உதவி

Prime Video -ஐ அணுகுவதற்கு, VPN அல்லது ப்ராக்ஸியைப் பயன்படுத்துதல்

நீங்கள் ஒரு VPN, ப்ராக்ஸி அல்லது “unblocker” சேவை வழியாக இணைக்கப்பட்டிருக்கும்போது Prime Video ஸ்ட்ரீமிங் கிடைக்காது.

VPN, ப்ராக்ஸி அல்லது “Unblocker” பிழைகளை எப்படி சரிசெய்வது

பின்வரும் பிழையை நீங்கள் கண்டால், ஆதரிக்கப்படாத இணைப்பு வகையைப் பயன்படுத்தி நீங்கள் Prime Video-வை ஸ்ட்ரீம் செய்ய முயற்சிப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்:

  • “காண்பதற்கு, ஏதேனும் VPN அல்லது ப்ராக்ஸி சேவைகளை நிறுத்துங்கள்.”
  • “உங்கள் சாதனம் ஒரு HTTP ப்ராக்ஸி அல்லது ஒரு விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் (VPN) இணைப்பைப் பயன்படுத்தி இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து ஏதேனும் ப்ராக்ஸி நிரல்கள் அல்லது VPN இணைப்புகளை மூடிவிட்டு அல்லது முடக்கிவிட்டு, மீண்டும் முயற்சிக்கவும்.”
  • “உங்கள் சாதனத்தின் இணைய இணைப்பு, உங்கள் வீடியோ இயங்குவதைத் தடுக்கின்ற HTTP ப்ராக்ஸியைப் பயன்படுத்துகிறது. ப்ராக்ஸி நிரல்களை மூடிவிட்டு அல்லது முடக்கிவிட்டு மீண்டும் முயற்சிக்கவும்.”

Prime Video ஸ்ட்ரீமிங்கைத் தொடர:

  • VPNகள், ப்ராக்ஸிகள் அல்லது “Unblocker” சேவைகளை முடக்குங்கள்.
  • உங்கள் சாதனத்தின் நெட்வொர்க் அமைப்புகள் தன்னியக்கம் என்று அமைக்கப்பட்டுள்ளனவா என்பதைச் சரிபார்க்கவும்.

இந்த வழிமுறைகளை மேற்கொண்டும் கூட நீங்கள் ஒரு பிழையைப் பார்க்கிறீர்கள் என்றால், உதவிக்கு உங்கள் இணைய சேவை வழங்குநரைத் தொடர்பு கொள்ளவும்.

மேலும் தகவலுக்கு, Prime Video விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் -ஐப் பார்க்கவும்.

  • இணைய சேவை வழங்குநர்கள் - தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ள IP முகவரிகளைத் தடைசெய்ய உதவுவதற்கு, IP வரம்புகளின் விவரங்கள் மற்றும் உங்கள் நிறுவனத்தில் இருக்கும் தொடர்பு நபரின் விவரங்கள் ஆகியவற்றுடன் D2C2-ISP-Support@amazon.com -ஐத் தொடர்புகொள்ளுங்கள்.