Prime Video
  1. உங்கள் கணக்கு

உதவி

Amazon Prime Video பயன்பாட்டு விதிமுறைகள்

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்ட தேதி: 19 அக்டோபர் 2023

Amazon Prime Video-விற்கான பயன்பாட்டு விதிமுறைகளுக்கு உங்களை வரவேற்கிறோம். இந்த விதிமுறைகள் உங்களுக்கும் Amazon Prime Video சேவையை உங்களுக்கு வழங்கும் நிறுவனத்துக்கும் இடையிலானவை. உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து, சேவை வழங்கும் நிறுவனம் என்பது Amazon.com Services LLC, Amazon Digital UK Limited அல்லது அதன் துணை நிறுவனங்களில் ("Amazon", " நாங்கள்" அல்லது "எங்கள்") ஒன்றாக இருக்கலாம். Amazon Prime Video சேவையை உங்களுக்கு வழங்கும் Amazon துணை நிறுவனத்தையும், உங்கள் இருப்பிடத்தின் அடிப்படையில் பொருந்தக்கூடிய பிற விதிமுறைகளையும் கண்டறிவதற்கு www.primevideo.com/ww-av-legal-home எனும் பக்கத்தைப் பாருங்கள். முன்னறிவிப்புடன்/முன்னறிவிப்பின்றி உங்கள் Amazon Prime Video சேவை வழங்குநர் அவ்வப்போது மாறக்கூடும் (பொருந்தக்கூடிய சட்டத்தால் தேவைப்பட்டால் தவிர). இந்த விதிமுறைகளையும் உங்களுக்குப் பொருந்தக்கூடிய தனியுரிமை அறிவிப்பு, பயன்பாட்டு நிபந்தனைகள், Amazon Prime Video பயன்பாட்டு விதிகள், Amazon Prime Video சேவை தொடர்பான மற்ற அனைத்து விதிகள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றையும் படித்துப் பாருங்கள் (Amazon Prime Video சேவைக்கான எந்த ஒரு தயாரிப்பின் விவரப் பக்கத்திலோ ஏதேனும் உதவிப் பக்கத்திலோ வேறு தகவல் பக்கத்திலோ குறிப்பிடப்பட்டிருக்கும் விதிகள் அல்லது பயன்பாட்டு வழிவகைகளும் இன்ன பிறவும் இதிலடங்கும்) (மொத்தமாக, இந்த "ஒப்பந்தம்" ஆகும்). நீங்கள் யுனைடெட் கிங்டம், ஐரோப்பிய ஒன்றியம் அல்லது பிரேசிலில் இருந்தால் தனியுரிமை அறிவிப்பு, குக்கீகள் தொடர்பான அறிவிப்பு, ஆர்வங்களின் அடிப்படையிலான விளம்பரங்கள் தொடர்பான அறிவிப்பு ஆகியவை உங்கள் ஒப்பந்தத்தின் பகுதியாக இருக்காது. உங்களுக்குப் பொருந்தக்கூடிய இந்தக் கொள்கைகள் மற்றும் அறிவிப்புகளின் பதிப்புகளை நீங்கள் படித்துப் பார்த்து, உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எப்படிக் கையாளுகிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். Amazon Prime Video சேவைக்கு ஒவ்வொரு முறை நீங்கள் வருகை தரும்போதும், அதில் உலாவும்போதும், அதைப் பயன்படுத்தும்போதும், உங்கள் சார்பாகவும் உங்கள் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பாகவும், உங்கள் கணக்கின் கீழ் இச்சேவையைப் பயன்படுத்தும் மற்றவர்கள் சார்பாகவும் இந்த ஒப்பந்தத்தை நீங்கள் ஏற்கிறீர்கள்.

1. சேவை

Amazon Prime Video ("சேவை") என்பது ஒரு தனிப்பட்ட சேவையாகும். இந்த ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டுள்ளவாறு, இந்தச் சேவை டிஜிட்டல் திரைப்படங்கள், டிவி ஷோக்கள், பிற வீடியோ உள்ளடக்கம் (ஒட்டுமொத்தமாக, "டிஜிட்டல் உள்ளடக்கம்") மற்றும் பிற சேவைகளை வழங்குகிறது, பரிந்துரைக்கிறது, கண்டறிய உதவுகிறது. இந்தச் சேவையையும் டிஜிட்டல் உள்ளடக்கத்தையும் Amazon Prime உள்ளிட்ட பல வழிகளில் அணுகலாம். பிற Prime பலன்கள் மற்றும் Amazon சேவைகள் சார்ந்த உங்கள் பயன்பாடு தனி விதிமுறைகளால் நிர்வகிக்கப்படுகிறது. அந்தச் சேவைகளை அணுக நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸ், இணையதளங்கள் அல்லது சாதனங்களில் அந்த விதிமுறைகளை நீங்கள் பார்க்கலாம். நீங்கள் 18 வயதுக்குட்பட்டவராக (அல்லது உங்கள் நாட்டில் வயதுவந்தோராகக் கருதப்படுவதற்குரிய வயதுக்கு உட்பட்டவராக) இருந்தால், உங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் துணையுடன் மட்டுமே இந்தச் சேவையைப் பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு ஆர்வமான டிஜிட்டல் உள்ளடக்கம், அம்சங்கள் மற்றும் சேவைகளின் பரிந்துரைகளைக் காட்டுவது உட்பட இந்தச் சேவைகளின் ஒரு பகுதியாக உள்ளடக்கம் மற்றும் அம்சங்களை நாங்கள் பிரத்தியேகமாக்குவோம். Amazon சாதனங்களையும் சேவைகளையும் அவற்றுடனான உங்கள் அனுபவத்தையும் தொடர்ந்து மேம்படுத்தவும் நாங்கள் முயற்சித்து வருகிறோம்.

2. இணக்கமான சாதனங்கள்

டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீமிங் செய்ய அல்லது பதிவிறக்க, நாங்கள் அவ்வப்போது உருவாக்கும் சிஸ்டம் மற்றும் இணக்கத்தன்மைத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் கம்ப்யூட்டர், போர்ட்டபிள் மீடியா பிளேயர் அல்லது வேறு சாதனத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும் ("இணக்கமான சாதனம்" ). எந்தெந்தச் சாதனங்கள் ஆதரிக்கப்படுகின்றன என்பது குறித்த கூடுதல் தகவல்களை இங்கே பார்க்கலாம்: அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், ஜெர்மனி, ஜப்பான், மற்ற அனைத்து நாடுகள். சில இணக்கமான சாதனங்கள் டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீமிங் செய்ய மட்டும் பயன்படுத்தப்படலாம், இன்னும் சில சாதனங்கள் அவற்றைப் பதிவிறக்க மட்டும் பயன்படுத்தப்படலாம், மற்றும் சில சாதனங்கள் அவற்றை ஸ்ட்ரீமிங் செய்யவும் பதிவிறக்கவும் பயன்படுத்தப்படலாம். இணக்கமான சாதனங்களுக்கான தேவைகளை நாங்கள் அவ்வப்போது மாற்றக்கூடும். சில சூழல்களில் ஒரு சாதனத்தின் இணக்கத்தன்மை (அல்லது இணங்கத்தக்கதாக இருப்பது), சாதன உற்பத்தியாளர் அல்லது பிற மூன்றாம் தரப்பினர் வழங்கும்/பராமரிக்கும் மென்பொருள் அல்லது சிஸ்டங்களைப் பொருத்து அமையும். எனவே, ஒரு காலத்தில் இணக்கத்தன்மை உடைய சாதனங்கள் எதிர்காலத்தில் இணக்கத்தன்மையை இழக்கக்கூடும். Amazon Prime Video மொபைல் ஆப்ஸை உங்களுக்கு வழங்கும் Amazon நிறுவனமும் உங்களுக்குச் சேவையை வழங்கும் Amazon நிறுவனமும் வெவ்வேறு நிறுவனங்களாக இருக்கலாம்.

3. புவியியல் வேறுபாடு

உள்ளடக்க வழங்குநர்கள் விதிக்கும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளாலும் பிற கட்டுப்பாடுகளாலும், குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே சேவை கிடைக்கிறது. டிஜிட்டல் உள்ளடக்கமும் (டிஜிட்டல் உள்ளடக்கத்தின் சப்டைட்டில் சேர்க்கப்பட்டு டப்பிங் செய்யப்பட்ட ஆடியோ பதிப்புகள் உட்பட) உங்களுக்கு டிஜிட்டல் உள்ளடக்கத்தை நாங்கள் வழங்கும் விதமும் காலத்துக்கேற்றவாரும் இருப்பிடத்திற்கேற்றவாரும் மாறுபடும். புவியியல் ரீதியான உங்கள் இருப்பிடத்தைச் சரிபார்ப்பதற்கான தொழில்நுட்பங்களை Amazon பயன்படுத்தும். உங்கள் இருப்பிடத்தை மறைக்க அல்லது மாற்றிக்காட்ட நீங்கள் எந்தவொரு தொழில்நுட்பத்தையோ உத்தியையோ பயன்படுத்தக்கூடாது.

4. டிஜிட்டல் உள்ளடக்கம்

a. பொது. இந்தச் சேவை இவற்றுக்கு உங்களை அனுமதிக்கலாம்: (i) சந்தா செலுத்தும் குறுகிய காலத்திற்குச் சந்தா அடிப்படையில் டிஜிட்டல் உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு அணுகல் வழங்குதல் (உதாரணமாக, Amazon Prime, வேறு சந்தா அல்லது தனி வீடியோ சந்தா மூலம்) ("சந்தா டிஜிட்டல் உள்ளடக்கம்"), (ii) குறுகிய காலத்திற்கு டிஜிட்டல் உள்ளடக்கத்தை விருப்பப்படி பார்ப்பதற்காக வாடகைக்கு எடுத்தல் ("வாடகை டிஜிட்டல் உள்ளடக்கம்"), (iii) காலவரம்பின்றி டிஜிட்டல் உள்ளடக்கத்தை விருப்பப்படி பார்ப்பதற்காக வாங்குதல் ("வாங்கிய டிஜிட்டல் உள்ளடக்கம்"), (iv) குறுகிய காலத்திற்கு ஒவ்வொரு முறையும் பார்ப்பதற்கான கட்டணம் செலுத்தும் முறையில் டிஜிட்டல் உள்ளடக்கத்தை வாங்குதல் (“PPV டிஜிட்டல் உள்ளடக்கம்”), மற்றும்/அல்லது (v) இலவசமாக, விளம்பரதாரர் வழங்கும் அல்லது விளம்பர அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பார்க்க டிஜிட்டல் உள்ளடக்கத்தை அணுகுதல் (“இலவச டிஜிட்டல் உள்ளடக்கம்”). டிஜிட்டல் உள்ளடக்கம் என்பது சந்தா டிஜிட்டல் உள்ளடக்கம், வாடகை டிஜிட்டல் உள்ளடக்கம், வாங்கிய டிஜிட்டல் உள்ளடக்கம், PPV டிஜிட்டல் உள்ளடக்கம், இலவச டிஜிட்டல் உள்ளடக்கம் ஆகியவற்றில் ஏதேனுமொரு உள்ளடக்கமாகவோ கூட்டு உள்ளடக்கமாகவோ கிடைக்கக்கூடும். இந்த ஒவ்வொரு உள்ளடக்கமும் கீழே வழங்கப்பட்டுள்ள வரம்பிடப்பட்ட உரிமத்துக்கு உட்பட்டது.

b. பயன்பாட்டு விதிகள். டிஜிட்டல் உள்ளடக்கத்தை நீங்கள் பயன்படுத்துவது Amazon Prime Video பயன்பாட்டு விதிகளுக்கு ("பயன்பாட்டு விதிகள்") உட்பட்டதாகும். பயன்பாட்டு விதிகள் முக்கியமான தகவல்களை வழங்கும். பல்வேறு வகையான டிஜிட்டல் உள்ளடகத்தைப் பார்ப்பதற்கு நீங்கள் அனுமதிக்கப்படும் காலகட்டம் ( "பார்வைக் காலம்") மற்றும் ஒவ்வொரு வகையான டிஜிட்டல் உள்ளடக்கமும் பதிவிறக்கப்படக்கூடிய, ஸ்ட்ரீமிங் செய்யப்படக்கூடிய, பார்க்கப்படக்கூடிய இணக்கமான சாதனங்களின் எண்ணிக்கை மற்றும் வகை மீதான கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை அதிலடங்கும்.

c. சந்தாக்கள்/மெம்பர்ஷிப்கள். சந்தாக்களுக்கான சலுகைகள் மற்றும் விலை நிர்ணயம் (சில நேரங்களில் மெம்பர்ஷிப்களாகக் குறிப்பிடப்படுகின்றன), சந்தா சேவைகள், சந்தா டிஜிட்டல் உள்ளடக்கம் கிடைக்கும் அளவு, சந்தா சேவைகள் மூலம் கிடைக்கும் குறிப்பிட்ட தலைப்புகள் ஆகியவை காலப்போக்கிலும், இருப்பிடத்தின் அடிப்படையிலும் முன்னறிவிப்பின்றி மாறக்கூடும் (பொருந்தும் சட்டத்தின்படி தேவைப்பட்டால் தவிர). வேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டால் தவிர, கட்டண மாற்றங்கள் (இருக்கும்பட்சத்தில்) அடுத்த சந்தா காலத்தின் தொடக்கம் முதல் அமலுக்கு வரும். சந்தா மாற்றத்தை நீங்கள் ஏற்கவில்லை எனில், கீழுள்ள பிரிவு 4(d) இன் படி உங்கள் சந்தாவை ரத்துசெய்யலாம். சந்தாக்கள் அல்லது மெம்பர்ஷிப்களுக்கான கட்டணத்தில் VAT மற்றும்/அல்லது பிற வரிகள் சேர்க்கப்பட்டிருக்கலாம். பொருத்தக்கூடிய சூழல்களில், இந்தச் சேவையைப் பெற யாருக்குப் பணம் செலுத்துகிறீர்களோ அவர்கள் இத்தகைய வரிகளை விதிக்கக்கூடும். அது Amazon நிறுவனமாகவோ ஒரு மூன்றாம் தரப்பாகவோ இருக்கலாம். ஏதேனும் சந்தாவில் குறிப்பிட்ட சந்தா டிஜிட்டல் உள்ளடக்கத்தின் கிடைக்கும் நிலை தொடர்பாகவோ கிடைக்கும் சந்தா டிஜிட்டல் உள்ளடக்கத்தின் குறைந்தபட்சக் கட்டணம் தொடர்பாகவோ நாங்கள் எந்த உத்திரவாதமும் அளிப்பதில்லை. ஒரு சந்தாவுக்குப் பொருந்தக்கூடிய கூடுதல் விதிமுறைகள் (பொருந்தக்கூடிய ரத்துசெய்தல் மற்றும் பணத்தைத் திரும்பபெறுதல் கொள்கை போன்றவை), இங்கே குறிப்பிடப்பட்டுள்ள உங்கள் இருப்பிடத்துக்கான முதன்மைச் சேவை இணையதளத்தில் அந்த சந்தாவுக்கான தகவல் பக்கங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் (உங்கள் "வீடியோ மார்க்கெட்ப்ளேஸ்" ).

நாங்கள் வழங்கும் சில சந்தா சேவைகள் மூன்றாம் தரப்பைச் சார்ந்தவை. சந்தா சேவைகளை வழங்கும் மூன்றாம் தரப்பினர் (உதாரணத்திற்கு, Prime Video சேனல்கள் மூலம்) தங்கள் சேவைகளின் அம்சங்களையோ சேவைகளிலுள்ள உள்ளடக்கத்தையோ மாற்றக்கூடும் அல்லது நிறுத்தக்கூடும். எந்தவொரு மூன்றாம் தரப்புச் சந்தா சேவையிலும் உள்ள உள்ளடக்கத்திற்கோ அல்லது அந்தச் சேவைகளின் அம்சங்களுக்கோ Amazon பொறுப்பாகாது.

நீங்கள் ஜெர்மனி அல்லது ஆஸ்திரியாவில் வசித்தால் (அல்லது பிற காரணங்களுக்காக ஜெர்மன் அல்லது ஆஸ்திரிய சட்டம் பொருந்தினால்), இந்த பிரிவு 4 (c) இல் உள்ள வாக்கியம் 1 பொருந்தாது மற்றும் அதற்குப் பதிலாக இந்த பிரிவு 4 (c) இல் உள்ள மற்றவை இதற்குப் பொருந்தும் எங்களுக்கு ஏற்படும் கட்டண அதிகரிப்பு மற்றும்/அல்லது கட்டணச் சேமிப்புகள், நீங்கள் சந்தா செலுத்தியிருக்கும் சேவையின் செலவுகளை பாதிக்கலாம் என்பதால், சந்தாக் கட்டணம் அல்லது மெம்பர்ஷிப் கட்டணத்தை நாங்கள் அதிகரிக்கக்கூடும் மற்றும் குறைக்கக்கூடும் (ஒவ்வொன்றும் "மாற்றம்" என்றும், மொத்தமாக "சந்தாக் கட்டணத்திற்கான மாற்றங்கள்" அல்லது "மெம்பர்ஷிப் கட்டணத்திற்கான மாற்றங்கள்"என்றும் குறிப்பிடப்படும்). கட்டணம் தொடர்பாக நாங்கள் பரிசீலிக்கும் குறிப்பிட்ட காரணிகள்: உள்ளடக்கத்தின் உற்பத்தி, உரிமம், கையகப்படுத்தல் மற்றும் விநியோகம் தொடர்பான கட்டணங்கள்; தேவையான வன்பொருள், மென்பொருள் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான கட்டணங்கள்; ஆற்றல் தொடர்பான கட்டணங்கள்; வெளிப்புறச் சேவை வழங்குநர்கள் தொடர்பான கட்டணங்கள்; தொழிலாளர் தொடர்பான கட்டணங்கள்; சட்டங்கள், ஒழுங்குமுறைகள், அதிகாரப்பூர்வ உத்தரவுகள் மற்றும் வரிகள் தொடர்பான கட்டணங்கள். சந்தா அல்லது மெம்பர்ஷிப் கட்டணங்கள் மொத்தத்தில் எங்கள் சொந்த செலவுகள் குறையும் அல்லது அதிகரிக்கும் அளவிற்கு மட்டுமே மாற்றப்படும். மேலும் சந்தா அல்லது மெம்பர்ஷிப் கட்டணத்தில் ஏற்படும் எந்த மாற்றமும் நாங்கள் உங்களுக்கு வழங்கும் சேவையின் மொத்தச் செலவு குறைவது அல்லது அதிகரிப்பதன் காரணமாக ஏற்படும் நிதி தாக்கத்தின் அடிப்படையில் அமையும். சேவை மற்றும் உங்கள் சந்தாக் கட்டணம் அல்லது மெம்பர்ஷிப் கட்டணத்திற்கு இடையேயான ஒப்பந்த சமநிலையை பாதிக்கும் வகையில் சந்தா கட்டணம் அல்லது மெம்பர்ஷிப் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்ய மாட்டோம். சந்தாக் கட்டணம் அல்லது மெம்பர்ஷிப் கட்டணத்தில் மாற்றம் செய்தால், மாற்றம், மாற்றத்திற்கான காரணங்கள் மற்றும் மாற்றம் நடைமுறைக்கு வரும் தேதி குறித்து எழுத்துப்பூர்வமாக (உதாரணமாக மின்னஞ்சல் மூலம்) உங்களுக்குத் தெரிவிப்போம். மாற்றம் நடைமுறைக்கு வருவதற்குக் குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு முன்பே தெரிவிப்போம். ஒப்புதல் அளித்தால் ஏற்படும் விளைவு (நீங்கள் நிராகரிக்கவில்லை என்றால்), நிராகரிப்பதற்கான காலகட்டத்தின் தொடக்கம் மற்றும் கால அளவு, மற்றும் முடித்துக் கொள்வதற்கான உங்கள் விருப்பம் ஆகியவற்றையும் நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம். நீங்கள் மாற்றத்தை நிராகரிக்கலாம் அல்லது உங்கள் சந்தா/மெம்பர்ஷிப்பை ரத்துசெய்யலாம். தகவல் கிடைத்த பிறகு 30 நாட்களுக்குள் நீங்கள் மாற்றத்தை நிராகரிக்கவில்லை என்றால், மாற்றத்திற்கு நீங்கள் ஒப்புதல் அளித்ததாகக் கருதப்படும். இந்த விதிமுறைகளின்படி சந்தாக்களிலோ மெம்பர்ஷிப்பிலோ முன்பு செய்யப்பட்ட மாற்றங்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. நீங்கள் ஜெர்மனியில் வசித்தாலோ பிற காரணங்களுக்காக உங்களுக்கு ஜெர்மன் சட்டம் பொருந்தினாலோ, அது ஜெர்மன் சிவில் கோட் பிரிவு 315 -இல் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

d. சந்தாக்கள்/மெம்பர்ஷிப்களை ரத்துசெய்தல். நீங்கள் 'வீடியோ மட்டும்' சந்தா/மெம்பர்ஷிப்பிற்கு எங்கள் மூலம் நேரடியாகப் பதிவுசெய்திருந்தால், உங்கள் கணக்கிற்குச் சென்று மெம்பர்ஷிப் அமைப்புகளைச் மாற்றுவதன் மூலமாகவோ Amazon வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்வதன் மூலமாகவோ (இங்கே குறிப்பிடப்பட்டுள்ள) உங்கள் வீடியோ மார்க்கெட்ப்ளேஸில் உள்ள ஏதேனும் ரத்துசெய்தல் படிவத்தைப் பயன்படுத்துவதன் மூலமாகவோ அதை நீங்கள் எந்த நேரத்திலும் ரத்துசெய்யலாம் அல்லது பொருந்தக்கூடிய Amazon சந்தா/மெம்பர்ஷிப்பிற்கு மூன்றாம் தரப்பினர் மூலம் பணப் பரிமாற்றம் செய்கிறீரகள் எனில், அத்தகைய மூன்றாம் தரப்புடனான உங்கள் கணக்கு மூலம் ரத்துசெய்யலாம். பதிவுசெய்த பிறகோ இலவச உபயோகத்திலிருந்து கட்டண மெம்பர்ஷிப்பாக மாற்றிய பிறகோ 3 வேலை நாட்களுக்குள் (அல்லது யுனைடெட் கிங்டம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, உங்களுடைய சந்தா/மெம்பர்ஷிப் சேவை உறுதிசெய்யப்பட்ட 14 நாட்களுக்குள்) நீங்கள் ரத்துசெய்தால், உங்கள் முழு மெம்பர்ஷிப் கட்டணத்தையும் நாங்கள் திருப்பியளிப்போம். ஆனால் அந்தக் காலகட்டத்தில் உங்கள் கணக்கு மூலம் பயன்படுத்தப்பட்ட சேவைக்கான தொகையை நாங்கள் உங்களுக்குக் கட்டணமாக விதிக்கக்கூடும் (அல்லது உங்களுக்குத் திருப்பியளிக்க வேண்டிய தொகையை நிறுத்தி வைக்கக்கூடும்). ரத்துசெய்யும் காலத்திற்குள் சேவை தொடங்கும் என்பதையும் நீங்கள் வெளிப்படையாக ஏற்றுக்கொள்கிறீர்கள். வேறு ஏதேனும் காலகட்டத்தில் நீங்கள் ரத்துசெய்தால், உங்களின் சமீபத்திய மெம்பர்ஷிப் பில்லிங்கிற்குப் பிறகு, உங்கள் 'வீடியோ மட்டும்' மெம்பர்ஷிப்பின் ஒரு பகுதியாகக் கிடைக்கும் டிஜிட்டல் உள்ளடக்கம் உங்கள் கணக்கு மூலம் அணுகப்படவில்லை என்றால் மட்டுமே உங்கள் முழு மெம்பர்ஷிப் கட்டணத்தையும் நாங்கள் திருப்பியளிப்போம். Prime மெம்பர்ஷிப்பின் ஒரு பகுதியாக நீங்கள் சேவையை அணுகுகிறீர்கள் எனில், உங்களுக்குப் பொருந்தக்கூடிய ரத்துசெய்தல் மற்றம் பணம் திரும்பப்பெறுதல் தொடர்பான விதிமுறைகள் (இங்கே குறிப்பிடப்பட்டுள்ள) உங்கள் வீடியோ மார்க்கெட்ப்ளேஸின் Prime பயன்பாட்டு விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் . ஒரு மூன்றாம் தரப்பு மூலம் பணப் பரிமாற்றம் செய்து பெறும் Amazon சந்தா/மெம்பர்ஷிப்பின் ஒரு பகுதியாக நீங்கள் சேவையை அணுகினால், அத்தகைய மூன்றாம் தரப்பினரால் வரையறுக்கப்பட்டபடி உங்களுக்குப் பொருந்தக்கூடிய ரத்துசெய்தல் மற்றும் பணம் திரும்பப்பெறுதல் தொடர்பான விதிமுறைகள் வேறுபடக்கூடும். உங்கள் சந்தாவை ரத்துசெய்யவோ அத்தகைய மூன்றாம் தரப்பின் பொருந்தக்கூடிய கொள்கைகளின் கீழ் ஏதேனும் பணத்தைத் திரும்பப்பெறவோ நீங்கள் மூன்றாம் தரப்பைத் தொடர்புகொள்ள வேண்டியிருக்கும்.

e. வாங்கிய அல்லது வாடகைக்கு எடுக்கப்பட்ட உள்ளடக்கத்திற்கான பணப் பரிமாற்றங்கள்; ரத்துசெய்தல்கள். இந்தப் பத்தியில் விவரிக்கப்பட்டுள்ளவற்றைத் தவிர, வாங்கிய டிஜிட்டல் உள்ளடக்கம், வாடகைக்கு எடுக்கப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கம், PPV டிஜிட்டல் உள்ளடக்கம் ஆகியவற்றுக்கான அனைத்துப் பணப் பரிமாற்றங்களும் இறுதியானவை ஆகும். இத்தகைய டிஜிட்டல் உள்ளடக்கத்தை நாங்கள் திரும்பப்பெற மாட்டோம். வாங்கிய அல்லது வாடகைக்கு எடுக்கப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கான ஆர்டரை நீங்கள் வாங்கிய அல்லது வாடகைக்கு எடுத்த 48 மணிநேரத்திற்குள் (அல்லது, யுனைடெட் கிங்டம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, வாங்கிய அல்லது வாடகைக்கு எடுத்த 14 நாட்களுக்குள்) 'உங்கள் டிஜிட்டல் ஆர்டர்கள்' என்பதில் "ஆர்டரை ரத்துசெய்" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் ரத்துசெய்யலாம். மூன்றாம் தரப்பு மூலம் பில்லிங் செய்யப்பட்ட பர்ச்சேஸ்களுக்கு உங்கள் வீடியோ மார்க்கெட்ப்ளேஸில் (இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது) வீடியோவின் விவரப்பக்கத்திலோ Amazon வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்வதன் மூலமாகவோ ரத்துசெய்யலாம். ஆனால், வாங்கிய அல்லது வாடகைக்கு எடுக்கப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கத்தை நீங்கள் பார்க்க/பதிவிறக்கத் தொடங்கிய பிறகு அதற்குரிய ஆர்டரை நீங்கள் ரத்துசெய்ய முடியாது. வாங்கிய அல்லது வாடகைக்கு எடுக்கப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கம் வெளியிடப்படுவதற்கு முன்பு அதற்குரிய முன்கூட்டிய ஆர்டரை நீங்கள் எந்த நேரத்திலும் ரத்துசெய்யலாம். PPV டிஜிட்டல் உள்ளடக்கத்தின் திட்டமிடப்பட்ட தொடக்கத்திற்கு முன்பு எந்த நேரத்திலும் அதற்குரிய ஆர்டரை நீங்கள் ரத்துசெய்யலாம். முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்படலாம். ஒரு மூன்றாம் தரப்பு மூலம் பணப் பரிமாற்றம் செய்து பெறும் Amazon சந்தா/மெம்பர்ஷிப்பின் ஒரு பகுதியாக நீங்கள் டிஜிட்டல் உள்ளடக்கத்தை வாங்கியிருந்தால், பணம் திரும்பப்பெறுதல் தொடர்பாகப் பொருந்தக்கூடிய விதிமுறைகள் அந்த மூன்றாம் தரப்பினரால் தீர்மானிக்கப்படும்.

f. பேமெண்ட் முறைகள். உங்கள் 'வீடியோ மட்டும்' சந்தா/மெம்பர்ஷிப்பிற்கு எங்கள் மூலமாகப் பதிவுசெய்து பில்லிங் செய்யப்பட்டால், கீழே விவரிக்கப்பட்டுள்ள பில்லிங் விதிமுறைகள் அதற்குப் பொருந்தும்:

  • உங்களுக்குரிய பேமெண்ட் முறை மூலம் உங்கள் பேமெண்ட்டை எங்களால் செயல்படுத்த முடியவில்லை எனில், உங்களுக்கான பதிவில் உள்ள எந்தவொரு பேமெண்ட் முறையைப் பயன்படுத்தியும் கட்டணம் விதிக்க எங்களுக்கு உரிமை உள்ளது.
  • நீங்கள் ஒரு சந்தாவை வாங்கினால் அல்லது ஒரு சந்தாவுக்கான இலவச உபயோகத்தைத் தொடங்கினால் அந்தச் சந்தா தானாகவே தொடரும். உங்களுக்கான பதிவில் உள்ள எந்தவொரு பேமெண்ட் முறையைப் பயன்படுத்தியும், அதன் பிறகு பொருந்தக்கூடிய சந்தாக் கட்டணத்தை (வரிகள் உட்பட) விதிக்க எங்களை அனுமதிக்கிறீர்கள் (மேற்கொண்டு அறிவிப்பின்றி, பொருந்தும் சட்டத்தின்படி தேவைப்பட்டால் தவிர).
  • கட்டணம் விதிக்கப்படுவதற்கு முன்பு ரத்துசெய்ய வேண்டும் அல்லது தானாகப் புதுப்பிக்க வேண்டாம் என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் தவிர, உங்கள் சந்தா தானாகவே தொடரும் என்பதை நீங்கள் புரிந்துகொள்வதோடு உங்களுக்கான பதிவில் உள்ள வேறொரு பேமெண்ட் முறையைப் பயன்படுத்தி, அதன் பிறகு பொருந்தக்கூடிய சந்தாக் கட்டணத்தை (வரிகள் உட்பட) விதிக்க எங்களை அனுமதிக்கிறீர்கள் (அறிவிப்பின்றி, பொருந்தும் சட்டத்தின்படி தேவைப்பட்டால் தவிர).
  • உங்கள் சந்தாக் கட்டணப் பேமெண்ட்டிற்கு உங்களுக்கான பதிவில் உள்ள அனைத்துப் பேமெண்ட் முறைகளும் நிராகரிக்கப்பட்டால், நீங்கள் ஒரு புதிய பேமெண்ட் முறையை எங்களுக்கு வழங்கினால் தவிர உங்கள் சந்தா ரத்துசெய்யப்படும். நீங்கள் புதிய பேமெண்ட் முறை ஒன்றை வழங்கி உங்கள் சந்தா ரத்துசெய்யப்படும் முன்பு கட்டணம் விதிக்கப்பட்டால், உங்கள் புதிய சந்தாக் காலம் அசல் பில்லிங் தேதியின் அடிப்படையில் அமையுமே தவிர கட்டணம் விதிக்கப்பட்ட தேதியின் அடிப்படையில் அமையாது. உங்களுக்குரிய பேமெண்ட் முறைகளைச் சேர்க்க/மாற்ற "உங்கள் கணக்கு" அமைப்புகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

மூன்றாம் தரப்பு மூலம் நீங்கள் 'வீடியோ மட்டும்' சந்தா/மெம்பர்ஷிப்பிற்குப் பதிவுசெய்திருந்து எங்கள் மூலம் நேரடியாக அதற்கு பில்லிங் செய்யப்படாவிட்டால், உங்கள் சந்தா/மெம்பர்ஷிப்பிற்கு மூன்றாம் தரப்பினர் வழங்கும் பில்லிங் விதிமுறைகளே பொருந்தும்.

g. விளம்பர நோக்கிலான கட்டணமற்ற உபயோகங்கள். தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் சில சமயங்களில் பல்வேறு கட்டணமற்ற உபயோகங்கள் அல்லது பிற விளம்பர நோக்கிலான மெம்பர்ஷிப்களை வழங்குவோம். விளம்பரச் சலுகைகளில் வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் தவிர, அவை இந்த ஒப்பந்தத்திற்கு உட்படும். எங்கள் விருப்புரிமைப்படி, உங்கள் தகுதிநிலையைத் தீர்மானிப்பதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது. கட்டணமற்ற உபயோக உறுப்பினர்கள் அந்த உபயோகத்தின் இறுதியில் கட்டண மெம்பர்ஷிப்பைத் தொடர்வதை எந்த நேரத்திலும் ('உங்கள் கணக்கு' மூலம்) நிறுத்தலாம்.

h. டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கான வரம்பிடப்பட்ட உரிமம். டிஜிட்டல் உள்ளடக்கத்தை வாங்குவது, வாடகைக்கு எடுப்பது அல்லது அணுகுவதற்கான கட்டணங்களுக்குரிய பேமெண்ட்டுகள் மற்றும் இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் அனைத்துடனுமான உங்கள் இணக்கத்தன்மை ஆகியவற்றுக்கு உட்பட்டு, பொருந்தக்கூடிய பார்வைக் காலகட்டத்தில், பயன்பாட்டு விதிகளுக்கிணங்க டிஜிட்டல் உள்ளடக்கத்தை அணுகவும் பார்க்கவும், சொந்த, வணிகரீதியற்ற, தனிப்பட்ட பயன்பாட்டுக்காக Amazon உங்களுக்குப் பிரத்தியேகமற்ற, மாற்ற முடியாத, துணை உரிமம் பெற முடியாத, வரம்பிடப்பட்ட உரிமத்தை வழங்குகிறது. டிஜிட்டல் உள்ளடக்கத்தின் பார்வைக் காலம் முடிந்த பிறகு உங்கள் இணக்கமான சாதனத்திலிருந்து நாங்கள் தானாக அதை அகற்றக்கூடும்.

i. வாங்கிய டிஜிட்டல் உள்ளடக்கத்தின் கிடைக்கும்நிலை. பொதுவாக, வாங்கிய டிஜிட்டல் உள்ளடக்கம் நீங்கள் பதிவிறக்குவதற்கும் அல்லது சேவையிலிருந்து ஸ்ட்ரீமிங் செய்வதற்கும் பொருந்தும் வகையில் கிடைக்கும். ஆனால் உள்ளடக்கத்தை வழங்குபவரின் உரிமக் கட்டுப்பாடுகள் அல்லது மற்ற காரணங்களால் அவை கிடைக்காமல் போகலாம். மேலும், வாங்கிய டிஜிட்டல் உள்ளடக்கம் மேற்கொண்டு பதிவிறக்கம் செய்யப்படுவதற்கு அல்லது ஸ்ட்ரீமிங் செய்யப்படுவதற்குக் கிடைக்காமல் போனால் அதற்கு Amazon பொறுப்பாகாது.

j. பிளேபேக் தரம்; ஸ்ட்ரீமிங் உங்களுக்குக் கிடைக்கும் டிஜிட்டல் உள்ளடக்கத்தின் தெளிவுத்திறன் மற்றும் தரம் ஆகியவை நீங்கள் டிஜிட்டல் உள்ளடக்கத்தை அணுகும் இணக்கமான சாதனத்தின் வகை, உங்களது அலைவரிசை உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அமையும். இவை நீங்கள் உள்ளடக்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அதிகரிக்கக்கூடும்/குறையக்கூடும். உங்களுக்குக் காட்டப்படும் டிஜிட்டல் உள்ளடக்கம் தடைபடக்கூடும் அல்லது அலைவரிசைக் கட்டுப்பாடுகளால் சரியாக இயங்காமல் போகக்கூடும் என நாங்கள் கண்டறிந்தால், தடையற்ற பார்வை அனுபவத்தை உங்களுக்கு வழங்க ஸ்ட்ரீமிங் செய்யப்படும் டிஜிட்டல் உள்ளடக்கத்தின் தெளிவுத்திறன், ஃபைல் அளவு ஆகியவற்றை நாங்கள் குறைக்கக்கூடும். உயர்தரப் பார்வை அனுபவத்தை உங்களுக்கு வழங்க நாங்கள் முயற்சி செய்யும் அதே சமயம், ஸ்ட்ரீமிங் செய்யும்போது நீங்கள் பெறும் டிஜிட்டல் உள்ளடக்கத்தின் தெளிவுத்திறன் அல்லது தரம் குறித்து நாங்கள் எந்த உத்திரவாதமும் வழங்குவதில்லை. நீங்கள் உயர் தெளிவுத்திறன், மிக உயர் தெளிவுத்திறன் அல்லது ஹை டைனமிக் ரேஞ்ச் உள்ளடக்கத்தை அணுகுவதற்காகக் கூடுதல் கட்டணம் செலுத்தியிருந்தாலும் கூட நாங்கள் உத்திரவாதம் வழங்குவதில்லை.

k. பொதுவான கட்டுப்பாடுகள் நீங்கள் செய்யக்கூடாதவை (i) இந்த ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளபடி தவிர டிஜிட்டல் உள்ளடக்கத்தை மாற்றுதல், நகலெடுத்தல் அல்லது காட்சிப்படுத்துதல்; (ii) டிஜிட்டல் உள்ளடக்கத்துக்கான எந்தவொரு உரிமையையும் விற்பனை செய்தல், வாடகைக்கு விடுதல், குத்தகைக்கு விடுதல், விநியோகித்தல் அல்லது ஒளிபரப்புதல்; (iii) டிஜிட்டல் உள்ளடக்கம் மீதுள்ள உரிமை சார்ந்த அறிவிப்புகள் அல்லது முத்திரைகள் எதையும் அகற்றுதல்; (iv) சேவையின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்படும் ஏதேனும் டிஜிட்டல் உரிமைகள் மேலாண்மை அல்லது பிற உள்ளடக்கப் பாதுகாப்பு அமைப்பை முடக்க, புறக்கணிக்க, மாற்றியமைக்க, முறியடிக்க அல்லது வேறு வகையில் தந்திரமாக மீற முயற்சித்தல்; அல்லது (v) இந்தச் சேவை அல்லது டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஏதேனும் வணிகரீதியான அல்லது சட்டவிரோத நோக்கத்திற்காகப் பயன்படுத்துதல்.

l. பார்வையாளர் அளவீடு. அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு மட்டும், விளம்பரதாரர்கள், உள்ளடக்க உரிமையாளர்கள் போன்ற குறிப்பிட்ட சில மூன்றாம் தரப்பினர் தங்களுடைய உள்ளடக்கம் Prime Videoவில் எவ்வளவு வரவேற்பைப் பெறுகிறது என்பதைப் புரிந்துகொள்வதில் ஆர்வமாக உள்ளனர். குறிப்பிட்ட சில சேனல்கள், விளையாட்டுகள் மற்றும் நேரலை உள்ளடக்கத்தை நீங்கள் பார்க்கும்போது, பார்வையாளர்கள் அளவீடு, சந்தை ஆராய்ச்சி போன்ற நோக்கங்களுக்காக Amazon உங்கள் பார்வைச் செயல்பாடுகள் குறித்த தகவல்களை மூன்றாம் தரப்பினருக்கு வழங்கக்கூடும். இந்த அளவீட்டுச் சேவைகளையும், அவற்றையுடைய சேனல்கள், விளையாட்டுகள், நேரலை உள்ளடக்கம் ஆகியவற்றையும், அவை தொடர்பான உங்கள் விருப்பத்தேர்வுகளையும் குறித்து மேலும் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

5. மென்பொருள்

a. மென்பொருள் பயன்பாடு. இந்தச் சேவை தொடர்பான உங்கள் பயன்பாட்டுக்காக உங்களுக்கு மென்பொருளை நாங்கள் கிடைக்கச் செய்யக்கூடும் ("மென்பொருள்"). (இங்கேகுறிப்பிடப்பட்டுள்ள) உங்கள் வீடியோ மார்க்கெட்ப்ளேஸின் பயன்பாட்டு நிபந்தனைகளில் உள்ள விதிமுறைகள் உங்கள் மென்பொருள் பயன்பாட்டிற்குப் பொருந்தும் குறிப்பிட்ட மூன்றாம் தரப்பு மென்பொருளுக்குப் பொருந்தக்கூடிய கூடுதல் விதிமுறைகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

b. Amazon மற்றும் வீடியோ உள்ளடக்க வழங்குநர்களுக்கு வழங்கப்படும் தகவல்கள் சேவை மற்றும் மென்பொருள் சம்பந்தப்பட்ட உங்கள் பயன்பாடு மற்றும் செயல்திறன் தொடர்பான தகவல்களையும், சேவையையும் மென்பொருளையும் நீங்கள் பதிவிறக்கிப் பயன்படுத்தும் சாதனங்கள் தொடர்பான தகவல்களையும் Amazonனுக்கு சேவை மற்றும் மென்பொருள் வழங்கக்கூடும். உதாரணத்திற்கு, நீங்கள் பதிவிறக்கி ஸ்ட்ரீம் செய்யும் டிஜிட்டல் உள்ளடக்கம் தொடர்பான தகவல்களையும், அந்த டிஜிட்டல் உள்ளடக்கத்தின் பயன்பாடு தொடர்பான தகவல்களையும் Amazonனுக்கு மென்பொருள் வழங்கும் (அந்த டிஜிட்டல் உள்ளடக்கத்தை நீங்கள் பார்த்தீர்களா, எப்பொழுது பார்த்தீர்கள் போன்றவை, அவை பிற தகவல்களோடு, வாடகை டிஜிட்டல் உள்ளடக்கத்தின் பார்வைக் காலத்தை அளவிட எங்களுக்கு உதவும்). நாங்கள் பெறும் எந்தத் தகவலும் (இங்கே குறிப்பிடப்பட்டுள்ள) உங்கள் வீடியோ மார்க்கெட்ப்ளேஸின் Amazon தனியுரிமை அறிவிப்புக்கு உட்பட்டதாகும். நீங்கள் இதுவரை பார்த்தவை உட்பட உங்களுடைய சந்தாவின் நிலை மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்தின் பயன்பாடு தொடர்பான குறிப்பிட்ட சில தகவல்களை Prime Video சேனல்கள் மூலம் சந்தா சேவைகளை வழங்கும் மூன்றாம் தரப்பினர் போன்ற வீடியோ உள்ளடக்க வழங்குநர்களுக்கு நாங்கள் வழங்கக்கூடும். நாங்கள் இந்தத் தகவல்களை உங்களை அடையாளப்படுத்தாத வகையில் வழங்குவோம் (உங்களை அடையாளப்படுத்தக்கூடிய தகவல்களை குறிப்பிட்ட ஒரு வீடியோ உள்ளடக்க வழங்குநருடன் பகிர நீங்கள் அங்கீகாரம் அளித்தால் தவிர).

6. கூடுதல் விதிமுறைகள்

a. முடக்கம். எங்கள் விருப்பத்தின்படி, முன்னறிவிப்பின்றி, இந்தச் சேவையின் ஒரு பகுதியாகக் கிடைக்கப்பெறும் ஏதேனும் சந்தா உட்பட இந்தச் சேவைக்கான உங்கள் அணுகலை நாங்கள் முடக்கக்கூடும் (பொருந்தும் சட்டத்தின்படி தேவைப்பட்டால் தவிர). நாங்கள் அப்படி செய்தால், உங்கள் சந்தாக் கட்டணம் (ஏதும் இருப்பின்) கணக்கிடப்பட்டு உங்களுக்குத் திருப்பியளிக்கப்படும். இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் எதையாவது நீங்கள் மீறினால், இந்த ஒப்பந்தத்தின் கீழுள்ள உங்களுக்கான உரிமைகள் அறிவிப்பின்றித் தானாகவே முடிவுக்கு வரும். மேலும் Amazon, தனது விருப்புரிமைப்படி, கட்டணம் எதையும் திருப்பியளிக்காமல், சேவை மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கான உங்கள் அணுகலை உடனடியாக ரத்துசெய்யக்கூடும். அத்தகைய சூழலில், நீங்கள் பதிவிறக்கிய டிஜிட்டல் உள்ளடக்கத்தின் நகல்கள் அனைத்தையும் நீங்கள் கட்டாயம் நீக்கிவிட வேண்டும்.

b. வெளிப்படையான உள்ளடக்கம். இந்தச் சேவையைப் பயன்படுத்துவதன் மூலம், மனதைப் புண்படுத்தும், அநாகரீகமான அல்லது ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தை நீங்கள் பார்க்க நேரிடலாம். இந்த உள்ளடக்கத்தில் தகாத சொற்களோ பிற விஷயங்களோ இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கலாம், குறிப்பிடப்படாமலும் இருக்கலாம். இருப்பினும், நீங்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்துவது முற்றிலும் உங்கள் தனிப்பட்ட விருப்பத்திற்குட்பட்டது என்பதையும் Amazon அதற்குப் பொறுப்பாகாது என்பதையும் ஒப்புக்கொள்கிறீர்கள். உள்ளடக்க வகைகள், வகைகள், பிரிவுகள், விளக்கங்கள் ஆகியவை வசதிக்காகவே வழங்கப்பட்டுள்ளன, அவற்றின் துல்லியத்தன்மைக்கு Amazon உத்திரவாதம் வழங்காது.

c. தகவல் பரிமாற்றங்கள். நாங்கள் உங்களுக்கு ஊக்குவிப்புச் சலுகைகளை அனுப்புவோம் அல்லது உங்களை மின்னணு முறையில் தொடர்புகொள்வோம். இதில் மின்னஞ்சல், புஷ் அறிவிப்பு அல்லது உங்கள் Amazon செய்தி மையத்திற்கு அனுப்பப்படும் இடுகைகள் ஆகியவை அடங்கும். அந்தத் தகவல்பரிமாற்றங்களைப் பெற நீங்கள் இங்கு ஒப்புதல் அளிக்கிறீர்கள் (நீங்கள் யுனைடெட் கிங்டம், ஐரோப்பிய ஒன்றியம், துருக்கி, அல்லது பிரேசிலின் ஒரு வாடிக்கையாளராக இருந்தால் தவிர, இத்தகைய தகவல்பரிமாற்றங்களை நீங்கள் பெற விரும்புகிறீர்களா இல்லையா என்பதை நீங்கள் தனியாக முடிவுசெய்ய வேண்டும்). இத்தகைய தகவல் பரிமாற்றங்கள் (இங்கே குறிப்பிடப்பட்டுள்ள) உங்கள் வீடியோ மார்க்கெட்ப்ளேஸின் Amazon தனியுரிமை அறிவிப்பிற்கு உட்பட்டிருக்கும். மார்க்கெட்டிங் தொடர்பான தகவல்பரிமாற்றங்களை Amazon Prime Videoவில் இருந்து பெறுவதை நிறுத்த, 'உங்கள் கணக்கு' என்பதில் மார்க்கெட்டிங் தொடர்பான தகவல்பரிமாற்ற விருப்பத்தேர்வுகளை மாற்றுங்கள்.

d. சேவை தொடர்பான புதுப்பிப்புகள் மற்றும் மாற்றங்கள். பின்வரும் காரணங்களுக்காக, அவ்வப்போது சேவையை (எந்த ஒரு சந்தா உட்பட), ஏதேனும் டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும்/அல்லது மென்பொருளை Amazon மாற்றியமைக்கக்கூடும். (i) தற்போதுள்ள செயல்பாடுகளை மேம்படுத்துதல் அல்லது புதிய செயல்பாடுகள் மற்றும்/அல்லது அம்சங்களைச் சேர்த்தல், (ii) பயனர் அனுபவத்தை மேம்படுத்துதல் அல்லது பராமரித்தல், (iii) செயல்பாட்டுக் காரணங்கள் அல்லது தொழில்நுட்பக் காரணங்கள், (iv) சேவையில் சேர்க்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் அளவு மற்றும் தரத்தைப் பராமரிப்பதற்கான ஆதரவு அளித்தல், அல்லது (v) சட்டரீதியான காரணங்கள் அல்லது பாதுகாப்புக் காரணங்கள். நீங்கள் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது யுனைட்டெட் கிங்டமில் வசித்தால் (அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தின் அடிப்படையில்) மற்றும் அத்தகைய மாற்றங்கள் சேவைகளின் பயன்பாட்டை (“குறிப்பிடத்தக்க மாற்றங்கள்”) a) குறிப்பிடத்தக்க அளவிலும், மோசமாகவும் பாதித்தால், அவை நடைமுறைக்கு வருவதற்கு குறைந்தது 30 நாட்களுக்கு முன்பு குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு, நேரம் மற்றும் காரணம் குறித்து நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அல்லது பிற மின்னணு தகவல்தொடர்பு மூலம் தகவல் தெரிவிப்போம் மற்றும் b) குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நடைமுறைக்கு வந்த 30 நாட்களுக்குள் நீங்கள் எந்த நேரத்திலும் சேவையை ரத்துசெய்யலாம், மேலும், பொருந்தும்பட்சத்தில் உங்கள் மெம்பர்ஷிப் பில்லிங் காலத்தின் மீதமுள்ள நாட்களின் அடிப்படையில் நீங்கள் செலுத்திய எந்தவொரு கட்டணத்தையும் நாங்கள் உங்களுக்குத் திருப்பியளிப்போம். இந்தச் சேவையை அல்லது சேவையின் ஏதேனும் ஒரு பகுதியை எந்த நேரத்திலும் முன்னறிவிப்பின்றி இடைநீக்கம் செய்யவோ நிறுத்தவோ Amazon நிறுவனத்திற்கு உரிமையுள்ளது (பொருந்தக்கூடிய சட்டம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை இதில் உள்ளடங்காது). மேலும் அந்த மாற்றம் டிஜிட்டல் உள்ளடக்கம் தொடர்பான உங்கள் பயன்பாட்டைப் பாதித்தாலும் அத்தகைய உரிமைகளைப் பயன்படுத்தும் போது Amazon உங்கள் பாதிப்புக்குப் பொறுப்பேற்காது.

e. மாற்றங்கள். சட்டரீதியான அல்லது ஒழுங்குமுறை காரணங்களுக்காக; பாதுகாப்பு காரணங்களுக்காக; சேவைகளில் தற்போதுள்ள அம்சங்களை மேம்படுத்துவதற்காக அல்லது சேவையில் கூடுதல் அம்சங்களைச் சேர்ப்பதற்காக; தொழில்நுட்ப மேம்பாடுகளைப் பிரதிபலிப்பதற்காக; சேவைகளில் நியாயமான தொழில்நுட்ப மாற்றங்களை மேற்கொள்வதற்காக; மற்றும் சேவையின் தொடர் செயல்பாட்டை உறுதிசெய்வதற்காக (இங்கேகுறிப்பிடப்பட்டுள்ள) உங்கள் வீடியோ மார்க்கெட்ப்லேஸிலோ உங்கள் சேவை தொடர்பாகவோ திருத்தப்பட்ட விதிமுறைகளை இடுகையிடுவதன் மூலம் எந்த நேரத்திலும் இந்த ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்ய Amazonனுக்கு உரிமை உள்ளது. எந்த நேரத்திலும் உங்கள் மெம்பர்ஷிப்பை ரத்துசெய்வதன் மூலம் இந்த மாற்றத்தை நீங்கள் ஒப்புக்கொள்ள முடியாமல் போகலாம். சட்டத்தால் அனுமதிக்கப்படும் அதிகபட்ச அளவு வரை, ஏதேனு மாற்றங்களுக்குப் பிறகு நீங்கள் சேவை அல்லது மென்பொருளைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நீங்கள் அத்தகைய மாற்றங்களை ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும். இருப்பினும், சந்தாக் கட்டணம் உயர்த்தப்பட்டால் உங்கள் சந்தா புதுப்பிக்கப்படும் வரை புதிய கட்டணம் விதிக்கப்படாது.

f. உரிமைகள் ஒதுக்கீடு; தள்ளுபடி. சேவை, மென்பொருள், டிஜிட்டல் உள்ளடக்கம் ஆகியவை சட்டத்தால் பாதுகாக்கப்படுகின்ற அறிவுசார் சொத்துரிமையாக விளங்குகின்றன. டிஜிட்டல் உள்ளடக்கத்தின் காப்புரிமையாளர்களே இந்த ஒப்பந்தத்தின் கீழ் மூன்றாம் தரப்புப் பயனாளிகளாவர். இந்த ஒப்பந்தத்துடன் நீங்கள் கண்டிப்பாக இணங்குவதை வலியுறுத்தவோ அமல்படுத்தவோ நாங்கள் தவறினால், அது எங்கள் உரிமைகள் எதையும் தள்ளுபடி செய்வதாகாது.

g. வழக்குகள்/பயன்பாட்டு நிபந்தனைகள். இந்த ஒப்பந்தம் அல்லது சேவையிலிருந்தோ அல்லது இது தொடர்பாகவோ எழுகின்ற எந்தவொரு வழக்கோ புகாரோ நிர்வகிக்கும் சட்டம், உத்திரவாதங்களுக்கான பொறுப்புதுறப்பு மற்றும் பொறுப்பிற்கான வரம்பு, வழக்கிற்கான தீர்வு மற்றும் பிரிவுச் செயல்பாட்டுத் தள்ளுபடி (பொருந்தும் பட்சத்தில்) மற்றும் (இங்கே குறிப்பிடப்பட்டுள்ள) உங்கள் வீடியோ மார்க்கெட்ப்லேஸின் Amazon பயன்பாட்டு நிபந்தனைகளிலுள்ள மற்ற அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டதாகும். இந்தச் சேவையைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சார்பாகவும், உங்கள் வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் சார்பாகவும், உங்கள் கணக்கின் கீழ் சேவையைப் பயன்படுத்தும் மற்றவர்கள் சார்பாகவும் நீங்கள் அந்த விதிமுறைகளை ஏற்கிறீர்கள். உங்கள் உள்ளூர் அதிகார எல்லையின் சட்டங்களின் கீழ் குறிப்பிட்ட சில நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகளும் உங்களுக்கு இருக்கக்கூடும்.

h. பொறுப்பிற்கான வரம்பு. (இங்கே குறிப்பிடப்பட்டுள்ள) உங்கள் வீடியோ மார்க்கெட்ப்லேஸின் Amazon பயன்பாட்டு நிபந்தனைகளில் உள்ள உத்திரவாதங்களின் பொறுப்புதுறப்பு மற்றும் பொறுப்பிற்கான வரம்பைக் கட்டுப்படுத்தாமல்: (i) எந்தவொரு சூழலிலும் உங்கள் மென்பொருள் பயன்பாடு அல்லது அதைப் பயன்படுத்த இயலாமை காரணமாக ஏற்படும் அனைத்துச் சேதங்களுக்கும் எங்களுடைய அல்லது எங்கள் மென்பொருள் உரிம வழங்குநர்களின் மொத்தப் பொறுப்பு ஐம்பது டாலர்களைவிட ($50.00) அதிகமாகாது; மற்றும் (ii) எந்தவொரு சூழலிலும் , இந்தச் சேவை, டிஜிட்டல் உள்ளடக்கம், அல்லது தகவல்கள், இந்தச் சேவையிலுள்ள அல்லது இதன்மூலம் கிடைக்கப்பெற்ற பொருட்கள் அல்லது தயாரிப்புகளின் பயன்பாடு காரணமாக உங்களுக்கு ஏற்படும் அனைத்துச் சேதங்களுக்கும் எங்களுடைய அல்லது எங்கள் டிஜிட்டல் உள்ளடக்க வழங்குனர்களின் மொத்தப் பொறுப்பு, சேதங்களுக்கான உங்கள் புகாருடன் தொடர்புடைய டிஜிட்டல் உள்ளடக்கத்தை வாங்குவதற்கு, வாடகைக்குப் பெறுவதற்கு, அல்லது பார்ப்பதற்காகக் கடந்த 12 மாதங்களில் நீங்கள் எங்களுக்குச் செலுத்திய தொகையைவிட அதிகமாகாது. தீர்வுகள் அவற்றின் முதன்மை நோக்கத்தை நிறைவேற்றத் தவறினாலும்கூட, இந்தப் பிரிவில் உள்ள வரம்புகள் உங்களுக்குப் பொருந்தும்.

ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள அதிகார எல்லைகள் உள்ளிட்ட சில அதிகார எல்லைகள் , அனுமானிக்கப்பட்ட உத்திரவாதங்களுக்கு விலக்களிப்பதை அல்லது குறிப்பிட்ட வகை சேதாரங்களுக்கான பொறுப்பைக் கட்டுப்படுத்துவதை அல்லது விலக்களிப்பதை அனுமதிக்காது. இந்தச் சட்டங்கள் உங்களுக்குப் பொருந்தினால், மேலுள்ள பொறுப்புதுறப்புகள், விலக்குகள் அல்லது வரம்புகளில் ஒரு சில அல்லது அனைத்தும் உங்களுக்குப் பொருந்தாமல் போகலாம். மேலும் உங்களுக்குக் கூடுதல் உரிமைகள் இருக்கலாம். உங்கள் சேவைப் பயன்பாட்டிற்கு ஜப்பானின் சட்டங்கள் பொருந்தினால், AMAZON நிறுவனம் வேண்டுமென்றே தவறாக நடந்துகொள்வது, அலட்சியமாக நடந்துகொள்வது ஆகிய சூழல்களுக்கு இந்தப் பிரிவிலுள்ள பொறுப்பிற்கான வரம்பு பொருந்தாது.

i. தொடர்புத் தகவல்கள். இந்த ஒப்பந்தம் தொடர்பான தகவல்பரிமாற்றங்களுக்கு, இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பொருந்தக்கூடிய அறிவிப்பு முகவரியில் Amazon நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுங்கள்.

j. ஒப்பந்தத்தின் செயல்படுத்தக்கூடிய தன்மை. இந்த ஒப்பந்தத்தின் ஏதாவது ஒரு விதிமுறை அல்லது நிபந்தனை செல்லுபடி ஆகாததாக, பலனற்றதாக அல்லது ஏதாவது காரணத்தினால் அமல்படுத்த முடியாததாகக் கருதப்பட்டால், அந்தப் பகுதி தனிப்பட்டதாகக் கருதப்படும். இது மீதமுள்ள ஏதேனும் விதிமுறை அல்லது நிபந்தனையின் செல்லுபடித்தன்மை மற்றும் அமலாக்கத்தன்மையைப் பாதிக்காது.

k. உங்கள் சட்டப்பூர்வ உரிமைகள். இந்த ஒப்பந்தத்திற்கு இணங்கும் வகையில் சேவையையும் டிஜிட்டல் உள்ளடக்கத்தையும் வழங்குவதற்கான சட்டப்பூர்வக் கடமை எங்களுக்கு உள்ளது. சேவையிலோ ஏதேனும் டிஜிட்டல் உள்ளடக்கத்திலோ ஏதேனும் சிக்கல் இருந்தால் உங்கள் நாட்டின் சட்டங்கள் உங்களுக்குக் கூடுதல் உரிமைகளையும் தீர்வுகளையும் வழங்கக்கூடும். இந்த ஒப்பந்தத்தின் கீழுள்ள உங்கள் உரிமைகளோடு சேர்த்து அத்தகைய சட்டங்களும் பொருந்தும்.