உதவி

அமேசான் பிரைம் வீடியோ பயன்பாட்டுச் சட்டங்கள்

 

அமேசான் பிரைம் வீடியோ பயன்பாட்டு விதிமுறைகள், விளக்கியுள்ளதுபோல் எங்களது பொருளடக்க வழங்குனர்கள் எங்கள் மீது விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, அமேசான் பிரைம் வீடியோவில் நாங்கள் உங்களுக்குக் கிடைக்கச் செய்யும் காணொளிகள் காண்பதற்கும் (உதாரணத்துக்கு, ஸ்ட்ரீமிங் அல்லது பதிவிறக்கம் மூலம்), நாங்கள் உங்களுக்குக் கிடைக்கச் செய்யும் நேர அளவிலும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருக்கும். உங்களது காணொளி ஒவ்வொன்றுக்கும் பொருந்தக்கூடிய தனிப்பட்ட கட்டுப்பாடுகள், நீங்கள் அந்தக் காணொளியை வாங்குகிறீர்களா, வாடகைக்குப் பெறுகிறீர்களா, சந்தா அடிப்படையில் அந்தக் காணொளியை அணுகுகிறீர்களா (உதாரணத்துக்கு, பிரைம் வீடியோ மூலம்), கட்டணம் செலுத்திய சந்தா மூலமாக அல்லது ஊக்குவிப்பு வெள்ளோட்டம், அல்லது முதல் அத்தியாயம் இலவசம் (கிடைக்கும் போது) முறையில் அணுகுகிறீர்களா என்பதைப் பொறுத்து அமையும். எங்களது சேவையில் புதிய அம்சங்கள், சாதனங்கள் மற்றும் பொருளடக்கத்தை நாங்கள் சேர்க்கும் போது இந்தக் கட்டுப்பாடுகள் காலப்போக்கில் மாறலாம். அமேசான் பிரைம் வீடியோவை உங்களது இணைய உலாவி மற்றும் இணங்கத்தக்க இணைய இணைப்புள்ள தொலைக்காட்சிகள், புளூ-ரே பிளேயர்கள், செட்-டாப் பெட்டிகள், ஃபயர் டேப்லெட்கள் மற்றும் பிற இணங்கத்தக்க சாதனங்கள் மூலம் அணுகுவதற்கான கட்டுப்பாடுகள் பின்வருமாறு.

வாங்கப்பட்ட காணொளிகள்

 • பார்ப்பதற்கான வழிகள்: நீங்கள் தேவையின் அடிப்படையில் காண்பதற்காக ஒரு காணொளியை வாங்கும்போது, அதை நீங்கள் ஸ்ட்ரீம் செய்வதற்காகவும், பெரும்பாலான நிகழ்வுகளில், பதிவிறக்கம் செய்யவும், பின்வருமாறு கிடைக்கச் செய்வோம்:
  • ஸ்ட்ரீமிங்: நீங்கள் வாங்கிய காணொளிகளை உங்களது இணைய உலாவி மற்றும் இணங்கத்தக்க இணைய இணைப்புள்ள தொலைக்காட்சிகள், புளூ-ரே பிளேயர்கள், செட்-டாப் பெட்டிகள், ஃபயர் டேப்லெட்கள் மற்றும் பிற இணங்கத்தக்க சாதனங்கள் மூலம் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யலாம். எங்களது சேவையுடன் இணங்கத்தக்க சாதனங்களின் பட்டியலுக்கு, பின்வரும் இணைப்புகளில் அமேசான் பிரைம் வீடியோவை அணுகுவதற்கு நீங்கள் பயன்படுத்தும் இணையதளத்தில் உள்ள இணங்கத்தக்க சாதனங்கள் பக்கத்தைப் பார்வையிடவும், PrimeVideo.comAmazon.comAmazon.co.ukAmazon.de அல்லது Amazon.co.jp (அமைவிடத்துக்கு ஏற்ப சாதனத்தின் இணங்குதல் மாறுபடும்). ஒரே அமேசான் கணக்கைப் பயன்படுத்தி நீங்கள் ஒரே சமயத்தில் மூன்று காணொளிகள் வரை ஸ்ட்ரீம் செய்யலாம். நீங்கள் அதே காணொளியை ஒரே சமயத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட சாதனங்களுக்கு ஸ்ட்ரீம் செய்ய முடியாது.
  • பதிவிறக்கம் செய்தல்: பதிவிறக்கம் செய்வதற்கான தெரிவு கிடைக்கப்பெறும் சமயத்தில், நீங்கள் வாங்கும் காணொளியை, பதிவிறக்கம் செய்வதற்கு இணங்கத்தக்க ஃபயர் டேப்லெட்கள் (கிண்டில் ஃபயர் 1வது தலைமுறை தவிர) மற்றும் ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்கள் நான்கிற்கு பதிவிறக்கம் செய்யலாம். பதிவிறக்கம் செய்வதற்கு இணங்கத்தக்க சாதனங்களின் பட்டியலுக்கு, பின்வரும் இணைப்புகளில் அமேசான் பிரைம் வீடியோவை அணுகுவதற்கு நீங்கள் பயன்படுத்தும் இணையதளத்தில் உள்ள டவுன்லோடு பிரைம் வீடியோ டைட்டில்ஸ் பக்கத்தைப் பார்வையிடவும், PrimeVideo.comAmazon.com, Amazon.co.ukAmazon.de அல்லது Amazon.co.jp (அமைவிடத்துக்கு ஏற்ப சாதனத்தின் இணங்குதல் மாறுபடும்). வாங்கப்பட்ட ஒரு காணொளியை பதிவிறக்கம் செய்தபின், மேலே விளக்கியவாறு நீங்கள் அதை ஸ்ட்ரீம் செய்யவும் இயலும்.
 • காணும் காலம்: அளவற்றது – நீங்கள் வாங்கிய காணொளிகளை உங்கள் விருப்பத்துக்க ஏற்ப எத்தனை முறை வேண்டுமானாலும், எவ்வளவு காலம் வேண்டுமானாலும், மீண்டும் மீண்டும் பார்க்கலாம் (அமேசான் பிரைம் வீடியோ பயன்பாட்டு விதிமுறைகளில் விளக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது).

வாடகை காணொளிகள்

 • பார்ப்பதற்கான வழிகள்: நீங்கள் தேவையின் அடிப்படையில் காண்பதற்காக ஒரு காணொளியை வாடகைக்குப் பெறும்போது, அதை நீங்கள் ஸ்ட்ரீம் செய்வதற்காகவும், பெரும்பாலான நிகழ்வுகளில், பதிவிறக்கம் செய்யவும், பின்வருமாறு கிடைக்கச் செய்வோம்:
  • ஸ்ட்ரீமிங்: நீங்கள் வாடகைக்குப் பெற்ற காணொளிகளை உங்களது இணைய உலாவி மற்றும் இணங்கத்தக்க இணைய இணைப்புள்ள தொலைக்காட்சிகள், புளூ-ரே பிளேயர்கள், செட்-டாப் பெட்டிகள், ஃபயர் டேப்லெட்கள் மற்றும் பிற இணங்கத்தக்க சாதனங்கள் மூலம் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யலாம். எங்களது சேவையுடன் இணங்கத்தக்க சாதனங்களின் பட்டியலுக்கு, பின்வரும் இணைப்புகளில் அமேசான் பிரைம் வீடியோவை அணுகுவதற்கு நீங்கள் பயன்படுத்தும் இணையதளத்தில் உள்ள இணங்கத்தக்க சாதனங்கள் பக்கத்தைப் பார்வையிடவும், PrimeVideo.comAmazon.com, Amazon.co.ukAmazon.de அல்லது Amazon.co.jp (அமைவிடத்துக்கு ஏற்ப சாதனத்தின் இணங்குதல் மாறுபடும்). ஒரே அமேசான் கணக்கைப் பயன்படுத்தி நீங்கள் ஒரே சமயத்தில் மூன்று காணொளிகள் வரை ஸ்ட்ரீம் செய்யலாம். நீங்கள் அதே காணொளியை ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களுக்கு ஸ்ட்ரீம் செய்ய முடியாது.
  • பதிவிறக்கம் செய்தல்: பதிவிறக்கம் செய்வதற்கான தெரிவு கிடைக்கப்பெறும் சமயத்தில், நீங்கள் வாடகைக்குப் பெற்ற காணொளியை, பதிவிறக்கம் செய்வதற்கு இணங்கத்தக்க ஃபயர் டேப்லெட்கள் (கிண்டில் ஃபயர் 1வது தலைமுறை தவிர) மற்றும் ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்கள் ஒன்றில் பதிவிறக்கம் செய்யலாம். பதிவிறக்கம் செய்வதற்கு இணங்கத்தக்க சாதனங்களின் பட்டியலுக்கு, பின்வரும் இணைப்புகளில் அமேசான் பிரைம் வீடியோவை அணுகுவதற்கு நீங்கள் பயன்படுத்தும் இணையதளத்தில் உள்ள டவுன்லோடு பிரைம் வீடியோ டைட்டில்ஸ் பக்கத்தைப் பார்வையிடவும், PrimeVideo.comAmazon.comAmazon.co.ukAmazon.de 
   அல்லது Amazon.co.jp (அமைவிடத்துக்கு ஏற்ப சாதனத்தின் இணங்குதல் மாறுபடும்). வாடகைக்குப் பெறப்பட்ட காணொளி ஒன்றை நீங்கள் இணக்கமான பதிவிறக்க சாதனம் ஒன்றில் பதிவிறக்கம் செய்தவுடன், நீங்கள் அதே காணொளியை மற்றொரு சாதனத்துக்குள் பதிவிறக்கம் செய்ய அல்லது அதே அமேசான் கணக்கைப் பயன்படுத்தி ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனத்தில் காண முடியாது. இருப்பினும், பதிவிறக்கம் செய்யப்பட்ட காணொளியை நீங்கள் ஒரு இணங்கத்தக்க சாதனத்தில் பார்க்கத் தொடங்கலாம், அதன்பிறகு அந்தக் காணொளியை மற்றொரு இணங்கத்தக்க சாதனத்தில் ஸ்ட்ரீம் செய்யலாம் (ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களில் அது காட்சிப்படுத்தப்படாத வரை).
 • காணும் காலம்: வாடகை காணொளிகளுக்கு, நீங்கள் ஸ்ட்ரீமிங் அல்லது பதிவிறக்கம் செய்யத் தொடங்கியபின் அந்தக் காணொளியைப் பார்த்து முடிப்பதற்கு பொதுவாக 48 மணி நேரம் உண்டு, எந்த நிகழ்விலும் காலாவதி காலத்துக்கு முன்னதாக நீங்கள் கட்டாயம் அந்தக் காணொளியைக் காண்பதை முடித்துக்கொள்ள வேண்டும், காலாவதி காலம் என்பது பொதுவாக நீங்கள் வாடகைக் கட்டணம் செலுத்திய நாளிலிருந்து 30 நாட்கள் ஆகும். இந்தக் காணொளியின் நீளத்தை விவரப் பக்கத்தில் காணலாம் அல்லது இணையதள விவரப் பக்கத்தில் உள்ள “வாடகைக்குப் பெறுதல் மற்றும் வாங்குதல் குறித்து மேலும் அறிக” போன்ற, விவரப் பக்கத்தில் உள்ள ஒரு இணைப்பில் காண இயலும்.

முதல்-தரப்பு வீடியோ சந்தா

 • பார்ப்பதற்கான வழிகள்:
  • ஸ்ட்ரீமிங்: முதல்-தரப்பு வீடியோ சந்தாவுக்கானத் தலைப்புகள் (உ.ம்.அமேசான் பிரைம் அல்லது பிரைம் வீடியோ உறுப்பினர் தகுதி அல்லது ஊக்குவிப்பு வெள்ளோட்டம் ஆகியவற்றின் பயனாக கிடைக்கப்பெறுபவை) ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் கிடைக்கப்பெறுகின்றன. நீங்கள் முதல்-தரப்பு வீடியோ சந்தாவுக்கானத் தலைப்புகளை உங்களது இணைய உலாவி மற்றும் இணங்கத்தக்க இணைய இணைப்புள்ள தொலைக்காட்சிகள், புளூ-ரே பிளேயர்கள், செட்-டாப் பெட்டிகள், ஃபயர் டேப்லெட்கள் மற்றும் பிற இணங்கத்தக்க சாதனங்கள் மூலம் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யலாம். எங்களது சேவையுடன் இணங்கத்தக்க சாதனங்களின் பட்டியலுக்கு, பின்வரும் இணைப்புகளில் அமேசான் பிரைம் வீடியோவை அணுகுவதற்கு நீங்கள் பயன்படுத்தும் இணையதளத்தில் உள்ள இணங்கத்தக்க சாதனங்கள் பக்கத்தைப் பார்வையிடவும், 
   PrimeVideo.comAmazon.comAmazon.co.ukAmazon.de அல்லது Amazon.co.jp (அமைவிடத்துக்கு ஏற்ப சாதனத்தின் இணங்குதல் மாறுபடும்). ஒரே அமேசான் கணக்கைப் பயன்படுத்தி நீங்கள் ஒரே சமயத்தில் மூன்று தலைப்புகள் வரை ஸ்ட்ரீம் செய்யலாம். நீங்கள் அதே தலைப்பை ஒரே சமயத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட சாதனங்களுக்கு ஸ்ட்ரீம் செய்ய முடியாது.
  • பதிவிறக்கம் செய்தல்: ஃபயர் டேப்லெட்கள் (கிண்டில் ஃபயர் 1வது தலைமுறை தவிர) மற்றும் ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்கள் போன்ற இணங்கத்தக்க சாதனங்களில் பதிவிறக்கம் செய்வதற்கு நிறைய முதல்-தரப்பு வீடியோ சந்தாவுக்கான தலைப்புகளும் கிடைக்கின்றன. பதிவிறக்கம் செய்வதற்கு இணங்கத்தக்க சாதனங்களின் பட்டியலுக்கு, பின்வரும் இணைப்புகளில் அமேசான் பிரைம் வீடியோவை அணுகுவதற்கு நீங்கள் பயன்படுத்தும் இணையதளத்தில் உள்ள டவுன்லோடு பிரைம் வீடியோ டைட்டில்ஸ் பக்கத்தைப் பார்வையிடவும், PrimeVideo.comAmazon.comAmazon.co.uk, Amazon.de அல்லது Amazon.co.jp (அமைவிடத்துக்கு ஏற்ப சாதனத்தின் இணங்குதல் மாறுபடும்). ஒவ்வொரு முதல்-தரப்பு வீடியோ சந்தாவுக்கான தலைப்புக்கான விவரப் பக்கமும், அந்தத் தலைப்பு பதிவிறக்கம் செய்வதற்குக் கிடைக்கிறதா என்பதைக் குறிக்கிறது. கிடைக்கக்கூடிய தலைப்புகளை நீங்கள் ஒரே சமயத்தில் இரண்டு சாதனங்களில் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். நீங்கள் ஒரு தலைப்பை ஏற்கனவே இரண்டு சாதனங்களில் பதிவிறக்கம் செய்திருந்தால், அதை மற்றொரு சாதனத்தில் பதிவிறக்கம் செய்யும் முன், அவற்றில் ஏதாவது ஒரு சாதனத்திலிருந்து நீங்கள் அதை அழித்துவிட வேண்டும். உங்களது அமைவிடத்தைப் பொறுத்து, உங்கள் அமேசான் கணக்குடன் தொடர்புடைய அனைத்து சாதனங்களிலும் ஒரே சமயத்தில் நீங்கள் அதிகபட்சம்15 அல்லது 25 தலைப்புகளை முதல்-தரப்பு மற்றும் மூன்றாம் தரப்பு வீடியோ சந்தா தலைப்புகள் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். முதல்-தரப்பு வீடியோ சந்தா தலைப்புகள் அனைத்தும் பதிவிறக்கம் செய்வதற்குக் கிடைக்காத நிலையில், அதே காணொளிகள் அமேசான் பிரைம் வீடியோவிலிருந்து வாடகைக்குப் பெறுவதற்கோ, வாங்குவதற்கோ கிடைக்கலாம், பிறகு அவற்றை இணங்கத்தக்க சாதனங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ள இயலும்.
 • நீங்கள் அமேசான் பிரைம் அல்லது பிரைம் வீடியோ உறுப்பினர் தகுதி அல்லது ஊக்குவிப்பு வெள்ளோட்டத்தைப் பெற்றிருந்தால், ஒரு காணொளியின் விவரப் பக்கத்தில் முதல்-தரப்பு வீடியோ சந்தாவுக்கான தலைப்பாக ஒதுக்கப்பட்டிருக்கும் எந்தவொரு காணொளியையும் நீங்கள் ஸ்ட்ரீம் செய்யலாம். நீங்கள் பதிவிறக்கம் செய்த முதல்-தரப்பு வீடியோ சந்தாவுக்கான தலைப்புகளை வரையறுக்கப்பட்ட காணும் காலத்திற்குள் காணலாம், அது தலைப்பைப் பொறுத்து மாறும்.
 • பதிவிறக்கம் செய்யப்பட்ட காணொளிகளுக்கு, நீங்கள் அந்தக் காணொளியை பார்க்கத் தொடங்குவதற்குப் பொதுவாக 30 நாட்கள் உண்டு, மேலும் நீங்கள் அதைப் பார்க்கத் தொடங்கிய பிறகு, பார்த்து முடிப்பதற்கு பொதுவாக 48 மணி நேரம் உண்டு. உங்களது அமேசான் பிரைம் அல்லது பிரைம் வீடியோ உறுப்பினர் தகுதி அல்லது ஊக்குவிப்பு வெள்ளோட்டம் காலாவதியான பிறகு, அல்லது இரத்து செய்யப்பட்ட பிறகு, நீங்கள் அந்தத் தலைப்பை வாடகைக்குப் பெறாமல் அல்லது வாங்காமல் எந்தவொரு முதல்-தரப்பு வீடியோ சந்தாவுக்கானத் தலைப்புகளையும் பார்க்க முடியாது.

மூன்றாம் தரப்பு காணொளி சந்தாக்கள்

 • பார்ப்பதற்கான வழிகள்:
  • ஸ்ட்ரீமிங்: நீங்கள் ஒரு அமேசான் பிரைம் அல்லது பிரைம் வீடியோ உறுப்பினர் தகுதி அல்லது ஊக்குவிப்பு வெள்ளோட்டத்தைப் பெற்றிருந்தால், ஒரு காணொளியின் விவரப் பக்கத்தில் ஒதுக்கப்பட்டவாறு அந்தச் சந்தாவின் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்ட எந்தவொரு காணொளியையும், ஸ்ட்ரீம் செய்வதற்கான கூடுதல் சந்தா கட்டணத்துடன் நாங்கள் உங்கள் அமைவிடத்தில் வழங்கும் எந்தவொரு மூன்றாம் தரப்பு காணொளி சந்தாவுக்கும் (உதாரணமாக அமேசான் பிரைம் வீடியோ சேனல்கள் மூலமாக) நீங்கள் சந்தா செலுத்தலாம். நீங்கள் மூன்றாம் தரப்பு சந்தா தலைப்புகளை உங்களது ஃபயர் டேப்லெட்களுக்கு, உங்களது இணைய உலாவி மற்றும் இணங்கத்தக்க இணைய இணைப்புள்ள தொலைக்காட்சிகள், புளூ-ரே பிளேயர்கள், செட்-டாப் பெட்டிகள், ஃபயர் டேப்லெட்கள் மற்றும் பிற இணங்கத்தக்க சாதனங்கள் மூலம் ஸ்ட்ரீம் செய்யலாம். இணங்கத்தக்க சாதனங்களின் பட்டியலுக்கு, பின்வரும் இணைப்புகளில் அமேசான் பிரைம் வீடியோவை அணுகுவதற்கு நீங்கள் பயன்படுத்தும் இணையதளத்தில் உள்ள இணங்கத்தக்க சாதனங்கள் பக்கத்தைப் பார்வையிடவும், PrimeVideo.com, Amazon.comAmazon.co.ukAmazon.de அல்லது Amazon.co.jp (அமைவிடத்துக்கு ஏற்ப சாதனத்தின் இணங்குதல் மாறுபடும்). ஒரே அமேசான் கணக்கைப் பயன்படுத்தி நீங்கள் ஒரே சமயத்தில் மூன்று தலைப்புகள் வரை ஸ்ட்ரீம் செய்யலாம். பெரும்பாலான மூன்றாம்-தரப்பு சந்தா தலைப்புகளில் நீங்கள் ஒரே தலைப்பை ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் ஸ்ட்ரீம் செய்ய முடியாது.
  • பதிவிறக்கம் செய்தல்: ஃபயர் டேப்லெட்கள் (கிண்டில் ஃபயர் 1வது தலைமுறை தவிர) மற்றும் ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்கள் போன்ற இணக்கமான சாதனங்களில் பதிவிறக்கம் செய்வதற்கு நிறைய மூன்றாம்-தரப்பு வீடியோ சந்தா தலைப்புகளும் கிடைக்கப்பெறுகின்றன. பதிவிறக்கம் செய்வதற்கு இணக்கமான சாதனங்களின் பட்டியலுக்கு, PrimeVideo.comAmazon.comAmazon.co.ukAmazon.de அல்லது 
   Amazon.co.jp என்ற இணைப்புகளில் அமேசான் பிரைம் வீடியோவை அணுகுவதற்கு நீங்கள் பயன்படுத்தும் இணையதளத்தில் உள்ள டவுன்லோடு பிரைம் வீடியோ டைட்டில்ஸ் பக்கத்தைப் பார்வையிடவும் (அமைவிடத்துக்கு ஏற்ப சாதனத்தின் இணங்குதல் மாறுபடும்). ஒவ்வொரு மூன்றாம்-தரப்பு வீடியோ சந்தா தலைப்புக்கான விவரப் பக்கமும், அந்தத் தலைப்பு பதிவிறக்கம் செய்வதற்குக் கிடைக்கப்பெறுகிறதா என்பதைக் குறிக்கிறது. கிடைக்கக்கூடிய தலைப்புகளை நீங்கள் ஒரே சமயத்தில் இரண்டு சாதனங்களில் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். நீங்கள் ஒரு தலைப்பை ஏற்கனவே இரண்டு சாதனங்களில் பதிவிறக்கம் செய்திருந்தால், அதை மற்றொரு சாதனத்தில் பதிவிறக்கம் செய்யும் முன், அந்தத் தலைப்பை ஏதாவது ஒரு சாதனத்திலிருந்து நீங்கள் அழித்துவிட வேண்டும். உங்களது அமைவிடத்தைப் பொறுத்து, உங்கள் அமேசான் கணக்குடன் தொடர்புடைய அனைத்து சாதனங்களிலும் ஒரே சமயத்தில் நீங்கள் அதிகபட்சம் 15 அல்லது 25 தலைப்புகளை முதல்-தரப்பு மற்றும் மூன்றாம் தரப்பு வீடியோ சந்தா தலைப்புகள் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மூன்றாம்-தரப்பு வீடியோ சந்தா தலைப்புகள் அனைத்தும் பதிவிறக்கம் செய்வதற்குக் கிடைக்கப்பெறாத நிலையில், அதே காணொளிகள் அமேசான் பிரைம் வீடியோவிலிருந்து வாடகைக்குப் பெறுவதற்கோ, வாங்குவதற்கோ கிடைக்கப் பெறலாம், மற்றும் அவற்றை இணங்கத்தக்க சாதனங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
 • பொருந்தக்கூடிய சந்தாவை நீங்கள் இரத்து செய்யாதவரை அல்லது அது காலாவதியாகாதவரை, அல்லது உங்களது அமேசான் பிரைம் அல்லது பிரைம் வீடியோ உறுப்பினர் தகுதியை நீங்கள் இரத்து செய்யாதவரை அல்லது அது காலாவதியாகாதவரை, மூன்றாம் தரப்பு சந்தா தானாகவே புதுப்பித்துக்கொள்ளப்படும். உங்களது அமேசான் பிரைம் அல்லது பிரைம் வீடியோ உறுப்பினர் தகுதியை நீங்கள் இரத்து செய்தால் அல்லது அது காலாவதியானால், இரத்து செய்த அல்லது முடித்துக்கொண்ட சமயத்தில் நீங்கள் சந்தா செலுத்தியிருந்த மூன்றாம் தரப்பு காணொளி சந்தாக்களுக்கு, பொருத்தமான மாதாந்திர மூன்றாம் தரப்பு சந்தா பருவம் வரை மட்டுமே உங்களுக்கு அணுகுதல் இருக்கும்.
 • உங்களது மூன்றாம் தரப்பு காணொளி சந்தா காலாவதியான பிறகு, அல்லது இரத்து செய்யப்பட்ட பிறகு, நீங்கள் அந்தத் தலைப்பை வாடகைக்குப் பெறாமல் அல்லது வாங்காமல் எந்தவொரு பிரைம் வீடியோ தலைப்புகளையும் பார்க்க முடியாது.

முதல் அத்தியாயம் இலவசம்

 • பார்ப்பதற்கான வழிகள்: கிடைக்கப்பெறும்போது, முதல் அத்தியாயம் இலவசமாக அளிக்கப்படும் காணொளிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் செய்யப்பட மட்டுமே கிடைக்கப்பெறும். அவை பதிவிறக்கம் செய்யப்படக் கிடைக்கப்பெறாது. ஒரே அமேசான் கணக்கைப் பயன்படுத்தி நீங்கள் ஒரே சமயத்தில் மூன்று காணொளிகள் வரை ஸ்ட்ரீம் செய்யலாம். நீங்கள் ஒரே காணொளியை ஒரே சமயத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட சாதனங்களில் ஸ்ட்ரீம் செய்ய முடியாது. முதல் அத்தியாயம் இலவசமாக அளிக்கப்படும் காணொளிகள் பதிவிறக்கம் செய்யப்படக் கிடைக்கப்பெறாத நிலையில், அதே காணொளிகள் அமேசான் பிரைம் வீடியோவிலிருந்து வாங்குவதற்கோ, வாடகைக்குப் பெறுவதற்கோ கிடைக்கப்பெறலாம், அல்லது அமேசான் பிரைம் அல்லது பிரைம் வீடியோ உறுப்பினர் தகுதி அல்லது ஊக்குவிப்பு வெள்ளோட்டம் மூலம் காண்பதற்குக் கிடைக்கப்பெறலாம். வாங்கப்பட்ட மற்றும் வாடகைக்குப் பெறப்பட்ட தலைப்புகளும் மற்றும் நிறைய முதல்-தரப்பு வீடியோ தலைப்புகளும், இணக்கமான சாதனங்களில் பதிவிறக்கம் செய்யப்படலாம்.
 • காணும் காலம்: உங்களுக்கு ஒரு அமேசான் கணக்கு இருந்தால், ஒரு காணொளியின் விவரப் பக்கத்தில் முதல் அத்தியாயம் இலவசம் என ஒதுக்கப்பட்டிருக்கும் காணொளியை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பார்க்கலாம்.

காண்பதற்கேற்ப கட்டணம் செலுத்தல் காணொளிகள்

 • பார்ப்பதற்கான வழிகள்: நீங்கள் ஒரு காணொளியை காண்பதற்கேற்ப கட்டணம் செலுத்தும் அடிப்படையில் வாங்கும்போது, நீங்கள் அந்தக் காணொளியை உங்களது இணைய உலாவி மற்றும் இணங்கத்தக்க இணைய இணைப்புள்ள தொலைக்காட்சிகள், புளூ-ரே பிளேயர்கள், செட்-டாப் பெட்டிகள், ஃபயர் டேப்லெட்கள் மற்றும் பிற இணங்கத்தக்க சாதனங்கள் மூலம் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யலாம். எங்களது சேவையுடன் இணங்கத்தக்க சாதனங்களின் பட்டியலுக்கு, பின்வரும் இணைப்புகளில் அமேசான் பிரைம் வீடியோவை அணுகுவதற்கு நீங்கள் பயன்படுத்தும் இணையதளத்தில் உள்ள இணங்கத்தக்க சாதனங்கள் பக்கத்தைப் பார்வையிடவும், PrimeVideo.com
  Amazon.comAmazon.co.ukAmazon.de அல்லது Amazon.co.jp (அமைவிடத்துக்கு ஏற்ப சாதனத்தின் இணங்குதல் மாறுபடும்). ஒரே அமேசான் கணக்கைப் பயன்படுத்தி நீங்கள் ஒரே சமயத்தில் மூன்று காணொளிகள் வரை ஸ்ட்ரீம் செய்யலாம். நீங்கள் அதே காணொளியை ஒரே சமயத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட சாதனங்களுக்கு ஸ்ட்ரீம் செய்ய முடியாது.
 • காணும் காலம்: காண்பதற்கேற்ப கட்டணம் செலுத்தல் காணொளிகளுக்கு, அமேசான் பிரைம் வீடியோவில் காண்பதற்கேற்ப கட்டணம் செலுத்தல் நிகழ்வு முதன்முறையாகக் காட்டப்பட்டு நிறைவுற்றதைத் தொடர்ந்து குறைந்த்து 24 மணி நேரம் வரை அந்தக் காணொளிக்கான அணுகுதல் உங்களுக்கு இருக்கும். அமேசான் பிரைம் வீடியோவில் முதன்முறையாகக் காட்டப்பட்டதைத் தொடர்ந்து, காண்பதற்கேற்ப கட்டணம் செலுத்தல் காணொளியை நீங்கள் அணுகுவதற்கான காலத்தின் அளவை அதன் விவரப்பக்கத்தில் அல்லது விவரப்பக்கத்தில் உள்ள இணைப்பில் காணலாம்.