தி எக்ஸ்பான்ஸ்

தி எக்ஸ்பான்ஸ்

ஹோல்டெனும் ரோசினான்ட்டே குழுவினரும், எர்த் மற்றும் மார்ஸுடன் சேர்ந்து ஒருங்கிணைந்த படையாக, மார்கோ இனாரோஸிடமிருந்தும் அவனது சுதந்திர கடற்படையின் மரணம் மற்றும் அழிவு பிரச்சாரத்திலிருந்தும் இன்னர் பிளானட்களை பாதுகாக்கப் போராடுகின்றனர். இதற்கிடையில், ரிங்ஸிற்கு அப்பால் ஒரு தொலைதூர கிரகத்தில், புதிய சக்தி ஒன்று எழுகிறது.
IMDb 8.520216 எப்பிசோடுகள்X-Ray16+

குறுகிய காலச் சலுகை. விதிமுறைகள் பொருந்தும்.

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ6 எ1 - விசித்திர நாய்கள்

    9 டிசம்பர், 2021
    46நிமி
    16+
    ஒரு சிறுகோளில் திடுக்கிடும் கண்டுபிடிப்பை ரோசினான்ட்டே குழு மேற்கொள்கையில் போரின் பதட்டங்கள் அவர்களைப் பிரிக்க அச்சுறுத்துகிறது. மார்கோவின் பாறைகள் தொடர்ந்து விழ, ஆவசராலாவும் பாபியும் எர்த்தில் பேரழிவை எதிர்கொள்கின்றனர். பெல்ட்டில் தப்பி ஓடும் ட்ரம்மரும், அவளது குடும்பத்தினரும் இதயத்தை நொறுக்கும் முடிவை எடுக்க வேண்டும். சீரீஸில், மார்கோ மற்றும் ஃபிலிப்பின் போராட்டங்கள் உள்நோக்கி திரும்புகின்றன.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ6 எ2 - அசூயூர் டிராகன்

    16 டிசம்பர், 2021
    44நிமி
    16+
    ரோசினான்ட்டே கலத்தில், எதிர்பாராத ஒரு பயணியுடன், ஹோல்டென் மற்றும் குழுவினர், போரில் அதிகார நிலையை மாற்றக்கூடிய ஒரு ஆபத்தான பணியை மேற்கொள்கின்றனர். ட்ரம்மர் ஒரு சங்கடமான கூட்டணியை உருவாக்க முடிவு செய்கிறாள். ஃபிலிப், தனது குற்ற உணர்வோடு போராடுகிறான்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ6 எ3 - படைத் திட்டம்

    23 டிசம்பர், 2021
    43நிமி
    16+
    எர்த் மற்றும் மார்ஸின் ஒருங்கிணைந்த கடற்படையுடன், ஆவசராலா, போரை மார்கோவிடம் எடுத்து செல்கிறார். ஃபிலிப் மற்றும் மார்கோவின் உறவு சோதனைக்குள்ளாகிறது. ரோசினான்ட்டே திடீரென போரில் இழுக்கப்படும் போது, ​​ஹோல்டெனுக்கும் நயோமிக்கும் போர் மிகவும் ஆபத்தானதாகவும் தனிப்பட்டதாகவும் மாறுகிறது.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ6 எ4 - அரண்

    30 டிசம்பர், 2021
    47நிமி
    16+
    ஒரு சர்ச்சைக்குரிய முடிவை வெளிப்படுத்தியவுடன், ஹோல்டென் தனது குழுவினருடன் முரண்படுகிறான். சீரீஸில், அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடியை கட்டுப்படுத்த, ஆவசராலா போராடுகிறார். ட்ரம்மரின் வளர்ந்து வரும் அணி, கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளக்கூடிய ஒரு தைரியமான தாக்குதலை நடத்துகிறது. ஃபிலிப், சிறு கலம் சீர் செய்யும் பணிக்கு தரமிறக்கப்பட, எதிர்பாராத ஒன்றை கண்டுப்பிடிக்கிறான்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ6 எ5 - ஏன் போரிடுகிறோம்

    6 ஜனவரி, 2022
    48நிமி
    16+
    ட்ரம்மர் மற்றும் அவளுடைய கடற்படை, நிவாரண முயற்சிகளுக்கு உதவும் போது, சீரீஸில் பாதைகள் இணைகின்றன. பேரழிவைத் தவிர்க்க, முக்கிய தகவலை வெளியிடுமாறு ஹோல்டென், ஆவசராலாவை ஒத்து கொள்ள வைக்க முயல்கிறான். ஆனால் ஆவசராலாவுக்கு ஹோல்டெனிடம் சொந்த கோரிக்கை ஒன்று உள்ளது. ஏமஸும் பாபியும் ஸ்டேஷனில் கொஞ்சம் ஓய்வு மற்றும் குணமடையும் நேரத்தில், நயோமிக்கு கடினமான மற்றும் நீண்டகாலமாக எதிர்பார்த்த மறு இணைவு ஏற்படுகிறது.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ6 எ6 - பாபிலோனின் சாம்பல்

    13 ஜனவரி, 2022
    1 ம 3 நிமிடம்
    16+
    பரபரப்பான சீசன் முடிவில், மார்கோ மற்றும் அவனது சுதந்திர கடற்படையை எதிர்த்து, இன்னர்கள் மற்றும் பெல்ட்டர்கள், ரோசினான்ட்டேயின் குழுவினருடன் கூட்டணி சேர்ந்து, ஒரு இறுதி, மிகப்பெரிய, நம்பிக்கையற்ற போரில் ஈடுபடுகிறார்கள். சூரிய குடும்பம், ரிங் கேட்ஸ் மற்றும் அனைத்து மனிதக்குலத்தின் தலைவிதி, ஒரு நிச்சயமற்ற நிலையில் இருக்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  7. தி எக்ஸ்பான்ஸ் - பருவம் 6: முன்னோட்டம்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    16 நவம்பர், 2021
    3நிமி
    TV-MA
    ஹோல்டெனும் ரோசினான்ட்டே குழுவினரும், எர்த் மற்றும் மார்ஸுடன் சேர்ந்து ஒருங்கிணைந்த படையாக, மார்கோ இனாரோஸிடமிருந்தும் அவனது சுதந்திர கடற்படையின் மரணம் மற்றும் அழிவு பிரச்சாரத்திலிருந்தும் இன்னர் பிளானட்களை பாதுகாக்கப் போராடுகின்றனர். இதற்கிடையில், ரிங்ஸிற்கு அப்பால் ஒரு தொலைதூர கிரகத்தில், புதிய சக்தி ஒன்று எழுகிறது.