உதவி

சிக்கல்தீர்வு

ஃபிரஞ்சு ஓபன் - ரோலண்ட்-கரோஸ் ஆதரவு

Prime Video-இல் ஃபிரஞ்சு ஓபன் - ரோலண்ட்-கரோஸின் நேரலை ஒளிபரப்பைப் பார்ப்பதில் சிக்கல்கள் இருந்தால் என்ன செய்வது என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

கேள்விகள் & பதில்கள்

1) Prime Video-இல் ரோலண்ட்-கரோஸைப் பார்க்க கூடுதலாகக் கட்டணம் செலுத்த வேண்டுமா?

மெட்ரோபொலிட்டன் ஃபிரான்ஸ் மற்றும் கோர்சிகாவில் உள்ள Prime உறுப்பினர்கள் கூடுதல் கட்டணம் இல்லாமல் Prime Video-இல் ரோலண்ட்-கரோஸ் போட்டிகளைக் காணலாம். Prime அல்லாத உறுப்பினர்கள் Prime-இன் 30 நாள் இலவசச் சோதனையைத் தொடங்கலாம் (சோதனைக்குப் பிறகு €49/ஆண்டு அல்லது €5.99/மாதம்). மேலும் தகவல்களுக்கு, இதைப் பார்க்கவும்: www.amazon.fr/prime

செயிண்ட் பார்தெலமி தவிர அன்டோரா மற்றும் ஃபிரெஞ்சு வெளிநாட்டுத் துறைகள், பிராந்தியங்கள் மற்றும் சமூகங்களில் (DROM-COM) Prime Video-மட்டும் சந்தா வைத்துள்ள வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் இல்லாமல் Prime Video-இல் ரோலண்ட்-கரோஸ் போட்டிகளைக் காணலாம். Prime Video மட்டும் சந்தா இல்லாத வாடிக்கையாளர்கள் Prime-இன் 7 நாள் இலவசச் சோதனையைத் தொடங்கலாம் (சோதனைக்குப் பிறகு €5.99 அல்லது $5.99).

2) Prime Video-இல் எந்த ரோலண்ட்-கரோஸ் போட்டிகளைப் பார்க்க முடியும்? நான் ஏன் ரோலண்ட்-கரோஸின் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டிகளை மட்டுமே பார்க்க முடிகிறது, முழுத் தொடரையும் பார்க்க முடியவில்லை?

பிரதான டிராவின் (05/31) முதல் திங்கட்கிழமை (இரண்டு காலிறுதி இரவுப் போட்டிகள் உட்பட) தொடங்கி மற்றும் சிமோன்-மாத்தியூ (SM) அரங்கில் நடைபெறும் (05/30 தொடங்குவது) புத்தம் புதிய (10) இரவு அமர்வுப் போட்டிகளை (21:00 CET) ஒளிபரப்பும் உரிமையை Prime Video பெற்றுள்ளது. இரவுப் போட்டிகள் புகழ்பெற்ற ரோலண்ட்-கரோஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒரு புதிய சேர்க்கையாகும், ஒவ்வொரு போட்டியும் அன்றைய சிறந்த ஒற்றையர் போட்டியாக (ஆண்கள் அல்லது பெண்கள்) இருக்கும். Prime Video-க்கு ஆண்கள், பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான பிரத்யேக இணை ஒளிபரப்பு உரிமைகளும் உள்ளன. Prime Video அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த உரிமைகளைப் பெற்றுள்ளது, இது மே 2021-இல் தொடங்கி 2023-இல் முடிவடைகிறது.

3) எந்தவொரு சாதனத்திலும் ரோலண்ட்-கரோஸின் நேரடி ஒளிபரப்பைப் பார்க்க முடியுமா? Prime Video-இல் நேரடி ஒளிபரப்பை எந்தச் சாதனங்கள் ஆதரிக்கவில்லை?

பொதுவான வழிகாட்டலுக்கு, இந்தப் பக்கத்தைப் பார்க்கவும். நேரலை விளையாட்டுப் போட்டிகள் Fire TV மற்றும் Fire டேப்லெட் போன்ற Amazon சாதனங்களிலும், Prime Video செயலி வழியாக வலை உலாவிகளும் இணைக்கப்பட்ட சாதனங்களிலும் ஆதரிக்கப்படுகின்றன, இதில் இணக்கமான கேம் கன்சொல்கள் (PS3, PS4, PS5, Xbox One), செட்டாப் பாக்ஸ்கள் மற்றும் மீடியா பிளேயர்கள் (Google Chromecast, Bouygues, SFR, Free, Orange, Apple TV 4K மற்றும் Apple TV (3வது மற்றும் 4வது தலைமுறைகள்), Smart TVகள், ப்ளூ-ரே பிளேயர்கள், சமீபத்திய Prime Video செயலிப் பதிப்பைக் கொண்ட iOS அல்லது Android டேப்லெட்கள் மற்றும் மொபைல்களும் அடங்கும்.

பின்வரும் சாதனங்கள் Prime Video-இல் நேரடி ஒளிபரப்பை ஆதரிக்காது, எனவே இவற்றில் நீங்கள் ரோலண்ட்-கரோஸைப் பார்க்க முடியாது:
 • Sony Bravia TV: குறிப்பிட்ட 2015 அல்லது பழைய Bravia டிவிகள்
 • Sony Bravia Blu-Ray: Bravia Blu-Ray Disc Player
 • Microsoft Xbox 360
 • Nintendo Wii மற்றும் Wii U
 • LG Hawaii TV: குறிப்பிட்ட 2015 அல்லது பழைய LG டிவிகள்
 • பழைய Roku சாதனங்கள்: 2014 மற்றும் பழைய Roku சாதனங்கள் (ஆதரிக்கப்படும் Roku 3 தவிர்த்து)
 • Vizio Mediatek 2014: 2014 Vizio TV
 • TiVo Series 4/5/Mini
 • Panasonic TV: Panasonic Viera Smart TV
 • Panasonic Viera Blu-Ray Player
 • Loewe Sigma TV
 • Sharp MTK 5655 TV

4) Prime Video-இல் ரோலண்ட்-கரோஸ் தகுதிச் சுற்றுகளைப் பார்க்க முடியுமா?

2021-இல், Prime Video-இன் ரோலண்ட் கரோஸ் கவரேஜானது பிரதான போட்டியுடன் (30 மே) தொடங்கும்.

5) அனைத்துப் பகலிரவு அமர்வுப் போட்டிகளையும் Prime Video நேரலையில் ஒளிபரப்பி, அவற்றை மறு இயக்கம் செய்து பார்க்க முடியுமா?

ஆம். Prime Video ஆனது பிரத்யேகமாக சிமோன்-மாத்தியூ (SM) அரங்கில் ஆடப்படும் போட்டிகளையும், அனைத்து 10 இரவு அமர்வு போட்டிகளையும் ஒளிபரப்பும் (43) உரிமையைப் பெற்றுள்ளது. போட்டி முடிந்தவுடன் முழுப் போட்டியின் ரீபிளேக்களும் கிடைக்கும்.

6) ஒவ்வொரு இரவு அமர்வுக்கும் எந்தப் போட்டியை Prime Video ஒளிபரப்பும் என்பதை நான் எவ்வாறு கண்டறிவது?

ஒவ்வொரு நாளும் போட்டியின் தொடக்கத்தில், உறுதிப்படுத்தப்பட்ட போட்டி அட்டவணையைப் போட்டித்தொடரின் பக்கம் வழியாக Prime Video வெளியிடும். முதல் இரவுப் போட்டியானது 05/31 (21:00 CEST) முதல் தொடங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

7) Prime Video-இன் ரோலண்ட்-கரோஸ் போட்டிகளைக் கிளப்புகள் அல்லது உணவகங்களில் நான் பார்க்க முடியுமா?

Prime Video-இல் ரோலண்ட்-கரோஸின் ஒளிபரப்பு, தனிப்பட்ட மற்றும் தனிநபரின் பயன்பாட்டிற்கு மட்டுமே கிடைக்கும்.

8) Prime Video-இல் ரோலண்ட் கரோஸ் போட்டிகளை நான் எவ்வாறு தேடுவது?

Prime உறுப்பினர்கள் "நேரலை மற்றும் வரவிருக்கும்" கரோசல் மற்றும் அவர்களின் Prime Video முகப்புத் திரையில் கிடைக்கும் பேனர்கள் வழியாகப் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை அணுக முடியும்.

9) Prime Video-இல் இந்தப் போட்டிகளுக்குக் கிடைக்கும் வீடியோ தெளிவுத்திறன்(கள்) என்ன?

ரோலண்ட்-கரோஸ் போட்டிகள் ஹை டெஃபினிஷனில் (HD) கிடைக்கும். கிடைக்கும் பேண்ட்விட்த்தின் அடிப்படையில் உயர்தர ஒளிபரப்பு அனுபவத்தை Prime Video வழங்கிடும்.

10) எனது iOS அல்லது Android மொபைல் சாதனத்தில் நேரலை விளையாட்டுகளை ஏன் பார்க்க முடியவில்லை?

உங்கள் iOS அல்லது Android மொபைல் சாதனத்தில் நேரலை விளையாட்டை அணுக முடியாவிட்டால், உங்கள் செயலியைச் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கவும். Android பயனர்கள்: Google Play ஸ்டோர் செயலியைத் திறந்து, "Prime Video" என்று தேடி, "புதுப்பி" என்பதைத் தட்டவும். iOS Users: App Store-ஐத் திறந்து, "Prime Video" என்று தேடி, "Update" என்பதைத் தட்டவும்.

11) ரோலண்ட் கரோஸ் கவரேஜை நான் பார்க்க முயலும்போது இருப்பிடப் பிழையைப் பெறுகிறேன்.

ரோலண்ட்-கரோஸ் போட்டிகள் மெட்ரோபொலிட்டன் ஃபிரான்ஸ் மற்றும் மொனாக்கோவை தளமாகக் கொண்ட Prime வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன. அன்டோரா மற்றும் ஃபிரெஞ்சு வெளிநாட்டுத் துறைகள், பிராந்தியங்கள் மற்றும் சமூகங்கள் (DROM-COM) ஆகியவற்றில் உள்ள Prime Video சந்தா வாடிக்கையாளர்களும் இந்தப் போட்டிகளை அணுகலாம். செயிண்ட் பார்தலேமி உட்பட மற்ற அனைத்துச் சர்வதேச இடங்களும் தகுதி பெறவில்லை.

12) எனக்கு ஒளிபரப்பு தாமதமாகவே கிடைக்கிறது, இதை எவ்வாறு குறைப்பது?

நேரடி விளையாட்டுக்கும் பார்வையாளரின் ஸ்ட்ரீமிங் அனுபவத்திற்கும் இடையில் எப்போதும் சிறிய தாமதம் இருக்கக்கூடும், இது நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தின் வகையைப் பொறுத்து இருக்கலாம். Fire TV, Apple TV, iOS அல்லது Android சாதனத்தைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம்.

13) ஸ்ட்ரீமிங் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன, நான் என்ன செய்ய வேண்டும்?

சிறந்த லைவ் ஸ்ட்ரீமிங் அனுபவத்திற்கு, SD-க்கு 1 Mbps மற்றும் HD-க்கு 5 Mbps என்ற குறைந்தபட்ச பதிவிறக்க வேகத்தை Prime Video பரிந்துரைக்கிறது. கிடைக்கும் பேண்ட்விட்த்தின் அடிப்படையில் உயர்தர ஒளிபரப்பு அனுபவத்தை Prime Video வழங்கிடும்.
குறிப்பு: வீடியோவில் "அதிர்வுகள்" அல்லது இயக்கம் அதிகப்படியாக மங்கலாக இருந்தால், உங்கள் தொலைக்காட்சியில் மோஷன் அமைப்பை ஆஃப் செய்வதற்குப் பரிந்துரைக்கிறோம். உங்கள் தொலைக்காட்சி உற்பத்தியாளரைப் பொறுத்து இந்த அமைப்பு வேறு பெயரைக் கொண்டிருக்கலாம். ஆட்டோ மோஷன் பிளஸ், ட்ரூ மோஷன், மோஷன்ஃப்ளோ, சினிமோஷன் மற்றும் மோஷன் பிக்சர் போன்றவை மோஷன் அமைப்புக்கான சில எடுத்துக்காட்டுகள்.