிவி நிகழ்ச்சிக்கான விளம்பரம் அதற்கு வழிவகுக்கிறது: 'போட்டியாளர்கள் தேவை. ஒரு வருடம், £100,000.’ கனவுகளை எல்லாம் மிஞ்சும்படி, அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். வேலை, உறவு, வீட்டை விட்டு அவர்கள் சாகசத்திற்குத் தயாராகின்றனர். ஆனால் லண்டன் வந்த சில மணி நேரங்களிலேயே அவர்களின் கனவுகள் கலையத் தொடங்குகின்றன.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - த க்ரேட்டெஸ்ட் ஷோ நெவர் மேட்

    10 அக்டோபர், 2023
    44நிமி
    16+
    வீடற்ற தாம், பரிசுத் தொகையைத் தாமே சம்பாதிக்க வேண்டும் என்ற கதிகலங்கும் செய்தியிலிருந்து மீண்டு, போட்டியாளர்கள் அதைச் செய்ய முயல்கின்றனர். கேமராமேன் டிம், நிக் ரஷ்யனின் புதிரான தோற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறியும் ரோலர்கோஸ்டர் சவாரியைப் படமாக்குகிறார். அவர் யார்? அவரால் இன்னும் டிவி நிகழ்ச்சி நடத்த முடியுமா? 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் எங்கே சென்றார்?
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - த க்ரேட்டெஸ்ட் ஷோ நெவர் மேட்

    10 அக்டோபர், 2023
    49நிமி
    16+
    2002 கோடையில், முப்பது பேரின் ரியாலிட்டி டிவி புகழை அடையும் கனவு கொடுங்கனவாக மாறியது. பணமின்றி, பசியில் தாம் அவமானப்படுவதைக் கண்டனர். இது நடந்தது எப்படி? எதனால்? 20 ஆண்டுகளாக அவர்களின் கேள்விகளுக்குப் பதில் இல்லை. இப்போது, ​​ஒரு தனியார் துப்பறிவாளர் அந்த கவரும் மர்ம மனிதரைக் கண்டுபிடித்துள்ளார். இப்போது நிக்கிதா ரஷ்யன் தன் பக்கக் கதையைச் சொல்ல வேண்டிய நேரம் இது.
    Prime-இல் சேருங்கள்