உதவி

டிஜிட்டல் உரிமைகள் பிழைகளைத் தீர்த்தல்

Chrome -க்கான Prime Video ப்ளேயர், ப்ளேபேக்கின் போது "டிஜிட்டல் உரிமைகள் பிழை" என்று காண்பித்தால், நீங்கள் முயற்சி செய்ய முடியும் சில பொதுவான தீர்வுகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

உங்கள் Chrome உலாவியில் "உள்ளடக்க மறையீடு நீக்கத் தொகுதி" செயற்படுத்தியிருக்காத போது இப்பிழை ஏற்படுகிறது.

அணுக்கக் கட்டுப்பாடு (DRM) தொழில்நுட்பங்களை ஆதரிப்பதற்கு, இந்தக் கூறை உங்கள் உலாவி வழங்குவது Prime Video ப்ளேயருக்குத் தேவைப்படுகிறது.

Tip: DRM தொழில்நுட்பங்கள் உள்ளடக்க உரிமையாளர்களைத் தங்களின் பாதுகாக்கப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கத்தை நகலெடுப்பதற்கு அல்லது காண்பதற்கான கொள்கைகளை அமைக்க இயலச் செய்கிறது.

Chrome உலாவி

நீங்கள் சமீபத்தில் முதல் முறையாக Chrome -ஐ நிறுவியிருந்தால், "உள்ளடக்க மறைவெளியீடு நீக்கத் தொகுதி" இல்லாமல் இருக்கலாம். உள்ளடக்க மறைவெளியீடு நீக்கத் தொகுதி முழுமையாகப் பதிவிறக்கமாவதற்கு 10 நிமிடங்கள் ஆகலாம்.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, உங்கள் உலாவியில் உள்ளடக்க மறையீடு நீக்கத் தொகுதியைச் செயற்படுத்தவும் அல்லது நிறுவவும்.

செயற்படுத்துவதற்கு:

  1. உங்கள் உலாவியின் முகவரிப் பட்டையில் chrome://components என்று உள்ளிடுங்கள்.
  2. Widevine உள்ளடக்க மறையீடு நீக்கத் தொகுதி -ஐத் தேடிக் கண்டறியுங்கள்.
  3. அக்கூறு முடக்கப்பட்டிருந்தால், செயற்படுத்து என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
  4. Chrome உலாவியை மூடி மீண்டும் திறப்பதன் மூலம் அதை மீண்டும் தொடங்குங்கள்.

Widevide உள்ளடக்க மறையீடு நீக்கத் தொகுதி பட்டியலிடப்பட்டிருப்பதை நீங்கள் காணவில்லை என்றால், நீங்கள் அதை எவ்வாறு நிறுவலாம் என்பது குறித்த விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
  1. உங்கள் உலாவியின் முகவரிப் பட்டையில் chrome://components என்று உள்ளிடுங்கள்.
  2. WidevineCdm -ஐ விரிவாக்கவும்.
  3. புதுப்பித்தல்களைச் சரிபாருங்கள் என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பின்னர் உங்கள் உலாவி சமீபத்திய பதிப்பை நிறுவும்.