Prime Video
  1. உங்கள் கணக்கு

தி டால்டன்ஸ்

வில்லியம், ஜேக், ஆவெரெல், ஜோ டால்டன் தப்பிக்க முயல்கிறார்கள். ஆனால் இயலவில்லை. அவர்களது திட்டங்கள் புத்திசாலித்தனமாக இல்லாமல் இருந்தாலும், அவர்களது மனோதிடத்தால் சமாளிக்கிறார்கள். ஜோ தலைமை வகிப்பவர், ஆவெரெல் புத்திசாலி, வில்லியமும் ஜேக்கும் எந்த திட்டத்திற்கும் துணை நிற்க தயாராய் இருப்பவர்கள். தொடர்ந்து அவர்கள் தோல்வியடைகின்றனர், டால்டன்களுக்கு உண்மையில் அதிர்ஷ்டம் தேவை.
IMDb 8.3201026 எப்பிசோடுகள்
7+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - டன்னல் ட்ரபில், ஸ்டார்மி வெதர், தி டால்டன்ஸ் கூ எலெக்ட்ரிக்
    31 டிசம்பர், 2015
    21நிமி
    7+
    டால்டன்கள் சுரங்க வழியாக தப்பியபோது ஒளிரும் காளானை உண்கின்றனர். அது அவர்களை நோக்கி கவனத்தை ஈர்த்து திட்டத்தை குலைக்கிறது. ஏவரெல் தப்பிப்பதற்காக மழை நடனம் மூலம் சிறைக் காவலர்கள் மீது மின்னல் வெட்டச் செய்கிறான். இதைப் பார்த்து பழங்குடியினர் தங்கள் பாரம்பரியத்தை கிண்டல் செய்துவிட்தாக கோபம் அடைகின்றனர். டால்டன்கள் தாமஸ் எடிசனின் மின்சார விளக்கு கண்டுபிடிப்பை பயன்படுத்தி தப்ப முயலுகிறார்கள்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - ஹோஸ்டேஜ் ஹாவோக், தி டைரக்டர்ஸ் கேர்ல்ஃபிரண்ட், தி பிராபெசி
    31 டிசம்பர், 2015
    20நிமி
    7+
    சுவரில் டால்டன்கள் போடும் ஓட்டையால் அவர்களை பிணைக் கைதிகளாக பயன்படுத்தி பில் தப்பிக்கிறான். ஜோ பில்லுடன் ஒப்பந்தம் செய்ய முயலுகிறான், வெற்றிபெறுவானா? மிஸ்டர் பீபாடிக்கு காதலர் தேவை என பத்திரிகை விளம்பரம் பார்க்கிறார்கள் டால்டன்கள். ஜோ அதற்கான நபராக மாறுவேடமிட்டு தன் சகோதரர்கள் தப்ப உதவுகிறான். டால்டன்கள் போரிசின் குறி சொல்வதை பயன்படுத்தி தப்பிக்க முயலுகிறார்கள். ஆனால் அந்த ஜோதிடம் பொய்யாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - தி டால்டன்ஸ் பிளே ரக்பி
    31 டிசம்பர், 2015
    20நிமி
    7+
    டால்டன்கள் தப்பிக்க திட்டமிடும் ரக்பி ஆட்டத்தில், ஜோ அபாரமான விளையாடி வெல்கிறார்கள். ஆனால் அவர்களின் திட்டம் தோற்கிறது. அவர்கள் சீனப் பெண் ஒருத்தியை பிணைக் கைதியாக பிடிக்க, அடுத்தடுத்த நகைச்சுவைச் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இறுதியாக, தூக்கம் ஏற்படுத்தும் திரவத்தை பயன்படுத்தி தப்பிக்க முயலுகிறார்கள், வெளியேறிய உடனே அவர்கள் தற்செயலாக தூங்கிப் போவதால் திட்டம் தலைகீழாகிப் போகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - ஹேண்ட்ஸ் ஆஃப் மை ராக்ஸ், லாஸ்ட் வில், ஸ்மோக் வித்தவுட் ஃபயர்
    31 டிசம்பர், 2015
    21நிமி
    7+
    உடைப்பதற்கு போதுமான கற்கள் இல்லை என்று சிறைவாசிகள் போராடுகிறார்கள். புதிய கல் குவியல் வரும் போது, அதில் வைரங்களை காண்கிறார்கள். வைரங்களை தங்களுக்கு பயன்படுத்த ஜோ முயலுகிறான். தப்ப ஜோ திட்டம் தீட்டுகிறான், டால்டன்களும் பின்பற்றுகின்றனர். செவ்விந்தியர்களின் படையெடுப்பு நடக்கக் கூடும் என்று பாதுகாவலன் அச்சப்படும் போது, அவர்களை மீட்க ஒரு சார்ஜன்ட் வந்து, தண்டனைப் பெற்றவர்களுக்கு பயிற்சி தருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - தி மெஜீசியன், டோட்டம் போல் டால்டன்ஸ், தி 2 மினிட் ஸ்டாப்
    31 டிசம்பர், 2015
    21நிமி
    7+
    டால்டன்கள், குறிப்பாக ஜோ, சிறையில் இருந்து தப்ப அனைத்து வழிகளையும் தேடிக் கொண்டிருக்கிறான். சிறைக்கு மந்திரவாதி ஒருவன் வந்து மந்திர வித்தைகளை காட்டியதும் அவனது விருப்பம் நிறைவேறுகிறது. மந்திரவாதியின் துணையுடன் தப்பிக்கும் முயற்சி தோல்வி அடைந்தும், ஜோ நம்பிக்கையை இழக்காமல் முயலுகிறான். அடையாளம் உருவாக்குவதில் திறமைசாலி என்று பொய் சொல்லிவிட்டு தப்பிச் செல்லும் ஜோ, மீண்டும் சிக்கிக் கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - கிரேஸி ஃபயர்கிராக்கர்ஸ், டாட்ஸ் அண்ட் ஸ்ட்ரைப்ஸ், இன்விசிபில் டால்டன்ஸ்
    31 டிசம்பர், 2015
    20நிமி
    7+
    சமையல் கலைஞர் தன் கலாசார நிகழ்வை கொண்டாடும் போது, டால்டன்கள் பங்குபெறுகின்றனர். ஜோ தப்பிக்க திட்டம் வகுத்துள்ளான். சிறையை முழுதாக தகர்ப்பது தோல்வி. மீண்டும், ஏவரெல்லின் தீர்ப்பு அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும் போது, ஜோ தப்பிக்க திட்டம் தீட்டுகிறான். ஆனால் தோற்கும் போது, மனிதர்களை கண்ணுக்குத் தெரியாமல் மறையச் செய்யும் திரவம் ஒன்று டால்டன்களுக்குக் கிடைக்கிறது. இதை வைத்து தப்பிக்க முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - தி டால்டன்ஸ் கோ கிளிம்பிங், தி டால்டன்ஸ் எஃப்ளோட், ஃப்ரீ அட் லாஸ்ட்
    31 டிசம்பர், 2015
    21நிமி
    7+
    ஹான்ஸ் யோடில் என்ற மலையேறுபவர் சிறைக்கு புதிய கைதியாக வருகிறார். இதைப் பார்த்து, சகோதரர்கள் தப்பிக்க திட்டமிடுகிறார்கள். அவர்களை ஹான் கைவிட்டுவிடுகிறான். சீர்திருத்தகம் வரும் ஒரு விருந்தினர், எங்கிருந்தாலும் தண்ணீரை கண்டுபிடிக்கக் கூடியவர். அதை வைத்து டால்டன்கள் போடும் திட்டம் அவர்களுக்கு எதிராக திரும்புகிறது. மறுதீர்ப்புக்காக ஜோ சுதந்திரமாக இருக்கையில், தனது சகோதரர்களையும் விடுவிக்க முயலுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - தி கிரேட் கிரீன் எஸ்கேப், ஃப்ரீவால் டால்டன்ஸ், டாக்டர். ஜெஃப்கில் அண்ட் மிஸ்டர். அவெரெல்
    31 டிசம்பர், 2015
    21நிமி
    7+
    தேசிய சிறைப் பூ போட்டி நடைபெறும் போது, சிறை வாசிகளிடம் பாதுகாவலர் தகவல் சொல்கிறார். ரகசிய உரம் மூலம் தப்பிக்க டால்டன்கள் திட்டமிடுகின்றனர், ஆனால் தவறாகி விடுகிறது. தப்பிக்கும் போது டால்டன்கள் பிடிபட்டுவிடுகிறார்கள். பாதுகாவலர்கள் குதிரைகள் மூலம் துரத்தி வருவதால், டால்டன்கள் மிதிவண்டிகளில் தப்ப திட்டம் போடுகிறார்கள். மூளை நிபுணர் உள்ளார், அவரது தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி தப்ப திட்டமிடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - ஜோ தி ஆஸ்ட்ரிச் மேன், ஜோ பிளேபாய், கூஃபி கோல்ஃப்
    31 டிசம்பர், 2015
    21நிமி
    7+
    சிறையில் நெருப்புக்கோழி நிபுணர் உள்ளார், அவர் மூலம் சிறைக்கு வெளியே நெருப்புக் கோழி பண்ணை துவக்க பாதுகாவலர் திட்டமிடுகிறார். இதை தப்பிப்பதற்கான வாய்ப்பாக டால்டன்கள் பார்க்கின்றனர். மிஸ் பெட்டியிடம் சிறு உதவி பெற்று தப்ப நினைக்கிறார்கள். ஆனால் மிஸ் பெட்டியின் உதவியை பெற முடியுமா. பாலைவனத்தில் கோல்ஃப் மைதானம் அமைக்க பாதுகாவலரை ஏற்கச் செய்யும் டால்டன்கள், அதை வைத்து தப்பிக்க திட்டமிடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - தி டால்டன்ஸ் கோ ஸ்னோ-கிரேஸி, தி டால்டன்ஸ் கிறிஸ்துமஸ், செப்டிகல் சோர்ஸரர்
    31 டிசம்பர், 2015
    21நிமி
    7+
    வல்லூறு நடனமாடும் போது பனி பொழிகிறது. டால்டன்கள் தப்பிக்க பனிப் பொழிவை பயன்படுத்துகின்றனர். கிறிஸ்துமஸ் காலம். இந்த முறை புகைப் போக்கி ஒன்றை கட்டுகிறார்கள், தப்பிக்க. ஆனால், லூக்கின் உதவிக்கு சான்டா வருகிறார். டால்டன்கள் அன்பளிப்புகளில் அடைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கிறான். டால்டன்கள் இந்த முறை நம்பிக்கை இல்லாத மந்திரவாதியுடன் அணி சேர்கிறார்கள். அவரை ஆத்திரமூட்டி, அவரது கோபத்துக்கு ஆளாகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - மைண்ட் வெர்சஸ் பாடி, ட்விஸ்டர், ரீஇன்கார்னேசன்
    31 டிசம்பர், 2015
    21நிமி
    7+
    ஏவரெல் தியானம் செய்யத் தொடங்கிய பின், ஆன்மா உடலில் இருந்து வெளியேறுகிறது. சிறையில் இருந்து தப்பிக்க முடிகிறது, ஆனால் விதி வேறு. சிறை வளாகத்தை சூறாவளி ஒன்று நெருங்க, தப்பிப்பதற்கான கச்சிதமான வாய்ப்பாக டால்டன்கள் பார்க்கின்றனர். தப்புவதற்காக டால்டன்கள் செவிலியர்களாக வேடமணிந்து கொள்கிறார்கள். ஆனால், ஏவரெல் தன் சகோதரர்கள் கற்களாக மாறிவிட்டதாக கருதி, திட்டத்தை சீர்குலைத்து விடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - தி ஃபாகிர், அப், அப் அண்ட் அவே!, தி டால்டன்ஸ் ஆன் ஹை
    31 டிசம்பர், 2015
    20நிமி
    7+
    தப்புவதற்காக பிரகாஷின் மாயாஜால புல்லாங்குழலை டால்டன்கள் திருடுகின்றனர். இதை கண்டுபிடிக்கும் அவன், அவர்களை மனோவசியம் செய்வதால், சிறைக்கு திரும்புகின்றனர். ஆடை சலவையகத்தின் நீராவி மூலம் சிறையில் காற்றில் பறக்க வைக்க திட்டமிடுகின்றனர். ஆனால் தோல்வியடைந்து, ஆரம்பித்த இடத்திலேயே நிற்கின்றனர். நாரை ஒன்று ஏவரெல்லை விரும்புகிறது. அதன் முதுகில் சீர்திருத்தகத்தில் இருந்து தப்ப ஜோ திட்டமிடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - கேமரா ஸ்கேம், லாக்ட் அவுட்சைட், ட்ராம்பெ-ல் ஓயில்
    31 டிசம்பர், 2008
    21நிமி
    7+
    சீர்திருத்தகத்தில் இருந்து தண்டனைக் குற்றவாளி தப்பிப்பது பற்றி பிரபல இயக்குனர் ஆவணப்படம் எடுக்க விரும்புகிறார். இதை சாதகமாக டால்டன்கள் பயன்படுத்தலாமா? சீர்திருத்தகத்தில் தீ எச்சரிக்கை ஒலி எழுந்தவுடன், காவலரும் கைதிகளும் குழப்பத்தில் சிறையில் இருந்து வெளியே ஓடுகின்றனர். டால்டன்கள் உள்ளே இருக்கும் போதே வெளியில் பூட்டுகிறார்கள். விடப்படுவார்களா? ஏவரெல் தன் ஓவியத் திறமையை காட்டுகிறது. இது தப்ப உதவுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ1 எ14 - நைட்ரோகிளிசரின் நைட்மேர், தி டால்டன்ஸ் கோ கிளீனிங்,, நியூ ஃபேசஸ் ஃபார் தி டால்டன்ஸ்
    31 டிசம்பர், 2008
    21நிமி
    7+
    4 பீப்பாய் நைட்ரோகிளிசரினை கொண்டு செல்ல உதவும் சிறை வாசிகளுக்கு 3 டாலர் பணம் என காவலர் அறிவிக்கிறார். வழியில் தப்பிக்க டால்டன்கள் திட்டமிடுகின்றனர். சிறையை ஆதிக்கம் செலுத்துபவரை சோதிக்க, செவ்விந்திய பழங்குடி சிறைக்கு மாற்றப்படும்போது, ஜோ தீய திட்டம் போடுகிறான். தப்பிக்க முடியுமா? புதிய சிறைக் கைதி மிஸ்டர் ஸ்கேல்பெல் பிரபலமான அறுவைசிகிச்சை நிபுணர். டால்டன்களின் பிரச்சினையை அவரால் தீர்க்க முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ1 எ15 - பஃப்பலோ பிளஃப், டூ மெனி டன்னல்ஸ், தி சீக்ரெட் பேசேஜ்
    31 டிசம்பர், 2008
    21நிமி
    7+
    எருமைகள் அவற்றின் வாழ்விடத்தில் நடந்து கொள்ளும் விதத்தை ஆய்வு செய்ய பேராசிரியர் டார்வின் விரும்புகிறார். தன்னார்வராக டால்டன்கள் எப்போதும் போல் முன்வருகிறார்கள். "தி ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்" பாணியில் சுரங்கம் ஒன்றின் டால்டன்கள் தப்பிக்கின்றனர். செவ்விந்திய பழங்குடிகளை ஏய்க்க முடியுமா? சிறையின் முதல் பாதுகாவலர் உருவாக்கிய ரகசிய வழியை கண்டுபிடிக்கும் போது, ஜோ டால்டனின் கனவு நனவாகிறது. அது பயன் தருமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ1 எ16 - தி இன்ஃபார்மர், தி டால்டன்ஸ் கோ டைம்-டிராவலிங், பிக் அண்ட் நாட் பிரைட்
    31 டிசம்பர், 2015
    21நிமி
    7+
    டால்டன் கும்பலும் பீபாடியும் விரைவில் விடுதலையாக விரும்புகிறார்கள். தங்கள் தண்டனைக்காலத்தை குறைக்க மற்ற குற்றவாளிகளின் தகவல்களை தர பீபாடி ஆலோசனை சொல்கிறான். மிஸ்டர் ஃபேபுலஸ் பழைய பொருட்களை விற்கிறார். அதற்கு டால்டன் குழு உதவுகிறது. மாய கடிகாரம் ஒன்று அவர்களை காலத்தில் பின்னோக்கி அனுப்புகிறது. மிகப்பெரிய உருவ சகசிறைவாசியான மாஸ்டனை சந்திக்கின்றனர். அவனது பெரும் பலத்தால் தப்ப ஜோ திட்டம் தீட்டுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ1 எ17 - தி வேஜர், ஆயில் லீக். தி டால்டன்ஸ் கோ ரெஸ்ட்லிங்
    31 டிசம்பர், 2015
    21நிமி
    7+
    சர் ஜேம்ஸ் வெல்லிங்டன் சிறைக்கு புதிதாக மாற்றப்படுகிறார். அவர் சிறையில் இருந்து தப்பிப்பதில் நிபுணர். அவர் முன்னிலையில், மற்ற கூட்டத்தினர் முன்பாக டால்டன்கள் ஏளனப்படுத்தப்படுகிறார்கள். டால்டன்களின் தப்பிக்கும் முயற்சியில், பூமியை ஆழமாக தோண்டி, கீழே எண்ணெய் வளம் இருப்பதை கண்டுபிக்கிறார்கள். சிறைக்கு தொழில்முறை மல்யுத்த வீரர் ஒருவர் வருகிறார். அவரது உதவியுடன் தப்ப டால்டன்கள் திட்டம் போடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ1 எ18 - பிரிசன்-சிக்னெஸ், தி டால்டன்ஸ் கோ பேபிசிட்டிங், UFO கூஃப்ஸ்
    31 டிசம்பர், 2015
    21நிமி
    7+
    சிறைக் கதவு சாவியை கண்டுபிடிக்கும் டால்டன்கள், தப்பிக்கின்றனர். மிகவும் உடல் நலம் பாதிக்கப்படுகின்றனர். உடல் நலம் பெற மீண்டும் சிறைக்கு செல்லும் கட்டாயம். செவ்விந்தியர்கள் குழந்தை ஒன்றை கொண்டு வருகிறார்கள். அந்தக் குழந்தை கட்டுக்கடங்காமல் இருக்கிறது, அதை சாந்தப்படுத்ததும் ஒரே நபர் வில்லியம் மட்டுமே. டால்டன்கள் தப்பிச் செல்லும் போது, வெளியே அடையாளம் தெரியாத பறக்கும் தட்டை எதிர்கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ1 எ19 - கோவ்ட், தி டால்டன் கோட், மோர்ஸ் கோட்
    31 டிசம்பர், 2009
    20நிமி
    7+
    டால்டன்களின் மாமா இறந்து விடுகிறார். அவரது உயிலின் ஒரு பங்காக அவர்களுக்கு பசு மாடு கிடைக்கிறது. அதை விரட்ட சாத்தியமான வழிகளை கையாளுகின்றனர். ஈஸி ஃபாஸ்ட் நிறுவனத்தைச் சேர்ந்த மிஸ்டர் டெவென் சீர்திருத்தகத்துக்கு வருகிறார். அந்த மாற்றங்களை சாதகமாக்கி தப்பிக்க டால்டன்கள் முயலுகின்றனர். மிஸ் பெட்டி பாதுகாவலரிடம் தந்தி பற்றி தகவல் சொல்கிறார். இதை ஒட்டுக்கேட்கும் கைதிகள் மீண்டும் தப்ப திட்டமிடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ1 எ20 - தி டெசர்ட் ஆஃப் டெத் தட் கில்ஸ், ஜங்கில் ஜின்க்ஸ், நாட் எக்ஸாக்ட்லி ஆஸ்டெக்
    31 டிசம்பர், 2009
    21நிமி
    7+
    டால்டன்கள் தப்பிக்கும் முயற்சி தொடருகிறது. இந்த முறை கோழிகளாக வேடமணிந்து கொள்ளும் அவர்களை செவ்விந்தியர்கள் விரட்டுகிறார்கள். விலங்குகள் மீது கருணை கொண்ட லார்ட் கிரேஸ்டோக்கை தந்திரமாக ஏமாற்ற முயலும் டால்டன்கள், அவரது இரக்கத்தை பெற்று தப்பிக்க முயலுகிறார்கள். இறுதியாக, பூமிக்கு கீழே ரகசிய அரண்மனை இருப்பதை கண்டறிந்து, ரகசிய வழி கொண்ட வரைபடத்தை பயன்படுத்தி தப்பிக்க முயற்சி செய்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ1 எ21 - சைண்ட், ஸ்டாம்ப்ட் அண்ட் டெலிவர்ட், டாக் சிட்டிங், செயின் ஆஃப் மிஸ்ஃபார்ச்சூன்
    31 டிசம்பர், 2009
    21நிமி
    7+
    அஞ்சம் கொண்டு வரும் வாகனத்தில் ஒளிந்து தப்ப முயல்கிறார்கள். ஆனால் கொள்ளையர்கள் அவர்களை பிடித்து பிணைக் கைதிகளாக்குகிறார்கள். நாய்க்கு பயிற்சி தர அனைத்தையும் டால்டன்கள் முயற்சி செய்கின்றனர். அந்த பயிற்சியில் தேறினால் நாயை வெளியே அழைத்துச் செல்ல வாய்ப்பு கிடைக்கும், எனவே தப்பலாம் என்று யோசிக்கின்றனர். புதிய சிறைவாசியுடன் சேர்ந்து மீண்டும் தப்பிக்க முயற்சிக்கின்றனர். வெற்றியடைவார்களா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ1 எ22 - பபில் ட்ரபில், தி டால்டன்ஸ் கெட் ரீசைக்கிள்ட், லூனி டால்டன்ஸ்
    31 டிசம்பர், 2009
    21நிமி
    7+
    தனியார் குளியல் அமைப்பை சாதகமாக பயன்படுத்தி தப்பிக்க டால்டன்கள் விரும்புகின்றனர். பைப் வழியாக வழுக்கிச் செல்ல ஜோ திட்டம் தீட்டி சோப்பை பயன்படுத்த அறிவுறுத்துகிறான். குப்பை வெளியே கொண்டு செல்லப்படுவதை பார்க்கும் ஏவரெல்லுக்கு ஒரு யோசனை. குப்பை கொட்டப்படும் குழி வழி தப்ப முயன்று தோல்வி. ஜோ முயற்சியை விடாமல், பைத்தியக்காரன் போல் நடித்து வெளியேற திட்டம் போடுகிறான். அவர்களால் சாதிக்க முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ1 எ23 - தி டால்டன்ஸ் எலாஃப்ட், தி ஃப்ளிண்ட்-டால்டன்ஸ், மேக்னடிக் ஜோ
    31 டிசம்பர், 2009
    21நிமி
    7+
    சிறை சுவர்களை தாண்ட பட்டத்தை பயன்படுத்த டால்டன்கள் திட்டமிடுகின்றனர், மிஸ்டர் பீபாடி, சீனர்களால் விரட்டப்படுகின்றனர். புதிய சிறைவாசியான தொல்பொருள் ஆராய்ச்சியாளரை தப்பிச் செல்ல சிறையைத் தோண்ட டால்டன்கள் ஒப்புக்கொள்ள வைக்கின்றனர். எதை தோண்டுவார்கள்? மின்னல் ஒளியால் தாக்கப்படும் ஜோ, மனித காந்தமாக மாறிவிடுகிறான். பிரமாண்ட காந்தத்தால் சிறையில் இருந்து தப்பிக்கும் திட்டத்துக்கு அவர்களின் தாய் உதவலாமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ1 எ24 - தி லேடி பண்டிட், டால்டன் லேண்ட், ஜெயில்பிரேக் ஃபார் டம்மீஸ்
    31 டிசம்பர், 2009
    21நிமி
    7+
    சிறையின் புதிய பெண் தண்டனைக் கைதியான லோ மூலம் மிஸ் பெட்டி அச்சுறுத்தப்படுவதாக உணர்கிறாள். தன் சகோதரர்களா, லோவா என்று தேர்வு செய்யும் நிலைக்கு ஜோ தள்ளப்படுகிறான். லோவின் திட்டம் தவறாகி அவள் பிடிக்கப்பட்டு இடம் மாற்றப்படுகிறாள். இதனிடையே, சிறையில் சுற்றுலாவை மேம்படுத்த பாதுகாவலர் திட்டமிடுகிறார். அது வெற்றிபெறுமா? டால்டன்கள் தப்ப முயலுகிறார்கள். அந்த முயற்சி தோல்வி அடைய, ஜோ மீது பழி சொல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ1 எ25 - தி நியூ வார்டன், தி டால்டன்ஸ் கோ பேக்கிங், சிக்கன் சூப்
    31 டிசம்பர், 2009
    21நிமி
    7+
    சீர்திருத்தகத்தின் புதிய பாதுகாலராக டால்டன்கள். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தப்ப முயலுகிறார்கள். சிறையில் தங்களுக்கு தேவையான ரொட்டியை தாங்களே தயாரிக்க வேண்டும் என்று மிஸ்டர் பீபாடி விரும்புகிறார். இதன்மூலம் மாவு ஆலைக்கு சக்கரம் பொருத்தி, காற்றின் விசை மூலம் நகர்த்தி தப்ப முயலுகின்றனர். சூப் குடித்த பின்னர் ஜோவும் ஏவெரெல்லும் கோழியாக மாறி, தப்பிக்கின்றனர், ஆனால் விரைவில் பிடிபட்டுவிடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 26 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
சார்ல்ஸ் வாசெல
தயாரிப்பாளர்கள்
மார்க் டூ பான்ட்டவிஸ்
நடித்தவர்கள்
NANANA
ஸ்டுடியோ
Xilam Animation Studio
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.