Prime Video
  1. உங்கள் கணக்கு

உதவி

EU குக்கீகள் தொடர்பான அறிவிப்பு

ஜூன் 22, 2021 அன்று கடைசியாக மாற்றப்பட்டது

கீழே விவரிக்கப்பட்ட நோக்கங்களுக்காக நாங்கள் குக்கீகள் மற்றும் கருவிகளைப் (கூட்டாக, "குக்கீகள்") பயன்படுத்துகிறோம்.

செயல்பாட்டுக்கான குக்கீகள் : எங்களுடைய சேவைகளை வழங்க நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம், எடுத்துக்காட்டாக:

  • எங்களுடைய சேவைகளைப் பயன்படுத்த நீங்கள் உள்நுழையும்போது உங்களை அடையாளம் கண்டுகொள்ளுதல்.
  • நீங்கள் ஒரு Prime உறுப்பினரா என்பதை அடையாளம் கண்டுகொண்டு, பிற தனிப்பயனாக்கப்பட்ட அம்சங்கள் மற்றும் சேவைகளை வழங்குதல்.
  • எங்களுடைய சேவைகளில் வரும் விளம்பரங்கள் Amazon இல் கிடைக்கப்பெறும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கானவையாக இருக்கும்பட்சத்தில் அந்த விளம்பரங்கள் உட்பட உங்களுக்கு விருப்பமாக இருக்கக்கூடும் அம்சங்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றைக் காண்பித்தல்.
  • உங்கள் ஷாப்பிங் கூடையில் சேமிக்கப்பட்ட பொருட்களைக் கண்காணித்தல்.
  • மோசடி நடவடிக்கைகளைத் தடுத்தல்.
  • பாதுகாப்பை மேம்படுத்துதல்.
  • நாணயம் மற்றும் மொழி போன்ற உங்கள் விருப்பங்களைக் கண்காணித்தல்.

வாடிக்கையாளர்கள் எங்கள் சேவைகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள நாங்கள் குக்கீகளையும் பயன்படுத்துகிறோம், இதன் மூலம் எங்களால் மேம்பாடுகளைக் கொண்டு வர முடியும். எடுத்துக்காட்டாக, Amazon-ன் உள்ளடக்கம், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி மற்றும் ஆய்ந்தறிதலை மேற்கொள்ளவும் மற்றும் எங்கள் சேவைகளின் செயல்திறனை அளவிடுவதற்கும், புரிந்து கொள்வதற்கும் நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம்.

விளம்பர குக்கீகள்: Amazon இல் கிடைக்கபெறாத தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் உங்கள் விருப்பங்கள் தொடர்பான சில விளம்பரங்கள் உள்ளிட்ட சில வகையான விளம்பரங்களுக்குச் சேவை செய்யவும் நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம்.

நீங்கள் Amazon சேவைகளுடன் தொடர்பு கொள்ளும்போது அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினரும் குக்கீகளை அமைக்கக்கூடும். மூன்றாம் தரப்பினரில் தேடுபொறிகள், அளவீட்டு மற்றும் பகுப்பாய்வு சேவைகளை வழங்குபவர்கள், சமூக ஊடக நெட்வொர்க்குகள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் ஆகியவை உள்ளடங்கும். உங்களுடைய விருப்பங்களுக்குப் பொருத்தமான விளம்பரங்கள் உள்ளிட்ட விளம்பர உள்ளடக்கத்தை வழங்கும் செயல்பாட்டிலும், அவர்களுடைய விளம்பரங்களின் செயல்திறனை அளவீடு செய்வதிலும், Amazon சார்பாக சேவைகளை வழங்குவதிலும் மூன்றாம் தரப்பினர் குக்கிகளைப் பயன்படுத்துகின்றனர்.

விருப்பங்களின் அடிப்படையிலான விளம்பரங்களை Amazon எவ்வாறு வழங்குகிறது என்பதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள, தயவுசெய்து விருப்பங்களின் அடிப்படையிலான விளம்பர அறிவிப்பைப்பார்வையிடவும். உங்கள் விருப்பங்களின் அடிப்படையிலான விளம்பரங்களின் விருப்பத்தேர்வுகளுக்கு, தயவுசெய்து விளம்பர விருப்பத்தேர்வுகள் பக்கத்திற்குச் செல்லவும். எங்களுடைய குக்கீ விருப்பத்தேர்வுகள் பக்கத்தைப் பார்ப்பதன் மூலம் எந்த அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினர் குக்கீகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நீங்கள் காணலாம் மற்றும் அவர்கள் எவ்வாறு குக்கீகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நீங்கள் நிர்வகிக்கலாம்.

கூடுதல் தகவல்

உங்களுடைய உலாவியில் 5 வருடங்கள் வரை இருக்கக்கூடும் உங்கள் தனியுரிமை அமைப்புகளை (விளம்பர விருப்பத்தேர்வுகள் போன்றவை) நினைவில் வைக்கப் பயன்படும் குக்கீகளைத் தவிர எங்களுடைய சேவைகளை நீங்கள் கடைசியாகப் பயன்படுத்தியதிலிருந்து 13 மாதங்கள் வரை செயல்பாட்டு குக்கீகள் உங்கள் உலாவியில் இருக்கும். இந்தக் குக்கீகளைப் பயன்படுத்துவதற்கான உங்கள் ஒப்புதலை எங்களுக்கு வழங்கிய பிறகும் பிற குக்கீகள் உங்கள் உலாவியில் 13 மாதங்கள் வரை இருக்கும்.

எங்களுடைய குக்கீ விருப்பத்தேர்வுகள் பக்கத்தைப் பார்ப்பதன் மூலம் நீங்கள் குக்கீகளை நிர்வகிக்கலாம். உங்களுடைய குக்கீ விருப்பத் தேர்வுகளை Amazon சேவையிலும், நீங்கள் விருப்பத்தேர்வை மேற்கொண்ட உலாவியிலும் மற்றும் நீங்கள் உள்நுழைந்த வேறு எந்த உலாவியிலும் நாங்கள் பயன்படுத்துவோம். நீங்கள் உள்நுழையவில்லை எனில், உங்கள் விருப்பத்தை நாங்கள் மீண்டும் கேட்க வேண்டியிருக்கும்.

மாற்றாக, உங்கள் உலாவி புதிய குக்கீகளை ஏற்றுக்கொள்வதை எவ்வாறு தடுக்க வேண்டும், புதிய குக்கீயை நீங்கள் பெறும்போது உலாவி அதை உங்களுக்கு அறிவிக்க என்ன செய்ய வேண்டும், குக்கீகளை எவ்வாறு முடக்க வேண்டும் மற்றும் அகற்ற வேண்டும் மற்றும் குக்கீகள் எப்போது காலாவதியாகும் என்பதை உங்கள் உலாவியில் உள்ள அமைப்புகள் உங்களுக்குக் கூறும்.

செயல்பாட்டு குக்கீகள் Amazon-ன் சில அத்தியாவசிய அம்சங்களைச் சாதகமாகப் பயன்படுத்த உங்களை அனுமதிக்கின்றன. உங்களுடைய உலாவி அமைப்புகள் மூலம் செயல்பாட்டு குக்கீகளை நீங்கள் தடுத்தால் அல்லது நிராகரித்தால் சில அம்சங்கள் மற்றும் சேவைகள் செயல்படாமல் போகக்கூடும். எடுத்துக்காட்டாக, உங்கள் ஷாப்பிங் கூடையில் பொருட்களைச் சேர்க்கவோ, அவற்றை வாங்கும் செயல்பாட்டைத் தொடரவோ அல்லது உள்நுழைய வேண்டிய அவசியம் கொண்ட Amazon சேவைகளைப் பயன்படுத்தவோ முடியாது. எங்கள் சேவைகளில் ஒன்றை நீங்கள் பயன்படுத்தும் போதெல்லாம் உங்கள் விருப்பத்தேர்வுகளில் சிலவற்றை உங்கள் கைகொண்டு சரிசெய்ய வேண்டிய அவசியம் எழக்கூடும்.

எங்களுடைய தனியுரிமை அறிவிப்பு நாங்கள் சேகரிக்கும் தகவல்களின் வகைகள் பற்றி மேலும் தகவலுக்கு எங்களுடைய தனியுரிமை அறிவிப்பு என்பதைப் பார்க்கவும்.