Prime Video
  1. உங்கள் கணக்கு

ஆண்டி'ஸ் ஒயில்ட் அட்வென்ச்சர்ஸ்

சீசன் 1
ஆண்டி தினம் தனது கைப்பாவையாகும் நண்பர் கிக் பூனை கொண்ட சாகசங்களை மேற்கொள்கிறது. அவர்களது சாகசங்கள் உலகம் முழுவதிலும் விசித்திரமான மற்றும் அற்புதமான விலங்குகளைத் தேடி அவற்றை உலகம் முழுவதும் எடுத்துச் செல்கின்றன.
IMDb 7.2201240 எப்பிசோடுகள்
எல்லாம்
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பேரரசர் பென்குவின்கள்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    எல்லாம்
    அண்டார்ட்டிகாவில் உள்ள எம்ப்பரர் பெங்குவின்களை பார்ப்பதற்கு, சாகச காட்டுப்பயணத்திற்கு கிப்பை சேர்த்துக்கொள்கிறார் என்டி. அவர் ஒரு கூட்ட பெங்குவின்களை தடை செய்து நிறுத்தி, தன்னை வெதுவெதுப்பாக்கிக் கொள்ள முயற்சிக்கிறார். அப்போது ஒரு அப்பா பெங்குவினுக்குக் கீழ் ஒரு இடம் இருப்பதை அறிகிறார். அந்த இடம், கொஞ்சம் அதிகமாகவே வசதியாக உள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - யானைகள்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    எல்லாம்
    கென்யாவில் உள்ள யானைகளை பார்ப்பதற்காக, ஒரு வைல்டு அட்வெச்சரில் கிப்பை சேர்த்துக்கொள்கிறார் என்டி. அந்த யானைகள் தங்களை வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள புழுதியால் மூடிக்கொண்டுள்ளதைப் பார்க்கிறார். உண்மையில் தானும் அழுக்காகும்படி பார்த்துக்கொள்கிறார். அழுக்குகள் போக, அந்த யானைகளோடு சேர்ந்து தானும் குளிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - கருப்பு கரடிகள்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    எல்லாம்
    வடக்கு அமெரிக்காவில் உள்ள கருங்கரடிகளை பார்க்க, கிப்புடன் சேர்ந்து என்டி ஒரு வைல்டு அட்வென்ச்சர் செல்கிறார். ஒரு அழகான தேனியை என்டி பின்தொடர்ந்து செல்கிறார். அது, சுவைமிக்க தேனை சாப்பிட்டுக்கொண்டும், தங்கள் குட்டிகளோடு மரத்தில் ஏறிக்கொண்டும் உள்ள கருங் கரடிகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - மீர்கட்ஸ்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    எல்லாம்
    தென் ஆப்பிரிக்க கீரிகளைப் பார்க்க, கிப்புடன் சேர்ந்து ஒரு காட்டு சாகசப் பயணத்தை மேற்கொள்கிறார் என்டி. என்டி, அந்த தென்னாப்பிரிக்க கீரிகள் தன்னைப்போலவே தூக்கக் கலக்கத்தில் உள்ளதைப் பார்க்கிறார். அவைகளோடு அவர் புகைப்படும் எடுத்துக்கொள்கிறார். அதன்பிறகு அவைகள் சில பூச்சிகளை தங்கள் குட்டிகளின் காலை உணவுக்காக தேடத் தொடங்குகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - கிராஸ்கட்டிங் ஆன்ட்ஸ்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    எல்லாம்
    கட்டெறும்புகளைப் பார்ப்பதற்காக, காட்டு சாகசப் பயணத்தை கிப்புடன் மேற்கொள்கிறார் என்டி. லட்சக்கணக்கான எறும்புகளின் பேரணியில் என்டியும் பங்கேற்கிறார். விசாலமான பார்வைக்காக ஒரு புல்லின் உச்சியில் அவர் ஏறிக்கொள்கிறார். அந்த எறும்புகள் எப்படி உணவு தயார் செய்கின்றன என்பதை அறிய, அவைகளின் எறும்புக் கூடுகளுக்கும்கூட செல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - மலைக் குரங்குகள்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    எல்லாம்
    உகாண்டாவில் உள்ள மலைக் கொரில்லாக்களை பார்ப்பதற்காக, கிப்பை அழைத்துக்கொண்டு, ஒரு சாகச பயணத்தை மேற்கொள்கிறார் என்டி. அந்த குறும்புக்கார கொரில்லாக்கள் சண்டையிட்டுக்கொள்வதையும், கிளைகளில் ஊஞ்சலாடுவதையும் என்டி பார்க்கிறார். சுவையான இலைகள் மூலம் அவைகள் கட்டும் கூட்டை பார்ப்பதற்காக, அவர் மரத்தின் உச்சிக்கு ஏறிச்செல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - சின்ரப்ட் பென்குவின்ஸ்
    20 பிப்ரவரி, 2012
    14நிமி
    எல்லாம்
    அண்டார்ட்டிகாவில் உள்ள, தாடையில் கோடு உள்ள பெங்குவின்களை பார்ப்பதற்காக, கிப்பை சாகச பயணத்தில் இணைத்துகொள்கிறார் என்டி. ஒரு மீன்பிடி பயணத்தில் அந்த பெங்குவின்களோடு இணைந்துகொள்ள, குளிர்ச்சியான நீரில் குதிக்கிறார் என்டி. பின்னர் அவைகள் பசியாக இருக்கும் தங்களின் குஞ்சுகளுக்கு இரைகொடுப்பதைப் பார்க்க, செங்குத்தான பாறைகளுக்கு செல்லும் அவைகளை பின்தொடர்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - ஃபிளமிங்கோக்கள்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    எல்லாம்
    காட்டில் ஒரு சாகசகத்திற்காக, , ஃபிளமிங்கோ பறவைகளைப் பார்க்க கிப்புடன் கென்யா என்டி செல்கிறார். லட்சக்கணக்கான இளஞ்சிவப்பு ஃபிளமிங்கோ பறவைகளுடன் அவர் நடனமாடுகிறார். அந்த பறவைகள் தங்களுடைய குஞ்சுகளுக்கு எவ்வாறு உணவு ஊட்டுகின்றன என்பதை அறிய, கிப்பின் புதிய கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி, சேற்றில் சறுக்கிச் செல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - கபூசின் குரங்குகள்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    எல்லாம்
    பிரேசிலில் உள்ள காப்புச்சின் குரங்குகளைப் பார்ப்பதற்காக, கிப்பை அழைத்துக் கொண்டு வைல்டு அட்வென்ச்சர் செல்கிறார் என்டி. அந்த புத்திசாலி குரங்குகள், பாறைகளைப் பயன்படுத்தி, சுவைமிக்க கொட்டைகளை உடைப்பதை அவர் பார்க்கிறார். முடிவில் அந்த கொட்டைகளை இரண்டாக பிளக்க கிப்பின் புதிய கண்டுபிடிப்பைப் பயன்படுத்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - செங்கி
    31 டிசம்பர், 2011
    14நிமி
    எல்லாம்
    கிழக்கு ஆப்பிரிக்காவில் மூஞ்சுறுக்களைப் பார்க்க, வைல்டு அட்வென்ச்சருக்கு கிப்பை அழைத்துக் கொண்டு போகிறார் என்டி. அந்த அதிவேகமான மூஞ்சுறுக்கள் பூச்சிகளை வேகமாக துரத்திச் செல்கின்றன. எனவே, கிப்பின் அதிவேக ராக்கெட் காலணிகளைப் பயன்படுத்தி, போட்டிபோட நினைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - கிரிஸ்லி கரடிகள்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    எல்லாம்
    பழுப்புநிறக் கரடிகளைப் பார்ப்பதற்காக, கிப்புடன் சேர்ந்து என்டி அலாஸ்கா செல்கிறார். அந்த கரடிகளுக்கு மிக அருகில் செல்ல, சல்மோனின் அளவுக்கு தன்னுடைய உருவத்தை குறுக்கிக்கொள்கிறார் என்டி. அவைகளோடு நீந்திக் சென்று அந்த கரடிகள் காத்திருக்கின்ற இடத்திற்கு செல்ல வேண்டும். கரடிகள் மீன்பிடிப்பதைப் போன்றே ஒரு இடத்தைக் காண முயற்சிக்கிறார் என்டி. ஆனால் அது மிகவும் கடினமாக இருக்கிறது!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - பழ வௌவ்வால்கள்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    எல்லாம்
    என்டி தன்னுடன் கிப்பை அழைத்துக்கொண்டு, ஆப்பிரிக்காவில் பழ வௌவால்களை பார்ப்பதற்கான மற்றொரு சாகசத்தில் இருக்கிறார். கிப்-பின் புதிய கண்டுபிடிப்பின் உதவியோடு, பிக் டிப்பர் என்ற தலைகீழாக தொங்கும் அந்த வௌவால்களைப்போல், என்டி, வாழ்க்கையை அனுபவித்து, கிப் மொபைலில் மாயாஜால விமானத்தில் பறக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - கெய்மன்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    எல்லாம்
    என்டி தன்னுடன் கிப்பை அழைத்துக்கொண்டு, தென் அமெரிக்காவில் உள்ள முதலைகளை பார்ப்பதற்காகச் செல்கிறார். நிலத்திற்கு கீழே உள்ள கூட்டில், குஞ்சுபொரிக்கத் தயாராக உள்ள முட்டைகளை கண்டுபிடிக்கிறார் என்டி. புதிதாக பிறந்த குஞ்சுகளை எவ்வளவு பத்திரமாக அந்த முதலைகள் கையாளுகின்றன என்பதற்கு என்டிதான் முதல் சாட்சி. அவைகள் தங்கள் வாய்களால் அந்த குஞ்சுகளை நேர்த்தியாகக் கவ்விச் சென்று ஆற்றில் விடுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ1 எ14 - ஆஸ்திரேலியா அட்வென்சர்ஸ்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    எல்லாம்
    என்டியும் கிப்பும் ஆஸ்திரேலியாவில் வாழுகின்ற மிகவும் பயங்கரமான மற்றும் மிகவும் அற்புதமான விலங்குகளின் அருகில் சென்று புகைப்படம் எடுக்கத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து பிளாடிபஸ்-யையும், எச்சிட்னாவையும் சந்திக்கிறார்கள். முள்ளுகள் உள்ள பேய்களோடு பாலைவனத்தில் நடனமாடுகிறார் என்டி. இதனால்தான் என்டி தனக்கு சான்டி என்டி என்ற செல்லப் பெயரை சம்பாதித்துக்கொண்டார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ1 எ15 - மொனார்கி பட்டர்ஃப்லைஸ்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    எல்லாம்
    மெக்சிகோவில் குளிர்காலத்தில் மோனார்க் வண்ணத்துப் பூச்சிகளை பார்க்க, என்டியும், கிப்பும் செல்கிறார்கள். குளிர் காரணமாக லட்சக்கணக்ககான வண்ணத்துப்பூச்சிகள் தூங்கிக் கொண்டிருப்பதையும். சூரியன் வெளியே வரும்போது அவைகள் எழுந்து வானத்தில் பறப்பதை என்டி பார்க்கிறார். அதை தவறவிட மனமில்லாமல், கிப்-சின் பள்ளங்களில் ஏறும் மகத்துவமான கருவியைப் பயன்படுத்தி, அவைகளோடு இணைந்து வானத்தில் சிறகடிக்கிறார்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ1 எ16 - மகாக்யூஸ்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    எல்லாம்
    ஜப்பானின் பனிமலைகளில் உள்ள குட்டைவால் குரங்குகளைப் பார்க்க என்டியும், கிப்பும் செல்கின்றனர். வெந்நீர் ஊற்றுகளில் குட்டைவால் குரங்குகள் குளித்துக்கொண்டிருப்பதை என்டி பார்க்கிறார். வெதுவெதுப்பான குளியலுக்காக அவைகளோடு இணைந்துகொள்கிறார். ஆவி பறக்கும் நீரில் முழுவதும் நனைந்தபடி அவர், குரங்குகள் தங்களுக்கு தாங்களே பேன் பார்த்துக்கொண்டும், தங்கள் கால்களை மட்டுமே நீருக்குள் உணவு தேடுவதையும் பார்க்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ1 எ17 - நெருப்பு கோழிகள்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    எல்லாம்
    நமீபியாவில் நெருப்புக்கோழிகளை பார்க்க என்டியும், கிப்பும் செல்கின்றனர். கிப்பின் புதிய கண்டுபிடிப்பான எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ராடினரி எக்ஸ்ரே உதவியோடு நெருப்புக்கோழியின் முட்டைக்கு உள்ளே சென்று பார்க்கிறார் என்டி. புதிதாகப் பிறந்து நடக்கக் கற்றுக்கொள்ளும் குஞ்சுகளோடு இணைந்துகொள்கிறார். ஒரு சிங்கம் அவர்களை நோக்க வந்தபோது, தப்பிப்பதற்காக, அதி வேகமாக ஓடும் ஆண் நெருப்புக்கோழியின் முதுகில் ஏறிக்கொண்டார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ1 எ18 - ஸ்ட்ராபெரி டார்ட் தவளைகள்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    எல்லாம்
    மத்திய அமெரிக்காவில் விஷத் தவளைகளை பார்க்க என்டியும், கிப்பும் செல்கின்றனர். கிப்பின் புதிய கண்டுபிடிப்பான கிளவர் கேட் கிளைம்பிங் ரோப் மூலம் செல்லும் என்டி, ஒரு தாய் தவளை தனது தலைப்பிரட்டையை மரத்தில் கொண்டுசெல்வதைப் பார்க்கிறார். அங்கு அவர் தன்னுடைய உடலை ஒரு தலைப்பிரட்டை அளவுக்கு சுருக்கிக்கொள்கிறார். சின்னங்சிறு மரத்தின் மீது உள்ள குளத்தில் ஒரு இளம் தவளையோடு நீச்சலுக்குச் செல்கிறார் என்டி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ1 எ19 - வைட்பார்க் பைன் மரம்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    எல்லாம்
    இந்தமுறை, வடக்கு அமெரிக்காவில், வெள்ளைப் பட்டை பைன் மரங்களுக்கு மத்தியில் வாழும் விலங்குகளை பார்க்க, என்டியும், கிப்பும் மற்றொரு வைல்டு அட்வென்ச்சரை மேற்கொள்கிறார்கள். ஒரு அணிலைப் பார்த்தப்பிறகு, கரடியை அவர் தரிசிக்கிறார். தி கிளார்க் நட்கிராக்கர் என்னும் பறவையோடு என்டி பறக்கிறார். அது பைன் கொட்டையை பறித்து, குளிர்காலத்திற்காக மும்முரமாக புதைத்து வைப்பதைப் பார்க்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ1 எ20 - நியூசிலாந்து பென்குவின்ஸ்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    எல்லாம்
    இந்தமுறை, நியூசிலாந்தில் உள்ள கொண்டையுள்ள பெங்குவின்களைப் பார்க்க, என்டியும், கிப்பும் மற்றொரு வைல்டு அட்வென்ச்சரை மேற்கொள்கிறார்கள். பெங்குவின் அளவுக்கு என்டி தனது உடலை சுருக்கிக்கொள்கிறார். காட்டில் இருந்து கீழே இறங்கி, கடலுக்குச் செல்லும் அந்த பாறை இடமான, குஞ்சுகள் முதன்முறையாக மீன்பிடிக்கப்பழகும் இடத்திற்கு அன்றாடம் அவைகள் செல்லும் தங்கள் பயணத்தை என்டி பின்தொடருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ1 எ21 - உராங்குட்டான்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    எல்லாம்
    போர்னியோவில், இலைகளைக் கொண்டு குடைகளைச் செய்யும் உராங்குட்டான் குரங்குகளைப் பார்க்க என்டியும், கிப்பும் செல்கின்றனர். வழிகளில் உள்ள திராட்சைக் கொடிகளை, குரங்குகளைப் போலவே கைகளால் பிடித்து சாடி ஆட என்டி முயலும்போது ஆற்றுக்குள் விழுந்த அவர், அவ்வாறு சாடி ஆடுவது அவ்வளவு எளிதானதல்ல என்பதை கண்டுகொண்டார். அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக படகில் சென்றுகொண்டிருந்த உராங்குட்டான் குரங்கு அவரை காப்பாற்றியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ1 எ22 - இராட்சத ஆமைகள்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    எல்லாம்
    தென் அமெரிக்காவில் உள்ள கலாப்பாகோஸ் தீவுகளுக்கு சென்று, ராட்சத ஆமைகளைத் தேட, என்டியும், கிப்பும் செல்கின்றனர். இந்த ஊர்வன் நான்கு ஆன்டிகள் சேர்ந்த எடையுடன், 15 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியவை. வழியில், அந்த ஆமைகள் அவற்றின் சருமத்தைச் சுத்தமாகவும், பூச்சிகள் இல்லாமலும் வைத்துக்கொள்ளும் கேலாபகோஸ் ஃபிஞ்ச் என்ற சின்னஞ்சிறு பறவையுடன் ஓர் சிறப்பு உறவு கொண்டிருப்பதை ஆன்டி கண்டுபிடிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ1 எ23 - மர்சுபியால்ஸ்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    எல்லாம்
    ஆன்டி, கிப் இருவரும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் விலங்குகளைத் தேடிச் செல்கின்றனர். கோலா கரடிகளைச் சந்திப்பதற்காக ஆன்டி தனது ராக்கெட் பேக்கைப் பயன்படுத்தி யூகலிப்டஸ் மரத்தின் உச்சிவரை பறந்துசெல்கிறான். பின்னர் ஆஸ்திரேலியாவில் மோசமான விஷயங்களுக்காகப் பெயர்போன ஹாப்பர்களில் சிலரைக் கண்டுபிடித்து, ஒரு கங்காருவின் பைக்குள் ஏறிக்கொண்டு, ​​தனக்கென்று ஒரு துள்ளித் தாவும் சாகச அனுபவத்தைத் தேடிக்கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ1 எ24 - புலிகள்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    எல்லாம்
    ஆன்டி, கிப் இருவரும் புலிகளைப் பார்க்க இந்தியாவிற்குப் பயணம் செய்கிறார்கள். ஆன்டி சில புலிக்குட்டிகளுடன் கண்ணாமூச்சி விளையாட முயல்கிறான்; ஆனால் அவை நீண்டு வளர்ந்த புற்களுக்குள் அவற்றை நன்கு மூடிமறைத்து வைக்கின்றன. ஆன்டி மறைந்துகொள்ளும்பொழுது, அவன் ஒரு மரத்தின் மீது அமர்ந்திருப்பதை அவை எளிதாகக் கண்டுபிடித்துவிடுகின்றன. எனவே அதற்குப் பதிலாக அவற்றுடன் கால்பந்து விளையாட முடிவுசெய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ1 எ25 - நீர் நாய்கள்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    எல்லாம்
    ஆன்டி, கிப் இருவரும் யெல்லோஸ்டோன் நேஷனல் பார்க்கில் நீர்நாய்களைக் காணச் செல்கிறார்கள். கிப்பின் பனிச்சறுக்கு ஷூக்களின் உதவியுடன் ஆன்டியால் பனி படர்ந்த பகுதியில் எளிதாக நடந்துசெல்ல முடிகிறது. அருகிலுள்ள கயோட்டி அவர்கள் பிடித்துக் கொண்டிருக்கும் மீன்களின் வாசத்தை முகர்ந்துகொள்கிறது. அதைக் கவர்ந்துகொள்வதற்காக அது படர்ந்து கிடைக்கும் பனிக்குள் தோண்டுவதை ஆன்டி வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 40 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
John Miller
தயாரிப்பாளர்கள்
Charlotte CrosseWendy DarkeHenrietta Hurford-JonesTim Lowe
நடித்தவர்கள்
Andy DayAlex WintersHarriet Carmichael
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.