அலியா பட் (ஷரண்யா சிங்கானியா), சித்தார்த் மல்ஹோத்ரா (அபிமன்யு சிங்), வருண் தவான் (ரோஹன் நந்தா) ஆகியோர் அறிமுகம். செயின்ட் தெரசா கல்லூரி மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட டீனைப் பார்க்கச் செல்கிறார்கள். பத்து வருட அனுபவங்களையும், அவர்கள் நட்பை முறித்த ஆண்டின் சிறந்த மாணவனுக்கான போட்டியையும் மாறுபட்ட உணர்வுகளுடன் நினைவு கூர்கிறார்கள்.