Prime Video
  1. உங்கள் கணக்கு

உதவி

அமைத்தல்

இந்தியாவில் உள்ளடக்கம் பற்றிய குறைகளைப் புகாரளித்தல்

இந்தியாவிலுள்ள Amazon Prime, Prime Video Channels மற்றும் Prime Video மொபைல் பதிப்பு உறுப்பினர்கள், உள்ளடக்கப் புகார்களைத் தாக்கல் செய்யலாம்/தெரிவிக்கலாம்.

இந்தியாவிலுள்ள Amazon Prime, Prime Video Channels மற்றும் Prime Video மொபைல் பதிப்பு உறுப்பினர்கள், சேவையில் தற்போது கிடைக்கக்கூடிய உள்ளடக்கத்திற்கான வயது தரநிலைகள், உள்ளடக்க விளக்கங்கள், தலைப்பு கதைச்சுருக்கம் அல்லது அணுகல் கட்டுப்பாடுகள் போன்றவை தொடர்பான சிக்கல்களுக்குப் புகார்களைத் (ஏதேனும் இருந்தால்) தாக்கல் செய்யலாம்/தெரிவிக்கலாம்.

  • நீங்கள் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்பில் Prime Video-ஐ அணுகினால், உங்கள் புகாரைச் சமர்ப்பிக்க இங்கே கிளிக் செய்யவும். நீங்கள் ஏற்கனவே செய்திருக்காவிட்டால், உங்கள் Prime Video கணக்கில் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
  • மொபைல் சாதனத்தில் Prime Video-ஐ அணுகுகிறீர்கள் என்றால், உங்கள் புகார் தொடர்பான குறை தீர்க்கும் அதிகாரியின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியோ (விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன) அல்லது அதற்கு மாற்றாக, உங்கள் மொபைல் உலாவியில் பின்வரும் இணைப்பிற்குச் சென்றோ உங்கள் புகாரைச் சமர்ப்பிக்கலாம்: https://www.primevideo.com/contact-us.
  • Prime Video Channels உள்ளடக்கத்தைப் பற்றி நீங்கள் புகாரளிக்க விரும்பினால், குறை தீர்க்கும் அதிகாரியின் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரிக்கு (விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன) உங்கள் புகாரைச் சமர்ப்பிக்கவும்.

உள்ளடக்கம் பற்றிய குறைகளைப் புகாரளித்தல் ஆதரவானது தற்போது ஆங்கில மொழியில் மட்டுமே கிடைக்கிறது. உங்கள் குறை பற்றிய விவரங்களை ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கவும். ஸ்ட்ரீமிங்/செயலிச் சிக்கல்கள், தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்தல், தலைப்பு இல்லாதிருத்தல், அம்சம் தொடர்பான கோரிக்கைகள், ரீஃபண்டு, பில்லிங்/சந்தாச் சிக்கல்கள் போன்ற உள்ளடக்கம் பற்றிய குறைகளைத் தவிர்த்து உங்கள் Prime Video அனுபவம் தொடர்பாக வேறு ஏதேனும் கருத்துகளைத் தெரிவிக்க, Prime Video உதவிப் பக்கத்தின் மூலமாக நீங்கள் எங்களைத் தொடர்புகொள்ளலாம்: www.primevideo.com/help.

குறை தீர்க்கும் அதிகாரி குறித்த விவரங்கள்

பெயர்: திருமதி. விஜயா மூர்த்தி

மின்னஞ்சல் (Prime Video): grievanceofficer-primevideo@amazon.com

மின்னஞ்சல் (Prime Video Channels): grievance-primevideochannels@amazon.com

உங்கள் புகாரில் இருக்க வேண்டியவை:

  • உங்கள் பெயர்
  • உங்கள் Amazon கணக்கில் உள்ள மின்னஞ்சல் முகவரி
  • திரைப்படம் அல்லது டிவி தொடர்களின் பெயர் (சீசன் & எப்பிசோடு எண்)
  • Prime Video Channel-இன் பெயர் (Prime Video Channels-க்குத் தொடர்புடைய குறையாக இருந்தால் மட்டும்)
  • பார்க்கும் நாடு:
  • பார்க்கும் தேதி:
  • குறையின் வகைப்பிரிவு (வயது தரநிலைகள், உள்ளடக்க விளக்கங்கள், தலைப்பு கதைச்சுருக்கம், அணுகல் கட்டுப்பாடுகள், பிற விவரங்கள் போன்றவை)
  • குறை பற்றிய விவரங்கள் (நேர முத்திரை உட்பட, பொருந்தினால்)

ஒப்புகை: 24 மணி நேரத்திற்குள் உங்கள் புகாரைப் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தி, புகாரை டிராக் செய்வதற்கான குறிப்பு எண்ணை உங்களுக்கு வழங்குவோம்.

பதில்: உங்கள் புகாரைச் செயல்படுத்தி, பொருத்தமான சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காலவரையறைக்குள் தகுந்த பதிலளிப்போம்.

குறிப்பு:
  • மேலே உள்ள குறைதீர்க்கும் செயல்முறையானது, இந்தியாவில் பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்கம்படியும், மேம்படுத்தக்கூடிய வகையில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
  • Prime Video Channels வெறுமனே ஒரு சேவை வழங்குநர் மற்றும் Prime Video Channels சேவையில் கிடைக்கும் உள்ளடக்கத்தின் மீது எந்த உள்ளடக்கத்தையும் சொந்தமாக வைத்திருக்கவில்லை அல்லது எந்தப் படைப்பையும் கையாளவில்லை அல்லது தலையங்கக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. Prime Video Channels சேவையில் கிடைக்கும் உள்ளடக்கமானது, அந்தந்தச் சேனல் பார்ட்னர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவை, டெவலப் செய்யப்பட்டவை, தயாரிக்கப்பட்டவை, சொந்தமாக்கப்பட்டவை மற்றும்/அல்லது கிடைக்குமாறு செய்யப்பட்டவை. Prime Video Channels-இல், சம்பந்தப்பட்ட சேனல் பார்ட்னர் மூலம் ஏதேனும் தேர்ந்தெடுக்கப்பட்ட, டெவலப் செய்யப்பட்ட, தயாரிக்கப்பட்ட, சொந்தமாக்கப்பட்ட மற்றும்/அல்லது கிடைக்குமாறு செய்யப்பட்ட உள்ளடக்கம் தொடர்பாக அவர்களை நீங்கள் நேரடியாகவும் அணுகலாம் மற்றும் தொடர்பு கொள்ளலாம்.