உதவி

DRM பிழைகள் 3305 மற்றும் 3321 –ஐத் தீர்த்தல்

Prime Video வெப் பிளேயர் DRM பிழை 3305 அல்லது 3321 -ஐக் காண்பித்தால், எங்கள் HTML5 வீடியோ பிளேயரை ஆதரிக்கும் ஒரு வலை உலாவிக்கு மாற முயற்சி செய்யவும்.

உங்கள் கணினியின் வலை உலாவில் இருந்து Prime Video -ஐ ஸ்ட்ரீம் செய்வதற்கு நீங்கள் ஃப்ளாஷ் பிளேயரைப் பயன்படுத்தும் போது இப்பிழை ஏற்படலாம்.

உங்கள் கணினியில் Prime Video-வைப் பார்க்க, எங்கள் HTML5 வீடியோ பிளேயரைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். HTML5 வீடியோ பிளேயர், சிறந்த ப்ளேபேக் செயல்பாட்டையும் குறைந்த பஃபரிங்கையும் வழங்குகிறது. மேலும் இது ஆட்டோ ப்ளே மற்றும் 1080p ஹை டெஃபினிஷனையும் ஆதரிக்கிறது.

HTML5 பிளேயர் பின்வரும் உலாவிகளில் கிடைக்கிறது:

 • Chrome (சமீபத்திய பதிப்பு)
 • Firefox (சமீபத்திய பதிப்பு)
 • Internet Explorer (பதிப்பு 11 அல்லது புதியது)
 • Microsoft Edge
 • Safari (பதிப்பு 5 அல்லது புதியது)
 • Opera (பதிப்பு 31 அல்லது புதியது)

HTML5 பிளேயர் தன்னியக்கமாக ஏறுகிறது--PrimeVideo.com -ஐ ஆதரிக்கும் இந்த உலாவிகளில் ஒன்றில் இருந்து திறந்து, உங்கள் வீடியோவை மீண்டும் கண்டுகளிக்க முயற்சிக்கவும்.

நீங்கள் இந்த உலாவிகளில் ஒன்றில் ப்ளேபேக்குடன் பிரச்சினையைக் கொண்டிருந்தால், நீங்கள் முயற்சி செய்வதற்கானக் கூடுதல் தீர்வுக்காகக் கீழேயுள்ள பிரிவுகளைப் பாருங்கள்.

Tip: நீங்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளை முயற்சி செய்த பிறகும் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், எங்களைத் தொடர்புகொள்க.

Chrome -இல் HTML5

நீங்கள் இன்னமும் Chrome -ஐப் பயன்படுத்தி ஒரு பிழையைக் காண்கிறீர்கள் என்றால், உங்கள் உலாவி HTML5 பிளேயரை அணுகுகிறது என்பதை உறுதிசெய்வதற்கு Chrome -இன் சமீபத்திய பதிப்பைப் புதுப்பிக்க முயற்சி செய்யவும்.

 1. Chrome மெனுவைத் திறக்கவும் மெனு பொத்தான் 
			 மற்றும் பற்றி என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின்னர் உலாவி புதுப்ப்பித்தல்களுக்காகச் சோதிக்கும்.
 2. ஒரு மீண்டும் தொடங்கு பொத்தான் கிடைத்தால், Chrome -ஐ புதுப்பிக்க அதைக் கிளிக் செய்யவும்.
 3. எல்லா தாவல்களையும் மூடிவிட்டு, அதன் பின்னர் Chrome -ஐ மூடிவிட்டு மீண்டும் திறக்கவும்.
 4. உங்கள் வீடியோவை மீண்டும் முயற்சிக்கவும்.

மேலும், Chrome -க்காக நீங்கள் உள்ளடக்க மறையீடு நீக்கத் தொகுதியைச் செயற்படுத்த அல்லது நிறுவ வேண்டியிருக்கலாம்.

Tip: உங்கள் உலாவி இந்தக் கூறை வழங்குவது Prime Video -க்குத் தேவைப்படுகிறது. நீங்கள் சமீபத்தில் முதல் முறையாக Chrome -ஐ நிறுவியிருந்தால், இது இல்லாமல் இருக்கலாம். உள்ளடக்க மறைவெளியீடு நீக்கத் தொகுதி முழுமையாகப் பதிவிறக்கமாவதற்கு 10 நிமிடங்கள் ஆகலாம்.
செயற்படுத்துவதற்கு:
 1. உங்கள் உலாவியின் முகவரிப் பட்டையில் chrome://plugins என்று உள்ளிடுங்கள்.
 2. Widevine உள்ளடக்க மறையீடு நீக்கத் தொகுதி -ஐத் தேடிக் கண்டறியுங்கள்.
 3. அக்கூறு முடக்கப்பட்டிருந்தால், செயற்படுத்து என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

Widevide உள்ளடக்க மறையீடு நீக்கத் தொகுதி பட்டியலிடப்பட்டிருப்பதை நீங்கள் காணவில்லை என்றால், நீங்கள் அதை எவ்வாறு நிறுவலாம் என்பது குறித்த விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
 1. உங்கள் உலாவியின் முகவரிப் பட்டையில் chrome://components என்று உள்ளிடுங்கள்.
 2. WidevineCdm -ஐ விரிவாக்கவும்.
 3. புதுப்பித்தல்களைச் சரிபாருங்கள் என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பின்னர் உங்கள் உலாவி சமீபத்திய பதிப்பை நிறுவும்.

உள்ளடக்க மறையீடு நீக்கத் தொகுதி நிறுவப்பட்டு, செயற்படுத்தப்பட்டுள்ளதை நீங்கள் சரிபார்த்த பின்னர், PrimeVideo.com -க்குத் திரும்பி, உங்கள் வீடியோவை மீண்டும் ப்ளே செய்ய முயற்சிக்கவும்.

Internet Explorer அல்லது Microsoft Edge -இல் உள்ள HTML5

நீங்கள் இன்னமும் Internet Explorer 11 அல்லது Microsoft EdgeChrome -ஐ பயன்படுத்தும்போது ஒரு பிழையைக் காண்கிறீர்கள் என்றால், நீங்கள் உலாவி HTML5 பிளேயரை அணுகுகிறீர்கள் மற்றும் Flash -ஐ அணுகவில்லை என்பதை உறுதிசெய்வதற்கு உங்கள் சேமிக்கப்பட்ட உலாவி கோப்புகளை நீக்க முயற்சி செய்யவும்.

 1. உங்கள் உலாவி சாளரத்தில் உள்ள அமைவுகள் (கியர் சின்னம்) -ஐக் கிளிக் செய்யவும்.
 2. பாதுகாப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 3. உலாவல் வரலாறை நீக்கு என்பதைக் கிளிக் செய்து, அதன் பிறகு விருப்பத்தேர்வுகள் பட்டியலில் இருந்து சேமிக்கப்பட்ட படங்கள் மற்றும் தற்காலிக இன்டர்நெட் கோப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
 4. உறுதிசெய்வதற்கு, நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.