உதவி

உங்கள் மொபைலில் உள்ள சிக்கலைச் சரிசெய்யவும்

உங்கள் சாதனத்தில் Prime Video தலைப்புகளைக் காண்பதில் சிக்கல் இருந்தால், உங்களுக்கு உதவக்கூடிய சில தீர்வுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

வீடியோவையும் உங்கள் சாதனத்தையும் மீண்டும் தொடங்கவும்

நீங்கள் காணும் வீடியோவின் ப்ளேபேக்கை நிறுத்த முயற்சி செய்யவும். பிறகு, வீடியோவை மீண்டும் தொடங்க, வீடியோ விவரங்களில் இருந்து மீண்டும் தொடங்கு என்பதைத் தட்டவும்.

இது வேலை செய்யாவிட்டால், உங்கள் சாதனத்தை மீண்டும் தொடங்கவும்.

Tip: பெரும்பாலான சாதனங்களில், பவர் பட்டனை சில நொடிகளுக்கு அழுத்திப் பிடிப்பதன் மூலம் இதை நீங்கள் செய்யலாம். ஆன்-ஸ்க்ரீனில் "ஆஃப்" அல்லது "பவர் ஆஃப்" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். சாதனம் ஆஃப் ஆனதும், மீண்டும் ஆன் செய்ய, பவர் பட்டனை அழுத்திப் பிடிக்கவும்.
உங்கள் சாதனம் மீண்டும் தொடங்கியதும், Prime வீடியோ ஆப்பிற்கு திரும்பி, வீடியோவை மீண்டும் காண முயற்சி செய்யவும்.

உங்கள் இணைய இணைப்பைச் சரிபார்க்கவும்

இடைநிறுத்தல் அல்லது பஃபரிங், அதிக பதிவிறக்க நேரம், மற்றும் மோசமான வீடியோ தரம் உள்ளிட்ட பல ஸ்ட்ரீமிங் சிக்கல்கள் உங்கள் இணைய இணைப்பில் ஏற்படும் பிரச்சினைகள் மூலம் ஏற்படுகிறது. பொதுவான இணைப்பு தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க, இந்த உதவிக்குறிப்புகளை முயற்சி செய்யவும்:

 • பிற இணைய செயல்பாட்டைத் தற்காலிகமாக இடைநிறுத்தவும் - பிற கணினிகள் அல்லது சாதனங்களுடன் உங்கள் சாதனம் இணைய இணைப்பைப் பகிர்ந்தால், இது உங்கள் இணைப்பின் வேகத்தையும் வீடியோ தரத்தையும் பாதிக்கும். உங்கள் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட பிற சாதனங்கள் கோப்புகளைப் பதிவிறக்கினால், வீடியோ கேம்களை இயக்கினால் அல்லது வீடியோவை ஸ்ட்ரீம் செய்தால் இப்படி பொதுவாக நிகழும். Prime Video ஸ்ட்ரிமீங்கிற்கான உங்கள் பேண்ட்வித்தை அதிகரிக்கச் செய்வதற்கு, முடிந்தால், இணைய செயல்பாட்டை பிற இணைக்கப்பட்ட சாதனங்களில் இடைநிறுத்த முயற்சி செய்யவும்.
 • உங்கள் இணைய வழங்குநர் சேவையியன் (ISP) இணைப்பைச் சரிபார்க்கவும் - வழக்கத்தை விடவும் உங்கள் இணைப்பின் வேகம் குறைவாக இருந்தால், கூடுதல் உதவிக்கு உங்கள் ISP-ஐத் தொடர்புகொள்ளப் பரிந்துரைக்கிறோம்.

ஆப் தரவை நீக்கவும் (Android சாதனங்களுக்கானது)

நீங்கள் iOS சாதனத்தைப் பயன்படுத்தினால், இந்தப் படிநிலைகளை நீங்கள் தவிர்த்துவிடலாம். நிறுவிய ஆப்-களுக்கு "தரவை அழி" என்ற விருப்பத்தை iOS சாதனங்கள் வழங்காது.

Android சாதனத்தை நீங்கள் பயன்படுத்தினால், Prime Video ஆப்-க்கான தரவை நீக்க முயற்சிக்கவும்:

Important: ஆப் தரவை நீக்குவது, பதிவிறக்கிய Prime Video தலைப்புகளைத் தானாக நீக்கும்.

 1. உங்கள் சாதனத்திற்கான அமைப்புகள் மெனுவைத் திறக்கவும்.
 2. ஆப்-கள் அல்லது ஆப் மேனேஜர் என்பதைத் தட்டவும்.
 3. பட்டியலிலிருந்து Prime Video ஆப்-ஐத் தேர்ந்தெடுக்கவும்.
 4. தரவை நீக்கு என்பதைத் தட்டி, சரி என்பதைத் தட்டவும்.
 5. Prime Video வை மீண்டும் திறந்து, உங்கள் வீடியோவை மீண்டும் இயக்க முயற்சி செய்யவும்.

ஆப்-களுக்கான தரவை நீக்கிய பிறகு, Prime Video வை மீண்டும் திறக்கும் போது உள்நுழையும் படி அறிவுறுத்தப்படுவீர்கள்.

ஆப்-ஐ மீண்டும் நிறுவவும்

மேற்கூறிய படிகள் எவையும் சிக்கல்களைத் தீர்க்கவில்லை எனில், Prime Video ஆப்-ஐ மீண்டும் நிறுவ முயற்சி செய்யவும்.

Android சாதனங்கள்

Prime Video ஆப்-ஐ நிறுவல்நீக்க:

 1. உங்கள் சாதனத்திற்கான அமைப்புகள் மெனுவைத் திறக்கவும்.
 2. ஆப்-கள் அல்லது ஆப் மேனேஜர் என்பதைத் தட்டவும்.
 3. பட்டியலிலிருந்து Prime Video ஆப்-ஐத் தேர்ந்தெடுக்கவும்.
 4. நிறுவல்நீக்கு என்பதைத் தட்டி, சரி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

மீண்டும் நிறுவ:

 1. உங்கள் சாதனத்தில் Amazon Appstore, Amazon Underground ஆப், Samsung Galax Appstore அல்லது Google Play ஸ்டோரைத் திறக்கவும்.
 2. "Prime Video"-ஐத் தேடவும்.
 3. ஆப் விவரப் பக்கத்தைத் திறந்து, "பதிவிறக்கவும்" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
 4. உங்கள் கணக்கை ஆப்-இல் மீண்டும் இணைக்க உள்நுழையவும். Prime Video அல்லது Amazon Prime மெம்பர்ஷிப்புடன் தொடர்புடைய கணக்குத் தகவலை உள்ளிடுவதை உறுதிப்படுத்தவும்.

iOS சாதனங்கள்

Prime வீடியோ ஆப்-ஐ நிறுவல்நீக்க:

 1. உங்கள் திரையில் உள்ள எல்லா ஐகான்களும் குலுங்கத் தொடங்கும் வரை, "Prime Video" ஆப் ஐகானை அழுத்திப் பிடிக்கவும்.
 2. Prime வீடியோ ஐகானின் மேல் இடது மூலையில் தோன்றும், சிறிய "x"-ஐத் தட்டவும்.
 3. நீக்கு பட்டனைத் தட்டவும்.

மீண்டும் நிறுவ:

 1. உங்கள் சாதனத்தில் App Store ஆப்-ஐத் திறக்கவும்.
 2. “Prime Video”-ஐத் தேடவும்.
 3. ஆப் விவரப் பக்கத்தைத் திறந்து, "கிளவுடிலிருந்து பதிவிறக்கு" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும் ("கிளவுட்" ஐகான்).
 4. உங்கள் கணக்கை ஆப்-இல் மீண்டும் இணைக்க உள்நுழையவும். Prime Video அல்லது Amazon Prime மெம்பர்ஷிப்புடன் தொடர்புடைய கணக்குத் தகவலை உள்ளிடுவதை உறுதிப்படுத்தவும்.

தொடர்புடைய உதவித் தலைப்புக்கள்