Prime Video விசைப்பலகைக் குறுக்குவழிகள்
உங்கள் விசைப்பலகையைப் பயன்படுத்தியே, கணினியில் Prime Video இயக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
வலை உலாவியில் அல்லது Windows மற்றும் macOS-க்கான Prime Video செயலிகள் வழியாக Prime Video-ஐப் பார்க்கும்போது பயன்படுத்தக்கூடிய விசைப்பலகைக் குறுக்குவழிகள்:
ஸ்பேஸ்பார் மூலம் இயக்கலாம்/இடைநிறுத்தலாம்.
F மூலம் முழுத்திரைக்குச் செல்லலாம் அல்லது வெளியேறலாம்.
(macOS-இல் குறுக்குவழியானது FN விசை மற்றும் F ஆகும்)
எஸ்கேப் மூலம் முழுத்திரை அல்லது இயக்கத்திலிருந்து வெளியேறலாம்.
இடது அம்புக்குறி மூலம் 10 வினாடிகள் பின்நகரலாம்.
வலது அம்புக்குறி மூலம் 10 வினாடிகள் முன்நகரலாம்.
மேல் அம்புக்குறி மூலம் ஒலியளவை அதிகரிக்கலாம்.
கீழ் அம்புக்குறி மூலம் ஒலியளவைக் குறைக்கலாம்.
M மூலம் ஒலிதடுக்கலாம்/ஒலிதடுப்பை நீக்கலாம்.
C மூலம் சப்டைட்டில்கள்/கேப்ஷன்களை இயக்கலாம், முடக்கலாம், கிடைக்கும் சப்டைட்டில்/கேப்ஷன் மொழிகளுக்கு இடையில் மாறலாம்.
A மூலம் ஆடியோ விளக்கங்கள் மற்றும் உரையாடல் பூஸ்ட் உள்ளிட்ட கிடைக்கும் ஆடியோ டிராக்குகளிடையே மாறலாம்.