உதவி

அமைத்தல்

எனது டிவிக்கு Prime Video-ஐ எவ்வாறு அனுப்புவது?

உங்களிடம் Google Chromecast, Android TV அல்லது Fire TV சாதனம் இருந்தால், Prime Video-ஐ உங்கள் டிவிக்கு "அனுப்ப" உங்கள் மொபைல் சாதனத்தைப் பயன்படுத்தலாம்.

  1. உங்கள் டிவியை இயக்கவும்.
  2. உங்கள் Android மொபைல் சாதனம், iPhone, iPad, iPod Touch அல்லது Fire டேப்லெட்டில் Prime Video செயலியைத் திறக்கவும். உங்கள் Prime Video செயலியில் நீங்கள் உள்நுழைந்திருப்பதையும், உங்கள் இணைக்கப்பட்ட சாதனம் (Fire TV, Android TV அல்லது Chromecast) இருக்கும் அதே நெட்வொர்க்கில் இருப்பதையும் உறுதிசெய்து கொள்ளவும்.
    Fire TV, Android TV அல்லது Chromecast சாதனம் ஏற்கனவே இயக்கப்பட்டுள்ளதையும், நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளதையும் உறுதிசெய்து கொள்ளவும். iOS-இல் உள்ள Prime Video செயலியிலிருந்து Fire TV சாதனங்களுக்கும், Fire டேப்லெட்டிலிருந்து Chromecast/Android TV-க்கும் அனுப்ப முடியாது.
  3. உங்கள் Prime Video செயலியில் உள்ள அனுப்பு ஐகானைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் டிவியில் காஸ்ட் செய்யத் தயார் திரையைக் காண்பீர்கள்.
  4. நீங்கள் பயன்படுத்த விரும்பும் சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. நீங்கள் பார்க்க விரும்பும் தலைப்பைத் தேர்ந்தெடுக்கவும். இயக்கம், ஆடியோ டிராக்குகள் மற்றும் சப்டைட்டில்கள் ஆகியவற்றிற்கான மொபைல் சாதனக் கையாளுதல் கட்டுப்பாடுகளுடன் இந்தத் தலைப்பும் Chromecast உடன் இணைக்கப்பட்டுள்ள திரையில் காண்பிக்கப்படும்.
    Chromecast-இல் சப்டைட்டில் அமைப்புகளை மாற்ற விரும்பினால், iOS சாதனங்களில் அந்தச் சாதனத்திற்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும். பிறகு அமைப்புகள் > அணுகல்தன்மை > சப்டைட்டில்கள் மற்றும் கேப்ஷனிங் > ஸ்டைல் என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் சப்டைட்டில்களுக்கான ஸ்டைலைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் வெவ்வேறு எழுத்துருக்கள் அல்லது அளவுகளைப் பயன்படுத்த விரும்பினால் புதிய ஸ்டைலையும் உருவாக்கலாம். Android சாதனங்களில், தலைப்பு அனுப்பப்படும்போது, திரையில் உள்ள மூன்று புள்ளி மெனுவைத் தட்டவும். சப்டைட்டில் ஸ்டைல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து, கேப்ஷன்களைக் காட்டு என்பதை இயக்கவும். அந்த மெனுவில் உள்ள கேப்ஷன் அளவு மற்றும் ஸ்டைல் தேர்வுகளையும் நீங்கள் தேர்வுசெய்யலாம்.
குறிப்பு: உங்களிடம் Fire TV சாதனம் அல்லது Google TV கொண்ட Chromecast இருந்தால், சாதனத்தின் ரிமோட்டையும் பயன்படுத்தலாம் மற்றும் அந்தச் சாதனத்தில் உள்ள Prime Video செயலியையும் அனுப்புதல் தேர்வையும் பயன்படுத்தலாம்.