Prime Video
  1. உங்கள் கணக்கு

தி டால்டன்ஸ்

ஜோ, ஆவெரெல், வில்லியம் மற்றும் ஜேக் ஆகிய டால்டன்கள் இன்னும் தப்பியோட முயற்சிக்கின்றனர். ஜோ அந்தக் குழுவின் மூளையாக செயல்பட்டு புதிய திட்டங்களை வகுக்கிறான், எனினும் அவர்களது திட்டங்கள் தோல்வியடைந்து மீண்டும் அடைக்கப்படுகின்றனர். மந்திரப் பாம்புகளில் இருந்து சிலந்தி வலைகள் வரை பல முயற்சிகளை மேற்கொண்டாலும் ஒரு கல்லைக்கூட அசைக்க முடியவில்லை. அவர்களால் தப்பிச் செல்ல முடியுமா?
IMDb 8.3201339 எப்பிசோடுகள்
7+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - சைஸ் வைஸ், தி ஆர்ட் ஆஃப் பீயிங் எ டால்டன், தி செண்ட் ஆஃப் ஃப்ரீடம்
    31 டிசம்பர், 2012
    21நிமி
    7+
    டால்டன் சட்டவிரோதிகள், ஒரு தப்பிக்கும் திட்டத்தை மீண்டும் தீட்ட முயற்சிக்கிறார்கள். ஜோ உபாயங்களுக்காக யோசிக்கும்போது, அவெரல் அற்புத பருந்தால் கொடுக்கப்பட்ட, தன்னை விரும்பும் உயரத்துக்கு மாற்றிக் கொள்ளும் அசாதாரண ஆற்றலையும், ஜோ, வில் மற்றும் ஜேக் போல மாறும் சக்தியையும் தரும் மர்மமான மருந்தைக் குடிக்கிறான். அற்புத பருந்தின் முழுமையான மருந்து நால்வரும் விரும்பும் விடுதலையை வழங்குமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - வாட் எ பால்!, ஜோஸ் அம்னீசியா, தி டால்டன்ஸ் அண்ட் தி வெப்.
    31 டிசம்பர், 2012
    21நிமி
    7+
    விற்பனையாளர் திடமான பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக பறைசாற்றும் ஒரு புதிய பந்து, சங்கிலிகளின் தொகுப்பு, டால்டன்களுக்கு கிடைக்கிறது. தப்ப வழி கண்டுபிடிப்பார்களா? திரு.டோர்பிடோவினால் நினைவிழந்து டால்டன்கள் சிறையிலிருந்து இறுதியில் தப்பிக்கிறார்கள், ஜோவின் நினைவு தப்பிவிட்டது. டால்டன்கள் ஒரு சுற்றுப்பயணத்தில், ஒரு சிலந்தியை திருடி அதன் வலையைக் கொண்டு சுவர்களைத் தாண்டித் தப்பிக்கத் திட்டமிடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - தி மாஸ்க்ட் அவெஞ்ஜர், ஆன் அன்னேச்சுரல் கேட்டஸ்ட்ராபி, தி ஜெயில்பேர்ட்ஸ் ஜெனீ
    31 டிசம்பர், 2012
    21நிமி
    7+
    ஸோரோ என்ற முகமூடி மனிதன் டால்டன்கள் தப்பிக்க உதவ, அவர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது. ஸோரோவின் தப்பிக்கும் முயற்சிகள் தோற்ற பின், சிறையில் பயங்கர சம்பவம் நடக்கப்போவதாக திரு.பீபாடியை நம்பவைக்க திட்டமிடுகிறார்கள். ஒரு இந்திய தீர்க்கதரிசனத்தை பயன்படுத்தி, சிறையை காலி செய்ய சம்மதிக்க வைக்கிறார்கள். அந்தக் கும்பல் மாய விளக்கைக் கண்டுபிடிக்கிறது. ஜீனியைக் கொண்டு சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - தி டால்டன்ஸ் டேக் ராயல் லீவ், தி வாக்கர் த்ரோ வால்ஸ், எ வெரி ஸ்பெசல் இந்தியன்
    31 டிசம்பர், 2012
    21நிமி
    7+
    ராணி விக்டோரியா, ஒரு ராஜ வருகை செலுத்த செல்லும் வழியில், ஒரு பாலைவனத்திற்கு நடுவே தொலைந்து போக, அருகிலுள்ள சிறையில் அடைக்கலம் தேடுகிறார், டால்டன்கள் அவளை மகிழ்விக்கிறார்கள். சுவர்களுக்குள் புகுந்து நடக்கத் தெரிந்த திரு.டாலர் சிறை வருகை தர, டால்டன்கள் அவரது இரகசியத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். அண்டை இந்தியர்கள் தங்கள் மரபுகளை கைதிகளுக்குச் சொல்கிறார்கள். டால்டன்களால் எப்பொழுதாவது தப்பிக்குமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - தி டால்டன்ஸ் ஃப்யூரி, ஃப்யூரி, எ ஹேரி சிச்சுவேசன், இவில் ஜென்னி
    31 டிசம்பர், 2012
    21நிமி
    7+
    டால்டன்கள் விண்வெளி தாக்குதல்களின் மாஸ்டர் குறித்து பயமும் பிரமிப்பும் கொள்கின்றனர். கலையைக் கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளனர், ஆனால் அது எளிதல்ல. மாஸ்டர் அவர்களை மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும்படி சொல்கிறார். வேறு எதைப் பற்றியும் சிந்திக்காத அவெரெல்லைத் தவிர வேறு யாரால் அதைச் செய்ய முடியும்? அவன் நீல பெல்ட்டை பெறுகிறான். ஜோ சீற்றம் கொண்டு தலைவனாக ஆசைப் படுகிறான். அவனால் அது முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - தி வாய்ஸ் ஆஃப் ஃப்ரீடம்; காக்டஸ் ஜோ; மல்டிபல் ஜோஸ்
    31 டிசம்பர், 2012
    21நிமி
    7+
    டால்டன்கள் குறிப்பாக ஜோ, சிறைச்சாலையிலிருந்து தப்பிப்பதற்கு ஆவலாகக் காத்திருக்கிறான், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புதுமையான திட்டங்கள் தீட்டுகிறான். ஓபரா பாடகரின் விஜயத்தின் போது, ஜோ கற்றாழை தோட்டத்திலிருந்து தப்பிக்க முடிந்த வரை முயல்கிறான், எல்லாம் தோல்வியை தழுவிய போது, ஜோ திரு.பீபாடி பிரம்மை பிடிப்பது போல் செய்து, தப்பிக்க தனித்துவ யோசனை செய்கிறான், ஆனால் தோல்வியில் முடிகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - எ பேக் அப் பிளான், பியூட்டி அண்ட் தி பீஸ்ட்ஸ், ஹைலி கிஃப்டட் டால்டன்ஸ்
    31 டிசம்பர், 2012
    21நிமி
    7+
    அவெரெல் தப்பிக்கும் பாதையை கனவில் கண்டு ஜோவின் முதுகில் வரைகிறான், குளித்தால் அழிந்துவிடுமோ என அஞ்சுகிறான். அவர்கள் அவன் முதுகைப் படம் பிடிக்க, அது மற்ற கைதிகளுக்குக் கிடைக்கிறது. டால்டன்கள் ராட்சத பிராணி ஒன்றை கண்டுபிடிக்க சுமைதூக்கிகளாகும் வாய்ப்பால், சந்தர்ப்பம் கிடைத்து தப்பிக்க இருக்கிறார்கள். அவர்கள் கைதிகளுக்கான வகுப்புகளில் பங்கெடுப்பதன் மூலம் சிறையிலிருந்து தப்பிக்க எண்ணுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - எ பீஸ் ஆஃப் கேக்!, தி டால்டன்ஸ் ஆன் லைன், தி ஐடியல் டாக்
    31 டிசம்பர், 2012
    21நிமி
    7+
    டால்டன் சகோதரர்கள் சிறையிலிருந்து தப்ப புது யோசனைகளைத் திட்டமிடுகிறார்கள். ஜோ நகரின் ஆண்டு நிறைவு கேக்கிற்குள் ஒளிந்து, பின் தொழில்நுட்பத்தால் தந்தி இணைப்புகளுக்குள் நுழைந்துவிட திட்டம் தீட்டுகிறான். எனினும், திரு.பீபாடி சிறைக்கு ஒரு புதிய கண்காணிப்பாளரை நியமிக்க முடிவு செய்யும் போது, அவர்களின் அனைத்துத் திட்டங்களும் வீணாகின்றன. சகோதரர்களால் இறுதியில் சிறையில் இருந்து தப்பிக்க முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - தி பப்படீர், ட்ரிகாமி டைம், ஃப்ரைஸ் ஃபார் ஃப்ரீ
    31 டிசம்பர், 2012
    21நிமி
    7+
    சிறைக் காவலரின் வறுவல்களைப் பற்றிய பீதியை பயன்படுத்தி, வறுவல்களைக் கோரி ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தைச் செய்யும் போதோ, ஒரு மாயாஜால பொம்மலாட்ட பொம்மையைப் பயன்படுத்தி அவரை வசியம் செய்ய முயற்சிக்கும் போதோ டால்டனின் உறுதிப்பாடு வேறு ஒரு நிலையை எட்டிவிடுகிறது. அவர்கள் அனைவரையும் சுமந்து வெளியேற்றக்கூடிய காகித விமானத்தை உருவாக்க முயல்கின்றனர். இம்முறையாவது டால்டன்களுக்கு தப்ப அதிர்ஷ்டம் இருக்குமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - ஆன் இந்தியன் வெட்டிங், கஸ்ட் ஆஃப் விண்ட், டால்டன்ஸ் இன் தி மூவீஸ்
    31 டிசம்பர், 2012
    20நிமி
    7+
    டால்டன்கள் ஜோவின் திருமண விழாவின் போது தப்பிக்கத் திட்டமிடுகிறார்கள், ஆனால் மைட்டி பைஸெப்ஸைப் கடந்து செல்ல ஒரு வழி வேண்டும். டால்டன்கள் ஒரு புயலைப் பயன்படுத்தி, கூடையில் அமர்ந்து கொள்ள அது சுமந்து செல்லுமா என பார்க்கிறார்கள். கடைசியாக, டால்டன்கள் ஒரு திரைப்படத் திரையிடலின்போது தப்பிக்க முயற்சி செய்து, மாயக் கோடாரி மூலம் திரையை வெட்டிய பின் ஒரு படத்திற்குள் மாயமாக மாட்டுகிறார்கள் .
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - ஜூ-ப்ரேக், த டால்டன்ஸ் அண்ட் த கோஸ்ட். டால்டன்ஸ் ஆர் மூன்ஸ்ட்ரக்
    31 டிசம்பர், 2012
    21நிமி
    7+
    டால்டன் கும்பல் ஒரு மனவசியப் புத்தகத்தை வார்டனிடமிருந்து திருடி, நிர்வாகிகளை விலங்குகளாக மனவசியம் செய்து, தப்ப முயற்சிக்கின்றது. இத்திட்டம் தோல்வியடைந்தவுடன், சுவரில் ரகசிய துளையை கண்டுபிடிக்க கர்ணல் ரமோனின் ஆவியிடம் உதவி கோருகிறார்கள். அக்கும்பல் ஒரு விண்கலத்தைக் கட்டியெழுப்ப, பின்னர் தாம் நிலாவின் மேற்பரப்பில் ஒரு சந்திர சிறையில் நொறுங்கி விழுந்திருப்பதை உணர்கிறார்கள். எப்படி திரும்புவார்கள்?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - ஜிகி தி ஜிராஃப்பி, தி டால்டன்ஸ் கசின்ஸ், இன்ஸ்பெக்சன் டைம்
    31 டிசம்பர், 2012
    21நிமி
    7+
    அது அஞ்சல் வரும் தினம், அன்றைக்கு ஜோ டால்டனுக்கு பொதியில் அழகான ஒட்டகச்சிவிங்கி வருகிறது. அதன் நீண்ட கழுத்தில் ஏறி தப்பிவிடலாம் என டால்டன்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் தோல்வியில் முடிந்த பின், மா டால்டனும் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர்களும் சிறைக்கு வருகின்றனர், தப்பிப்பதற்கு உதவ. பதிலுக்கு உதவி செய்தால் மட்டுமே ஒன்றுவிட்ட சகோதரர்கள் தப்ப உதவுவார்கள். குழு அவர்களுக்காக என்ன செய்ய வேண்டும்?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - ஊ கிட்னாப்ட் ரிண்டிண்டம்? , டால்டன்ஸ் இன் ஹார்ட் ஹேட்ஸ், தி டால்டன்ஸ் அண்ட் தி பீன்ஸ்டாக்.
    31 டிசம்பர், 2012
    21நிமி
    7+
    அபிமான செல்லப்பிராணி ரின்டின்டம்ப்பை கடத்தி, தங்கள் விடுதலைக்கு பதிலாக மிஸ்டர். பீபாடியிடம் பரிமாறிக் கொள்ள முயலுகிறார்கள், ஆனால் தப்பிக்க முடியவில்லை. ஜோ கட்டுமான அறிவு இருப்பதாக பாசாங்கு செய்து, தப்புவதற்காக மிஸ்டர் பீபாடி தன் கனவு இல்லம் கட்ட உதவுகிறான். அந்தக் குழு அவரைக் கொடியில் ஏறியதால், அரக்கர்கள் மற்றும் தங்க முட்டை உள்ள மாயாஜால பூமியில் இருந்து திரும்ப முயலுகிறது. வெற்றியடைவார்களா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ14 - தி டிராவல் பாக்ஸ், தி பிரட் வார், மங்கி பிசினஸ்
    31 டிசம்பர், 2012
    21நிமி
    7+
    சிறையில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக, டால்டன் சகோதரர்கள் புத்தம் புதிய யோசனை செய்கிறார்கள். வல்லூறை அவர்கள் சீட்டாட்டத்தில் தந்திரம் செய்வதுடன், பின்னர் சிறைச்சாலை சமையலறையில் புதிய ரொட்டி தயாரிப்பாளர்களாகிறார்கள். பூட்டைத் திறப்பதில் நிபுணரான குரங்கு அவர்களின் உதவிக்கு வரும் போது, மூத்த சகோதரன் ஜோ அதனுடன் போட்டியில் ஈடுபடுகிறார். இந்த முறையாவது டேல்டன்கள் தப்பிக்க முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ15 - பிரின்ஸ் ஆஃப் தி டெசர்ட், சர்வீஸ் ஸ்டேசன், ஜெயண்ட்!
    31 டிசம்பர், 2012
    21நிமி
    7+
    மிஸ்டர் பீபாடியை சந்திக்க வரும் ஷேக்கை பயன்படுத்தி மகிழ்ச்சியாக இருக்க டால்டன்கள் திட்டம் தீட்டுகின்றனர். அதில் கடுமையாக தோற்ற பின், மிஸ்டர் பீபாடியின் சேவை நிலையத்தில் இருந்து தப்பிக்க வேறொரு திட்டம் வகுக்கின்றனர். வாடிக்கையாளர் வண்டிக்குள் ஒளிந்து கொள்கிறார்கள், ஆனால் பிடிபடுகின்றனர். தங்களை தோற்கடிக்க இயலாத அளவுக்கு திறன் கொண்ட பிரம்மாண்டமான எந்திர மனிதனை உருவாக்கும் போது என்ன ஆகிறது?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ16 - வாண்டட்: ஃபோர் க்யூட் பாய்ஸ், டூ விங்க்ட் டால்டன்ஸ், ஹை ஆன் காக்டஸ்.
    31 டிசம்பர், 2012
    21நிமி
    7+
    நாகரீக ஆடை அணிந்து நடக்கும் போட்டியில் வென்று வடிவமைப்பாளருடன் சுற்றுப்பயணத்தில் அழகாக தப்பிக்கும் டால்டன்கள், செவ்விந்தியர்களால் விரட்டப்பட்டு மீண்டும் சிறையை வந்தடைகின்றனர். ஏவராலின் பாதுகாவல் தேவதைகளுடன் ஜோ பேச்சுவார்த்தை நடத்துகிறான், தேவதையின் அபார சக்தியை வழங்குவதற்கு பதில் ஏவராலை பாதுகாக்க. சுடுகாட்டு பணியாளனின் வாகனத்தைத் திருடும் குழு, பாலைவனம் ஒன்றில் திசை தெரியாமல் நிற்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ2 எ17 - டால்டன்ஸ் 'ரியாலிட்டி ஷோ, ரோல் அப், டால்டன்ஸ்!, டால்டன்ஸ் இன்ஏ கிட்
    31 டிசம்பர், 2012
    21நிமி
    7+
    மிஸ்டர் பீபாடியின் விருந்தினரின் சிறு உதவியுடன் சிறையில் இருந்து தப்பிக்க சில தனித்துவமான யோசனை செய்கின்றனர். அவர்கள் பொழுதுபோக்குத் துறையில் நட்சத்திரமாக ஆவதற்கு ரியாலிடி நிகழ்ச்சியில் காலடி எடுத்து வைக்கிறார்கள். பிறகு சர்க்கஸ் ஒன்றில் பசு மாடாக பங்கேற்கின்றனர். சீர்திருத்தத்துக்கு புது சிறைவாசி வரும்போது, தப்பிப்பதற்கு அவன் உதவியை பெற ஜோ முடிவுசெய்கிறான். இம்முறை சகோதரர்கள் வெற்றிபெறுவார்களா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ2 எ18 - மோம்மா நோஸ் பெஸ்ட், இன்சைட் ரின்டிங்டம்ப், பவுன்சிங் டால்டன்ஸ்
    31 டிசம்பர், 2012
    21நிமி
    7+
    ஒரு நாள் பந்தயத்துக்காக டால்டன்களும் மிஸ்டர் பீபாடியும் தங்கள் இடத்தை மாற்றிக் கொள்கின்றனர். வெற்றி பெற மிஸ்டர் பீபாடி தப்பிக்க வேண்டும். இந்த விளையாட்டுக்குப் பின், டால்டன்கள் சுருங்கிப் போய், ரின்டின்டம்பால் சாப்பிடப்படுகிறார்கள். இந்த துரதிருஷ்டத்தை சாதகமாக பயன்படுத்தி, நாய் வழியாக தப்பிக்க அந்தக் குழு முயலுகிறது. பிறகு மாயாஜால இந்திய திரவத்தை ரின்டின்டம்ப் சாப்பிடும் போது என்ன ஆகிறது?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ2 எ19 - ஃபன்னி ஃபேங்க்ஸ் டால்டன், சூப்பர்-எ-வெரெல், ஆல் ஹேண்ட்ஸ் ஆன் டெக்!
    31 டிசம்பர், 2012
    21நிமி
    7+
    டால்டன்கள் காட்டேரியுடன் ஒப்பந்தம் செய்கிறார்கள். அதன்படி அது அவனது விருப்பப்படி சிறையை அலங்கரிக்க, தப்பிக்க உதவ ஒப்புக் கொள்கிறது. ஒப்பந்தத்தை மீறி காட்டேரி சிறையை சீரழிக்கிறது. பரிசோதனை ஒன்றை சாதகமாக பயன்படுத்த டால்டன்கள் முயலுகிறார்கள், ஆனால் அது அவர்களுக்கே எதிராகிறது. இறுதியாக, டால்டன்கள் கடற்கொள்ளையன் ஒருவனின் உதவியை பெறுகிறார்கள், அவனோ ஏமாற்றிவிட்டு தப்பிச் செல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ2 எ20 - ஃபோர்ட் டால்டன் [ஸ்பெசல்]
    31 டிசம்பர், 2012
    23நிமி
    7+
    மெக்சிக்கர்களால் சூழப்பட்ட நிலையில், மிஸ்டர் பீபாடிக்கு சரணடைவதைத் தவிர வாய்ப்பில்லை. பறவைக் கப்பலால் தப்பிக்கலாம் என்ற யோசனையை முன்வைக்கின்றனர் டால்டன்கள். அதில் இருந்து விழும் மிஸ் பெட்டி மெக்சிக்கர்களின் பிணைக் கைதி. டால்டன்களும் மிஸ்டர் பீபாடியும் வல்லூறின் உதவியை நாடுகின்றனர், யாராகவும் மாறக்கூடிய மந்திர திரவத்தை தருகிறது. மிஸ் பெட்டியை காப்பாற்றி சீர்திருத்தகத்தை திரும்பப் பெற முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ2 எ21 - தி டால்டன்ஸ் கெட் ஜேப்ட், டிரிபில் இடியட், பாப்கார்ன் ஃபார் தி டால்டன்ஸ்
    31 டிசம்பர், 2012
    21நிமி
    7+
    சுரங்க ஆய்வகத்தில் டி.என்.டி.யை உருவாக்க முயற்சிக்கும் போது, மர்ம திரவம் ஒன்றை குடிக்கும் ஏவரால் அனைவரையும் விட கெட்டிக்காரனாகி விடுகிறான். அதை பயன்படுத்தி தப்ப டால்டன்கள் விரும்புகின்றனர். எதிர்கால படியெடுக்கும் துப்பாக்கியை பயன்படுத்தி ஏவரெல்லின் பல்வேறு பிரதிகளை உருவாக்குகிறான் ஜோ, பிடிபடுவதற்கு முன்பே. சிறையில் நடக்கும் கண்காட்சி ஒன்றில், பாப்கார்னை தப்பிப்பதற்கான ஆயுதமாக பயன்படுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ2 எ22 - ஃபயர்ஃபைட்டிங் டால்டன்ஸ், தி டால்டன்ஸ் கெட் ஃபிட், ஹெல்ஸ் பெல்ஸ்
    31 டிசம்பர், 2012
    21நிமி
    7+
    சீர்திருத்தகத்தில் தீயணைப்பு நிலையம் வைக்க வேண்டும். டால்டன்கள் தீயணைப்பு வீரர்களாக பணியாற்ற முன்வருகின்றனர். பயிற்சியில், தப்ப முயலுகிறார்கள். பின்னர், மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதற்காக கடுமையான சோர்வடைய திட்டமிடுகிறார்கள். தப்பிக்க இது மற்றொரு தந்திரமா? தப்பிக்கும் ராக்கெட் தவறாக ஏவப்பட்டு, அவர்களை நேராக நரகத்துக்கு அனுப்புகிறது. அது சிறைச்சாலையை விட மோசமாக இருக்குமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ2 எ23 - கார்ட்ஸ், ஸ்டாப் தோஸ் டால்டன்ஸ்!, பெனிடென்சியரி பேலஸ் ஹோட்டல், மார்ஸ்மால்லோ ட்ராப்
    31 டிசம்பர், 2012
    20நிமி
    7+
    டால்டன்கள் சிறைக் காவலர் சீருடைகளை திருடி தப்பிக்க தயாராகின்றனர். அவர்கள்தான் தாம் எதிர்பார்த்திருந்த காவலர்கள் என்று மிஸ்டர் பீபாடி நினைத்துக் கொள்கிறார். அடுத்து என்ன நடக்கும்? சிறையை உணவு விடுதியாக மாற்ற யோசனை சொல்கின்றனர். அதிக கட்டணங்களை செலுத்த அதற்கு அவர் ஒப்புக்கொள்கிறார். இதன் உண்மையான நோக்கம் என்ன? டால்டன்கள் சிறையை மார்ஷ்மல்லோவால் மூடிவிட்டு, சாப்பிட்டே வெளியே செல்ல விரும்புகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ2 எ24 - தி வாண்ட், மாடல் இன்மேட், தி ஸ்டீவ் ஆஃப்லிக்சன்.
    31 டிசம்பர், 2012
    21நிமி
    7+
    ரின்டின்டம்பிடம் இருந்து மந்திரக் கோலை பிடுங்கும் டால்டன்கள், அதை பயன்படுத்தி சீர்திருத்தகத்தில் இருந்து தப்ப தங்களை பொருட்களாக மாற்றுகின்றனர். தவறும் போது, தங்களுடன் மிஸ்டர் பீபாடியையும் சிறையில் அடைக்கச் செய்து, தப்பிப்பதற்கு அவரது உதவியை பெறுகிறார்கள். மிஸ்டர் பீபாடி தன்னை அப்பாவி என்று நிரூபிக்க ஆயத்தமாகிறார். வெள்ளிக்கிழமை உணவில் அரிக்கும் முள்ளங்கியை கலந்த பிறகு, தப்பித்தார்களா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ2 எ25 - எனிமி சிஸ்டர்ஸ், டாப் கியர், தி டால்டன்ஸ் அண்ட் தி டார்டாய்ஸ்
    31 டிசம்பர், 2012
    20நிமி
    7+
    மிஸ் பெட்டியின் இரட்டைப் பிறவியான மிஸ் லூசி சிறைக்கு வருகிறார். சகோதரிகளை இடமாற்றி சிறையில் இருந்து தப்புவது டால்டன்கள் யோசனை. சிறையை பார்க்க வரும் மிஸ்டர் ஹாரெல், உற்பத்தியை மேம்படுத்த சிறையை தானியங்கியாக்குகிறார். டால்டன்கள் அவரது வேகமான மகிழுந்தில் தப்ப திட்டமிடுகின்றனர். ஆமை ஒன்றை அருகிவரும் உயிரினமாக பிரகடனப்படுத்தினால் சிறை அப்புறப்படுத்தப்பட்டு, தாங்கள் விடுதலையடையலாம் என திட்டமிடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 39 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
சார்ல்ஸ் வாசெல
தயாரிப்பாளர்கள்
மார்க் டூ பான்ட்டவிஸ்
நடித்தவர்கள்
NANANA
ஸ்டுடியோ
Xilam Animation Studio
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.