உதவி

சிக்கல்தீர்வு

உள்ளூர் நாணயங்களில் Prime Video சந்தாக்களுக்குப் பணம் செலுத்துதல்

Prime Video சந்தா விருப்பங்களுக்கான மாற்றங்கள் பற்றி மேலும் அறியவும்.

என்ன மாறுகிறது?

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் வசிக்கும் வாடிக்கையாளர்கள், தங்கள் Prime Video சந்தாவிற்குப் பணம் செலுத்த, அமெரிக்க நாணயத்திற்கு பதிலாக, தங்களுடைய உள்ளூர் நாணயத்தையே தேர்வுசெய்யலாம். டாலர்கள் அல்லது யூரோக்கள் – வழக்கம்போல அதே சாதனங்களில் அதே உள்ளடக்கத்தை அணுக முடியும்.

நாணயத்தைப் பொருட்படுத்தாமல் உலகில் எங்கிருந்தும் உள்ள Mastercard மற்றும் Visa டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை ஏற்றுக்கொள்கிறோம். உள்ளூர் நாணயங்களில் பேமெண்ட் செய்வதற்குப் பின்வரும் கார்டுகளையும் ஏற்றுக்கொள்கிறோம்:

American Express (கிரெடிட்): அர்ஜென்டினா, சிலி, கொலம்பியா, கோஸ்டா ரிக்கா, செக் குடியரசு, டென்மார்க், டொமினிக்கன் குடியரசு, குவாத்தமாலா, ஹங்கேரி, நார்வே, பராகுவே, பெரு, போலந்து, ருமேனியா, தென் ஆப்பிரிக்கா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து.

Diners Club (கிரெடிட்): அர்ஜென்டினா, கொலம்பியா, பராகுவே, பெரு.

Naranja (கிரெடிட் மற்றும் டெபிட்): அர்ஜென்டினா

சந்தா பேமெண்ட்டை எவ்வாறு புதுப்பிப்பது

உங்கள் சந்தாவை கணக்கு & அமைப்புகள் பக்கத்திலிருந்து நீங்கள் புதுப்பிக்கலாம்.

குறிப்பு: தற்போது உங்களிடம் ஆக்டிவ் Prime Video சந்தா இருந்தால் மட்டுமே உள்ளூர் நாணயத்தில் செலுத்த முடியும்; அத்துடன் இங்கும் வசிக்க வேண்டும்: அர்ஜென்டினா, சிலி, கொலம்பியா, கோஸ்டா ரிக்கா, செக் குடியரசு, டென்மார்க், டொமினிக்கன் குடியரசு, குவாத்தமாலா, ஹங்கேரி, இந்தோனேஷியா, மலேஷியா, நியூசிலாந்து, நார்வே, பராகுவே, பெரு, ஃபிலிப்பைன்ஸ், போலந்து, ருமேனியா, தென் ஆப்பிரிக்கா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து அல்லது வியட்நாம்; அதே நாட்டிலுள்ள வங்கி அல்லது பிற நிதி நிறுவனத்தின் பேமெண்ட் கார்டை வைத்திருக்க வேண்டும். Prime Video அல்லது Amazon Prime-க்கான புதிய சந்தாதாரர்கள் புகுபதிகை செய்யும் போது அவர்களின் உள்ளூர் நாணயத்தில் சந்தாக்கள் கிடைக்கும்.