உதவி

Amazon Prime Video பயன்பாட்டின் விதிகள்

Amazon Prime Video பயன்பாட்டு விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி, எங்கள் உள்ளடக்க வழங்குநர்கள் எங்களுக்கு விதித்துள்ள வரம்புகள் காரணமாக, Amazon Prime வீடியோவில் நாங்கள் உங்களுக்குக் கிடைக்கச் செய்யும் வீடியோக்களைப் பார்ப்பதற்கும் (உதாரணமாக, ஸ்ட்ரீமிங் அல்லது பதிவிறக்கம் மூலம்), எவ்வளவு நேரம் அவற்றை உங்களுக்குக் கிடைக்கச் செய்கிறோம் என்பதற்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. உங்களுடைய வீடியோக்கள் ஒவ்வொன்றிற்கும் பொருந்தக்கூடிய குறிப்பிட்ட வகையான கட்டுப்பாடுகளானது, நீங்கள் ஒரு வீடியோவை வாங்குவதன் மூலமாகவோ, வாடகைக்கு எடுப்பதன் மூலமாகவோ, சந்தா செலுத்துவதன் மூலமாகவோ அல்லது ஊக்குவிப்பு சலுகையாக வழங்கப்படும் சோதனை ஓட்டம் மூலமாகவோ அல்லது இலவசமாகவோ அணுகுவதைப் பொறுத்து அமையும். எங்களுடைய சேவையில் புதிய அம்சங்கள், சாதனங்கள் மற்றும் உள்ளடக்கங்கள் ஆகியவற்றை நாங்கள் சேர்த்துவருவதால் இந்தக் கட்டுப்பாடுகள் காலப்போக்கில் மாறக்கூடும். பின்வருபவை உங்களுடைய இணைய உலாவி மற்றும் இணையம் மூலம் இணைக்கப்பட்ட பொருந்தக்கூடிய தொலைக்காட்சிப் பெட்டிகள், புளூ-ரே பிளேயர்கள், செட்-டாப் பாக்ஸ்கள், ஃபயர் டேப்லெட்கள் மற்றும் பொருந்தக்கூடிய பிற சாதனங்கள் வழியாக Amazon Prime Videoவை அணுகுவதற்கான கட்டுப்பாடுகள் ஆகும்.

வாங்கப்பட்ட வீடியோக்கள்

  • பார்ப்பதற்கான வழிகள்: தேவைக்கேற்றவாறு பார்ப்பதற்காக நீங்கள் வீடியோவை வாங்கினால், நாங்கள் அதை உங்களுக்கு ஸ்ட்ரீமிங் வாயிலாக வழங்குவோம் மற்றும் பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றைப் பின்வருமாறு பதிவிறக்கம் செய்யவும்:
    • ஸ்ட்ரீமிங்: வாங்கப்பட்ட வீடியோக்களை நீங்கள் உங்களுடைய இணைய உலாவி மற்றும் இணையம் மூலம் இணைக்கப்பட்ட பொருந்தக்கூடிய தொலைக்காட்சிப் பெட்டிகள், புளூ-ரே பிளேயர்கள், செட்-டாப் பாக்ஸ்கள், ஃபயர் டேப்லெட்கள் மற்றும் பொருந்தக்கூடிய பிற சாதனங்கள் வழியாக ஆன்லைனில் ஸ்டிரீமிங் செய்யலாம். எங்களுடைய சேவைகளுடன் பொருந்தக்கூடிய சாதனங்களின் ஒரு பட்டியலுக்கு, பின்வரும் இணைப்புகளில் நீங்கள் Amazon Prime Videoவை அணுகப் பயன்படுத்தும் இணையதளத்தின் பொருந்தக்கூடிய சாதனங்கள் என்ற பக்கத்தைப் பார்க்கவும், PrimeVideo.com, Amazon.com, Amazon.co.uk, Amazon.de or Amazon.co.jp (சாதனத்தின் பொருந்தக்கூடிய தன்மை இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடக்கூடும்). ஒரே Amazon கணக்கைப் பயன்படுத்தி நீங்கள் ஒரே நேரத்தில் மூன்று வீடியோக்கள் வரை ஸ்ட்ரீம் செய்ய முடியும். அதே வீடியோவை ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட சாதனங்களில் உங்களால் ஸ்டிரீம் செய்ய முடியாது.
    • பதிவிறக்கம் செய்தல்:பதிவிறக்கம் செய்வதற்கான ஒரு விருப்பத்தேர்வு கிடைக்கப்பெறும் போது, நீங்கள் வாங்கும் வீடியோக்களை ஃபயர் டேப்லெட்கள் (1வது தலைமுறை கிண்டில் ஃபயரைத் தவிர) மற்றும் ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்கள் போன்ற நான்கு பொருந்தக்கூடிய சாதனங்களுக்கு நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம். பதிவிறக்கம் செய்யும் வசதி கொண்ட பொருந்தக்கூடிய சாதனங்களின் பட்டியலுக்கு பின்வரும் இணைப்புகளில் Amazon Prime Videoவை அணுக நீங்கள் பயன்படுத்தும் இணையதளத்தில் உள்ள Prime Video தலைப்புகளைப் பதிவிறக்கம் செய்தல் என்ற பக்கத்தைப் பார்க்கவும், PrimeVideo.com, Amazon.com, Amazon.co.uk, Amazon.de or Amazon.co.jp (சாதனத்தின் பொருந்தக்கூடிய தன்மை இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடக்கூடும்). ஒரு வாங்கப்பட்ட வீடியோவைப் பதிவிறக்கம் செய்த பிறகு, அந்த வீடியோவை மேலே விவரிக்கப்பட்டவாறு நீங்கள் ஸ்ட்ரீம் செய்யலாம்.
  • பார்க்கும் காலம்: வரையறை இல்லாதது – நீங்கள் வாங்கிய வீடியோக்களை நீங்கள் விரும்புவரை அடிக்கடியோ அல்லது உங்களுக்குத் தேவையான காலம் வரையிலோ நீங்கள் பார்க்கலாம் மற்றும் மீண்டும் பார்க்கலாம் ( Amazon Prime Video பயன்பாட்டு விதிகளில் விவரிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது).

வாடகைக்கு எடுக்கப்படும் வீடியோக்கள்

  • பார்ப்பதற்கான வழிகள்: தேவைக்கேற்றவாறு பார்ப்பதற்காக நீங்கள் ஒரு வீடியோவை வாடகைக்கு எடுக்கும் போது அதை ஸ்ட்ரீம் மூலம் நாங்கள் உங்களுக்கு கிடைக்கும்படி செய்வோம், பெரும்பாலான நேரங்களில் அதைப் பின்வருமாறு பதிவிறக்கமும் செய்யலாம்:
    • ஸ்ட்ரீமிங்: வாடகைக்கு எடுக்கப்படும் வீடியோக்களை நீங்கள் உங்களுடைய இணைய உலாவி மற்றும் இணையம் மூலம் இணைக்கப்பட்ட பொருந்தக்கூடிய தொலைக்காட்சிப் பெட்டிகள், புளூ-ரே பிளேயர்கள், செட்-டாப் பாக்ஸ்கள், ஃபயர் டேப்லெட்கள் மற்றும் பொருந்தக்கூடிய பிற சாதனங்கள் வழியாக ஆன்லைனில் ஸ்டிரீமிங் செய்யலாம். எங்களுடைய சேவைகளுடன் பொருந்தக்கூடிய சாதனங்களின் ஒரு பட்டியலுக்கு, பின்வரும் இணைப்புகளில் நீங்கள் Amazon Prime Videoவை அணுகப் பயன்படுத்தும் இணையதளத்தின் பொருந்தக்கூடிய சாதனங்கள் என்ற பக்கத்தைப் பார்க்கவும், PrimeVideo.com, Amazon.com, Amazon.co.uk, Amazon.de or Amazon.co.jp (சாதனத்தின் பொருந்தக்கூடிய தன்மை இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடக்கூடும்). ஒரே Amazon கணக்கைப் பயன்படுத்தி நீங்கள் ஒரே நேரத்தில் மூன்று வீடியோக்கள் வரை ஸ்ட்ரீம் செய்ய முடியும். ஒரே வீடியோவை ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களில் உங்களால் ஸ்ட்ரீம் செய்ய முடியாது.
    • பதிவிறக்கம் செய்தல்: பதிவிறக்கம் செய்வதற்கான ஒரு விருப்பத்தேர்வு கிடைக்கப்பெறும் போது நீங்கள் வாடகைக்கு எடுக்கும் வீடியோக்களை நீங்கள் தற்காலிகமாக ஃபயர் டேப்லெட்கள் (1வது தலைமுறை கிண்டில் ஃபயரைத் தவிர) மற்றும் ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்கள் போன்ற ஒரு பொருந்தக்கூடிய சாதனத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பதிவிறக்கம் செய்யும் வசதி கொண்ட பொருந்தக்கூடிய சாதனங்களின் பட்டியலுக்கு பின்வரும் இணைப்புகளில் Amazon Prime Videoவை அணுக நீங்கள் பயன்படுத்தும் இணையதளத்தில் உள்ள Prime Video தலைப்புகளைப் பதிவிறக்கம் செய்தல் என்ற பக்கத்தைப் பார்க்கவும், PrimeVideo.com, Amazon.com, Amazon.co.uk, Amazon.de or Amazon.co.jp (சாதனத்தின் பொருந்தக்கூடிய தன்மை இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடக்கூடும்). வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை நீங்கள் ஒரு பொருந்தக்கூடிய சாதனத்தில் பதிவிறக்கம் செய்த பின்பு, அதே Amazon கணக்கைப் பயன்படுத்தி அந்த வீடியோவை நீங்கள் மற்றொரு சாதனத்திற்கு பதிவிறக்கம் செய்ய முடியாது அல்லது ஒரேநேரத்தில் அதை ஒன்றிற்கு மேற்பட்ட சாதனத்தில் பார்க்க முடியாது. எனினும், ஒரு பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒரு வீடியோவை ஒரு பொருந்தக்கூடிய சாதனத்தில் நீங்கள் பார்க்கத்தொடங்கலாம் மற்றும் பின்னர் அதை மற்றொரு பொருந்தக்கூடிய சாதனத்தில் நீங்கள் ஸ்டிரீம் செய்யலாம் (அதை ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட சாதனத்தில் நீங்கள் இயக்காத வரை).
  • பார்க்கும் காலம்: வாடகை வீடியோக்களுக்கு, அதை நீங்கள் ஸ்டிரீமிங் அல்லது பதிவிறக்கம் செய்ய ஆரம்பித்த 48 மணி நேரத்திற்குள் அவற்றை நீங்கள் பார்த்து முடித்துவிட வேண்டும், மேலும் எந்த ஒரு நிகழ்விலும் பொருந்தக்கூடிய காலாவதி விண்டோ காலாவதியாவதற்கு முன்பாக அந்த வீடியோவை நீங்கள் பார்த்து முடிக்க வேண்டும், இது பொதுவாக நீங்கள் வாடகைக் கட்டணம் செலுத்தியதில் இருந்து 30 நாட்களுக்குள்ளாக இருக்கும். இந்த விண்டோ நீடித்திருக்கும் காலத்தை விவரங்கள் பக்கத்திலோ அல்லது இணையதள விவரப் பக்கங்களில் உள்ள "Learn more about renting and buying" என்ற இணைப்பு போன்ற விவரப் பக்கத்தின் இணைப்பிலோ பார்க்கலாம்.

Prime மற்றும் Prime Video சந்தாக்கள் (Prime Video மொபைல் பதிப்பைத் தவிர)

  • பார்ப்பதற்கான வழிகள்:
    • ஸ்ட்ரீமிங்: சந்தா செலுத்தப்பட்ட Prime அல்லது Prime Video மூலம் அல்லது ஊக்குவிப்புச் சலுகையாக அளிக்கப்படும் சோதனை ஓட்டம் மூலம் கிடைக்கப்பெறும் வீடியோக்கள் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் கிடைக்கப்பெறுகின்றன. உங்களுடைய இணைய உலாவி மற்றும் இணையம் மூலம் இணைக்கப்பட்ட பொருந்தக்கூடிய தொலைக்காட்சிப் பெட்டிகள், புளூ-ரே பிளேயர்கள், செட்-டாப் பாக்ஸ்கள், ஃபயர் டேப்லெட்கள் மற்றும் பொருந்தக்கூடியபிற சாதனங்கள் வழியாக நீங்கள் இந்த வீடியோ தலைப்புகளை ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யலாம். எங்களுடைய சேவைகளுடன் பொருந்தக்கூடிய சாதனங்களின் ஒரு பட்டியலுக்கு, பின்வரும் இணைப்புகளில் நீங்கள் Amazon Prime Videoவை அணுகப் பயன்படுத்தும் இணையதளத்தின் பொருந்தக்கூடிய சாதனங்கள் என்ற பக்கத்தைப் பார்க்கவும், PrimeVideo.com, Amazon.com, Amazon.co.uk, Amazon.de or Amazon.co.jp (சாதனத்தின் பொருந்தக்கூடிய தன்மை இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடக்கூடும்). ஒரே நேரத்தில் அதே Amazon கணக்கை பயன்படுத்தி மூன்று தலைப்புக்களை ஸ்ட்ரீம் செய்யலாம். ஒரு நேரத்தில் ஒரே தலைப்பை நீங்கள் இரண்டிற்கும் மேற்பட்ட சாதனங்களில் ஸ்ட்ரீம் செய்ய முடியாது. Amazon Prime Video -ஐ ஸ்ட்ரீம் செய்ய நீங்கள் பயன்படுத்தக்கூடிய சாதனங்களின் எண்ணிக்கையின் மீதான கட்டுப்பாடுகள் பிராந்தியத்திற்கு பிராந்தியம் மாறுபடலாம். இந்த வரம்புகளைப் பற்றி மேலும் அறிய, உங்கள் இருப்பிடத்திற்குரிய உதவிப் பக்கத்தைப் பார்க்கவும்.
    • பதிவிறக்கம் செய்தல்: இதில் பல சந்தா செலுத்தும் தலைப்புகளையும் Fire tablet -கள் (கிண்டில் 1வது தலைமுறை நீங்கலாக மற்றவை) மற்றும் Android மற்றும் iOS சாதனங்கள் போன்ற பொருந்தக்கூடிய சாதனங்களில் தற்காலிகமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யும் வசதி கொண்ட பொருந்தக்கூடிய சாதனங்களின் பட்டியலுக்கு பின்வரும் இணைப்புகளில் Amazon Prime Videoவை அணுக நீங்கள் பயன்படுத்தும் இணையதளத்தில் உள்ள Prime Video தலைப்புகளைப் பதிவிறக்கம் செய்தல் என்ற பக்கத்தைப் பார்க்கவும், PrimeVideo.com, Amazon.com, Amazon.co.uk, Amazon.de or Amazon.co.jp (சாதனத்தின் பொருந்தக்கூடிய தன்மை இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடக்கூடும்). சந்தா செலுத்தும் ஒவ்வொரு தலைப்புக்கான விவரப் பக்கமும் அது பதிவிறக்கம் செய்ய கிடைக்கப்பெறுகிறதா என்பதைக் குறிப்பிடுகிறது. கிடைக்கப்பெறும் தலைப்புகளை நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களில் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். நீங்கள் இரண்டு சாதனங்களில் ஒரு தலைப்பை ஏற்கனவே பதிவிறக்கம் செய்திருந்தால், மற்றொரு சாதனத்தில் அதை பதிவிறக்கம் செய்வதற்கு முன்பாக அவற்றில் ஒன்றிலிருந்து அதை நீங்கள் நீக்க வேண்டும். உங்களுடைய Amazon கணக்குடன் தொடர்புடைய அனைத்து சாதனங்களிலும் Prime அல்லது Prime Video மற்றும் மூன்றாம் தரப்பு கூடுதல் வீடியோ சந்தா தலைப்புகள் வழியாக ஒரேநேரத்தில் பதிவிறக்கம் செய்ய இயலும் அதிகபட்ச தலைப்புகளின் எண்ணிக்கையை நாங்கள் அமைவு செய்துள்ளோம். இது உங்களுடைய இருப்பிடத்தையும், மற்ற காரணிகளையும் பொறுத்து வேறுபடக்கூடும். அனைத்து சந்தா செலுத்தும் தலைப்புகளும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கப்பெறுவதில்லை, அதே வீடியோக்கள் Amazon Prime Video -இல் வாடகைக்கு அல்லது வாங்குவதற்கு கிடைக்கப்பெறக்கூடும், பின்னர் அவற்றைப் பொருந்தக்கூடிய சாதனங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
  • பார்க்கும் காலம்: Prime அல்லது Prime Videoவின் விவரப் பக்கத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்ட எந்த வீடியோவையும் நீங்கள் ஸ்ட்ரீம் செய்யலாம் அல்லது மீண்டும் ஸ்டிரீம் செய்யலாம். பதிவிறக்கம் செய்யப்படும் வீடியோக்களுக்கு, அவற்றை நீங்கள் பதிவிறக்கம் செய்த பிறகு அதைப் பார்க்கத் தொடங்க உங்களுக்குப் பொதுவாக 30 நாட்கள் கிடைக்கும் மற்றும் அதை நீங்கள் பார்க்க ஆரம்பித்தவுடன் அதை நீங்கள் பொதுவாக 48 மணி நேரத்திற்குள் பார்த்து முடிக்க வேண்டும். உங்களுடையை Amazon Prime அல்லது Prime Video சந்தா அல்லது ஊக்குவிப்புச் சலுகையாக அளிக்கப்படும் சோதனை ஓட்டம் காலாவதி ஆனவுடன் அல்லது இரத்து செய்யப்பட்டவுடன், அந்தத் தலைப்பை நீங்கள் வாடகைக்கோ அல்லது விலைக்கோ வாங்காத பட்சத்தில் உங்களுடைய Prime அல்லது Prime Video சந்தா வழியாக கிடைக்கப்பெறும் எந்த வீடியோவையும் நீங்கள் பார்க்க முடியாது.

Prime Video மொபைல் பதிப்பு

  • பார்ப்பதற்கான வழிகள்:
    • ஸ்ட்ரீமிங்: எங்கெல்லாம் கிடைக்கப்பெறுகிறதோ அங்கெல்லாம், Prime Video மொபைல் பதிப்பு சந்தா வழியாக கிடைக்கப் பெறும் வீடியோக்கள் ஆண்டராய்டு மற்றும் iOS சாதனங்களில் உள்ள Prime Video செயலி மூலம் தரநிலைப்படுத்தப்பட்ட வரையறையில் ஸ்ட்ரீம் செய்ய கிடைக்கப்பெறுகின்றன. ஒரு தனிப்பட்ட சாதனத்தில் ஒரே Amazon கணக்கைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் நீங்கள் ஒரு தலைப்பை மட்டுமே ஸ்ட்ரீம் செய்ய முடியும். எந்த நேரத்திலும் நீங்கள் Prime Video கைபேசி பதிப்பை ஒரு முழுமையான Prime Video சந்தாவாக மேம்படுத்திக்கொண்டு பொருந்தக்கூடிய அதிகமான சாதனங்களில் ஒரே நேரத்தில் அதிகமான தலைப்புகளை ஸ்ட்ரீம் செய்யலாம். Amazon Prime Video -ஐ ஸ்ட்ரீம் செய்ய நீங்கள் பயன்படுத்தக்கூடிய சாதனங்களின் எண்ணிக்கையின் மீதான கட்டுப்பாடுகள் பிராந்தியத்திற்கு பிராந்தியம் மாறுபடலாம். இந்த வரம்புகளைப் பற்றி மேலும் அறிய, உங்கள் இருப்பிடத்திற்குரிய உதவிப் பக்கத்தைப் பார்க்கவும்.
    • பதிவிறக்கம் செய்தல்: இந்த வீடியோக்களில் பல உங்களுடைய செயல்படக்கூடிய Android அல்லது iOS சாதனத்தில் தற்காலிமாக பதிவிறக்கம் செய்து கொள்ள கிடைக்கின்றன. ஒரு வீடியோவைப் பதிவிறக்கம் செய்வதற்கான அறிவுரைகள் பின்வரும் இணைப்பில் கிடைக்கப்பெறுகின்றன, PrimeVideo.com (சாதனத்தின் பொருந்தக்கூடிய தன்மை இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும்). ஒவ்வொரு Prime Video மொபைல் பதிப்பின் தலைப்புக்கான விவரப் பக்கமும் பதிவிறக்கத்திற்கான தலைப்பு கிடைக்கிறதா என்பதைக் குறிப்பிடுகிறது கிடைக்கப்பெறும் தலைப்புகளை நீங்கள் தனியொரு ஆண்டராய்டு அல்லது iOS சாதனத்தில் ஒரு தடவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நீங்கள் ஒரு தலைப்பை தனியொரு மொபைல் சாதனத்திற்கு ஏற்கனவே பதிவிறக்கம் செய்திருந்தால், அதை மற்றொரு சாதனத்திற்கு பதிவிறக்கம் செய்ய அதை நீங்கள் அந்த மொபைல் சாதனத்திலிருந்து அவசியம் நீக்க வேண்டும். ஒரு நேரத்தில் பதிவிறக்கம் செய்ய இயலும் அதிகபட்ச தலைப்புகளின் எண்ணிக்கையை நாங்கள் அமைவு செய்துள்ளோம், இது நாடு மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து வேறுபடக்கூடும். Prime Video மொபைல் பதிப்புகளின் அனைத்து தலைப்புகளும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கப்பெறாது என்ற போதிலும், அதே வீடியோக்கள் Amazon Prime Videoவிலிருந்து வாடகைக்கோ அல்லது வாங்குவதற்கோ கிடைக்கப்பெறும், இவற்றை பொருந்தக்கூடிய சாதனங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.
  • பார்க்கும் காலம்: Prime அல்லது Prime Videoவின் விவரப் பக்கத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்ட எந்த வீடியோவையும் நீங்கள் ஸ்ட்ரீம் செய்யலாம் அல்லது மீண்டும் ஸ்டிரீம் செய்யலாம். பதிவிறக்கம் செய்யப்படும் வீடியோக்களுக்கு, அவற்றை நீங்கள் பதிவிறக்கம் செய்த பிறகு அதைப் பார்க்கத் தொடங்க உங்களுக்குப் பொதுவாக 30 நாட்கள் கிடைக்கும் மற்றும் அதை நீங்கள் பார்க்க ஆரம்பித்தவுடன் அதை நீங்கள் பொதுவாக 48 மணி நேரத்திற்குள் பார்த்து முடிக்க வேண்டும். உங்களுடைய Prime Video கைபேசிப் பதிப்பின் சந்தா காலாவதியான பின்பு அல்லது ரத்து செய்யப்பட்ட பின்பு, நீங்கள் தலைப்பை வாடகைக்கு அல்லது விலைக்கு வாங்காத பட்சத்தில் அல்லது மீண்டும் சந்தா செலுத்தாத பட்சத்தில் உங்களுடைய Prime Video கைபேசிப் பதிப்பு சந்தா வழியாக கிடைக்கப்பெறும் எந்த வீடியோவையும் உங்களால் பார்க்க முடியாது.

மூன்றாம் தரப்பு கூடுதல் வீடியோ சந்தாக்கள்

  • பார்ப்பதற்கான வழிகள்:
    • ஸ்ட்ரீமிங்: உங்கள் பகுதியில் நாங்கள் வழங்கும் மூன்றாம் தரப்பு கூடுதல் சந்தாக்களுக்கு நீங்கள் தனி சந்தா கட்டணத்தில் குழுசேரலாம் மற்றும் தலைப்பு விவரப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அந்த சந்தாவின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யலாம். உங்களுடைய இணைய உலாவி மற்றும் இணையம் மூலம் இணைக்கப்பட்ட பொருந்தக்கூடிய தொலைக்காட்சிப் பெட்டிகள், Blu-ray player -கள், செட்-டாப் பாக்ஸ்கள், Fire tablet -கள் மற்றும் பொருந்தக்கூடிய பிற சாதனங்கள் வழியாக நீங்கள் மூன்றாம் தரப்பு கூடுதல் சந்தாத் தலைப்புகளை ஸ்ட்ரீம் செய்யலாம். பொருந்தக்கூடிய சாதனங்களின் பட்டியலுக்கு, பின்வரும் இணைப்புகளில் Amazon Prime Video வை அணுக நீங்கள் பயன்படுத்தும் இணையதளத்தில் உள்ள பொருந்தக்கூடிய சாதனங்கள் என்ற பக்கத்தைப் பார்க்கவும், PrimeVideo.com, Amazon.com, Amazon.co.uk, Amazon.de அல்லது Amazon.co.jp(சாதனத்தின் பொருந்தக்கூடிய தன்மை இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும்). ஒரு Amazon கணக்கைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் மூன்று தலைப்புகள் (Amazon Prime அல்லது Prime Video சந்தாவுடன் கிடைக்கும் Prime Video தலைப்புகள் உட்பட) வரை நீங்கள் ஸ்ட்ரீம் செய்து கொள்ளலாம். பெரும்பாலான மூன்றாம் தரப்பு கூடுதல் வீடியோ சந்தாக்களுக்கு, நீங்கள் ஒரு தலைப்பை ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சாதனத்தில் ஸ்ட்ரீம் செய்ய முடியாது. சில மூன்றாம் தரப்பு கூடுதல் சந்தாக்களுக்கு சந்தா செலுத்த Amazon Prime அல்லது Prime Video மெம்பர்ஷிப் தேவைப்படலாம்.
    • பதிவிறக்கம் செய்தல்: பல மூன்றாம் தரப்பு கூடுதல் வீடியோ சந்தா தலைப்புகளும் Fire tablet -கள் (1வது தலைமுறை கிண்டில் ஃபயரைத் தவிர) மற்றும் Android மற்றும் iOS சாதனங்கள் போன்ற பொருந்தக்கூடிய சாதனங்களில் தற்காலிகமாக பதிவிறக்கம் செய்யவும் கிடைக்கப்பெறுகின்றன. பதிவிறக்கம் செய்யும் வசதி கொண்ட பொருந்தக்கூடிய சாதனங்களின் பட்டியலுக்கு, பின்வரும் இணைப்புகளில் Amazon Prime Video -ஐ அணுக நீங்கள் பயன்படுத்தும் இணையதளத்தில் உள்ள Prime Video தலைப்புகளைப் பதிவிறக்கம் செய்தல் என்ற பக்கத்தைப் பார்க்கவும், PrimeVideo.com, Amazon.com, Amazon.co.uk, Amazon.de அல்லது Amazon.co.jp (சாதனத்தின் பொருந்தக்கூடிய தன்மை இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும்). ஒவ்வொரு மூன்றாம் தரப்பு கூடுதல் வீடியோ சந்தா தலைப்புக்கும் உரிய விவரப் பக்கமானது அந்தத் தலைப்பு பதிவிறக்கம் செய்ய கிடைக்கப்பெறுகிறதா என்பதைக் குறிப்பிடுகிறது. கிடைக்கப்பெறும் தலைப்புகளை நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களில் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். நீங்கள் இரண்டு சாதனங்களில் ஒரு தலைப்பை ஏற்கனவே பதிவிறக்கம் செய்திருந்தால், மற்றொரு சாதனத்தில் அதை பதிவிறக்கம் செய்வதற்கு முன்பாக அவற்றில் ஒன்றிலிருந்து அதை நீங்கள் நீக்க வேண்டும். உங்களுடைய Amazon கணக்குடன் தொடர்புடைய அனைத்து சாதனங்களிலும் Prime அல்லது Prime Video மற்றும் மூன்றாம் தரப்பு கூடுதல் வீடியோ சந்தா தலைப்புகள் வழியாக ஒரேநேரத்தில் பதிவிறக்கம் செய்ய இயலும் அதிகபட்ச தலைப்புகளின் எண்ணிக்கையை நாங்கள் அமைவு செய்துள்ளோம். இது உங்களுடைய இருப்பிடத்தையும், மற்ற காரணிகளையும் பொறுத்து வேறுபடக்கூடும். அனைத்து மூன்றாம் தரப்பு கூடுதல் வீடியோ சந்தா தலைப்புகளும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கப்பெறுவதில்லை என்றாலும், அதே வீடியோக்கள் Amazon Prime Video -இல் வாடகைக்கு அல்லது விலைக்கு வாங்குவதற்கு கிடைக்கப்பெறக்கூடும், பின்னர் அவற்றை பொருந்தக்கூடிய சாதனங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
  • பார்க்கும் காலம்: பொருந்தக்கூடிய மூன்றாம் தரப்பு கூடுதல் சந்தாவுக்கான விவரப் பக்கத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்ட எந்த வீடியோவையும் நீங்கள் ஸ்ட்ரீம் செய்யலாம் அல்லது மீண்டும் ஸ்ட்ரீம் செய்யலாம். பதிவிறக்கம் செய்யப்படும் வீடியோக்களுக்கு, அவற்றை நீங்கள் பதிவிறக்கம் செய்த பிறகு அதைப் பார்க்கத் தொடங்க உங்களுக்குப் பொதுவாக 30 நாட்கள் கிடைக்கும் மற்றும் அதை நீங்கள் பார்க்க ஆரம்பித்தவுடன் அதை நீங்கள் பொதுவாக 48 மணி நேரத்திற்குள் பார்த்து முடிக்க வேண்டும். உங்களுடையை மூன்றாம் தரப்பு கூடுதல் வீடியோவுக்கான சந்தா காலாவதி ஆனவுடன் அல்லது ரத்து செய்யப்பட்டவுடன் அந்த தலைப்புகளை நீங்கள் வாடக்கைக்கோ அல்லது விலைக்கோ வாங்காத பட்சத்தில் அல்லது அதற்கு மீண்டும் சந்தா செலுத்தாத பட்சத்தில் உங்களுடைய மூன்றாம் தரப்பு கூடுதல் சந்தா வழியாக கிடைக்கப் பெறும் எந்த வீடியோவையும் நீங்கள் பார்க்க முடியாது.

இலவச வீடியோக்கள்

  • பார்ப்பதற்கான வழிகள்: எங்கெல்லாம் கிடைக்கப்பெறுகிறதோ அங்கெல்லாம், ஊக்குவிப்புச் சலுகையின் ஒரு பாகமாக அல்லது விளம்பரங்களுடன் இலவசமாக கிடைக்கப்பெறும் வீடியோக்கள் பொருந்தக்கூடிய சாதனங்களில் ஸ்ட்ரீமிங் செய்ய மட்டுமே கிடைக்கப்பெறுகின்றன. பதிவிறக்கம் செய்வதற்காக அவை கிடைக்கப்பெறுவதில்லை. ஒரே Amazon கணக்கைப் பயன்படுத்தி நீங்கள் ஒரே நேரத்தில் மூன்று வீடியோக்கள் வரை ஸ்ட்ரீம் செய்ய முடியும். ஒரே வீடியோவை ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களில் உங்களால் ஸ்ட்ரீம் செய்ய முடியாது. இந்த வீடியோக்கள் பதிவிறக்கம் செய்ய கிடைக்கப்பெறாதபோது, இதே வீடியோக்கள் Amazon Prime Video வழியாக வாங்கவோ அல்லது வாடகைக்கோ அல்லது தற்காலிக பதிவிறக்கம் செய்யவோ கிடைக்கப்பெறுகின்றன. வாங்கப்பட்ட அல்லது வாடகைக்கு எடுக்கப்பட்ட தலைப்புகளும், சந்தா செலுத்தப்பட வேண்டிய பல தலைப்புகளும் பொருந்தக்கூடிய சாதனங்களுக்குப் பதிவிறக்கம் செய்யப்பட முடியும். பொருந்தக்கூடிய சாதனங்களின் பட்டியலுக்கு, பின்வரும் இணைப்புகளில் Amazon Prime Video வை அணுக நீங்கள் பயன்படுத்தும் இணையதளத்தில் உள்ள பொருந்தக்கூடிய சாதனங்கள் என்ற பக்கத்தைப் பார்க்கவும்,PrimeVideo.com, Amazon.com, Amazon.co.uk, Amazon.deஅல்லது Amazon.co.jp (சாதனத்தின் பொருந்தக்கூடிய தன்மை இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும்).
  • பார்க்கும் காலம்: உங்களிடம் Amazon கணக்கு இருந்தால், விவரப்பக்கத்தில் இலவசம் என அறிவிக்கப்பட்ட வீடியோவை எந்த நேரத்திலும் இலவசமாக பார்க்க நீங்கள் தகுதி பெறக்கூடும்.

ஒரு தடவை பார்ப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டிய வீடியோக்கள்

  • பார்ப்பதற்கான வழிகள்: ஒரு தடவை பார்ப்பதற்காக கட்டணம் செலுத்த வேண்டிய ஒரு வீடியோவை நீங்கள் வாங்கும் போது அந்த வீடியோவை உங்களுடைய இணைய உலாவி மற்றும் இணையம் மூலம் இணைக்கப்பட்ட பொருந்தக்கூடிய தொலைக்காட்சிப் பெட்டிகள், புளூ-ரே பிளேயர்கள், செட்-டாப் பாக்ஸ்கள், ஃபயர் டேப்லெட்கள் மற்றும் பொருந்தக்கூடிய பிற சாதனங்கள் வழியாக நீங்கள் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யலாம். எங்களுடைய சேவைகளுடன் பொருந்தக்கூடிய சாதனங்களின் ஒரு பட்டியலுக்கு, பின்வரும் இணைப்புகளில் நீங்கள் Amazon Prime Videoவை அணுகப் பயன்படுத்தும் இணையதளத்தின் பொருந்தக்கூடிய சாதனங்கள் என்ற பக்கத்தைப் பார்க்கவும், PrimeVideo.com, Amazon.com, Amazon.co.uk, Amazon.de அல்லது Amazon.co.jp (சாதனத்தின் பொருந்தக்கூடிய தன்மை இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடக்கூடும்). ஒரே Amazon கணக்கைப் பயன்படுத்தி நீங்கள் ஒரே நேரத்தில் மூன்று வீடியோக்கள் வரை ஸ்ட்ரீம் செய்ய முடியும். ஒவ்வொரு முறை பார்ப்பதற்கும் கட்டணம் செலுத்த வேண்டிய பெரும்பாலான மூன்றாம் தரப்பு வீடியோக்களைப் பொறுத்தவரை, நீங்கள் ஒரு வீடியோவை ஒரே நேரத்தில் ஒரு சாதனத்தில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்ய முடியும்.
  • பார்க்கும் காலம்: ஒவ்வொரு முறை பார்ப்பதற்கும் கட்டணம் செலுத்த வேண்டிய வீடியோக்களைப் பொறுத்தவரை, Amazon Prime Videoவில் ஒவ்வொரு முறை பார்ப்பதற்கும் கட்டணம் செலுத்தும் நிகழ்ச்சியானது முதல்முறையாகக் காட்சிப்படுத்தப்படுவது முடிவடைவதைத் தொடந்து குறைந்தபட்சமாக 24 மணிநேரம் வரை அந்த வீடியோவிற்கான அணுகல் உங்களுக்கு இருக்கும். Amazon Prime Videoவில் முதன்முறையாக வீடியோ காட்சிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஒரு தடவை பார்ப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டிய வீடியோவை நீங்கள் தொடர்ந்து அணுக இயலும் காலத்தின் அளவை விவரப்பக்கத்திலோ அல்லது விவரப்பக்கத்தில் உள்ள இணைப்பிலோ பார்க்கலாம்.