Prime Video
  1. உங்கள் கணக்கு

ஸ்டார்ட்அப்

ஸ்டார்ட் அப் ஒரு திறமையான, அறிவுபூர்வமான, தொழில்நுட்ப தொழில் கருப்புப்பணத்தை வைத்து வளர நினைக்கும் பொழுது நடக்கும் சிக்கல்களை பற்றி அலசுகிறது.
201810 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - மறு ஆக்கம்
    31 அக்டோபர், 2018
    45நிமி
    18+
    என்எஸ்எ முகவர் ரெபேக்கா ஸ்ட்ரோடிடம் இருந்து வரும் இறுதி எச்சரிக்கை அரக்னெடை ஒரு குழப்பம் மிகுந்த சூழலில் ஆழ்த்துகிறது.இது வெஸ்ஸை தன்னுடைய நிதிக்கொடையை மறுபரிசீலிக்க வைக்கிறது. மற்றும் இது ரொனால்டை அவன் நண்பர்களுடனான நட்பை மறுஆய்விற்கு உட்பட வைக்கிறது. இந்த சூழலில் நிக், தன்னுடைய கம்பெனியை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல முடிவு செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - ஸ்ட்ரோட் சர்வாதிகாரம்
    31 அக்டோபர், 2018
    42நிமி
    16+
    முகவர் ஸ்ட்ரோட் தன்னுடைய சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்து அரக்னெட் முதலாளிகளை மிரட்டுகிறார். ரொனால்ட் எல்ஹெச் 7 முடிவுகளை வீழ்த்துவதற்கு மிகவும் முயல்கிறார். அது தான் அரக்கனெட்டை காக்கும் ஒரே வழியாக தென்படுகிறது. இஸ்ஸி தன்னுடைய புதிய கியூப வாழ்வை மிகவும் ரசிக்கிறார் அந்த சமயத்தில் அவருடைய பழைய நிகழ்வுகளின் நினைவுகள் அவரை அலைக்கழிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - அதிகாரப் போட்டி
    31 அக்டோபர், 2018
    42நிமி
    16+
    வெஸ் மீதம் உள்ள பணத்தை ஸ்ட்ரோடிடமிருந்து மறைக்க முயலும் சமயத்தில், ரொனால்ட் மற்றும் நிக் எப்படி சக சிஇஓக்களாக தங்களை நிலை நிறுத்துவது என்று முயன்றுக்கொண்டு இருக்கிறார்கள். இந்த சமயத்தில் இஸ்ஸி தொழில்நுட்ப நிழல்உலகத்தினுள் இழுக்கப்படுகிறாள். அந்தத் தேர்வு அவளை அரக்கனெட்டின் மிகப்பெரிய எதிரியிடம் நேருக்கு நேர் இருத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - தேய்மானம்
    31 அக்டோபர், 2018
    42நிமி
    16+
    முகவர் ஸ்ட்ரோட் இஸ்ஸியின் விசுவாசத்திற்கு பதிலாக அவளை மீண்டும் யூஎஸ்ஸிற்கு மீட்டுக்கொண்டு வருகிறார். வெஸ் பார்சிலோனாவிற்கு சென்று அவர் பழையகாலத்தில் சந்தித்த ஒருவரை மீண்டும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நிக் மிக வேகமாக அரக்னெட்டின் வளர்ச்சிக்கு தேவையான விஷயங்களை செய்து கொண்டு இருக்கிறார். ரொனால்ட் அங்கு நடக்கும் உள்விவகாரங்களை கடுமையான விதத்தில் கையாண்டு தீர்க்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - பன்முகப்படுத்துதல்
    31 அக்டோபர், 2018
    44நிமி
    16+
    வெஸ் முதலீட்டளர்களை கவர ஒரு பெரிய நிகழ்ச்சி நடத்துகிறார். எல்ஹெச்7 செய்கைகள் ரொனால்டின் குடும்பத்தை பாதிக்கிறது. நிக் கம்பெனியை காக்க ஒரு ரகசிய திட்டத்தில் ஈடுபடுகிறார். மாராவின் பழைய நினைவுகள் அவளை உணர்ச்சிக்குள்ளக்குகிறது. முகவர் ஸ்ட்ரோட் இஸ்ஸியை அரக்னெட்டில் சேரும்படி மறைமுகமாக உந்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - அங்கீகாரம்
    31 அக்டோபர், 2018
    42நிமி
    18+
    அரக்னெட் கொஞ்சம் மேலெழும் சமயத்தில், நிக் தன்னுடைய ரகசியங்கள் வெளிப்படும் என்று பதறுகிறார். வெஸ் தன்னுடைய பழைய நண்பரை முதலீட்டாளராக கொண்டு வரும் சமயத்தில் மாரா எதிர்த்து ரகசியங்களை வெளிய சொல்கிறார். இஸ்ஸி மீண்டும் அரக்கனெட்டில் இணைகிறார். ரொனால்ட் எல்ஹெச்7 மற்றும் ரிவால் க்ரூவுடன் ஒரு சண்டையை எதிர்பார்க்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - கெட்ட செய்தி
    31 அக்டோபர், 2018
    42நிமி
    16+
    அரக்னெட்டிற்கு ஒரு பயங்கரமான செய்தி வருகிறது. அது அந்த நிறுவனத்தில் ஒரு தார்மீக விவாதத்தை உருவாக்குகிறது. அதை ரொனால்ட் நிக்கை அமுக்க உபயோகப்படுத்துகிறார். இஸ்ஸி ஸ்ட்ரோடின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொண்டார். வெஸ் மாரா உடனான உறவை சரி செய்ய முயற்சிக்குறார் ஆனால் அதே சமயத்தில் அவளை மோசமாகவும் செயல்படத் தூண்டுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - லாபமும் நஷ்டமும்
    31 அக்டோபர், 2018
    45நிமி
    18+
    ரொனால்டின் எல்ஹெச்7 உடனான பிணைப்பு நிக்க்கின் உடனான சண்டையை அதிகப்படுகிறது. அரக்கனெட்டில் 100 மில்லியன் உபயோகிப்பவர்கள் வரும்பொழுது நிக் அந்தப் பாதையை தன்னுடைய சொந்த காரணங்களுக்காக கெடுக்க முயலுகிறார். இஸ்ஸி ஸ்ட்ரோடின் கட்டளைகளை கண்டு கொதிப்படைகிறார். மாரா ஒரு கொடிய மக்கள் தொடர்பு கொள்கையை அறிமுகம் செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - முக்கிய முடிவு
    31 அக்டோபர், 2018
    43நிமி
    16+
    ரொனால்ட் தன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான முடிவுடன் போராடுகிறார். இஸ்ஸி அவள் ஏற்படுத்திய நச்சுநிரலே அரக்னெட்டை தாக்குகிறது. மாரா, ரொனால்ட் நிக்கிற்கு செய்ததை கண்டுபிடிக்கிறார். அவர்களுடைய உறவு அதல பாதாளத்திற்கு செல்கிறது. வெஸ்சூடைய கோவம் நிக்கை பல மோசமான விளைவுகளை சந்திக்க வைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - தொழில் துவக்கம்
    31 அக்டோபர், 2018
    43நிமி
    16+
    ரொனால்ட் வரவிருக்கும் பிரச்சனையை நினைத்து பயப்படுகிறார். மாராவின் திட்டம் செயல்படத் தொடங்குகிறது. வெஸ் மற்றும் நிக்கிற்கு தெரியாமல் பல காரியங்கள் மாரா செய்கிறார். ஸ்ட்ரோட் மீண்டும் வருகிறார் விட்ட பல விஷயங்களை செய்து முடிக்கிறார், அது ஒரு முக்கியமான இறுதி கட்டத்தை நோக்கி செல்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
நடித்தவர்கள்
ஆடம் ப்ரோடிமார்ட்டின் ஃபிரீமேன்எடி கெத்தாகி
ஸ்டுடியோ
Crackle.com
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.