உதவி

அமைத்தல்

Android-இல் Prime Video PIN-ஐ அமைத்தல்

ஒரு தனிப்பட்ட சாதனத்தில் உள்ளடக்கத்தை வாங்குவதை அல்லது பார்ப்பதைக் கட்டுப்படுத்தும் திறன் Prime Video PIN-க்கு உள்ளது.

பின்வரும் சாதனங்களில் அவற்றின் சொந்த பெற்றோர் கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளன:

  • Fire TV சாதனங்கள்
  • FireOS 5.0 அல்லது பழைய பதிப்புகளில் இயங்கும் Fire டேப்லெட்கள்

Prime Video PIN-ஐ அமைக்க:

  • Android-க்கான Prime Video செயலியில், கீழ் மெனுவில் உள்ள என்னுடையவை என்பதைத் தேர்ந்தெடுத்து, அமைப்புகள் ஐகானைத் தேர்ந்தெடுக்கவும். அங்கிருந்து, பெற்றோர் கட்டுப்பாடுகள் என்பதைத் தேர்ந்தெடுத்து, அதன் பின்னர் Prime Video PIN-ஐ மாற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • PIN-ஐ உள்ளிட்டு, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
    குறிப்பு: Prime Video PIN-கள் அவை அமைக்கப்பட்ட சாதனத்தில் மட்டுமே செயல்படும். Android-க்கான Prime Video செயலியில் உங்கள் Prime Video PIN-ஐ அமைப்பது அல்லது மாற்றுவது, வாங்குதல் அமைப்புகளில் PIN-ஐத் தானாகவே இயக்கச் செய்யாது. வாங்குவதற்கு PIN-ஐ இயக்க அல்லது முடக்க, கணக்கு & அமைப்புகள் என்பதற்குச் சென்று, பெற்றோர் கட்டுப்பாடுகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Prime Video கணக்கில் பதிவுசெய்யப்பட்டுள்ள எல்லாச் சாதனங்களிலும் வாங்குதல் கட்டுப்பாடுகள் பொருந்தும், அதே வேளையில் பெற்றோர் கட்டுப்பாடுகளில் தேர்வுசெய்துள்ள சாதனங்களுக்கு மட்டுமே பார்த்தல் கட்டுப்பாடுகள் பொருந்தும்.

தொடர்புடைய உதவித் தலைப்புகள்