உதவி

உங்கள் கணக்கு & அமைப்புகளை நிர்வகிக்கவும்

உங்கள் ஆடியோ மொழி மற்றும் சப்டைட்டில்கள் முன்னுரிமைகளை நிர்வகிக்கவும்

Prime Video மொழி மற்றும் சப்டைட்டில்கள் முன்னுரிமைகளை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதை அறியவும்.

இந்த நேரத்தில், Prime Video இணையதளம் மற்றும் Prime Video ஆப் பயனர் இடைமுகமானது ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஸ்பானிஷ் மற்றும் போர்த்துகீசிய மொழிகளில் கிடைக்கிறது.

பல Prime Video தலைப்புகளுக்கு, பிரெஞ்சு, இத்தாலியன், ஸ்பானிஷ், ஜெர்மன், ஜப்பானிய, போர்த்துகீஸ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வீடியோ ப்ளேபேக்குக்கான பல மொழி சப்டைட்டில்கள் மற்றும் ஆடியோ டப்பிங்கை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

வீடியோ ப்ளேபேக்குக்கான உங்கள் மொழி முன்னுரிமையை மாற்றவும்

வீடியோ பிளேயரிலிருந்து சப்டைட்டில்கள் மற்றும் ஆடியோ டப்பிங்கிற்கான இயல்புநிலை மொழியை நீங்கள் அமைக்கலாம்:

  1. ப்ளேபேக் கட்டுப்பாடுகளில் சப்டைட்டில்கள் மற்றும் ஆடியோ ("பேச்சு குமிழி" ஐகான்)-ஐத் தேர்ந்தெடுக்கவும்.
  2. கீழேதோன்றும் மெனுவிலிருந்து உங்கள் விருப்பமான சப்டைட்டில் மொழி மற்றும் ஆடியோ மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

டிவி-களில் உங்கள் மொழி விருப்பத்தேர்வுகளை மாற்றவும்:

  1. ப்ளேபேக்குக்கு முன், திரைப்பட அல்லது டிவி நிகழ்ச்சியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், மேல் மெனுவிலிருந்து சப்டைட்டில்கள்அல்லது ஆடியோ மொழிகள்-ஐத் தேர்ந்தெடுக்கவும்.
  2. கிடைக்கும் விருப்பங்களின் பட்டியலில் இருந்து நீங்கள் விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மொழி கிடைக்கப்பெறும் பட்சத்தில், நீங்கள் இந்த சாதனத்தில் எதிர்காலத்தில் வீடியோவை இயக்கும் போதெல்லாம் உங்கள் மொழி தேர்வு தானாகவே பயன்படுத்தப்படும்

Note: நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் மூவி அல்லது டிவி நிகழ்ச்சியின் சப்டைட்டில்கள் மற்றும் ஆடியோவானது, கிடைக்கப்பெறும் பட்சத்தில் உங்களுக்கு விருப்பமான மொழியில் மட்டுமே இயங்கும். மேலும் அறிய, சப்டைட்டில்கள் & பன்மொழி ஆடியோவை இயக்கவும் க்கு செல்லவும்.

சப்டைட்டில்கள் தோற்றத்தைத் தனிப்பயனாக்குக

Prime Video இணையதளத்தில் சப்டைட்டில்களுக்காகப் பயன்படுத்தப்படும் உரைக் காட்சியை நீங்கள் தனிப்பயனாக்கலாம்:

  1. கணக்கு & அமைப்புகள் க்குச் செல்லவும்.
  2. மேல் மெனுவிலிருந்து சப்டைட்டில்கள் என்பதைத் திறக்கவும்.
  3. உங்கள் முன்னமைவுகளை உள்ளமைக்க, திருத்து பொத்தானைப் பயன்படுத்தவும். உரை வண்ணம், நடை, அளவு மற்றும் பலவற்றை நீங்கள் மாற்றலாம்.

Tip: Prime Video இணையதளத்தில் ஒரு மூவி அல்லது டிவி நிகழ்ச்சியை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதும் இதைச் செய்யலாம். உங்கள் ப்ளேபேக் கட்டுப்பாட்டில் உள்ள சப்டைட்டில்கள் மற்றும் ஆடியோ ("பேச்சு குமிழி" ஐகான்)ஐத் தேர்ந்தெடுக்கவும், மற்றும் முன்னமைக்கப்பட்ட வாய்ப்புகளில் இருந்து உங்களது விருப்பமான உரைக் காட்சியைத் தேர்ந்தெடுக்கவும்.

தொடர்புடைய உதவித் தலைப்புக்கள்