உதவி

Prime வீடியோ பிழைக் குறியீடுகள் & சிக்கல்கள்

Prime Video காண்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அல்லது ஆன்-ஸ்க்ரீனில் பிழைச் செய்தியைக் கண்டால், உங்களுக்கு உதவக்கூடிய சில தீர்வுகள் இங்கே உள்ளன.

ஸ்ட்ரீமிங் & ப்ளேபேக் பிழைகள்

பிழைக் குறியீடுகள்: 1007, 1022, 7003, 7005, 7031, 7202, 7203, 7204, 7202, 7206, 7207, 7230, 7235, 7250, 7251, 7301, 7303, 7305, 7306, 8020, 9003, 9074

Prime வீடியோ சேவையுடன் இணைக்கும் போது இந்தப் பிழைகள் தோன்றும்.

பொதுவான இணைப்புச் சிக்கலைத் தீர்க்க, இந்த உதவிக்குறிப்புகளை முயற்சிக்கவும்:

 • உங்கள் சாதனத்தை மீண்டும் தொடங்குதல் - உங்கள் சாதனம், இண்டர்நெட் மோடம் மற்றும்/அல்லது ரூட்டரை மீண்டும் தொடங்குவது விட்டுவிட்டு நிகழும் இணைப்புச் சிக்கல்களைச் சரிசெய்ய உதவும்.
 • பிற இண்டர்நெட் செயல்பாட்டைத் தற்காலிகமாக இடைநிறுத்துதல் - நீங்கள் பயன்படுத்தும் அதே இண்டர்நெட் நெட்வொர்க்கில் பல சாதனங்கள் இணைக்கப்பட்டிருக்கிறதா? உங்கள் சாதனமானது பிற சாதனங்களிலிருந்து நெட்வொர்க்கைப் பகிரும் போது, இது உங்கள் இணைப்பின் வேகத்திலும் ஸ்ட்ரீமிங் தரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும். முடிந்தால், கோப்பைப் பதிவிறக்குவது, ஆன்லைன் கேமிங் மற்றும் உங்கள் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட பிற சாதனங்களில் வீடியோ ஸ்ட்ரிமிங்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும்.
 • உங்கள் இண்டர்நெட் சேவை வழங்குநர் (ISP) வழங்கும் இணைப்பைச் சோதிக்கவும் - வழக்கத்தை விடவும் உங்கள் இணைப்பின் வேகம் மிகவும் குறைவாக இருந்தால் (நீங்கள் ஏற்கனவே இண்டர்நெட் மோடம் அல்லது ரூட்டரை மீண்டும் தொடங்க முயற்சி செய்தும் சிக்கல் தீரவில்லை எனில்), கூடுதல் உதவிக்கு உங்கள் ISP-ஐத் தொடர்புகொள்ளவும்.
 • VPN, ப்ராக்ஸி அல்லது "unblocker" சேவையை முடக்கவும் - மேலும் தகவலுக்கு,Prime Video அணுக, VPN அல்லது ப்ராக்ஸியைப் பயன்படுத்துதல்-ஐக் காணவும்.
PIN பிழைகள்

பிழைக் குறியீடுகள்: 5014, 5016

உங்கள் PIN-இல் ஏதேனும் சிக்கல் இருக்கும் போது, இந்தப் பிழைகள் தோன்றும்.

 • பின்னர் மீண்டும் முயற்சிக்கவும் - PIN சிக்கல்கள் பொதுவாகவே தற்காலிகமானவை தான். சில நிமிடங்கள் காத்திருந்து, பின்னர் உங்கள் PIN-ஐ உள்ளிடவும்.
 • உங்கள் PIN அமைப்புகளை மாற்றவும் - சிக்கல் தொடர்ந்தால், உங்கள் PIN-ஐ மீட்டமைக்கலாம் அல்லது கணக்கு & அமைப்புகள்என்பதில் பெற்றோர் கட்டுப்பாடுகளை முடக்கலாம்.

மேலும் தகவலுக்கு, Prime Video பெற்றோர் கட்டுப்பாடுகளை நிர்வகிக்கவும் செல்க.

உள்நுழைவு அல்லது வெளியேறுவதில் பிழைகள்

பிழைக் குறியீடுகள்: 5005

உள்நுழைவு அல்லது வெளியேறும் செயலாக்கத்தில் ஏதேனும் பிழை இருந்தால் இந்தப் பிழைகள் தோன்றும்.

 • உள்நுழையும் போது ஏற்படும் சிக்கல்கள்

  Prime Video அல்லது Amazon Prime மெம்பர்ஷிப்புடன் தொடர்புடைய கணக்குத் தகவலை உள்ளிடுவதை உறுதிப்படுத்தவும். தொடர்ந்து பிழையைக் கண்டால், காத்திருக்கவும் மற்றும் பின்னர் மீண்டும் முயலவும். தற்காலிக இணைப்புச் சிக்கல்களினால் உள்நுழைவுப் பிழைகள் தோன்றும்.

 • வெளியேறும் போது தோன்றும் சிக்கல்களுக்கு

  உங்கள் சாதனத்தில் சிக்கலைப் பார்த்தால், Prime வீடியோ இணையதளத்தில் கணக்கு & அமைப்புகள் என்பதில் இருந்து அல்லது Android மற்றும் iOS-க்கான Prime வீடியோ ஆப்-இல் அமைப்புகள் மெனுவிலிருந்து வெளியேறலாம். பதிவுசெய்யப்பட்ட சாதனங்கள் என்பதன் கீழ் உங்கள் சாதனத்தைக் கண்டறிந்து, அதற்கு அடுத்துள்ள பதிவை ரத்து செய்ய என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

மேலும் தகவலுக்கு, உங்கள் Prime Video சாதனங்களை நிர்வகிக்கவும் செல்க.

பிற Prime வீடியோ சிக்கல்கள்

இந்த உதவிக்குறிப்புகள் சிக்கலைத் தீர்க்கவில்லை எனில், உங்கள் சாதனம் சார்ந்த உதவிக்கு Prime வீடியோ சிக்கல்கள்-ஐப் பார்க்கவும்.

தொடர்புடைய உதவித் தலைப்புக்கள்