உதவி

ப்ளேபேக் பிழை 7206 -ஐத் தீர்த்தல்

Prime Video வெப் ப்ளேயர், பிழை "7206" -ஐக் காண்பித்தால், நீங்கள் முயற்சி செய்ய முடியும் சில பொதுவான தீர்வுகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

உங்கள் கணினி முக்கியமான Windows புதுப்பித்தல்களைத் தவறவிட்டிருந்தால், அல்லது உங்கள் கணினியில் சமீபத்திய கிராஃபிக்ஸ் அல்லது ஆடியோ டிரைவர்களை நீங்கள் நிருவியிருக்கவில்லை என்றால் இந்தப் பிழை வழக்கமாக ஏற்படுகிறது.

Note: Prime Video ஸ்ட்ரீமிங்கை ஆதரிக்காத ஒரு விர்ச்சுவல் இயந்திரத்தையோ அல்லது தொலைதூர டெஸ்க்டாப் இணைப்பையோ நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் கூட நீங்கள் இந்தப் பிழையைக் காணலாம்.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, நீங்கள் முயற்சி செய்து பார்க்க முடியும் சில தீர்வுகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன:

Windows -ஐப் புதுப்பிக்கவும்

Microsoft -இல் இருந்து கிடைக்கும் சமீபத்திய மென்பொருள் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிசெய்துகொள்வதற்கு, புதுப்பித்தல்களுக்காக Windows -ஐ சரிபார்க்கவும். இந்தப் புதுப்பித்தல்கள் பெரும்பாலும் உங்கள் கணினியின் ஒட்டுமொத்த செயல்பாட்டை பாதிக்கக்கூடிய முக்கியமான அமைப்பு மேம்பாடுகளை அல்லது பிழை நீக்கங்களை உள்ளடக்கியுள்ளன.

புதுப்பித்தல்களுக்காகச் சரிபார்ப்பதற்கு, Internet Explorer -இல் இருந்து Windows Update (http://update.microsoft.com) என்பதைத் திறந்து, திரையில் தோன்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.

கிராஃபிக்ஸ் அல்லது ஆடியோ டிரைவர்களைப் புதுப்பிக்கவும்

உங்கள் கணினியின் கிராஃபிக்ஸ் அல்லாது ஆடியோ டிரைவர்களை நீங்கள் புதுப்பிக்க வேண்டியிருக்கலாம். டிரைவர்கள் என்பவை வன்பொருள் அல்லது திரைகள், பிரிண்டர்கள் மற்றும் ஒலிப்பெருக்கிகள் போன்ற வெளியில் இணைக்கப்படும் சாதனங்களை இயக்குவதற்கு உங்கள் கணினி பயன்படுத்துகின்ற நிரல்களாகும்.

உங்கள் கணினியின் டிரைவர்களைப் புதுப்பிப்பது குறித்து நீங்கள் மேலும் அறிவதற்கு, Microsoft Support (http://windows.microsoft.com/en-us/windows/devices-help#hardware-drivers-help) -க்குச் செல்லவும்.

உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்யவும்

உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்ய முயற்சிக்கவும் இதற்குப் புதிய மென்பொருளின் நிறுவலை அல்லது டிரைவர் புதுப்பித்தல்களை நிறைவுசெய்வது தேவைப்படலாம்.

வேறொரு வலை உலாவியை முயற்சிக்கவும்

மேற்கண்ட வழிமுறைகள் பிரச்சினையைத் தீர்க்கவில்லை என்றால், வேறொரு வலை உலாவியைப் பயன்படுத்தி உங்கள் வீடியோவை இயக்க முயற்சிக்கவும். Internet Explorer -இல் தற்காலிகப் பிரச்சினை அல்லது இணக்கமற்ற அமைப்பு இருக்கலாம்.

Tip: Chrome (பதிப்பு M42 அல்லது புதிது) -உம் கூட எங்கள் HTML5 -ஐ அடிப்படையாகக் கொண்ட வெப் பிளேயரை ஆதரிக்கிறது. HTML5 பிளேயர் வழக்கமாக சிறந்த ப்ளேபேக் அனுபவத்தை வழங்குகிறது, ஏனென்றால், இது எங்கள் சேவையுடன் வேலை செய்ய உகந்ததாக ஆக்கபட்டு உள்ளது, மேலும் வீடியோ உள்ளடக்கத்தைக் காண்பிப்பதற்கு தனி உலாவி செருகுநிரல்களைப் (Silverlight அல்லது Adobe Flash போன்றவை) பயன்படுத்துவதில்லை.

நிறுவல் அறிவுறுத்தல்கள் உள்பட, Chrome பற்றிய மேலும் தகவலுக்கு, Google Chrome -க்குச் செல்லவும்.

நீங்கள் இந்த வழிமுறைகளை முயற்சி செய்த பிறகும் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், எங்களைத் தொடர்புகொள்க.