ஆல் ஆர் நத்திங்: டோட்னம் ஹாட்ஸ்பர்
prime

ஆல் ஆர் நத்திங்: டோட்னம் ஹாட்ஸ்பர்

சீசன் 1
டோட்னம் ஹாட்ஸ்பரின் வரலாற்றையே நிர்ணயித்த ஒரு பருவத்தின் பின்னணி காட்சிகளைக் காண்போம். தலைவர் டேனியல் லெவி, மேலாளர் மரீசியோ பொசெட்டினோவை நீக்கி, ஜோஸே மொரீனியோவை நியமிக்கும் முடிவை பருவ மத்தியில் எடுக்கிறார். டேலே அலீ, ஹீயுன்-மின் சன், ஹாரி கேன் உள்ளிட்ட வீரர்கள், தங்கள் கிளப்பை ஐரோப்பாவின் உயர்தனி கிளப்கள் நிலைக்கு உயர்த்த, உலகளாவிய கரோனா வைரஸ் நெருக்கடியினூடே போராடுகிறார்கள்.
IMDb 8.020209 எப்பிசோடுகள்X-RayHDRUHDTV-14
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஒரு புதிய ஒப்பந்தம்

    30 ஆகஸ்ட், 2020
    47நிமி
    16+
    டோட்னம் ஹாட்ஸ்பருக்கு புதிய பருவம் துவங்குகையில், 2019 சாம்பியன் லீகுக்கான ஒரு சிலிர்ப்பூட்டும் தாவலை அடுத்து எதிர்பார்ப்புகள் அதிகமாகின்றன. வேனிற்காலத்தில் சில முக்கிய ஒப்பந்தங்களும் முடிவாகின்றன. இருப்பினும், துவக்க மாதங்களில், கள முடிவுகள், லீக் தரவரிசையில் சரிவைத் தந்து, ஏமாற்றமாகி, டேனியல் லெவி கடினமான ஒரு முடிவை எடுக்க நிர்ப்பந்திக்கப் படுகிறார். அதற்குப் பலன் கிடைக்குமா?
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - ஒரு புதிய துவக்கம்

    30 ஆகஸ்ட், 2020
    46நிமி
    16+
    வெஸ்ட் ஹாம் யுனைடெட்க்கு எதிரான முக்கிய லண்டன் டெர்பி போட்டிக்கு சற்றே முன், மரீசியோ பொசெட்டினோ நீக்கப் பட்டு பதிலாக பொறுப்பேற்ற, உலகப் புகழ் பெற்ற கால்பந்து பயிற்சியாளர்களில் ஒருவரான ஜோஸே மொரீனியோவால் ஸபர்ஸ்க்கு இது ஒரு புது சகாப்தம். ஜோஸே கிளப்பை சேர்ந்தவர்களது எண்ணங்களையும் இதயத்தையும் வெற்றிகொள்ள இறங்கிய போது, வீரர்கள் அவரது குழுவில் உறுதியான இடத்தைப் பெற தங்களை நிரூபிக்க வேண்டி இருந்தது.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - இனி நல்ல பிள்ளை அல்ல

    30 ஆகஸ்ட், 2020
    45நிமி
    16+
    டோட்னம் ஹாட்ஸ்பர் ஜோஸே மொரீனியோ தலைமையில் அவரது முன்னாள் கிளப் ஆன மான்செஸ்டர் யுனைடெட் இடம் முதல் தோல்வியை தழுவியது. குழுவினர் பலரது எதிர்காலப் பிரச்சினைகளை தீர்க்க கிளப் முயல்கையில், அணியானது, வெற்றிமுகமான வழிகளை மீட்டு, பிரீமியர் லீக் தர வரிசையில் உயரவும், அதே நேரத்தில் சாம்பியன்ஸ் லீக் தகுதிகளை அடையவும் இலக்கு வைக்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - பண்டிகைக் கால வாழ்த்துக்கள்

    6 செப்டம்பர், 2020
    45நிமி
    16+
    இது கிறிஸ்துமஸ். தலைமைப் பயிற்சியாளர் ஜோஸே மொரீனியோ முதல் பெரும் சவாலை எதிர்கொள்கிறார். அடிபட்டோர் பட்டியல் நீளமாகவே, கல்விக் கழகத்தை நாடுவதும், அணித் தேர்வைப் பற்றிய மறு சிந்தனையும் அவசியமாகிறது. உள்ளூர் இளைஞன் ஜாஃபெட் டங்காங்கா, தீடீரென குழுவின் ஆடும் அணியில் சேர்கிறார். தன் வாழ்விலேயே பெரிய ஆட்டத்தை ஆட தயாராகுகிகையில், அவரது வாழ் நாள் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கு தேவையானது அவரிடம் இருக்கிறதா?
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - புதிய இரத்தம்

    6 செப்டம்பர், 2020
    46நிமி
    16+
    பெரிய கிளப்கள் புதிய வீரர்களை சேர்க்க மோதுகையில், ஜனவரி மாற்றுச் சந்தை முழு வீச்சாகிறது. இது ஜோஸே மொரீனியோவுக்கு குழுவின் மீது தனது முத்திரையைப் பதிக்க முதல் வாய்ப்பு-அதுவும் குழுவின் மிக மூத்த வீரர்கள் டேனி ரோஸ், கிறிஸ்டியன் எரிக்சன் இருவரது எதிர்காலத்தை தீர்வு செய்ய வேண்டி கிளப் இருந்த நிலையில். இறுதி நாளும் நெருங்குகிறது, தற்போதைய கோப்பை நாயகர்கள் மான்செஸ்டர் சிடியுடனும் மோத வேண்டும்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - வெற்று ஓட்டம்

    6 செப்டம்பர், 2020
    47நிமி
    16+
    தோல்விப் பாதை விலகி, மான்செஸ்டர் சிடியை வென்ற பிறகு, ஸ்பர்ஸ் வீரர்களது காயமுற்றோர் பட்டியல் நீள்கிறது. மூசா சிசாகோ, ஹாரி கேன், ஆடத் தகுதி பெற வெகு நாட்களாகும். கிளப் இன்னும், மும்முனைகளில் போட்டியிடும் நிலை. தலைமைப் பயிற்சியாளர், ஜோஸே மொரீனியோ, ஹீயுன்-மின் சன்னை பெரும்பாலும் சார நேர்ந்து, அணிக்குத் தலைமை தாங்க வைக்கிறார். ஆனால், இன்னும் காயம் என, இந்த பருவமே பயமுறுத்தப் படுமா என்ன?
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - வருத்தப் பட ஏதும் இல்லை

    13 செப்டம்பர், 2020
    46நிமி
    16+
    பணியில் சேர்ந்து நான்கு மாதங்கள் ஆன பின்னரும், கடினமான முடிவுகளே ஜோஸே மொரீனியோவை சூழ்கின்றன. இரண்டு பந்தயங்களில் நாக் அவுட் நிலைமையை எதிர் நோக்கும், கல்விக் கழக பட்டதாரி ஹாரி விங்க்ஸ் கேப்டன் ஆகி, மிஷெல் வோர்ம் பருவத்தின் முதல் துவக்கத்தைப் பெறுகிறார். வெற்றிகள் வருவது கடினமாக, ஒரு தோல்விக்குப் பின், டேலே அலீயும் எரிக் டயரும் முழுமையாகவும், வெளிப்படையாகவும் கருத்துப் பரிமாறிக் கொள்கின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - நிறுத்தம்

    13 செப்டம்பர், 2020
    59நிமி
    16+
    டோட்னம் ஹாட்ஸ்பரின் பருவம் கேள்விக் குறியாகிக் கொண்டிருக்க, அவர்கள் இன்னும் இருமுனைப் போராட்டதில்தான் உள்ளனர். ஆர்பி லைப்ஸிக்குடன் வென்றே ஆக வேண்டும் என்ற நிலைமை. அதோடு, சாம்பியன்ஸ் லீகின் வளமான முதல் நான்கு நிலைகளுக்குள் வர வேண்டும். அவர்கள் தமது கடைசி பத்து ஆட்டங்களில் தங்களது கவனத்தை கூர்மைப் படுத்த முனைகையில், கரோனா வைரஸ் பெரும் தொற்றின் தாக்கங்கள் கிளப்பாலும் வீர்ர்களாலும் உணரப் படுகின்றன.
    Prime-இல் சேருங்கள்
  9. சீ1 எ9 - சச்சரவு

    13 செப்டம்பர், 2020
    59நிமி
    16+
    பருவம் மீண்டும் துவங்க, ஸ்பர்ஸ்க்கு, யூரோப்பியன் கால்பந்தை உறுதிப் படுத்திக் கொள்ள எட்டு போட்டிகள். ஜோஸே மொரீனியோ, ஆர்செனலை நார்த் லண்டன் போட்டியில் கையாள வேண்டும். நெருக்கடி முற்றி, யூகோ லாரிசுக்கும் ஹீயுன்-மின் சன்னுக்கும் களத்திலே சச்சரவாகிறது. அவர்களது வரலாற்றிலேயே நீண்ட பருவம் முடிவை நெருங்க, ஸ்பர்ஸ் எதிர்காலக் கனவுகளுடன் தனது வெகு நாள் குழு உறுப்பினர்கள் இருவருக்கு பிரியாவிடை தருகிறது.
    Prime-இல் சேருங்கள்