


PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது
எப்பிசோடுகள்
சீ1 எ1 - காடு
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்28 மார்ச், 201948நிமிஒரு ரகசிய ரோமேனிய தளத்திலிருந்து குழந்தை ஹானாவை எரிக் ஹெல்லர் காப்பாற்றி 15 வருடத்துக்கு பின், அவர்கள் போலந்து உள்காட்டில் வசிக்கிறார்கள். எரிக் ஹானாவுக்கு கொலை செய்ய, வேட்டையாட கற்றுக்கொடுக்கிறான். இருந்தாலும், தனி உலகின் எல்லையை கடக்கும் முயற்சியில், வீட்டை விட்டு வெளியேறுகிறாள். இது ஹானா பிறந்தது முதல் அவளை தேடும் சிஐஏ அதிகாரி மரிசா வீக்ளர் கவனத்துக்கு வருகிறது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ2 - நண்பர்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்28 மார்ச், 201948நிமிமரிசாவின் ஆட்கள் அவளை பிடித்தவுடன், ஹானா மொராக்கோ சிஐஏ ஃபெசிலிடியிலிருந்து தப்பித்து எரிக்கை பெர்லினில் சந்திக்க வேண்டும். வழியில், தன் குடும்பத்தோடு விடுமுறைக்கு வந்த பிரிட்டனை சேர்ந்த இளம் சோஃபியை சந்திக்கிறாள். அத்தொடர்பு அவளுக்கு முதல் முறை எதார்த்த உலகும், இளம்பருவ சந்தோஷத்தையும் உணரத்துகிறது. இந்த எதார்த்தங்களை ரசிக்கும் போதும், மரிசா மற்றும் அவளது குழுவின் அச்சுறுத்தல் விடாமல் தொடர்கிறது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ3 - நகரம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்28 மார்ச், 201955நிமிஹானாவும், எரிக்கும் பெர்லினில் சந்திக்கிறார்கள். அங்கே அவர்கள் பழைய ராணுவ நண்பர்களோடு தங்கும் போது ஹானா தனது அப்பாவின் கடந்த காலம் பற்றி தெரிந்து கொள்கிறாள். இருந்தாலும், ஹானா சோஃபியோடு தான் ரசித்த எதார்த்த வாழ்வின் சுவாரஸ்யங்களை விரும்பினாள். அவள் அப்பா அவள் மேல் விதித்த கட்டுப்பாடுகளை வெறுத்தாள். மரிசா அவர்களை நெருங்கி வருவதை அறிந்ததும், எரிக்கும் நண்பர்களும் தாக்குதலுக்கு தயார் ஆகிறார்கள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ4 - அப்பா
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்28 மார்ச், 201957நிமிஎரிக் மரிசாவை கைதியாக வைக்கிறார். ஹானாவையும், அவனையும் பாதுகாப்பாக பெர்லின் கொண்டு சேர்க்க பேரம் பேசுகிறான். இதற்கிடையே, டீட்டரோடும், அவன் குடும்பத்தோடும் ஹானா மறைந்து இருக்கிறாள். தன் தந்தையின் கடந்த காலத்தை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தன் வாழ்வில் நடந்த பெரிய ரகசியத்தை தெரிந்து கொள்கிறாள் ஹானா. தப்பிப்பதற்கான வழி பிறக்கும் போது, மரிசாவும் தப்பிக்க முயற்சிக்கிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ5 - ஊர்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்28 மார்ச், 201955நிமிஎரிக்கை பற்றிய உண்மையை உணர்ந்து கொண்ட பிறகு, ஹானா சோஃபியோடு லண்டனின் புறநகர் பகுதியில் தங்குகிறாள். சோஃபி தன் புது தோழியை தன் பெற்றோருக்கு தெரியாமல் பாதுகாக்கிறாள். சோஃபி ஹானாவை குமரி பருவ குதூகலத்தை உணர ஒரு பள்ளி கொண்டாட்டத்துக்கு வற்புறுத்தி கூட்டி போகிறாள். இதற்கிடையே, தப்பிக்க முயன்று உயிருக்கு ஆபத்தான காயங்கள் கொண்ட எரிக்கை நண்பர்கள் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ6 - அம்மா
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்28 மார்ச், 201952நிமிஆன்டன் மேல் கொண்ட பொதுவான விருப்பம் சோஃபிக்கும் ஹானாவுக்கு இடையே கசப்பை உருவாக்குகிறது. இவ்வாக்குவாதத்தின் விளைவாக, ஹானாவின் தாய் என்று சொல்லி மரிசா சோஃபியின் வீட்டுக்கு வருகிறாள். சோஃபியின் குடும்பத்தை ஆபத்துக்கு உள்ளாக்குவதா அல்லது தன் சொந்த சுதந்திரத்தை மரிசாவிடம் பரிகொடுப்பதா என்று தீர்மானம் எடுக்க தடுமாறுகிறாள் ஹானா. இதற்கிடையே, பிடிபட்ட எரிக்கை சாயரும் ஆட்களும் கொடூரமாக விசாரிக்கிறார்கள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ7 - சாலை
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்28 மார்ச், 201951நிமிஹானா உண்மையை தவிர வேறு எதையும் ஏற்க மாட்டாள் என்று முழுதாக புரிந்த பிறகு, எரிக் அவளின் கடந்த காலத்தை பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள அவளை மறுபடி ரோமேனியா கூட்டி போகிறார். இதற்கிடையே, சாயர் தன்னிடம் யூட்ராக்ஸ் பற்றிய முழு உண்மையை சொல்லவில்லை என்ற புரிதல் மரிசாவுக்கு வருகிறது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ8 - யூட்ராக்ஸ்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்28 மார்ச், 201949நிமிஎரிக் யூட்ராக்ஸ் பற்றிய உண்மையை ஹானாவிடம் சொன்னதும், அவள் செயல்படத் தீர்மானிக்கிறாள். இதற்கிடையே, அந்த ஃபெசிலிடியில் என்ன நடக்கிறது என்ற உண்மையை மரிசா சாயரிடமிருந்து தெரிந்து கொள்ள முயற்சிக்கிறாள்.இலவசமாகப் பாருங்கள்