உதவி

உங்கள் கணக்கு & அமைப்புகளை நிர்வகிக்கவும்

உங்கள் Prime Video சாதனங்களை நிர்வகிக்கவும்

Prime Video எப்படி உள்நுழைவது, வெளியேறுவது மற்றும் பதிவு செய்யப்பட்ட சாதனங்களை எவ்வாறு நிர்வகிக்கலாம் என்பதை அறியவும்.

உங்கள் சாதனங்களை நிர்வகிக்கவும்

Prime Video இணையதளத்திலிருந்து உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்ட சாதனங்களை நீங்கள் பார்க்கலாம் மற்றும் நிர்வகிக்கலாம்.

கணக்கு & அமைப்புகள் க்குச் சென்று மேல் உள்ள மெனுவில் இருந்து உங்கள் சாதனங்கள் என்பதைத் திறக்கவும். உங்கள் சாதனங்கள் ஒவ்வொன்றும் பதிவுசெய்யப்பட்ட சாதனங்கள் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன:

 • உங்கள் கணக்கிலிருந்து சாதனத்தை அகற்ற, சாதனத்தின் அடுத்து உள்ள பதிவை ரத்துசெய் என்பதை தேர்ந்தெடுக்கவும்.
 • உங்கள் கணக்கில் ஒரு சாதனத்தை இணைக்க, பக்கத்தின் மேலே ஒரு புதிய சாதனத்தை பதிவு செய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Tip: பதிவுசெய்யப்பட்ட சாதனங்கள் கீழ் உங்கள் சாதனங்களில் ஒன்றை நீங்கள் காணவில்லை எனில், Prime Video இணையதளத்தில் அதை உங்கள் கணக்கில் சேர்ப்பதற்கு ஒரு புதிய சாதனத்தைப் பதிவு செய்க என்பதை முயற்சிக்கவும். பதிவு செயல்முறையின் போது உங்கள் Prime வீடியோ மெம்பர்ஷிப் உடன் தொடர்புடைய தகவலை உள்ளிடுவதை உறுதி செய்யவும்.

Android மற்றும் iOS-க்கான Prime வீடியோ ஆப்-இலிருந்து நீங்கள் பதிவு செய்த சாதனங்களையும் பார்க்கலாம்.

Prime Video ஆப்-இலிருந்து, அமைப்புகள் என்பதைத் தட்டி, பின்னர் பதிவுசெய்யப்பட்ட சாதனங்கள் என்பதைத் தட்டவும். உங்கள் கணக்கிலிருந்து ஒரு சாதனத்தை அகற்ற, சாதனத்தின் அடுத்து உள்ள பதிவை ரத்து ெய் என்பதைத் தட்டவும்.

அந்தச் சாதனத்தில் மீண்டும் நேரடியாக உள்நுழைய வேண்டும் அல்லது Prime Video இணையதளத்திலிருந்து பதிவு செய்ய வேண்டும்.

உங்கள் சாதனத்தில் உள்நுழையவும்

இணையதளத்தின் Prime வீடியோ தலைப்புகள் அல்லது உங்கள் இணைக்கப்பட்ட சாதனங்களைப் பார்க்க, உங்கள் Prime வீடியோ மெம்பர்ஷிப்புடன் தொடர்புடைய கணக்கில் உள்நுழைய வேண்டும்.

Tip: முதன்முறையாக நீங்கள் Prime Video ஆப்-ஐத் திறக்கும்போது, உங்கள் கணக்கிற்கு உள்நுழை அல்லது உங்கள் சாதனத்தைப் பதிவு செய் என்று கேட்டுக்கொள்ளப்படுவீர்கள். மேலும் தகவலுக்கு, உங்கள் சாதனத்தில் Prime Video அமைக்கவும் என்பதற்குச் சென்று, உங்கள் சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் சாதனத்தை அல்லது இணைய உலாவியை ஒரு நேரத்தில் ஒரே கணக்கில் மட்டுமே இணைக்கலாம். ஒரு கணக்கை உருவாக்குவது மற்றும் ஒரு Prime வீடியோ மெம்பர்ஷிப்பைத் தொடங்குவது பற்றி மேலும் அறிய, Prime Video மெம்பர்ஷிப்பை அல்லது இலவசச் சோதனையை எப்படித் தொடங்குவதுக்குச் செல்க.

Prime Video இலிருந்து வெளியேறு

நீங்கள் Prime Video இலிருந்து வெளியேறும்போது, உங்கள் இணைய உலாவி அல்லது சாதனம் இனி உங்கள் கணக்கில் இணைக்கப்படாது. மீண்டும் உள்நுழையும் வரை நீங்கள் Prime Video தலைப்புகளைப் பார்க்க முடியாது.

Prime Video இணையதளத்தில் வெளியேறுவதற்கு, உங்கள் திரையின் மேல் வலது மூலையில் உள்ள கணக்கு மெனுவைத் திறந்து, வெளியேறு என்ற வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்களுடைய இணைக்கப்பட்ட சாதனத்தில் Prime Video ஆப்-இலிருந்து நேரடியாக வெளியேறலாம்:

டிவிகள்

 1. Prime வீடியோ முகப்புத் திரைக்குச சென்று, மெனுவிலிருந்து உதவி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 2. உங்கள் சாதனத்தைப் பதிவுநீக்கம் செய்யவும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 3. உங்கள் சாதனப் பதிவை ரத்துசெய்க என்பதைத் தேர்ந்தெடுத்து, உறுதிப்படுத்த சரி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Fire TV ஸ்டிக் அடிப்படைப் பதிப்பு

 1. Fire TV மெனுவிலிருந்து அமைப்புகள்-ஐத் தேர்ந்தெடுக்கவும்.
 2. எனது கணக்கு க்குச் செல்லவும்.
 3. உங்கள் சாதனம் தற்போது பதிவுசெய்யப்பட்டிருந்தால், உங்கள் கணக்குடன் தொடர்புடைய இந்தப் பெயர் இந்தப் பிரிவில் காண்பிக்கப்படும். நீங்கள் அதைத் தேர்ந்தெடுத்தால், ஒரு பதிவை ரத்துசெய் என்ற விருப்பத்தைப் பார்க்கலாம்.

Android சாதனங்கள்

 1. Prime Video ஆப்-ஐத் தொடங்கி, மெனுவைத் திறக்கவும் மெனு பொத்தான் 
				.
 2. அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 3. "இவ்வாறு உள்நுழைந்துள்ளீர்கள்” பிரிவில், வேறு Amazon கணக்குடன் உள்நுழைக என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS சாதனங்கள்

 1. Prime வீடியோ ஆப்-ஐத் துவக்கி, மெனுவிலிருந்து அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 2. எனது கணக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 3. வெளியேறு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Fire டேப்லெட்

Fire டேப்லெட்டுகளில், உங்கள் சாதனத்தை பதிவு செய்ய நீங்கள் பயன்படுத்திய அதே கணக்குடன் Prime Video இணைக்கப்பட்டுள்ளது. சாதனப் பதிவு அமைப்புகளை மாற்ற:

 1. முகப்புத் திரையின் மேல் இருந்து கீழே ஸ்வைப் செய்து, அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 2. எனது கணக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 3. பதிவை ரத்து ெய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

PlayStation அல்லது Xbox One கன்சோல்கள்

 1. Amazon வீடியோ முகப்புத் திரையில் இருந்து, உங்கள் கட்டுப்படுத்திக்குத் தொடர்புடைய "உதவி" பொத்தானை அழுத்தவும்.
 2. பதிவுநீக்குக என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Tip: உங்கள் சாதனத்திலிருந்து வெளியேறிவிட்டாலோ அல்லது பதிவை ரத்து செய்தாலோ, மீண்டும் உள்நுழைய, பொதுவாக ஒரு அறிவுறுத்தலைக் காண்பீர்கள். பிறகு நீங்கள் விரும்பிய கணக்குக்குத் தகவலை உள்ளிடலாம்.

தொடர்புடைய உதவித் தலைப்புக்கள்