Prime Video
  1. உங்கள் கணக்கு

கேங்ஸ்டார்ஸ் (தெலுங்கு)

சீசன் 1
கேங்ஸ்டார்ஸ் "ஜானே பி தோ யாரோன்" பாணியில் காட்சியமைக்கப்பட்ட 12 பகுதிகள் கொண்ட இத்தொடரில் 2 திரைப்பட நடிகர்கள், 2 முன்னாள் காதலர்கள், ஒரு இரக்கமற்ற தாதா ஆகியவர்களைச் சுற்றி நகர்கிறது. சம்பந்தப்பட்ட நபர்களின் வாழக்கையைப் புரட்டிப்போடும் வகையில் நிகழும் ஒரு சம்பவத்திலிருந்து துவங்கும், ஒன்றோடொன்று தொடர்புடைய நிகழ்வுகளையும் கதாபாத்திரங்களின் வாழ்வினையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு துயர நகைச்சுவைத்தொடர்!
201812 எப்பிசோடுகள்
13+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. கேங்ஸ்டார்ஸ் - டிரெய்லர் (தெலுங்கு)
    31 டிசம்பர், 2017
    59நொடி
    13+
    கேங்ஸ்டார்ஸ் "ஜானே பி தோ யாரோன்" பாணியில் காட்சியமைக்கப்பட்ட 12 பகுதிகள் கொண்ட இத்தொடரில் 2 திரைப்பட நடிகர்கள், 2 முன்னாள் காதலர்கள், ஒரு இரக்கமற்ற தாதா ஆகியவர்களைச் சுற்றி நகர்கிறது. சம்பந்தப்பட்ட நபர்களின் வாழக்கையைப் புரட்டிப்போடும் வகையில் நிகழும் ஒரு சம்பவத்திலிருந்து துவங்கும், ஒன்றோடொன்று தொடர்புடைய நிகழ்வுகளையும் கதாபாத்திரங்களின் வாழ்வினையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு துயர நகைச்சுவைத்தொடர்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ1 - தொடர் பகுதி 1
    30 மே, 2018
    22நிமி
    16+
    தாதா கிருஷ்ணதாஸ் (கே.டி.) வளர்ந்து வரும் எழுத்தாளரும் இயக்குனருமான அஜயைச் சுட்டு விடுகிறான். குண்டடிபட்டுக் கீழே விழும் பொழுது, தன் மரணத்திற்கு காரணமானவர்களை பற்றி சொல்ல ஆரம்பிக்கிறான். அஜயின் பின்கதையில், காஃபி விளம்பரத்தில் நடித்திக்கொண்டிருக்கும் நடிகையை சந்திக்கிறான். அவன் போராடிக்கொண்டு இருக்கும் ஒரு இளம் எழுத்தாளன் என்பதும் தெரிகிறது. கே.டி. நினைவிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ2 - தொடர் பகுதி 2
    30 மே, 2018
    22நிமி
    13+
    கே.டி. தான் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதும், இன்னும் சில மாதங்களே உயிர் வாழ முடியும் என்பதையும் அறிகிறான். இதற்கிடையில், அஜய்க்கு ஒரு புகழ்பெற்ற திரைப்பட நடிகரின் மேலாளராக வாய்ப்பு கிடைக்கிறது. அபூர்வா தயரிப்பாளராக விரும்புகிறாள். அனால், அவள் மாமாவிற்குத் திடீர் என்று சிறிய மாரடைப்பு வந்து விட நிலைமை தலைகீழாகிறது. கே.டி தனது கறுப்புப் பணத்தை மாற்ற ஒரு திரைப்படம் எடுக்க முடிவு செய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ3 - தொடர் பகுதி 3
    30 மே, 2018
    21நிமி
    13+
    கீர்த்தி, சூப்பர்ஸ்டார் விஷ்வாவின் மேலாளர் பொறுப்பை ஏற்கிறாள். மற்றும், அஜய்யின் அப்பா ஒருவழியாக அவன் ஐஸ்வர்யாவின் மேலாளராக வேலை பார்க்கச் சம்மதிக்கிறார். திரைப்படத்தின் முதல் ஷெட்யூல் செட்டில், விஷ்வா ஐஸ்வர்யாவைச் சந்திக்கிறான். அவர்களிடையே காதல் துளிர்க்கிறது. போட்டோஷூட்டின் போது அஜய்யும் கீர்த்தியும் நேருக்கு நேர் சந்தித்துத், திகைப்புக்குள்ளாகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ4 - தொடர் பகுதி 4
    30 மே, 2018
    22நிமி
    13+
    இரண்டு பாகங்கள் கொண்ட இத்தொடரில். முதல் பாகம், கீர்த்தி மற்றும் அஜயின் கல்லூரியில் வாழ்க்கை பற்றியது. கீர்த்தி முதலாமாண்டு மாணவர்களுக்கான ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறாள் கீர்த்தி. அஜய்க்கு கீர்த்தியின் மேல் அன்பு இருப்பதை டிக்கி, கீர்த்தியிடம் அவன் காதலை வெளிப்படுத்த உந்துகிறான். அடுத்தத் தொடர் பகுதியில் கதை தொடர்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ5 - தொடர் பகுதி 5
    30 மே, 2018
    22நிமி
    13+
    விஷ்வா மற்றும் ஐஸ்வர்யா தங்கள் கடந்த காலத்தைப் பற்றி காரில் பேசி செல்லுகையில் அவர்களிடையே நெருக்கம் அதிகமாகிறது. அவர்கள் படப்பிடிப்பிற்குத் திரும்பி வராததால் இயக்குனர் அமைதியிழக்கிறார். இதன் காரணமாக, விஷ்வா மற்றும் ஐஸ்வர்யாவுக்கு முறையே மேலாளர்களாக இருக்கும் அஜய் மற்றும் கீர்த்திக்கு இடையே விரிசல் ஏற்படுகிறது. கல்லூரி காலத்தின் அவர்களிடேயே ஏற்பட்டப் பிரிவைப்பற்றி இருவரும் யோசிக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ6 - தொடர் பகுதி 6
    30 மே, 2018
    20நிமி
    13+
    இரண்டு நடிகர்களுக்கிடையே உள்ள விரிசல் காரணமாக, தயாரிப்பாளர் பால சுப்பிரமணியம், கே.டியால் மிரட்டப்படுகிறார். விஷ்வா மற்றும் ஐஸ்வர்யாவை படபிடிப்பிற்கு வரவழைக்க சமாதானப்படுத்த பாலா எடுக்கும் முயற்சி வெற்றி அடைகிறது. அனால் இருவரும் சேர்ந்தார் போல் இருக்கும் காட்சிகளில் நடிக்க மறுக்கின்றனர். அதே நேரத்தில, தான் ஏன் ஹீரோவாக ஆக்கப்படவில்லையென்று ரெட் யோசிக்கத் துவங்குகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ7 - தொடர் பகுதி 7
    30 மே, 2018
    22நிமி
    13+
    பால சுப்பிரமணியம் என்ன நடந்தது என்றறியாமல் ஆனந்தமாகத் தன் எருமைகளைக் குளிப்பாட்டிக் கொண்டு இருக்கிறார். கே.டி. துப்பாக்கியுடன் அவர் இடத்திற்குச் செல்கிறான். போனில் உள்ள செய்திக்காட்சியைக் காட்டி என்ன நடக்கிறது என்று கேட்கிறான். உடனடியாக பாலா இதைச் சரி செய்யவில்லை என்றால் அவர் உயிருக்கு ஆபத்து என்று எச்சரிக்கிறான் கே.டி.! மேலும் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள முழு தொடர் பகுதியைப் பார்க்கவும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ8 - தொடர் பகுதி 8
    30 மே, 2018
    23நிமி
    13+
    ஒரு இசை வெளியீட்டு விழாவில் விஷ்வா கோபமடைந்து, மது அருந்துகிறான்.. அஜய்யும் கீர்த்தியும், விஷ்வாவையும்-ஐஸ்வர்யாவையும் மீண்டும் ஒன்றாக இணைப்பதென சபதமெடுக்கிறார்கள். கே.டி., கீர்த்தியின் அம்மாவை தற்செயலாக சந்தையில் சந்திக்கிறான். அடுத்தது என்ன நடந்தது என்றுத் தெரிந்துகொள்ள முழு முழு தொடர் பகுதியைப் பார்க்கவும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ9 - தொடர் பகுதி 9
    30 மே, 2018
    21நிமி
    13+
    நடிகர்கள் படப்பிடிப்பிற்கு தயாராக இருப்பதை அறிந்த பாலா சந்தோஷப்படுகிறார். ஐஸ்வர்யாவும் விஷ்வாவும் இறுதியில் ஒன்றாக இணைகிறார்கள். இதனிடையில், கே.டி-க்கு ஒரு முக்கியமான செய்தி தெரிய வர; ரெட் கொல்லப்படுகிறான். அடுத்தது என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள முழு தொடர் பகுதியைப் பார்க்கவும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ10 - தொடர் பகுதி 10
    30 மே, 2018
    22நிமி
    13+
    அஜய், கீர்த்தி மற்றும் விஷ்வா அடுத்து தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறார்கள். ரெட்டின் மரணத்தைப் பற்றி ஐஸ்வர்யாவுக்குத் தெரிய வருகிறது. அவள், விஷ்வா மற்றும் மற்றவர்களுக்கு உதவ முன் வருகிறாள். பின் ஒரு திட்டம் வகுக்கிறார்கள். ஆனால் அந்நேரத்தில், எதிர்பார்க்காத ஒரு ஆள் அவர்கள் அறைக் கதவைத் தட்டுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ11 - தொடர் பகுதி 11
    30 மே, 2018
    22நிமி
    13+
    விஷ்வாவும் கூட்டாளிகளும் மிரட்டப்படுகிறார்கள். அஜய் அடுத்து என்ன செய்யப்போகிறான்? கே.டி. என்ன செய்யப்போகிறான்? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ12 - தொடர் பகுதி 12
    30 மே, 2018
    21நிமி
    13+
    அஜய் பார்த்துக்கொண்டே இருக்கும் போது ரெட்டின் போன் அடிக்கிறது. விஷ்வா என்ன நடக்கக் கூடுமென்று கவலையில் இருக்கிறான். இதற்கிடையில், ஐஸ்வர்யா காராவேனின் உள்ளே சென்று என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்கிறாள். மேலும் தெரிந்து கொள்ள முழு தொடர் பகுதியைப் பார்க்கவும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Ajay Bhuyan
தயாரிப்பாளர்கள்
Silly Monks Entertainment LtdEarly Monsoon Tales
நடித்தவர்கள்
Jagapati BabuNavdeepSidhu
ஸ்டுடியோ
Silly Monks Entertainment & Early Monsoon Tales
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.