உதவி

மூவிகள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் எக்ஸ்-ரே என்றால் என்ன?

திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளுக்கான எக்ஸ்ரே நேரடியாக இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் (IMDB) இருந்து நடிகர் சுயசரிதை, பின்னணி தகவல் மற்றும் பலவற்றையும் அணுக உதவுகிறது.

மூவிகள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளுக்கான எக்ஸ்-ரே, தேர்ந்தெடுக்கப்பட்ட Amazon Video தலைப்புகளுக்கு பின்வரும் சாதனங்களில் கிடைக்கின்றன:

  • Prime Video இணையதளம்
  • Android & iOS மொபைல் சாதனங்கள்

ஒரு திரைப்படம் அல்லது டிவி நிகழ்ச்சியில் எக்ஸ்-ரே கிடைக்கும் என்றால், நீங்கள் பிளேயர் சாளரத்தில் ஒரு எக்ஸ்-ரே விருப்பங்களை காண்பீர்கள்.

ஒரு வீடியோ இயங்குகையில், நீங்கள் பிளேயர் சாளரத்துடன் தொடர்புகொள்லும் எந்த நேரத்திலும் எக்ஸ்-ரே "விரைவுப் பார்வை" விவரங்கள் அந்த வீடியோ பிளேபேக்குடன் காண்பிக்கப்படும். எல்லாம் காட்டு என்பதைத் தேர்ந்தெடுப்பது, வீடியோவை இடைநிறுத்துவதோடு, அந்த வீடியோவிற்குக் கிடைக்கும் அனைத்து எக்ஸ்-ரே விவரங்களையும் காண அனுமதிக்கிறது.

PrimeVideo.com இணையதளம்

  • எக்ஸ்-ரேவை காட்ட - இடதுபுறத்தில் இருக்கும் எக்ஸ்-ரே பேனல் உள்ளிட்ட அனைத்து ப்ளேபேக் விருப்பங்களையும் காட்ட உங்கள் பிளேயர் சாளரத்தின் மீது உங்கள் மவுஸை நகர்த்தவும். விரிவுபடுத்த எக்ஸ் ரே பேனலில் இருந்து ஏதாவது தேர்ந்தெடுக்கலாம் அல்லது வீடியோ பிளேபேக்கை இடைநிறுத்தம் செய்ய மற்றும் அனைத்து எக்ஸ்-ரே வின் முழுத்திரை காட்சியையும் திறக்க எல்லாம் காட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

    Note: வலைத்தளத்திலிருந்து ஸ்ட்ரீமிங் செய்யும் போது எக்ஸ்-ரே பேனலை மறைக்க அல்லது காட்ட, மேல் இடது பக்கத்தில் உள்ள எக்ஸ்-ரே ஐகானைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸ்-ரேவை மறைத்தல்/காட்டல், எக்ஸ்-ரே இணக்கமான வீடியோவை அடுத்த முறை பார்க்கும்போதும் நீடிக்கும்.

  • ப்ளேபேக்குக்கு திரும்புவதற்கு - ப்ளேபேக் சாளரத்துடன் தொடர்பு கொள்ள உங்கள் மவுஸைப் பயன்படுத்தாத போது எக்ஸ்-ரே பேனல் மற்றும் ப்ளேபேக் கட்டுப்பாடுகள் தானாக மூடப்படும். நீங்கள் முழுத்திரை எக்ஸ்-ரே காட்சியைத் திறந்திருந்தால், மீண்டும் இயக்குவதற்கு மூடு பொத்தானைக் ( "X" ஐகான்) கிளிக் செய்யலாம்.

Note: எக்ஸ்-ரே அம்சங்கள் ஒரு HTML5 இணைய பிளேயருடன் மட்டுமே கிடைக்கின்றன. மேலும் அறிய, கணினிகளுக்கான அமைப்புத் தேவைகள் க்கு செல்லவும்.

மொபைல் சாதனங்கள் (Fire டேப்லெட், Android மற்றும் iOS)

  • எக்ஸ்-ரேவை காட்ட - எக்ஸ்-ரே விவரங்களை காட்ட வீடியோ பிளேபேக்கின் போது உங்கள் திரையில் எங்காவது தட்டவும். ப்ளேபேக்கை இடைநிறுத்துவதற்கும், எக்ஸ்-ரேவின் முழுத்திரை காட்சியைத் திறக்கவும் எல்லாவற்றையும் காண்க என்பதைத் தட்டவும்.
  • எக்ஸ்-ரேவை மறைக்க - எக்ஸ்-ரேவை மறைக்க உங்கள் திரையில் எக்ஸ்-ரே விவரங்கள் சாளரத்திற்கு வெளியே எங்காவது தட்டவும். நீங்கள் முழுத்திரை எக்ஸ்-ரே காட்சியைத் திறந்திருந்தால், மீண்டும் இயக்குவதற்கு மூடு பொத்தானைக் ( "X" ஐகான்) கிளிக் செய்யலாம்.

எக்ஸ்-ரே அம்சங்கள்

இதோ எக்ஸ்-ரே உடன் கிடைக்கும் சில அம்சங்கள்:

காட்சிகள் & காட்சிக்குள்
நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் திரைப்படம் அல்லது டிவி நிகழ்ச்சிக்கான காட்சிகளின் பட்டியலைப் பெறலாம், அதேபோல் நடிகர்கள் மற்றும் கதாபாத்திர விவரங்கள், முக்கியத்துவம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய தற்போது இயங்கும் ஒரு காட்சி பற்றிய தகவலும் கிடைக்கும்.

Note: IOS ஆப்-இல் மட்டுமே உள்-காட்சி கிடைக்கிறது.

நடிகர்
சுயவிவரங்கள் மற்றும் திரைப்பட விவரங்கள் உள்ளிட்ட நடிகர் தகவலைப் பெறுங்கள்.
கதாபாத்திரங்கள்
முக்கிய கதாபாத்திரங்கள் பற்றிய பின்புல தகவல்களைப் பெறுக.
இசை
ஒரு காட்சியின் போது இயங்கி கொண்டிருக்கும் இசை பற்றிய விவரங்களைக் காண்க.
சிறுகுறிப்பு
நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் உள்ளடக்கத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் உண்மைகளைப் பற்றி படியுங்கள்: இணைப்புகள், சிசுகிசு மற்றும் படப்பிடிப்பு இடங்கள் உட்பட.
காட்சிகளுக்குப் பின்னால்
தேர்ந்தெடுக்கப்பட்ட Amazon Studio தலைப்புகளில் மட்டுமே இந்த அம்சம் கிடைக்கும். உங்களுக்குப் பிடித்த சில Amazon Studios தலைப்புகள் பின்னால் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்க்கவும்.