

ஃப்ரீ மீக்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - இரண்டு அமெரிக்காக்கள்
8 ஆகஸ்ட், 201933நிமிமீக் மில் ஒரு ஹிப்ஹாப் சூப்பர்ஸ்டாராக இருந்தாலும், ஃபில்லியின் மிகவும் வன்முறை நிறைந்த பேட்டைகளில் சண்டைப் பாடல்களை ராப் செய்பவராக தனது பயணத்தைத் தொடங்கினார். அவரது 19 வயதில், காவல்துறையுடன் ஏற்பட்ட ஒரு வன்முறை சம்பவம், அவரை சிறைக்கு அனுப்பி, நீதி அமைப்பில் அவரை சிக்கவைக்கிறது. அதன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள தனது அடுத்த 11 ஆண்டுகளை அவர் செலவிட்டுள்ளார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - பொறி
8 ஆகஸ்ட், 201945நிமிதுப்பாக்கி வைத்தல் மற்றும் போதைப்பொருள் வினியோகத்துக்காக மீக்கிற்கு 11 ½ முதல் 23 மாத சிறைவாசமும், 10 ஆண்டு கண்காணிப்பும் விதிக்கிறார் நீதிபதி ஜெனீஸ் ப்ரிங்க்லி. விடுதலையானதும், ரிக் ராஸ் மற்றும் ராக் நேஷனுடன் மீக்கின் இசைத்தொழில் வெற்றியடைகிறது, ஆனால் தொடரும் கண்காணிப்பு மீறல்களால் மறுபடியும் ப்ரிங்க்லியின் நீதிமன்றம் சென்று, சிறை செல்கிறார். இப்போது தப்ப முடியாத பொறியில் அவர் சிக்கியுள்ளார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - அவளது கட்டைவிரலின் கீழ்
8 ஆகஸ்ட், 201938நிமிகண்காணிப்புடன் போராடும் மீக்கின் சொந்த வாழ்க்கை சீர்கேடு அடைகிறது. போதை அடிமைத்தனத்துடன் போராடியபின் விமான நிலைய மோதலுக்காகவும் இருசக்கர வண்டி சாகசத்துக்காகவும் நீதிபதி ப்ரிங்க்லி அவரை 2-4 ஆண்டுகள் சிறைக்கு அனுப்புகிறார். வழக்கானது இனவெறி அநீதி பதட்டங்களைத் தூண்டியதால் மக்கள் வீதிகளில் போராடுகையில், மீக்கின் வக்கீல்கள் குழு நீதிபதியைப்பற்றி விசாரித்ததில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவருகின்றன.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - சாக்கடைடெல்ஃபியா
8 ஆகஸ்ட், 201944நிமிதனியார் துப்பறிவாளர்கள் மீக்கின் முதல் கைதை ஆராய்ந்து புதிய துப்புக்களைக் கண்டுபிடிக்கின்றனர். முன்னாள் காவல் அதிகாரிகள், மீக்கை கைது செய்த அதிகாரியைப் பற்றி அதிரவைக்கும் குற்றச்சாட்டுகளை பகிர்வதால், மீக்கின் விசாரணையில் சமர்ப்பிக்கபட்ட சம்பவ அறிக்கை பொய்யாக இருக்கலாம் என்று துப்பறிவாளர்கள் அறிகின்றனர். மீக்கின் ஆதரவாளர்கள் புதிய நம்பிக்கையை உணர்ந்தாலும், மீக்கை விடுவிக்க புதிய உண்மைகள் போதுமா?Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - விடுதலையானேன், சுதந்திரமில்லை
8 ஆகஸ்ட், 201935நிமிமீக்கின் விதியை நீதிபதி ப்ரிங்க்லி முடிவுசெய்கையில், கிளர்ச்சியாளர்கள் நீதிமன்றத்தை சூழ்கின்றனர். மீக்கின் வழக்கை தள்ளுபடி செய்ய அரசு வக்கீல்கள்கூட வாதிட்டாலும், நீதிபதியின் தீர்ப்பால் புதிய திட்டத்துக்காக வக்கீல்கள் தவிக்கின்றனர். ஒரு மகத்தான தேசிய இயக்கத்துக்கு நடுவே நிற்கும் மீக், தனது சிறைவாச அதிர்ச்சியிலிருந்து மீளப் போராடுவதோடு, நீதி அமைப்பை மாற்றக்கூடிய சகாப்த்ததை உருவாக்க முயற்சிக்கிறார்.Prime-இல் சேருங்கள்