உதவி

Chrome வெப் ப்ளேயர் உடனான பிரச்சினைகளைத் தீர்த்தல்

Chrome -க்கான Prime Video வெப் ப்ளேயர், ப்ளேபேக்கின் போது ஒரு பிழைச் செய்தியைக் காண்பித்தால், நீங்கள் முயற்சி செய்ய முடியும் சில பொதுவான தீர்வுகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

Chrome -ஐ புதுப்பிக்கவும்

Chrome -இன் சமீபத்திய பதிப்பைப் புதுப்பிப்பது, பெரும்பாலும் இடைவிட்ட ப்ளேபேக் பிரச்சினைகளைத் தீர்க்கலாம்.

  1. Chrome மெனுவைத் திறக்கவும் மெனு பொத்தான் 
			 மற்றும் பற்றி என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின்னர் உலாவி புதுப்ப்பித்தல்களுக்காகச் சோதிக்கும்.
  2. ஒரு மீண்டும் தொடங்கு பொத்தான் கிடைத்தால், Chrome -ஐ புதுப்பிக்க அதைக் கிளிக் செய்யவும்.
  3. எல்லா தாவல்களையும் மூடிவிட்டு, அதன் பின்னர் Chrome -ஐ மூடிவிட்டு மீண்டும் திறக்கவும்.
  4. உங்கள் வீடியோவை மீண்டும் முயற்சிக்கவும்.

பிற தாவல்களை மூடவும்

நீங்கள் Chrome -இல் திறந்துள்ள பிற தாவல்களை மூட முயற்சி செய்யவும். மேலும், நீங்கள் வீடியோக்களைக் காணப் பயன்படுத்துகின்ற தாவல், "இன்காஃக்னிட்டோ பயன்முறை" -இல் அமைக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்து கொள்ளவும். அவ்வாறு அமைக்கப்பட்டிருந்தால், அந்தத் தாவலை மூடிவிட்டு, மீண்டும் திறக்கவும்.

உங்களுக்கு இன்னமும் உதவி தேவைப்பட்டால், எங்களைத் தொடர்புகொள்க.