கணபதி என்ற கேலிச்சித்திர கலைஞர், அவருக்கு வினோதமான ஒரு நரம்பு சம்பந்த கோளாறு கண்டுபிடிக்கப்படுகிறது. ஏலியன் ஹாண்ட் சின்ரோம் என்னும் அந்த நோயுடன் தினசரி அவர் போராட்டங்களை இந்த படம் பதிவு செய்கிறது. கணபதி இத்தனையும் மீறி தன்னுடைய குறிக்கோளையும் மற்றும் தான் விரும்பும் காதலியையும் எப்படி அடைகிறார் என்பதே கதை.