Prime Video
  1. உங்கள் கணக்கு
1998 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 5 முறை பரிந்துரைக்கப்பட்டது

சயின்ஃபெல்ட்

சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான எம்மி மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை பெற்ற செய்ன்ஃபெல்ட் மிகவும் பிரபலமான, அதிக விருதுகளை பெற்ற, நீண்டகாலம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நகைச்சுவைத் தொடராகும்.
IMDb 8.9198922 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - பயணம் : பகுதி 1
    11 ஆகஸ்ட், 1992
    23நிமி
    TV-PG
    ”தி டுநைட் ஷோ வித் ஜே லெனோ” நிகழ்ச்சியில் பங்கேற்க ஜெர்ரி ஒப்பந்தம் செய்யப்படும்போது - பல மாதங்களுக்கு முன் கோபத்தால் மாயமாகி, திடீரென “மர்பி பிரவுன்” தொடரில் தோன்றிய கிராமரை தேடுவதற்காக ஜார்ஜை அழைத்துக்கொண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் செல்கிறான். அடையாளம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு கிராமர் சிக்கலில் இருப்பது ஜார்ஜுக்கும், ஜெர்ரிக்கும் தெரியாது. சந்திக்கும் பிரபலங்களுக்கு தொல்லை கொடுக்கிறான் ஜார்ஜ்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ4 எ2 - பயணம் : பார்ட் 2
    18 ஆகஸ்ட், 1992
    23நிமி
    TV-PG
    லாஸ் ஏஞ்சல்ஸில் கிராமர் தேடிக்கொண்டிருக்கும்போது, ஜெர்ரி மற்றும் ஜார்ஜை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர். கிராமர்தான், ”ஸ்மாக் ஸ்ட்ரங்லர்” என்று அழைக்கப்படுகிற தொடர் கொலைகளை செய்த குற்றவாளி என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ4 எ3 - தொலைக்காட்சி தொடரும் / அபராத சீட்டும்
    15 செப்டம்பர், 1992
    47நிமி
    TV-PG
    ஜெர்ரியும்,ஜார்ஜும் ஒரு தொலைக்காட்சி தொடரை எழுத முடிவெடுக்கின்றனர். அதிக வேகமாக காரை ஓட்டியதற்காக தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு கிராமர்தான் காரணம் என குற்றம்சாட்டுகிறார் நியூமேன். ஜெர்ரிக்கும், ஜார்ஜுக்கும் என்பிசி ஒரு ஒப்பந்ததை வழங்க முன்வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ4 எ4 - பணப்பை
    22 செப்டம்பர், 1992
    23நிமி
    TV-PG
    ஜெர்ரியை காண அவனது பெற்றோர் வரும்போது, அவர்கள் ஒருகாலத்தில் அவனுக்கு வழங்கிய கைக்கடிகாரத்தை (அவன் குப்பையில் வீசிவிட்டதை) ஏன் அணியவில்லை என்பதை விளக்க ஜெர்ரி தனது கற்பனை திறன் முழுவதையும் பயன்படுத்தவேண்டியிருக்கும். அவனது நண்பன் ஜார்ஜோ தொலைக்காட்சி தொடருக்காக, தொலைக்காட்சி நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முட்டாள்தனமாக தூக்கி எறிகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ4 எ5 - கைக்கடிகாரம்
    29 செப்டம்பர், 1992
    23நிமி
    TV-PG
    ஜெர்ரி தாய், தந்தை அவனை காண வரும் போது, ஜெர்ரி அவர்கள் தந்த கைகடிகாரத்தை கண்டுபிடித்து திரும்ப வாங்க கடுமையாக முயற்சி செய்கிறான். அவன் அதை தூக்கி எறிந்த பின்னர் அவனது மாமா லியோ அதை எடுத்து பத்திரப்படுத்தியிருந்தார். நகரின் மறுகோடியிலோ தொலைக்காட்சி நிர்வாகியை தேடிப் பிடித்து, வியர்க்க விறுவிறுக்க தனது தொலைக்காட்சி தொடரை முன்பை விட குறைந்த விலைக்கு தருவதற்கு பேரம் பேசிக்கொண்டிருக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ4 எ6 - வழிதவறிய பயணம்
    6 அக்டோபர், 1992
    23நிமி
    TV-PG
    ஜெர்ரியும், ஜார்ஜும் தங்களது தோழிகளுடன் மலைமீது அமைந்துள்ள ஒரு குடிலுக்கு கரில் செல்ல திட்டமிடுகின்றனர். வழியில் நோயுற்று, ஒரு பிளாஸ்டிக் கூடாரத்தில் குடியிருக்கவேண்டிய கட்டாயத்துக்குள்ளான ரசிகர் ஒருவரை சந்திக்க ஜெர்ரி ஒப்புக்கொள்கிறார். ஆனால் எலைனை அழைத்துக்கொண்டு காரை ஓட்டிச்செல்லும் போது ஜெர்ரி வழிதவறி விடுவதும், திடீரென வாயில் சுருட்டுடன் கிராமர் ஆஜராவதும் பல சிக்கல்கள் ஏற்பட காரணமாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ4 எ7 - அறை தீ
    27 அக்டோபர், 1992
    23நிமி
    TV-PG
    தங்களது தொடருக்கான ஸ்கிரிப்டை ஜெர்ரியும் ஜார்ஜும் தயாரிக்க தொடங்கும் அதே வேளையில், குடிலில் ஏற்பட்ட தீ குறித்து சூசனின் தந்தையை எதிர்கொள்கிறான் ஜார்ஜ்,
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ4 எ8 - ஓப்ரா
    3 நவம்பர், 1992
    23நிமி
    TV-PG
    ஜெர்ரி தன்னை ஏளனம் செய்ததாக கற்பனை செய்து, அதற்கு பழிவாங்கப் போவதாக கூறிக்கொண்டு அவனை பின்தொடர்ந்துகொண்டிருக்கும் பித்துபிடித்த “கிரேஸி ஜோ டோவோல” தான் எலைனின் புதிய காதலன் எனத் தெரியாமல் எலைனை ஆப்ரா நிகழ்ச்சியில் ஜெர்ரி சந்திக்க - சாதாரண ஒரு பொழுதுபோக்கு இரவு, ஒரு தீக்கனவாக மாறிப்போகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ4 எ9 - கன்னி
    10 நவம்பர், 1992
    23நிமி
    TV-PG
    தங்களது தொடருக்கு கருத்துரு எழுதுவதை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்த ஜெர்ரியும், ஜார்ஜும், பொறுமையிழந்து காத்துக்கொண்டிருக்கும் தொலைகாட்சி நிர்வாகிகளை சந்திக்கவிருக்கும் சில மணிநேரங்களுக்கு முன்னர், கருத்துருவை உருவாக்க தீவிரமாக முயற்சிக்கிறார்கள். ஆனால் தான் இன்னும் கன்னித்தன்மையோடு இருப்பதாக கூறிய அழகிய இளம் பெண்ணை சந்திக்கவிருப்பதை ஜெர்ரியால் மறக்கமுடியாததால் அவனுக்கு அழுத்தம் மேலும் அதிகரிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ4 எ10 - போட்டி
    17 நவம்பர், 1992
    23நிமி
    TV-PG
    விருப்பமானதை விட்டுத் தரும் போட்டியில் தங்கள் பணத்தை பந்தயம் வைக்கும்படி ஜார்ஜ், கிராமர் மற்றும் எலைனுக்கு சவால் விடுக்கிறான் ஜெர்ரி. இதற்கிடையே, கட்டழகனான ஜான் கென்னடி ஜூனியருடன் வெளியே செல்லும் நாளை உற்சாகத்துடன் எதிர்நோக்கி இருக்கிறாள் எலைன். மற்றொருபுறம், புலம்பிக்கொண்டிருக்கும் தனது தாயை காண, குற்ற உணர்ச்சியுடன் செல்லும் ஜார்ஜ் மருத்துவமனையில் கண்கொள்ளா காட்சியை காண்கிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ4 எ11 - விமானநிலையம்
    24 நவம்பர், 1992
    23நிமி
    TV-PG
    ஊர் திரும்பும் விமானத்தில் ஜெர்ரி முதல் வகுப்பில் சொகுசாக வர, எலைனோ 3ம் வகுப்பில் குறுகலான இருக்கையில், குண்டான மனிதருக்கு அருகில் நெருக்கியடித்துக்கொண்டு பயணம் செய்கிறாள். தரையிலோ, ஜார்ஜும், கிராமரும் தங்கள் நண்பர்களை சந்திக்க விமானநிலையங்களுக்கிடையில் அலைகின்றனர். இதில் கிராமரை விமான ஓடுதளத்திற்கே காவல்துறையினர் விரட்டுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ4 எ12 - கவர்ச்சியான ஆடை
    15 டிசம்பர், 1992
    23நிமி
    TV-PG
    எலைன் கவர்ச்சியாக உடையணிந்த புகைப்படத்தை தற்செயலாக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையில் அச்சடித்து தெரிந்தவர்களுக்கெல்லாம் அனுப்பிவிட்டு சங்கமடைகிறாள். இதற்கிடையில் மாடல் அழகியான புதிய காதலியிடம் தான் மிகுந்த சுகாதாரமானவன் என நம்பவைக்க ஜெர்ரி முயற்சி செய்கிறான். வோறொரு இடத்தில் கிராமர் கவர்ச்சியான உள்ளாடை விளம்பரத்தில் மாடலாக்கப்படுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ4 எ13 - திரைப்படம்
    5 ஜனவரி, 1993
    23நிமி
    TV-PG
    ஒரு இம்சை தரும் நகைச்சுவை கலைஞர் ஜெர்ரியை நிழல் போல் தொடர, நகரின் இருவேறு பகுதிகளில் நடைபெறும் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவன் எடுக்கும் முயற்சிகள் அவனுக்கு விரக்தியையே தருகின்றன. பின்னர் ஜார்ஜ், எலைன் மற்றும் கிராமரை ஒரு திரையரங்கில் சந்திக்க செல்லும் போதும், ஆளுக்கொரு திசையிலிருந்துகொண்டு மற்றவர்களை தேடுவது பெரும் கூத்தாகவே இருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ4 எ14 - விசா
    26 ஜனவரி, 1993
    23நிமி
    TV-PG
    ஒரு ஏழை வெளிநாட்டவரின் குடியேற்ற ஆவணங்கள் தவறுதலாக ஜெர்ரியின் அஞ்சல் பெட்டியில் சேர்ந்துவிடும் போது, அந்த மனிதர் மீது இரக்கம் கொள்கிறான் ஜெர்ரி. ஆனால் அதிர்ஷ்டம்கெட்ட அந்த மனிதர் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படும்போதும், ஜெர்ரியை பழிவாங்கப்போவாதாக சொல்லிச் செல்கிறார். வீட்டின் மற்றொரு பகுதியிலோ கிராமர் கற்பனை பேஸ்பால் முகாமில், தனது கதாநாயகன் மிக்கி மேண்டலை தோற்கடித்துவிட்டு திரும்புகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ4 எ15 - காலணி
    3 பிப்ரவரி, 1993
    22நிமி
    TV-PG
    ஜெர்ரியும், ஜார்ஜும் அவர்கள் மீது நம்பிக்கைகொள்ளாத ஒரு தொலைக்காட்சி நிர்வாகியை சந்திக்கும் போது தொடரை ஆரம்பிக்கும் திட்டத்தை தக்கவைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அவரோ இருவரும் தன்னுடைய மகளை நோட்டமிடுவதை கண்டுபிடித்துவிடுகிறார். நகரின் மறுபக்கத்தில், கிராமர், ஜெர்ரியின் முன்னாள் காதலியை சந்திக்க தொடங்குகிறான். அவளோ எப்படியாவது எலைனின் காலணிகளை தனதாக்கிக்கொள்ளுவதிலேயே குறியாய் இருக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ4 எ16 - ஒட்டு கேட்பது
    10 பிப்ரவரி, 1993
    22நிமி
    TV-PG
    ஒட்டுகேட்பதை வழக்கமாக கொண்டுள்ள ஒரு கல்லூரி ரிபோர்டர், ஜெர்ரியும் அவரது நண்பர் ஜார்ஜும் நீண்ட நாள் ’நெருக்கமான’ தோழர்கள் என தவறுதலாக அச்சிட்டுவிடுகிறார். இதையடுத்து தான் இயல்பானவன்தான் என நிரூபிக்க ஜெர்ரி எடுக்கும் முயற்சிகள் வீணாகின்றன. இந்த செய்தியை பெருநகர நாளிதழ் ஒன்றும் அச்சிட்டுவிட, ஜெர்ரி தன் தாய் தந்தையருக்கு பெரியதொரு விளக்கத்தை தர நேரிடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ4 எ17 - வயதான மனிதர்
    17 பிப்ரவரி, 1993
    22நிமி
    TV-PG
    நல்ல உள்ளம் படைத்த ஜெர்ரி, ஜார்ஜ் மற்றும் எலைன் மூத்த குடிமக்களுக்கு அவர்களது வீட்டிலேயே ஆறுதலும், உதவியும் அளிக்க முன்வருகிறனர். துரதிருஷ்டவசமாக, ஜெர்ரி ஒரு மோசமான கிழவருக்கு ஒதுக்கப்படுகிறார். கிராமரின் தலையீட்டால் அந்த முதியவரை ஜெர்ரி சாலையில் தொலைக்க நேரிடுகிறது. ஜார்ஜோ வேறொரு முதியவருக்கு மன அழுத்தத்தை கொடுக்கிறான். எலைனுக்கும் அதே போல தலைபோகிற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ4 எ18 - அறுவை சிகிச்சை
    24 பிப்ரவரி, 1993
    22நிமி
    TV-PG
    தனது காதலி மார்பத்தை பெரிதாக அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் ஜெர்ரி அவளை விட்டு விலகுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ4 எ19 - ஈர்ப்பு
    16 மார்ச், 1993
    22நிமி
    TV-PG
    எலைனின் முன்னாள் காதலன் ஒருவன் உடல் எடை குறைந்ததும் அவளுக்கு மீண்டும் அவன்பால் ஈர்ப்பு ஏற்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ4 எ20 - துர்நாற்றம்
    14 ஏப்ரல், 1993
    23நிமி
    TV-PG
    ஒரு வேலைக்காரனின் உடல் துர்நாற்றம் ஜெர்ரியையும் எலைனையும் துரத்துகிறது., ஜார்ஜ் சூசன் பற்றிய சில ஆச்சரியமான செய்திகளை கண்டுபிடிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ4 எ21 - மாற்றுத்திறனாளி
    12 மே, 1993
    22நிமி
    TV-PG
    மாற்றுத்திறனாளிகளுக்கான வாகன நிறுத்துமிடத்தில் ஜார்ஜ் தனது தந்தையின் காரை நிறுத்துவதால் மாற்றுத்திறனாளி பெண் காயமடைய ஆத்திரம் கொள்ளும் மக்கள் காரை அடித்து நொருக்குகின்றனர். ஜெர்ரியும், ஜார்ஜும் கல்லடிபடுவதிலிருந்து நூலிழையில் தப்பிக்கின்றனர். இது எதுவுமே தெரியாத ஜார்ஜின் தந்தை கைது செய்யப்படுகிறார். ஜார்ஜும், கிராமரும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக ஒரு மின்சார சக்கர நாற்காலியை வாங்குகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ4 எ22 - ரசிகர்களின் உணர்வு - பகுதி 1 & 2
    19 மே, 1993
    45நிமி
    TV-PG
    ஒருவழியாக ஜெர்ரியும், ஜார்ஜும் தங்கள் தொடரின் வெள்ளோட்ட பகுதியை தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்கள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Tom Cherones
தயாரிப்பாளர்கள்
கேஸ்டில் ராக் என்டர்டெயின்மென்ட்
நடித்தவர்கள்
மைக்கேல் ரிச்சர்ட்ஸ்ஜாசன் அலெக்சாண்டர்ஜூலியா லூயிஸ் -ட்ரேஃபஸ்
ஸ்டுடியோ
NBC Network
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.