உதவி

Prime Video சுயவிவரங்கள்

Fire TV-இல் Prime Video சுயவிவரங்களை உருவாக்குதல் மற்றும் நிர்வகித்தல்

உங்கள் Fire TV சாதனங்களில் உள்ள Prime Video செயலி மூலம் Prime Video சுயவிவரங்களை உருவாக்கலாம் மற்றும் நிர்வகிக்கலாம்.

Amazon கணக்கில் உள்ள Prime Video-க்குள் ஆறு பயனர் சுயவிவரங்கள் வரை (இயல்புநிலைச் சுயவிவரம் மற்றும் பெரியவர்கள் அல்லது குழந்தைகளின் சுயவிவரங்களாக ஐந்து கூடுதல் சுயவிவரங்கள் வரை) நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.

Fire TV-இல் உள்ள Prime Video செயலி மூலம் Prime Video சுயவிவரத்தை உருவாக்க மற்றும் நிர்வகிக்க (திருத்த/நீக்க), Prime Video செயலி முதல் முதலில் தொடங்கும்போது சுயவிவரங்களைத் தேர்ந்தெடுத்துத் திருத்தலாம். இல்லையெனில்:

  1. உங்கள் திரையின் மேற்பகுதியில் உள்ள மெனுவில் சுயவிவர ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. ஒரு சுயவிவரத்தில் இருந்து மற்றொரு சுயவிவரத்திற்கு மாற, வேறொரு சுயவிவரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. அல்லது, இந்த மெனுவில் ஏற்கெனவே இருக்கும் சுயவிவரத்தைத் திருத்த, உங்கள் Fire TV-இன் ரிமோட் கண்ட்ரோலைப் பயன்படுத்தி நீங்கள் திருத்த விரும்பும் சுயவிவரத்தைத் தேர்வுசெய்து, சுயவிவரத்தைத் திருத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும். புதிது என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் புதிய சுயவிவரத்தை உருவாக்கும் திரைக்குச் செல்வீர்கள்.

கூடுதல் உதவிக்கு, இதற்குச் செல்லவும்: