Fleabag ஃப்ளீபேக்

Fleabag ஃப்ளீபேக்

GOLDEN GLOBES® விருதை 3 முறை வென்றது
ஒரு அறிவு செறிந்த, கவர்ச்சியான, கோபமான, சோகத்தில் தவிக்கும் பெண், தன்னை லண்டனில் நவீன வாழ்க்கையின் மேல் திணிக்கும்போது அவள் மனதினுள் ஒரு நகைச்சுவையான நெகிழ்ச்சியான ஜன்னல் தான் ஃப்ளீபேக். விருது வென்ற நாடக எழுத்தாளர் ஃபீபி வாலர்-ப்ரிட்ஜ் எழுதி நடித்துள்ள ஃப்ளீபேக், தன்னம்பிக்கையைக் கைவிடாமல், உதவ வரும் எவரையும் நிராகரித்து, தன் காயங்களை ஆற்ற முனையும் வடிகட்டியற்ற பெண்.
IMDb 8.720166 எப்பிசோடுகள்X-RayTV-MA
முதல் எப்பிசோடு இலவசம்

குறுகிய காலச் சலுகை. விதிமுறைகள் பொருந்தும்.

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பாகம் 1

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    20 ஜூலை, 2016
    27நிமி
    TV-MA
    கோபமான, அசிங்கமான, அதிர்ச்சியடையவைக்கும், நகைச்சுவையான ஃப்ளீபேக் அதிரடியாக வந்து சேர்கிறாள். தான் நகரினுள் சுற்றுகையில், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எவரையும் எதையும் பிடித்துக் கொள்கிறாள்.
    முதல் எப்பிசோடு இலவசம்
  2. சீ1 எ2 - பாகம் 2

    27 ஜூலை, 2016
    27நிமி
    TV-MA
    தன் இறந்து போன மிக நெருங்கிய தோழியின் நினைவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, தனது உணர்வுபூர்வமாக பலவீனமான காதலனால் கைவிடப்பட்டு, தற்போது தனது திருட்டுப் பொருட்களை விற்க தீவிரமாக முயற்சி செய்யும்போது, ஃப்ளீபேக் தனது வாழ்க்கையின் குழப்பங்களில் இருந்து தன்னை திசைதிருப்பிக் கொள்ள காதல் தீயை தூண்ட முயற்சிக்கிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - பாகம் 3

    3 ஆகஸ்ட், 2016
    26நிமி
    TV-MA
    தனக்கான ஆச்சரிய பிறந்த நாள் விழாவைத் தானே ஏற்பாடு செய்யும் க்ளேருக்கு பரிசு வாங்கும் அவளின் நாகரீகமற்ற கணவனுக்கு ஃப்ளீபேக் உதவுகிறாள். ஒரு காதல் சந்திப்புக்காக வேட்டையாடுகையில், ஃப்ளீபேக் ஒரு பல்லுள்ள நண்பனோடு மீண்டும் தொடர்பு கொள்கிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - பாகம் 4

    10 ஆகஸ்ட், 2016
    27நிமி
    TV-MA
    தங்கள் தந்தையின் உபயத்தால், ஒரு மகளிருக்கான, அமைதியான விடுமுறைக்கு இஷ்டமின்றி செல்கின்றனர் ஃப்ளீபேக் மற்றும் அவளின் சகோதரி க்ளேர். ஒரு நூதனமான அண்டைப்பக்க வார இறுதி பயிற்சி, அதிரடியான ரகசியங்கள் வெளியாவது, மற்றும் ஒரு பழைய நட்புடனான வியக்கத்தக்க தொடர்பு - இவைகளால் அவர்களின் கட்டாய அமைதிக்கு இடையூறு ஏற்படுகிறது.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - பாகம் 5

    17 ஆகஸ்ட், 2016
    24நிமி
    TV-MA
    தங்கள் தாயின் நினைவு தினத்தன்று, வருடாந்திர நினைவுகூறல் மதிய விருந்துக்காக ஃப்ளீபேக்கும் க்ளேரும் தங்கள் குடும்ப வீட்டுக்குத் திரும்புகின்றனர். ஆனால் இம்முறை ஒரு அழையாத விருந்தாளி வந்துள்ளார்… ஃப்ளீபேக்கின் தெய்வத்தாய் தன் பலத்தினால் விழாவுக்குள் நுழைந்து தனது கவர்ச்சிக்கண்காட்சிக்கான திட்டங்களை வெளியிடும்போது அவளுக்கும் ஃப்ளீபேக்குக்கும் இடையே மோதல் வலுக்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - பாகம் 6

    24 ஆகஸ்ட், 2016
    26நிமி
    TV-MA
    அவளின் தெய்வத்தாயின் கவர்ச்சிக் கண்காட்சிக்கு தனது காதலனை அழைத்துச் செல்லும் ஃப்ளீபேக் அங்கு ஒரு காதல் அறிவிப்பு, பரிச்சயமான ஒரு வேலை, மற்றும் ஒரு ஆச்சரியங்கள் நிறைந்த சுவர் போன்ற அதிர்ச்சிகள் அங்கே தனக்காக காத்திருப்பதை அறிகிறாள். ஆனால் க்ளேர் எங்கே? ஃப்ளீபேக்கை தனது செயல்களை எதிர்கொள்ளவும், அவளது நெருங்கிய தோழி பூவுக்கு என்ன ஆனது என்பதை வெளியிடவும் பருவ இறுதிப் பாகம் கட்டாயப் படுத்துகிறது.
    Prime-இல் சேருங்கள்