உதவி

மொபைல் சாதனங்களில் Prime Video காணவும்

மொபைல் சாதனங்களுக்கான Prime Video ஆப்-இன் மூலம் Prime Video-வை எப்படிக் காணுவது என்பதை அறியவும்.

Android சாதனங்கள்

சாதன வன்பொருள் & இயங்குதளத் தேவைகள்

 • செயலி வகை: ARM, டூயல் கோர் செயலி அல்லது சிறந்தது; Intel செயலிகள் தற்போது ஆதரிக்கப்படவில்லை
 • செயலி வேகம்: 1.2GHz-க்கும் அதிகமாக
 • சாதன மெமரி: குறைந்தபட்சம் 1GB
 • இயங்குதளம்: Android OS 4.0 (Ice Cream Sandwich) அல்லது அதிகம்

  Note: Android இயங்குதளத்தின் திருத்தப்பட்ட பதிப்புகளும், Android ஆப்-களில் இயங்கும் பிளாக்பெர்ரி சாதனங்களும் ஆதரிக்கப்படவில்லை.

Android-க்கான Prime Video ஆப்-ஐப் பெறுக

Amazon Underground ஆப், Amazon ஆப், Samsung Galaxy Appstore மற்றும் Google Play ஸ்டோரிலிருந்து பதிவிறக்கக்கூடிய Prime Video ஆப்-இன் மூலம் உங்கள் Android சாதனத்தில் Prime Video-ஐ நீங்கள் பார்க்கலாம். "Prime Video" என்று தேடுக.

மேலும் தகவலுக்கு, எங்கிருந்தும் பார்க்கவும் பக்கம் செல்க.

Prime Video ஆப்-ஐப் பதிவிறக்கி மற்றும் திறந்த பிறகு:
 1. ஆப்பிற்கு உங்கள் கணக்கை இணைக்க உள்நுழையவும். Prime Video அல்லது Amazon Prime மெம்பர்ஷிப்புடன் தொடர்புடைய கணக்குத் தகவலை உள்ளிடுவதை உறுதிப்படுத்தவும்.

  Note: கணக்கு இல்லையா? Prime Video மெம்பர்ஷிப்பை அல்லது இலவசச் சோதனையை எப்படித் தொடங்குவது பற்றி மேலும் அறியவும்.

 2. வீடியோ விவரங்களைத் திறப்பதற்கு ஒரு திரைப்படம் அல்லது டிவி நிகழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கவும்.
 3. பிறகு, ப்ளேபேக் தொடங்குவதற்கு இப்போது காண்க அல்லது மீள்துவக்கு என்பதைத் தட்டவும்.

iOS சாதனங்கள்

ஆதரிக்கப்படும் சாதனங்கள் மற்றும் இயங்குதளங்கள்

iPhone, iPad மற்றும் iPod டச் சாதனங்களை இயக்கும் iOS 8.0 அல்லது அதற்கும் மேல்.

Note:

 • IOS இயங்குதளத்தின் திருத்தப்பட்ட பதிப்புகள் ஆதரிக்கப்படவில்லை.
 • Prime Video ஆப் iPhone 4 இல் கிடைக்கப்படாது.

iOS-க்கான Prime Video ஆப்-ஐப் பெறுக

நீங்கள் Prime Video ஆப்-இன் மூலம் Prime Video-வை உங்கள் iOS சாதனத்தில் பார்க்க முடியும், இது Apple ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்க கிடைக்கும். "Prime Video" என்று தேடுக.

மேலும் தகவலுக்கு, எங்கிருந்தும் பார்க்கவும் பக்கம் செல்லவும்.

Prime Video ஆப்-ஐப் பதிவிறக்கி மற்றும் திறந்த பிறகு:

 1. ஆப்பிற்கு உங்கள் கணக்கை இணைக்க உள்நுழையவும். Prime Video அல்லது Amazon Prime மெம்பர்ஷிப்புடன் தொடர்புடைய கணக்குத் தகவலை உள்ளிடுவதை உறுதிப்படுத்தவும்.
 2. வீடியோ விவரங்களைத் திறப்பதற்கு ஒரு திரைப்படம் அல்லது டிவி நிகழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கவும்.
 3. பிறகு, ப்ளேபேக் தொடங்குவதற்கு இப்போது காண்க அல்லது மீள்துவக்கு என்பதைத் தட்டவும்.

தொடர்புடைய உதவித் தலைப்புக்கள்