பரியேறும் பெருமாள் என்கிற பரியன் (கதிர்) தமிழகத்திலுள்ள திருநெல்வேலியில் சட்டப்படிப்பு படிக்கும் ஒரு இளைஞன். ”கறுப்பி” என்றொரு வேட்டை நாய் அவனிடம் கிராமத்தில் இருக்கிறது. அவனது கிராமத்தின் அருகில் இருக்கும் காட்டிலும் மேட்டிலும் அவன் அதனுடன் சுற்றித் திரிகிறான். அது திடீரென கொலை செய்யப்பட்டதால் மனமுடைகிறான். இறுதிவரை அது அவன் வாழ்வைப் புரட்டிப் போடுகிறது.