உதவி

Amazon Prime Video பயன்பாட்டின் விதிமுறைகள்

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: மே 04, 2021

Amazon Prime Video வின் பயன்பாட்டுக்கான விதிமுறைகளுக்கு உங்களை வரவேற்கிறோம். இந்த விதிமுறைகள் உங்களுக்கும் Amazon Prime Video சேவையை உங்களுக்கு வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ளதாகும், அந்த நிறுவனம் உங்களுடைய இருப்பிடத்தைப் பொறுத்து, Amazon.com சேவைகள் LLC, Amazon டிஜிட்டல் யுகே லிமிடெட் அல்லது அதன் ஒரு இணை நிறுவனமாக இருக்கக்கூடும் ("Amazon", "நாங்கள்" அல்லது "எங்கள்"). Amazon Prime Video சேவையை உங்களுக்கு வழங்கும் மற்றும் உங்களுடைய இருப்பிடத்தின் அடிப்படையில் பிற பொருந்தக்கூடிய விதிமுறைகளை அளிக்கும் Amazon இணை நிறுவனத்தைக் கண்டறிய www.primevideo.com/ww-av-legal-home என்பதைப் பார்க்கவும். முன்னறிவிப்புடனோ அல்லது முன்னறிவிப்பு இன்றியோ (பொருந்தக்கூடிய சட்டத்தின் படி தேவையாக இல்லாதபட்சத்தில்) உங்களுடைய Amazon Prime Video சேவை வழங்குநர் அவ்வப்போது மாறக்கூடும். உங்களுக்குப் பொருந்தக்கூடிய தனியுரிமை அறிவிப்பு, பயன்பாட்டின் நிபந்தனைகள், மற்றும் Amazon Prime Video பயன்பாட்டின் விதிகள் மற்றும் Amazon Prime Video சேவையுடன் தொடர்புடைய அனைத்துப் பிற விதிகள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றுடன் தயவுசெய்து இந்த விதிமுறைகளை வாசிக்கவும் (Amazon Prime Video சேவைக்கான எந்த ஒரு தயாரிப்பின் விவரப் பக்கத்திலோ அல்லது ஏதேனும் உதவிக்கான பக்கத்திலோ அல்லது பிற தகவல் பக்கத்திலோ குறிப்பிட்டுச் சொல்லப்பட்டிருக்கும் எந்தவித விதிகள் அல்லது பயன்பாட்டுக்கான வழிவகைகள் மட்டுமல்லாது பிறவும் இதில் உள்ளடங்கும்) (கூட்டாக, இந்த “ஒப்பந்தம்”). நீங்கள் யுகே, ஐரோப்பிய ஒன்றியம் அல்லது பிரேசிலில் இருந்தால், தனியுரிமை அறிவிப்பு, குக்கீகள் தொடர்பான அறிவிப்பு மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் அமைந்த இணைய விளம்பர அறிவிப்பு ஆகியவை உங்களுடைய ஒப்பந்தத்தின் பகுதியாக இருக்காது. உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எப்படிக் கையாளுகிறோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள உங்களுக்குப் பொருந்தக்கூடிய இந்தக் கொள்கைகள் மற்றும் அறிவிப்புகளின் பதிப்புகள் திறனாய்வு செய்யும் பொருட்டு உங்களுக்கு கிடைக்கப்பெறுகின்றன. ஒவ்வொரு முறையும் நீங்கள் அமேசான் பிரைம் வீடியோ சேவையைப் பார்வையிடும்போது, உலாவும்போது அல்லது பயன்படுத்தும்போது, இந்த ஒப்பந்தத்தை உங்கள் சார்பாகவும், உங்கள் வீட்டு உறுப்பினர்கள் மற்றும் உங்கள் கணக்கின் கீழ் சேவையைப் பயன்படுத்தும் மற்றவர்கள் சார்பாகவும் ஏற்றுக்கொள்கிறீர்கள்.

1. சேவை

Amazon Prime Video (“சேவை”) என்பது இந்த ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டுள்ளபடி உங்களுக்கு டிஜிட்டல் திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிற வீடியோ உள்ளடக்கங்கள் (கூட்டாக, “டிஜிட்டல் உள்ளடக்கம்”) மற்றும் பிற சேவைகள் ஆகியவற்றை அளிக்கின்ற, பரிந்துரைக்கின்ற மற்றும் கண்டறிய உதவுகின்ற ஒரு தனிப்பட்ட சேவை ஆகும். சேவையையும், டிஜிட்டல் உள்ளடக்கத்தையும் அணுக Amazon Prime உள்ளிட்ட பல்வேறு வழிகள் உள்ளன மற்றும் உங்களுடைய பிற Prime நன்மைகள் மற்றும் Amazon சேவைகளின் பயன்பாடு அந்த சேவைகளை அணுக நீங்கள் பயன்படுத்தும், செயலிகள், இணையதளங்கள் அல்லது சாதனங்களில் கிடைக்கப்பெறும் தனிப்பட்ட விதிமுறைகளால் நிர்வகிக்கப்படுகிறது. நீங்கள் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால் அல்லது நீங்கள் வசிக்கும் இடத்தின் மேஜராகும் வயதுக்கு உட்பட்டவராக நீங்கள் இருந்தால், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வழிநடத்துதலுடன் மட்டுமே நீங்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு விருப்பமான டிஜிட்டல் உள்ளடக்கம், அம்சங்கள் மற்றும் சேவைகள் குறித்த பரிந்துரைகளை உங்களுக்குக் காட்டுவது உட்பட சேவையின் ஒரு பகுதியாக நாங்கள் உள்ளடக்கத்தையும், அம்சங்களையும் தனிநபருக்கு ஏற்றவாறு அமைக்கிறோம். நாங்கள் தொடர்ந்து Amazon சாதனங்கள், மற்றும் சேவைகள் மற்றும் அவற்றுடனான உங்களுடைய அனுபவங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து மேம்படுத்த முயற்சிகளையும் மேற்கொள்கிறோம்.

2. பொருந்தக்கூடிய சாதனங்கள்

டிஜிட்டல் உள்ளடக்கத்தை நீங்கள் ஸ்ட்ரீம் செய்ய அல்லது பதிவிறக்கம் செய்ய நாங்கள் அவ்வப்போது உருவாக்கும் அமைப்பு மற்றும் பொருந்தக்கூடிய தன்மை ஆகியவை தொடர்பான தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு தனிநபர் கணினியை அல்லது கையில் எடுத்துச்செல்லக்கூடிய மீடியா பிளேயரை அல்லது பிற சாதனங்களை நீங்கள் அவசியம் பயன்படுத்த வேண்டும் (ஒரு “பொருந்தக்கூடிய சாதனம்”). சில பொருந்தக்கூடிய சாதனங்கள் டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படலாம், சில பொருந்தக்கூடிய சாதனங்கள் டிஜிட்டல் உள்ளடக்கத்தை பதிவிறக்கம் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படலாம், மற்றும் சில பொருந்தக்கூடிய சாதனங்கள் டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யவும், பதிவிறக்கம் செய்யவும் பயன்படுத்தப்படலாம். பொருந்தக்கூடிய சாதனங்களுக்கான தேவைகளை அவ்வப்போது நாங்கள் மாற்றலாம் மற்றும் சில நிகழ்வுகளில் ஒரு சாதனம் பொருந்தக்கூடிய சாதனமா (அல்லது பொருந்தக்கூடிய சாதனமாக நீடிக்கிறதா) என்பது சாதனத்தின் தயாரிப்பாளர் அல்லது பிற மூன்றாம் தரப்புகள் மூலம் அளிக்கும் அல்லது பராமரிக்கும் மென்பொருள் அல்லது அமைப்புகளைப் பொறுத்து அமையும். அதன்படி, ஒரு நேரத்தில் பொருந்தக்கூடிய சாதனங்களாக இருக்கும் சாதனங்கள் எதிர்காலத்தில் பொருந்தக்கூடிய சாதனங்களாக இருக்காது. Amazon Prime Video மொபைல் செயலியை உங்களுக்கு வழங்கும் Amazon நிறுவனம் உங்களுக்கு சேவை வழங்கும் Amazon நிறுவனத்திலிருந்து வேறுபடக்கூடும்.

3. புவியியல் ரீதியான வேறுபாடு

உள்ளடக்கங்களை வழங்குபவர்கள் மூலம் விதிக்கப்படும் தொழில்நுட்ப மற்றும் பிற கட்டுப்பாடுகள் காரணமாக சேவையானது குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது. டிஜிட்டல் உள்ளடக்கமும் (டிஜிட்டல் உள்ளடக்கத்தில் உள்ள துணை வசன வரிகள் மற்றும் டப்பிங் செய்யப்பட்ட ஆடியோ பதிப்புகள் உட்பட), நாங்கள் உங்களுக்கு டிஜிட்டல் உள்ளடக்கத்தை எப்படி வழங்குகிறோம் என்பதும் காலப்போக்கிலும், இருப்பிடத்தைப் பொறுத்தும் மாறுபடக்கூடும். உங்களுடைய புவியியல் ரீதியான இருப்பிடத்தைச் சரிபார்க்க Amazon தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும். உங்களுடைய இருப்பிடத்தை மறைக்கவோ அல்லது மாறுபடுத்திக் காட்டவோ நீங்கள் எந்தத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தக்கூடாது.

4. டிஜிட்டல் உள்ளடக்கம்

a. பொதுவானவை. சேவையானது உங்களைப் பின்வரும் விஷயங்களுக்கு அனுமதிக்கலாம்: (i) சந்தா செலுத்தப்பட்டிருக்கும் காலத்தில் (உதாரணமாக Amazon Prime அல்லது பிற சந்தா வழியாக அல்லது தனியொரு வீடியோ சந்தா வழங்கல் மூலமாக) (“சந்தா செலுத்த வேண்டிய டிஜிட்டல் உள்ளடக்கம்”) ஒரு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு சந்தாவின் அடிப்படையில் டிஜிட்டல் உள்ளடக்கத்தை அணுக அனுமதிக்கிறது (ii) ஒரு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு தேவைக்கேற்ப பார்ப்பதற்கு டிஜிட்டல் உள்ளடக்கத்தை வாடகைக்கு எடுக்க அனுமதிக்கிறது (“வாடகைக்கு எடுக்கப்படும் டிஜிட்டல் உள்ளடக்கம்”) (iii) காலவரையறையின்றி தேவைக்கேற்ப பார்க்கும் பொருட்டு டிஜிட்டல் உள்ளடக்கத்தை வாங்க அனுமதிக்கிறது (“வாங்கப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கம்”), (iv) ஒரு முறை பார்ப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டிய டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஒரு வரையறுக்கப்பட்ட காலத்திற்குப் பார்க்கும் பொருட்டு அதை வாங்க அனுமதிக்கிறது ("PPV டிஜிட்டல் உள்ளடக்கம்”) மற்றும்/அல்லது (v) இலவச, விளம்பரங்கள் கொண்ட அல்லது ஊக்குவிப்பு சலுகையாக அளிக்கப்படும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை (“இலவச டிஜிட்டல் உள்ளடக்கம்”) ஒரு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு அணுக அனுமதிக்கிறது. சந்தா செலுத்த வேண்டிய டிஜிட்டல் உள்ளடக்கம், வாடைக்கு எடுக்கப்படும் டிஜிட்டல் உள்ளடக்கம், வாங்கப்படும் டிஜிட்டல் உள்ளடக்கம், PPV டிஜிட்டல் உள்ளடக்கம், இலவச டிஜிட்டல் உள்ளடக்கம் அல்லது இவற்றின் ஏதேனும் இணைவு என டிஜிட்டல் உள்ளடக்கம் கிடைக்கலாம் மற்றும் ஒவ்வொரு உள்ளடக்கமும் கீழே உள்ள வரையறுக்கப்பட்ட உரிமம் வழங்குதலுக்கு உட்பட்டது.

b. பயன்பாட்டு விதிகள் உங்களுடைய டிஜிட்டல் உள்ளடக்கத்தின் பயன்பாடு Amazon Prime Video பயன்பாட்டின் விதிகள் ("பயன்பாட்டு விதிகள்") என்பதற்கு உட்பட்டதாகும். வெவ்வேறு வகையான டிஜிட்டல் உள்ளடக்கத்தை நீங்கள் பார்க்க இயலும் கால அளவு (“பார்க்கும் காலம்”) மற்றும் ஒவ்வொரு வகையான டிஜிட்டல் உள்ளடக்கத்தையும் பதிவிறக்கம் செய்யவும், ஸ்டீரிம் செய்யவும் மற்றும் பார்க்கவும் இயலக்கூடிய பொருந்தக்கூடிய சாதனங்களின் எண்ணிக்கை மற்றும் வகை தொடர்பான வரையறை உள்ளிட்ட முக்கியத் தகவல்களைப் பயன்பாட்டு விதிகள் அளிக்கின்றன.

c. சந்தாக்கள்/ உறுப்பினர் தகுதிகள். சந்தாக்களுக்கான சலுகைகள் மற்றும் கட்டணங்கள் (சில நேரங்களில் இது உறுப்பினர் தகுதி எனவும் அறியப்படுகிறது), சந்தா செலுத்தப்படும் சேவைகள், கிடைக்கப்பெறும் சந்தா செலுத்தப்படும் டிஜிட்டல் உள்ளடக்கத்தின் நீட்டிப்புக்காலம் மற்றும் சந்தா செலுத்தப்படும் சேவைகள் வாயிலாக கிடைக்கப்பெறும் குறிப்பிட்ட தலைப்புகள் ஆகியவை காலப்போக்கிலும், இருப்பிடத்தின் அடிப்படையிலும் முன்னறிவிப்பின்றி மாறக்கூடும் (பொருந்தக்கூடிய சட்டத்தால் தேவையாக இருக்கும் நிகழ்வைத் தவிர). வேறு எதுவும் குறிப்பிடப்படாத பட்சத்தில், எந்த ஒரு கட்டண மாற்றமும் அடுத்த சந்தா செலுத்தும் காலத்தின் தொடக்கத்தில் நடைமுறைப்படுத்தப்படும். சந்தாவில் செய்யப்படும் மாற்றத்தை நீங்கள் ஒப்புக்கொள்ள மறுத்தால், கீழே உள்ள பிரிவு 4(d) மூலம் உங்களுடைய சந்தாவை நீங்கள் இரத்துச் செய்யலாம். சந்தாக்கள் அல்லது உறுப்பினர் தகுதிகள் ஆகியவற்றிற்கான கட்டணங்களில் மதிப்பு கூட்டப்பட்ட வரி மற்றும்/அல்லது பிற வரிகள் உள்ளடங்கும். எங்கெல்லாம் பொருந்துகிறதோ அங்கெல்லாம், இது போன்ற வரிகளானது சேவைக்காக நீங்கள் பரிமாற்றம் செய்யும் Amazon அல்லது ஒரு மூன்றாம் தரப்பினர் போன்ற நபரால் வசூலிக்கப்படும். சந்தா செலுத்தப்படும் குறிப்பிட்ட டிஜிட்டல் உள்ளடக்கம் கிடைக்கப்பெறுதல் அல்லது எந்த ஒரு சந்தாவிலும் கிடைக்கப்பெறும் குறைந்தபட்ச அளவிலான சந்தா செலுத்தப்படும் டிஜிட்டல் உள்ளடக்கம் ஆகியவற்றிற்கு நாங்கள் எந்தவித உத்தரவாதமும் அளிக்கமாட்டோம் . ஒரு சந்தாவிற்கு பொருந்தக்கூடிய கூடுதல் விதிமுறைகள் (பொருந்தக்கூடிய இரத்து செய்தல் மற்றும் பணம் திரும்பப் பெறுதல் தொடர்பான கொள்கை போன்றவை) இங்கே குறிப்பிடப்பட்டுள்ள (உங்களுடைய “வீடியோ சந்தை”) உங்களுடைய இருப்பிடத்தின் முதன்மையான சேவை இணையதளத்தில் அந்தச் சந்தாவிற்கான தகவல் பக்கங்களில் குறிப்பிடப்படும்.

நாங்கள் அளிக்கும் சில சந்தா செலுத்தப்படும் சேவைகள் மூன்றாம் தரப்பினருடையதாகும். சந்தா செலுத்தப்படும் சேவைகளை அளிக்கும் மூன்றாம் தரப்பினர்கள் (உதாரணமாக Prime Video Channels வாயிலாக) தங்களுடைய சேவைகளின் அம்சங்களை அல்லது சேவைகளில் உள்ள உள்ளடக்கங்களை மாற்றலாம் அல்லது நிறுத்தலாம். எந்த ஒரு மூன்றாம் தரப்பினருடைய சந்தா செலுத்தப்படும் சேவையில் உள்ளடங்கியுள்ள உள்ளடக்கத்திற்கோ அல்லது இந்தச் சேவைகளின் அம்சங்களுக்கோ Amazon பொறுப்பேற்காது.

d. சந்தாக்கள்/உறுப்பினர் தகுதிகளை இரத்து செய்தல். வீடியோ-ஒன்லி என்ற சந்தாவுக்கு அல்லது உறுப்பினர் தகுதிக்கு நீங்கள் எங்கள் வழியாக நேரடியாகப் பதிவு செய்திருந்தால், உங்கள் கணக்கிற்குச் சென்று அமைவுகளைச் சீரமைப்பதன் மூலமாகவோ, Amazon வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்வதன் மூலமாகவோ அல்லது உங்களுடைய வீடியோ சந்தைப்பகுதியில் (இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது) நாங்கள் உங்களுக்கு அளித்திருக்கும் ஏதேனும் இரத்து செய்யும் படிவத்தைப் பயன்படுத்துவதன் மூலமாகவோ அதை நீங்கள் எந்த நேரத்திலும் இரத்துச் செய்யலாம் அல்லது பொருந்தக்கூடிய Amazon சந்தாவுக்கு அல்லது உறுப்பினர் தகுதிக்கு நீங்கள் ஒரு மூன்றாம் தரப்பினர் வாயிலாக பரிமாற்றம் செய்திருந்தால், உங்களுடைய கணக்கு வாயிலாக இது போன்ற மூன்றாம் தரப்பினருடன் இதை நீங்கள் இரத்து செய்து கொள்ளலாம். பதிவு செய்யப்பட்டதிலிருந்து அல்லது ஓர் இலவச சோதனை முயற்சியிலிருந்து பணம் செலுத்தும் உறுப்பினர் தகுதிக்கு மாறியதிலிருந்து 3 வேலை நாட்களுக்குள் நீங்கள் இரத்து செய்தால் (அல்லது யுகே மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, உங்களுடைய சந்தா அல்லது உறுப்பினர் தகுதிச் சேவை உறுதி செய்யப்பட்ட 14 நாட்களுக்குள்), உங்களுடைய உறுப்பினர் தகுதிக்கான முழுமையான கட்டணத்தையும் நாங்கள் திரும்ப அளிப்போம்; ஆனால் இது போன்ற காலகட்டத்தில் உங்களுடைய கணக்கு வழியாக பயன்படுத்தப்பட்ட சேவைக்கு நாங்கள் உங்களிடமிருந்துகட்டணம் வசூலிப்போம் (அல்லது உங்களுடைய பணம் திரும்பப் பெறுதலை நிறுத்தி வைப்போம்). உங்களுடைய இரத்து செய்யும் காலத்திற்குள் சேவையானது தொடங்கும் என்பதை நீங்களும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்கிறீர்கள். வேறு எந்த நேரத்திலும் நீங்கள் இரத்து செய்தால், உங்களுடைய சமீபத்திய உறுப்பினர் தகுதிக் கட்டணம் செலுத்தப்பட்டதிலிருந்து உங்களுடைய கணக்கு வாயிலாக உங்களுடைய வீடியோ-ஒன்லி என்ற உறுப்பினர் தகுதியின் ஒரு பகுதியாக கிடைக்கப்பெறும் டிஜிட்டல் உள்ளடக்கம் அணுகப்படாமல் இருந்தால் மட்டுமே உங்களுடைய உறுப்பினர் தகுதிக்கான முழுக்கட்டணத்தையும் நாங்கள் உங்களுக்குத் திரும்ப அளிப்போம். ஒரு Prime உறுப்பினர் தகுதியின் ஒரு பகுதியாக நீங்கள் சேவையை அணுகினால், உங்களுக்குப் பொருந்தக்கூடிய இரத்து செய்தல் மற்றம் பணம் மீளப் பெறுதல் தொடர்பான விதிமுறைகள் உங்களுடைய வீடியோ சந்தையின் பயன்பாட்டிற்கான பிரைம் விதிமுறைகள் என்பதில் வரையறுக்கப்பட்டுள்ளன (இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது). ஒரு மூன்றாம் தரப்பு வாயிலாக நீங்கள் பரிமாற்றம் செய்து பெறும் ஒரு Amazon சந்தாவின் அல்லது உறுப்பினர் தகுதியின் ஒரு பகுதியாக நீங்கள் சேவையை அணுகினால், உங்களுக்குப் பொருந்தக்கூடிய இரத்து செய்தல் மற்றும் பணம் திரும்பப் பெறுதல் தொடர்பான விதிமுறைகள் வேறுபடக்கூடும் மற்றும் இவை இது போன்ற மூன்றாம் தரப்பினரால் வரையறுக்கப்படும் மற்றும் மூன்றாம் தரப்பினரின் பொருந்தக்கூடிய கொள்கைகளின் கீழ் உங்களுடைய சந்தாவை இரத்து செய்யவோ அல்லது ஏதேனும் பணத்தைத் திரும்பப் பெறவோ நீங்கள் இது போன்ற மூன்றாம் தரப்பினரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

e. வாங்குதல் மற்றும் வாடகைக்கு எடுத்தல் தொடர்பான பரிமாற்றங்கள்; இரத்து செய்தல்கள். இந்தப் பத்தியில் விவரிக்கப்பட்டவற்றைத் தவிர, வாங்கப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கம், வாடகைக்கு எடுக்கப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் PPV டிஜிட்டல் உள்ளடக்கம் ஆகியவற்றிற்கான அனைத்து பரிமாற்றங்களும் இறுதியானவை ஆகும் மற்றும் இது போன்ற டிஜிட்டல் உள்ளடக்கம் திரும்ப அனுப்பப்படுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். வாங்கப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கான ஆர்டரை அல்லது வாடகைக்கு எடுக்கப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கான ஆர்டரை நீங்கள் வாங்கிய அல்லது வாடகைக்கு எடுத்த 48 மணி நேரத்திற்குள் (அல்லது, யுகே மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, வாங்கிய அல்லது வாடகைக்கு எடுத்த 14 நாட்களுக்குள்) அதை உங்களுடைய டிஜிட்டல் ஆர்டர்கள் என்பதிலிருந்து "Cancel Your Order" என்பதைக் கிளிக் செய்வதன் மூலமாகவோ அல்லது ஒரு மூன்றாம் தரப்பு வாயிலாக விலைப்பட்டியலுடன் வாங்கப்பட்டவற்றிற்கு உங்களுடைய வீடியோ சந்தையில் (இங்கேகுறிப்பிடப்பட்டுள்ளது) வீடியோவின் விவரப்பக்கம் மூலமாகவோ அல்லது Amazon வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்வதன் மூலமாகவோ இரத்து செய்யலாம்; இது தவிர வாங்கப்பட்ட அல்லது வாடகைக்கு எடுக்கப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கத்தை நீங்கள் பார்க்கத் தொடங்கிவிட்டாலோ அல்லது பதிவிறக்கம் செய்யத் தொடங்கிவிட்டாலோ அந்த ஆர்டரை உங்களால் இரத்து செய்ய முடியாது. வாங்கப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கம் அல்லது வாடகைக்கு எடுக்கப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கம் வெளிவரும் தேதிக்கு முன்பாகவே அதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு முன்-ஆர்டரை நீங்கள் எந்த நேரத்திலும் இரத்து செய்யலாம். PPV டிஜிட்டல் உள்ளடக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் ஆர்டரைத் திட்டமிடப்பட்ட நேரத்தில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக எந்த நேரத்திலும் நீங்கள் இரத்து செய்யலாம். முன்-ஆர்டர் செய்யப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கத்தின் வெளியிடப்படும் தேதி மாற்றத்திற்கு உட்பட்டதாகும் ஒரு மூன்றாம் தரப்பு வாயிலாகப் பரிமாற்றம் செய்து பெறும் ஒரு Amazon சந்தாவின் அல்லது உறுப்பினர் தகுதியின் ஒரு பகுதியாக நீங்கள் டிஜிட்டல் உள்ளடக்கத்தை வாங்கியிருந்தால், பொருந்தக்கூடிய பணம் மீளப் பெறும் விதிமுறைகள் இது போன்ற மூன்றாம் தரப்பால் வரையறுக்கப்படும்.

f. பணம் செலுத்தும் முறைகள். உங்களுடைய வீடியோ-ஒன்லி என்ற சந்தாவிற்கு அல்லது உறுப்பினர் தகுதிக்கு நீங்கள் எங்கள் வாயிலாகப் பதிவுசெய்து எங்களால் விலைப்பட்டியல் அளிக்கப்பட்டிருந்தால், கீழே உள்ள விலைப்பட்டியலுக்கான விதிமுறைகள் உங்களுடைய சந்தா அல்லது உறுப்பினர் தகுதிக்குப் பொருந்தும்.

  • உங்களுடைய அறிவிக்கப்பட்ட பணம் செலுத்தும் முறையைப் பயன்படுத்தி உங்களுடைய பணம் செலுத்துதலை எங்களால் செயலாக்கம் செய்ய இயலவில்லை எனில், உங்களுக்காக நாங்கள் கோப்பில் வைத்துள்ள ஏதேனும் பணம் செலுத்தும் முறைக்கு கட்டணம் வசூலிக்கும் உரிமை எங்களுக்கு உண்டு.
  • நீங்கள் ஒரு சந்தாவை வாங்கினால் அல்லது ஒரு சந்தாவுக்கான இலவச சோதனை முயற்சியைத் தொடங்கினால் உங்களுடைய சந்தா தானியங்கி முறையில் தொடரும் மற்றும் வரிகள் உட்பட அப்போது பொருந்தக்கூடிய காலமுறையிலான சந்தா கட்டணத்தை உங்களுக்காக நாங்கள் கோப்பில் வைத்துள்ள ஏதேனும் பணம் செலுத்தும் முறையைப் பயன்படுத்தி வசூலிக்க (பொருந்தக்கூடிய சட்டத்தால் அவசியப்படாதவரை மேற்கொண்டு அறிவிப்பு ஏதும் வழங்காமல் ) எங்களுக்கு நீங்கள் அங்கீகாரம் வழங்குகிறீர்கள்.
  • ஒரு கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு முன்பாக நீங்கள் இரத்து செய்ய விரும்புகிறீர்கள் என்பதை அல்லது தானியங்கி முறையில் புதுப்பிக்க விரும்பவில்லை என்பதை எங்களுக்குத் தெரிவிக்காத வரை, உங்களுடைய சந்தா தானியங்கி முறையில் தொடரும் என்பதையும், வரிகள் உட்பட அப்போது பொருந்தக்கூடிய காலமுறையிலான சந்தா கட்டணத்தை உங்களுக்காக நாங்கள் கோப்பில் வைத்துள்ள ஏதேனும் பணம் செலுத்தும் முறையைப் பயன்படுத்தி வசூலிக்க (பொருந்தக்கூடிய சட்டத்தால் அவசியப்படாதவரை மேற்கொண்டு அறிவிப்பு ஏதும் வழங்காமல் ) வசூலிக்க எங்களுக்கு நீங்கள் அங்கீகாரம் வழங்குகிறீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்.
  • உங்களுடைய சந்தா கட்டணத்தை செலுத்தும் பொருட்டு உங்களுக்காக நாங்கள் கோப்பில் வைத்துள்ள அனைத்து பணம் செலுத்தும் முறைகளும் செயல்பட மறுக்கப்படும் போது, நீங்கள் ஒரு புதிய பணம் செலுத்தும் முறையை எங்களுக்கு அளிக்காத வரை உங்களுடைய சந்தா இரத்து செய்யப்படும். ஒரு புதிய பணம் செலுத்தும் முறையை நீங்கள் எங்களுக்கு அளித்து உங்களுடைய சந்தா இரத்து செய்யப்படுவதற்கு முன்பாக உங்களிடமிருந்து வெற்றிகரமாக கட்டணம் வசூலிக்கப்பட்டால், உங்களுடைய புதிய சந்தா காலமானது உண்மையான விலைப்பட்டியல் அளிக்கப்பட்ட தேதியின் அடிப்படையில் அமையும் மற்றும் அது வெற்றிகரமாக கட்டணம் வசூலிக்கப்பட்ட தேதியின் அடிப்படையில் அமையாது. உங்களுடைய அறிவிக்கப்பட்ட பணம் செலுத்தும் முறையை(களை) புதுப்பிக்க “Your Account” என்ற அமைப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

ஒரு மூன்றாம் தரப்பு வாயிலாக நீங்கள் உங்களுடைய வீடியோ-ஒன்லி என்ற சந்தாவுக்கு அல்லது உறுப்பினர் தகுதிக்குப் பதிவு செய்து எங்களால் நேரடியாக விலைப்பட்டியல் அளிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில் மூன்றாம் தரப்பினரால் அளிக்கப்படும் விலைப்பட்டியல் தொடர்பான விதிமுறைகள் உங்களுடைய சந்தாவுக்கு அல்லது உறுப்பினர் தகுதிக்குப் பொருந்தும்.

g. ஊக்குவிப்புச் சலுகையாக வழங்கப்படும் சோதனை முயற்சிகள். சிலநேரங்களில் நாங்கள் தகுதியான வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சோதனை முயற்சிகளையும் அல்லது பிற ஊக்குவிப்புச் சலுகையான உறுப்பினர் தகுதிகளையும் வழங்குகிறோம். மற்றபடி ஊக்குவிப்புச் சலுகைகளில் குறிப்பிடப்பட்டவைகள் தவிர இவை இந்த ஒப்பந்தத்திற்கு உட்பட்டவையாகும். எங்களுடைய முழுமையான விருப்பத்தின் படி உங்களுடைய தகுதியைத் தீர்மானிக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது. சோதனை முயற்சி காலத்தின் முடிவில் சோதனை முயற்சியைப் பயன்படுத்தும் உறுப்பினர்கள் எந்த நேரத்திலும் (உங்களுடைய கணக்கு வழியாக) பணம் செலுத்தப்படும் உறுப்பினர் தகுதியைத் தொடர வேண்டாம் என்பதைத் தேர்வு செய்யக்கூடும்.

h. டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கான வரையறைக்குட்பட்ட உரிமம். டிஜிட்டல் உள்ளடக்கத்தை வாடகைக்கு எடுக்க, வாங்க அல்லது அணுக ஏதேனும் கட்டணத்தைச் செலுத்தும் போதும் மற்றும் இந்த ஒப்பந்தத்தின் அனைத்து விதிமுறைகளுக்கும் நீங்கள் இணங்கி நடக்கும் போதும், Amazon நிறுவனம் வணிக நோக்கம் அல்லாத, தனிநபர் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான, பயன்பாட்டு விதிகளின் படி டிஜிட்டல் உள்ளடக்கத்தைப் பார்க்கவும், அணுகவும் உங்களுக்கு ஒரு பிரத்தியேகமற்ற, மாற்ற இயலாத, துணை உரிமம் அளிக்க இயலாத வரையறுக்கப்பட்ட உரிமத்தை பொருந்தக்கூடிய பார்க்கும் காலத்தில் வழங்கும். டிஜிட்டல் உள்ளடக்கத்தின் பார்க்கும் காலம் முடிவடைந்த பின்பு உங்களுடைய பொருந்தக்கூடிய சாதனத்திலிருந்து டிஜிட்டல் உள்ளடக்கத்தை நாங்கள் தானாக அகற்றிவிடுவோம்

i. வாங்கப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கத்தின் கிடைக்கக்கூடிய தன்மை. பொருந்தக்கூடிய வகையில் சேவையிலிருந்து பதிவிறக்கம் செய்யவோ அல்லது ஸ்ட்ரீமிங் செய்யவோ வாங்கப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கம் பொதுவாக தொடர்ந்து கிடைக்கும். ஆனால் உள்ளடக்க வழங்குநரின் உரிமம் சார்ந்த சாத்தியமான கட்டுப்பாடுகள் காரணமாகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ அவை கிடைக்கப்பெறாமல் போகலாம். வாங்கப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கமானது பதிவிறக்கம் செய்யவோ அல்லது ஸ்ட்ரீமிங் செய்யவோ கிடைக்கபெறாமல் இருப்பதற்கு Amazon பொறுப்பேற்காது.

j. ப்ளேபேக் தரம்; ஸ்ட்ரீமிங். நீங்கள் பெறும் டிஜிட்டல் உள்ளடக்கத்தின் ப்ளேபேக் நுணுக்கம் மற்றும் தரம் ஆகியவை டிஜிட்டல் உள்ளடக்கத்தை நீங்கள் அணுகும் பொருந்தக்கூடிய சாதனத்தின் வகை மற்றும் நீங்கள் பார்க்கும் போது அதிகரிக்கக்கூடும் அல்லது குறையக்கூடும் உங்களுடைய அலைவரிசை உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்து அமையும். நாங்கள் உங்களுக்கு ஸ்ட்ரீமிங் செய்யும் டிஜிட்டல் உள்ளடக்கமானது தடைபடக்கூடும் என்றோ அல்லது மற்றவகையில் அலைவரிசையில் உள்ள இடர்பாடுகள் அல்லது பிற காரணிகளால் சரியாக இயங்கவில்லை என்றோ நாங்கள் கண்டறிந்தால் தடைபடாத பார்க்கும் அனுபவத்தை அளிக்கும் முயற்சியாக ஸ்ட்ரீமிங்க் செய்யப்படும் டிஜிட்டல் உள்ளடக்கத்தின் நுணுக்கத்தையும், கோப்பின் அளவையும் நாங்கள் குறைக்கக்கூடும். உங்களுக்கு ஒரு உயர்தரம் வாய்ந்த பார்க்கும் அனுபவத்தை அளிக்க நாங்கள் முயற்சி செய்து வரும் அதே வேளையில் ஹை டெஃபினிஷன், அல்ட்ரா ஹை டெஃபினிஷன் அல்லது ஹை டைனமிக் ரேஞ்ஜ் கொண்ட உள்ளடக்கங்களை அணுக நீங்கள் கூடுதலாக கட்டணம் செலுத்தியிருந்தாலும் டிஜிட்டல் உள்ளடக்கத்தின் நுணுக்கத்திற்கோ அல்லது தரத்திற்கோ நாங்கள் எந்த வித உத்திரவாதத்தையும் அளிப்பதில்லை

k. பொதுவான க் கட்டுப்பாடுகள். நீங்கள் (i) இந்த ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்டதைத் தவிர டிஜிட்டல் உள்ளடக்கத்தை மாற்றவோ, நகல் எடுக்கவோ அல்லது காட்சிப்படுத்தவோ கூடாது; (ii) டிஜிட்டல் உள்ளடக்கத்தின் எந்த ஒரு உரிமையையும் விற்கவோ, வாடகைக்கு விடவோ அல்லது ஒளிபரப்பவோ கூடாது; (iii) டிஜிட்டல் உள்ளடக்கத்திலுள்ள எந்த ஒரு தகுதியுரிமை அறிவிப்புகளையோ அல்லது விவரக்குறிப்புகளையோ அகற்றக்கூடாது; (iv) சேவையின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படும் எந்த ஒரு டிஜிட்டல் உரிமைகள் தொடர்பான மேலாண்மையை அல்லது பிற உள்ளடக்கப் பாதுகாப்பு அமைப்பை முடக்கவோ, தாண்டிச்செல்லவோ, மாற்றியமைக்கவோ, தோற்கடிக்கவோ அல்லது மற்றவகையில் ஏமாற்றவோ முயற்சி செய்யக்கூடாது; அல்லது(v) சேவையை அல்லது டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஏதேனும் வணிகநோக்கத்திற்காகவோ அல்லது சட்டத்திற்குப் புறம்பான நோக்கத்திற்காகவோ பயன்படுத்தக்கூடாது.

l. பார்வையாளர்களின் அளவீடு. யு.எஸ் வாடிக்கையாளர்களுக்கு மட்டும், விளம்பரதாரர்கள் மற்றும் உள்ளடக்க உரிமையாளர்கள் போன்ற குறிப்பிட்ட சில மூன்றாம் தரப்பினர் தங்களுடைய உள்ளடக்கம் Prime Video-வில் எவ்வாறு செயலாற்றுகிறது என்பதைப் புரிந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். குறிப்பிட்ட சில சேனல்கள் மற்றும் விளையாட்டு மற்றும் நேரலை சார்ந்த உள்ளடக்கங்களைப் பார்க்கும் போது, பார்வையாளர்கள் அளவீடு மற்றும் சந்தை ஆராய்ச்சி போன்ற நோக்கங்களுக்காக Amazon உங்களுடைய பார்க்கும் நடத்தைகள் குறித்த தகவல்களை மூன்றாம் தரப்பினருக்கு அளிக்கக்கூடும். அவர்களையும், உங்கள் விருப்பங்களையும் உள்ளடக்கும் இந்த அளவீட்டுச் சேவைகள், சேனல்கள் மற்றும் விளையாட்டு மற்றும் நேரலை தொடர்பான உள்ளடக்கம் ஆகியவை குறித்து மேலும் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் .

5. மென்பொருள்

a. மென்பொருளின் பயன்பாடு. சேவையுடன் தொடர்புடைய உங்கள் பயன்பாட்டுக்கான மென்பொருளை ("மென்பொருள்") நாங்கள் உங்களுக்கு கிடைக்கப்பெறுமாறு செய்வோம். உங்களுடைய வீடியோ சந்தையின் பபயன்பாட்டின் நிபந்தனைகள் எஎன்பதில் உள்ளடங்கியுள்ள விதிமுறைகள் உங்களுடைய மென்பொருள் பயன்பாட்டுக்கும் பொருந்தும் ( இங்கே) குறிப்பிடப்பட்டுள்ளது). சில மூன்றாம் தரப்பு மென்பொருளுக்குப் பொருந்தக்கூடிய சில கூடுதல் விதிமுறைகளுக்கு, இங்கே கிளிக் செய்யவும்.

B. Amazon மற்றும் வீடியோ உள்ளடக்க வழங்குநர்களுக்கு அளிக்கப்படும் தகவல் சேவை மற்றும் மென்பொருள் சம்பந்தப்பட்ட உங்கள் பயன்பாடு மற்றும் செயல்திறன் தொடர்பான தகவல்களும், சேவையையும் மென்பொருளையும் நீங்கள் பதிவிறக்கம் செய்யப் பயன்படுத்தும் சாதனங்கள் தொடர்பான தகவல்களும் சேவை மற்றும் மென்பொருளால் Amazon-க்கு அளிக்கப்பட கூடும். உதாரணமாக நீங்கள் பதிவிறக்கம் செய்யும் மற்றும் ஸ்ட்ரீமிங் செய்யும் டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் அந்த டிஜிட்டல் உள்ளடக்கம் தொடர்பான உங்கள் பயன்பாடு தொடர்பான தகவல்களை மென்பொருள் Amazon-க்கு வழங்கும் (நீங்கள் டிஜிட்டல் உள்ளடக்கத்தை பார்த்தீர்களா மற்றும் எப்போது பார்த்தீர்கள் என்பது போன்றவை, இது மற்ற காரியங்களுக்கு மத்தியில் வாடகைக்கு எடுக்கப்படும் டிஜிட்டல் உள்ளடக்கத்தின் பார்க்கும் காலத்தை அளவிட எங்களுக்கு உதவும்). நாங்கள் பெறும் எந்தத் தகவலும் உங்களுடைய வீடியோ சந்தையின் Amazon தனியுரிமை அறிவிப்புக்கு உட்பட்டதாகும் (இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது).). உங்களுடைய பார்த்த வரலாறு உட்பட உங்களுடைய சந்தாவின் நிலைமை மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்தின் பயன்பாடு தொடர்பான குறிப்பிட்ட சில தகவல்களை Prime Video சேனல்கள் வாயிலாக சந்தா சேவைகளை அளிக்கும் மூன்றாம் தரப்பு நபர்கள் போன்ற வீடியோ உள்ளடக்க வழங்குநர்களுக்கு நாங்கள் வழங்ககக்கூடும். நாங்கள் இந்தத் தகவல்களை உங்களை அடையாளப்படுத்தாத வகையில் வழங்குவோம் ( ஒரு குறிப்பிட்ட வீடியோ உள்ளடக்க வழங்குநருடன் உங்களை அடையாளப்படுத்தக்கூடிய தகவல்களைப் பகிர நீங்கள் அங்கீகாரம் அளிக்காதவரை).

6. கூடுதல் விதிமுறைகள்

a. நீக்கப்படுதல். சேவையின் ஒரு பகுதியாக கிடைக்கப்பெறும் எந்த ஒரு சந்தா உட்பட சேவைக்கான உங்களுடைய அணுகலை எங்களுடைய விருப்பப்படி முன்னறிவிப்பு ஏதுமின்றி(பொருந்தக்கூடிய சட்டங்களால் தேவைப்படும் நிகழ்வைத் தவிர) நாங்கள் நிறுத்தக்கூடும். இவ்வாறு நாங்கள் செய்தால் நாங்கள் உங்களுடைய சந்தா கட்டணத்தில் (ஏதேனும் இருந்தால்) சார்பு விகிதத்தில் அமைந்த கட்டணத்தைத் திரும்ப அளிப்போம்; எனினும் இந்த ஒப்பந்தத்தின் எந்த ஒரு விதிமுறையையும் நீங்கள் மீறினால், இந்த ஒப்பந்தத்தின் கீழ் உங்களுடைய உரிமைகள் முன்னறிவிப்பின்றி தானாகவே நீக்கப்பட்டு விடும் மற்றும் Amazon அதன் விருப்பப்படி எந்த வித கட்டணமும் திரும்ப அளிக்கப்படாமல் சேவை மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கம் ஆகியவற்றிற்கான உங்களுடைய அணுகலை உடனடியாகத் திரும்பப்பெற்றுக்கொள்ளும். இது போன்ற நிகழ்வில் நீங்கள் பதிவிறக்கம் செய்த அனைத்து டிஜிட்டல் உள்ளடக்கங்களின் நகல்களையும் நீங்கள் நீக்கி விட வேண்டும்.

b. பாலியல் ரீதியான உள்ளடக்கம்.. இந்தச் சேவையைப் பயன்படுத்துவதன் மூலம் மனதைப் புண்படுத்தக்கூடிய, அநாகரிகமான அல்லது ஆட்சேபத்துக்குரிய உள்ளடக்கத்தை நீங்கள் எதிர்கொள்ளக்கூடும்; இந்த உள்ளடக்கம் பாலியல் ரீதியான மொழியை அல்லது பிற பண்புகளைக் கொண்டிருப்பதாக அடையாளம் காணப்படக்கூடும் அல்லது அடையாளம் காணப்படாமல் போகக்கூடும். எதுவாக இருப்பினும், சேவையினால் ஏற்படும் ஆபத்திற்கு நீங்களே பொறுப்பேற்றுக்கொண்டு சேவையைப் பயன்படுத்த நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் மற்றும் எந்த வித உள்ளடக்கத்திற்கும் உங்களுக்காக Amazon பொறுப்பேற்காது. உள்ளடக்கத்தின் வகைகள், வடிவங்கள், வகைப்பிரிவுகள் மற்றும் விளக்கங்கள் ஆகியவை உங்களுடைய வசதிக்காக அளிக்கப்படுகின்றன மற்றும் அவற்றின் துல்லியத் தன்மைக்கு Amazon உத்திரவாதம் அளிக்காது.

c. தகவல் பரிமாற்றங்கள். நாங்கள் உங்களுக்கு ஊக்குவிப்புச் சலுகைகளை அனுப்புவோம் இல்லாவிட்டால் நாங்கள் உங்களிடம் மின்னணு முறையில் தகவல் தொடர்பு கொள்வோம், இதில் மின்னஞ்சல், புஷ் நோட்டிபிக்கேஷன், அல்லது உங்களுடைய Amazon செய்தி மையத்திற்கு இடுகையிடுதல் ஆகியவை உள்ளடங்குகின்றன மற்றும் அந்தத் தகவல் பரிமாற்றங்களைப் பெற நீங்கள் இங்கு உங்களுடைய ஒப்புதலை அளிக்கிறீர்கள் (நீங்கள் யுகே, ஐரோப்பிய ஒன்றியம், துருக்கி, அல்லது பிரேசில் ஆகியவற்றின் ஒரு வாடிக்கையாளராக இல்லாத பட்சத்தில், இத்தகைய தகவல் தொடர்புகளை நீங்கள் பெற விரும்புகிறீர்களா அல்லது இல்லையா என்பதை நீங்கள் தனியாக முடிவு செய்ய வேண்டும்). இந்தத் தகவல் பரிமாற்றங்கள் உங்களுடைய வீடியோ சந்தையின் Amazon தனியுரிமை தொடர்பான அறிவிப்பின்படி இருக்கும் (இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது). Amazon Prime Videoவிலிருந்து சந்தைப்படுத்துதல் தொடர்பான தகவல் பரிமாற்றங்கள் பெறுவதை நிறுத்த உங்களுடைய கணக்கில் உள்ள உங்களுடைய சந்தைப்படுத்துதல் தொடர்பான தகவல் பரிமாற்றங்களுக்கான விருப்பங்களைப் புதுப்பித்துக்கொள்ளவும்.

d. சேவையை மாற்றியமைத்தல். எந்த நேரத்திலும் முன்னறிவிப்பின்றி (பொருந்தக்கூடிய சட்டத்தால் தேவைப்படும் நிகழ்வைத் தவிர ) சேவையையோ அல்லது சேவையின் எந்த ஒரு பகுதியையோ மாற்றியமைக்கவோ, நிறுத்தி வைக்கவோ அல்லது இடைநிறுத்தம் செய்யவோ Amazonனுக்கு உரிமை உண்டு மற்றும் இது போன்ற உரிமைகளை நடைமுறைப்படுத்தும் போது, டிஜிட்டல் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தும் உங்களுடைய திறன் இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட்டாலும் கூட Amazon அதற்குப் பொறுப்பேற்றுக்கொள்ளாது.

e. திருத்தங்கள். Amazon எந்த நேரத்திலும் இந்தச் சேவையோடு அல்லது உங்களுடைய வீடியோ சந்தையோடு தொடர்புடைய திருந்திய விதிமுறைகளை இடுகையிடுவதன் மூலம் இந்த ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்யும் உரிமை Amazonக்கு உண்டு (இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது). சட்டத்தால் அதிகபட்சமாக அனுமதிக்கப்படும் அளவுக்கு, ஏதேனும் மாற்றங்களைத் தொடர்ந்து உங்களுடைய சேவையின் அல்லது மென்பொருளின் தொடர்ச்சியான பயன்பாடானது அது போன்ற மாற்றங்களை நீங்கள் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும். எனினும், உங்களுடைய சந்தா புதுப்பிக்கப்படும் வரை சந்தா கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் எந்த வித அதிகரிப்பும் நடைமுறைப்படுத்தபடமாட்டாது .

f. உரிமைகளுக்கான ஒதுக்கீடு; தள்ளுபடி. சேவை, மென்பொருள் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கம் ஆகியவை சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட அறிவு சார்ந்த சொத்தை உள்ளடக்குகிறது. டிஜிட்டல் உள்ளடக்கத்தின் காப்புரிமையைக் கொண்ட உரிமையாளர்கள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் உத்தேசிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு பயனாளிகள் ஆவர். ஒப்பந்தத்தை நீங்கள் கண்டிப்பாகப் பின்பற்றுவதை வலியுறுத்தவோ அல்லது நடைமுறைப்படுத்தவோ நாங்கள் தவறுவது எங்களுடைய எந்த உரிமைகளையும் விட்டுக்கொடுப்பதாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

g. சர்ச்சைகள்/Conditions of Use. இந்த ஒப்பந்தம் அல்லது சேவையிலிருந்து எழுகின்ற அல்லது இது தொடர்பாக எழுகின்ற எந்த வித சர்ச்சையோ அல்லது உரிமை கோரலோ நிர்வாகச் சட்டம், உத்திரவாதங்களுக்கான பொறுப்புத்துறப்பு மற்றும் பொறுப்புக்கான வரம்பு, சர்ச்சைக்கான தீர்வு மற்றும் கிளாஸ் ஆக்ஸன் வெய்வர் (பொருந்தும் பட்சத்தில்) மற்றும் உங்களுடைய வீடியோ சந்தை தொடர்பான Amazon-ன் பயன்பாட்டு நிபந்தனைகளிலுள்ள அனைத்துப் பிற விதிமுறைகள் ஆகியவற்றிற்கு உட்பட்டதாகும். (இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது). இந்தச் சேவையைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சார்பாகவும் மற்றும் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் சார்பாகவும் மற்றும் உங்கள் கணக்கின் கீழ் சேவையைப் பயன்படுத்தும் மற்றவர்கள் சார்பாகவும் நீங்கள் அந்த விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கிறீர்கள் உங்களுடைய உள்ளூர் ஆளுகை எல்கையின் கீழ்வரும் சட்டங்களின் படி நீங்கள் குறிப்பிட்ட சில நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகளுக்குத் தகுதி பெறுகிறீர்கள்.

h. பொறுப்புக்கான வரம்பு. உங்களுடைய வீடியோ சந்தையின் பயன்பாட்டுக்கான Amazonனின் நிபந்தனைகளில் உள்ள உத்திரவாதங்களுக்கான பொறுப்புத் துறப்பு மற்றும் பொறுப்பு வரம்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தாமல் (இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது): (i) எந்த ஒருநிகழ்விலும் உங்களுடைய மென்பொருள் பயன்பாடு காரணமாக அல்லது மென்பொருளைப் பயன்படுத்த இயலாமை காரணமாக எழும் அனைத்துச் சேதங்களுக்கும் அல்லது இது தொடர்பான அனைத்து சேதங்களுக்கும் எங்களுடைய அல்லது எங்களுடைய மென்பொருள் உரிமதாரர்களுடைய மொத்த பொறுப்பு என்பது ஐம்பது டாலர்களைத் ($50.00) தாண்டக்கூடாது; மற்றும் (ii) எந்த ஒரு நிகழ்விலும் சேவை, டிஜிட்டல் உள்ளடக்கம் அல்லது சேவையில் உள்ளடக்கப்பட்ட அல்லது சேவை மூலம் உங்களுக்கு மற்றவகையில் கிடைக்கப்பெறுமாறு செய்யப்பட்ட தகவல்கள், பொருட்கள் அல்லது தயாரிப்புகள் ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் அனைத்து சேதங்களுக்கும் எங்களுடைய அல்லது எங்களுடைய டிஜிட்டல் உள்ளடக்க வழங்குநர்களுடைய மொத்தப் பொறுப்பு கடந்த 12 மாதங்களில் நீங்கள் வாங்கிய, வாடகைக்கு எடுத்த அல்லது பார்த்த டிஜிட்டல் உள்ளடக்கத்திற்காக நீங்கள் செலுத்திய தொகையைத் தாண்டக்கூடாது. பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அவற்றிற்குரிய இன்றியமையாத நோக்கத்தில் தோல்வி அடைந்தாலும் கூட இந்தப் பிரிவில் உள்ள வரம்புகள் உங்களுக்குப் பொருந்தும்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஆளுகை எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் உட்பட சில ஆளுகை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உட்பொதிந்த உத்திரவாதங்கள் விலக்கிக்கொள்ளப்படுவதோ அல்லது சில வகையான சேதங்களுக்கானப் பொறுப்பு வரம்புகள் நிர்ணயிக்கப்படுவதோ அல்லது பொறுப்பு விலக்கிக்கொள்ளப்படுவதோ அனுமதிக்கப்படமாட்டாது. இத்தகையச் சட்டங்கள் உங்களுக்குப் பொருந்தும்பட்சத்தில், மேலே உள்ள சில பொறுப்புத்துறப்புகள் அல்லது அனைத்து பொறுப்புத்துறப்புகள், விலக்குகள் அல்லது வரம்புகள் உங்களுக்குப் பொருந்தாமல் இருக்கக்கூடும் மற்றும் நீங்கள் கூடுதல் உரிமைகளைக் கொண்டிருக்கலாம்

i. தொடர்பு கொள்வதற்கானத் தகவல். இந்த ஒப்பந்தம் தொடர்பான தகவல் பரிமாற்றங்களுக்கு தயவுசெய்து இங்கே பட்டியலிடப்பட்டுள்ள பொருந்தக்கூடிய அறிவிப்பு முகவரியில் Amazonனுக்கு எழுதவும்.

j. பிரிக்கப்படும் தன்மை. இந்த ஒப்பந்தத்தின் ஏதேனும் ஒரு விதிமுறையோ அல்லது நிபந்தனையோ செல்லுபடியாகாது அல்லது செல்லாது எனக் கருதப்பட்டால் அல்லது ஏதேனும் காரணத்திற்காக அதை நடைமுறைப்படுத்த இயலாமல் போனால் அந்தப் பகுதி பிரிக்கப்பட்டதாக கருதப்படுகிறது மற்றும் மீதமுள்ள எந்த ஒரு விதிமுறையின் அல்லது நிபந்தனையின் நடைமுறைப்படுத்தப்படும் தன்மையையும், காலாவதியையும் இது பாதிக்காது.