Prime Video
  1. உங்கள் கணக்கு

உதவி

சிக்கல் தீர்த்தல்

Prime Video பிழை 7235 தொடர்பான சிக்கல்கள்

Prime Video-இல் நீங்கள் பிழைக் குறியீடு 7235-ஐப் பார்த்தால் என்ன செய்ய வேண்டும்.

  1. டெஸ்க்டாப்பிற்கான உங்கள் Chrome வலை உலாவி முழுமையாகப் புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும். அமைப்புகள் > Chrome-ஐப் பற்றி என்பதற்குச் செல்வதன் மூலம் உலாவிப் புதுப்பிப்புகள் உள்ளதா என்று பார்க்கவும்.
    கிடைக்கும் எந்தவொரு புதுப்பிப்புகளையும் பதிவிறக்கி, நிறுவும்படி கேட்கப்படுவீர்கள்.
  2. உங்கள் Chrome வலை உலாவியில், முகவரிப் பட்டியில் chrome://components என்பதைத் தட்டி, எண்டரை அழுத்தவும்.
    Widevine உள்ளடக்கக் குறியாக்கத் தொகுதியில் “புதுப்பிப்பு உள்ளதா என்று பார்” என்பதைக் கிளிக் செய்து, கிடைக்கும் புதுப்பிப்புகளை நிறுவவும்.

உங்கள் Chrome வலை உலாவியை இன்னும் புதுப்பிக்க முடியவில்லை எனில், பின்வரும் படிகளை முயற்சி செய்து பார்க்கவும்.

  • Google Chrome மெனுவைத் திறக்கவும் (மூன்று புள்ளிகள் ஐகான்.)
  • ‘அமைப்புகள்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • மெனுவில், “பாதுகாப்பு மற்றும் தனியுரிமை” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • “தள அமைப்புகள்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • கீழே ஸ்க்ரோல் செய்து, “கூடுதல் உள்ளடக்க அமைப்புகள்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • “பாதுகாக்கப்பட்ட உள்ளடக்க IDகள்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • “தளங்கள் பாதுகாக்கப்பட்ட உள்ளடக்கத்தை இயக்கலாம்” மற்றும் “தளங்கள் அடையாளங்காட்டிகளைப் பயன்படுத்தலாம்” என்பவை தேர்ந்தெடுக்கப்பட்டுளதை உறுதிப்படுத்தவும், பின்னர் உங்கள் வலை உலாவியை மறுதொடக்கம் செய்யவும்.

தொடர்புடைய உதவித் தலைப்புகள்