உதவி

உள்ளடக்கக் கொள்கை வழிகாட்டுதல்கள்

வீடியோக்கள் மற்றும் பிற உள்ளடக்கம் அனைத்தும் (கவர் படம் மற்றும் தயாரிப்பு விளக்கங்கள் போன்றவை) அவ்வப்போது மாறுபடக்கூடிய இந்த உள்ளடக்கக் கொள்கை வழிகாட்டுதல்களுக்கு இணங்க இருக்க வேண்டும். உள்ளடக்கம் முறையானதுதானா என்பதை முடிவுசெய்யும் உரிமையைக் கொண்டுள்ளோம். சிறப்பான வாடிக்கையாளர் அனுபவத்தை நாங்கள் வழங்க முயல்வதன் ஒரு பாகமாக, எந்தவொரு உள்ளடக்கத்தையும் வழங்காமல் இருக்க அல்லது பிற வழிகளில் கட்டுப்படுத்த நாங்கள் தேர்வுசெய்யலாம்.

முறையற்ற உள்ளடக்கம்

சேவையில் வெளியிடுவதற்காகச் சமர்ப்பிக்கப்படும் எல்லா உள்ளடக்கத்தின் ஏற்பு நிலையையும் தீர்மானிக்கும் உரிமையைக் கொண்டுள்ளோம். தொடர்ச்சியான அல்லது வெளிப்படையான கிராஃபிக் பாலியல் அல்லது வன்முறைச் செயல்கள், அவசியமற்ற நிர்வாணம் மற்றும்/அல்லது சிற்றின்ப தீம்கள் ("வயது வந்தோர் உள்ளடக்கம்") ஆகியவற்றைக் கொண்ட தலைப்புகள் Amazon Prime Video பட்டியலில் இருக்கக்கூடாதவை. வயது வந்தோர் உள்ளடக்கம் கொண்ட தலைப்புகளை இந்தக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் அவற்றின் அசல் வடிவத்திலிருந்து மாற்றவோ அல்லது திருத்தவோ கூடாது.

வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம்

 • ஆபாசச் சித்தரிப்புகள் அல்லது பாலியல் செயல்கள் அல்லது நிர்வாணத்தின் வெளிப்படையான சித்தரிப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் உள்ளடக்கம்.
 • சட்டவிரோத பாலியல் நடவடிக்கைகளை மகிமைப்படுத்தும் உள்ளடக்கம்.
 • பாலியல் ரீதியாகத் தூண்டுவதை முதன்மையாகக் கொண்ட உள்ளடக்கம்.

வன்முறை அல்லது கிராஃபிக் உள்ளடக்கம்

 • வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியளிக்கும் நோக்கத்தில் கடும் அகோரம், தலை துண்டிப்புகள், சகிக்காத உள்ளடக்கம் மற்றும்/அல்லது அதிக வன்முறை போன்ற கிராஃபிக் சித்தரிப்புகளைக் கொண்ட உள்ளடக்கம்.

அபாயகரமான அல்லது சட்டவிரோத உள்ளடக்கம்

 • ஆபத்தான அல்லது தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதற்குப் பார்வையாளரை ஊக்குவிக்கும், ஆதரிக்கும் அல்லது தூண்டும் உள்ளடக்கம்.
 • திட்டமிட்ட குற்றம், பயங்கரவாதம் அல்லது பிற சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் உள்ளடக்கம்.
 • விலங்குகள் துன்புறுத்தல் அல்லது சித்திரவதை செய்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை மகிமைப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் உள்ளடக்கம்.
 • சட்டவிரோதமான வாழ்க்கை முறையை எவ்வாறு தொடங்குவது அல்லது ஈடுபடுவது என்பதைக் குறித்த ஆலோசனை வழங்கும் உள்ளடக்கம்.
 • ஆபத்தான பொருட்களை எவ்வாறு உருவாக்குவது அல்லது கட்டமைப்பது என்ற வழிகாட்டுதல்களை வழங்கும் உள்ளடக்கம்.
 • சட்டவிரோத அல்லது கட்டுப்படுத்தப்பட்ட போதைமருந்து உபயோகத்தை மகிமைப்படுத்தும் அல்லது விளம்பரப்படுத்தும் உள்ளடக்கம்.

வெறுப்பூட்டும் உள்ளடக்கம்

 • வெறுக்கத்தக்க கருத்துகள், வெறுப்பூட்டும் பேச்சு அல்லது அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய உள்ளடக்கம், குறிப்பாக எந்தவொரு குழு அல்லது தனிநபர்களையும் இலக்கிடும் உள்ளடக்கம்.
 • வெறுப்புணர்ச்சியை ஊக்குவிக்கும், இன அல்லது பாலியல் வெறுப்புகளைத் தூண்டும் அல்லது அத்தகைய நம்பிக்கைகளை ஆதரிக்கும் குழுக்கள் அல்லது அமைப்புகளை ஊக்குவிக்கும் உள்ளடக்கம்.

துன்புறுத்தல் மற்றும் இணையக் குற்றங்கள்

 • தவறான, தரம்தாழ்ந்த மற்றும்/அல்லது அவமானகரமான மொழி கொண்ட உள்ளடக்கம்.
 • அச்சுறுத்தல் அல்லது மிரட்டலை ஊக்குவிக்கும் அல்லது ஏற்படுத்தும் உள்ளடக்கம்.
 • ஒப்புதல் இல்லாமல் பெறப்படும் வீடியோ உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் அல்லது தொந்தரவு செய்யும் வீடியோ உள்ளடக்கம்.

சட்டவிரோதமான மற்றும் விதிமீறுகின்ற உள்ளடக்கம்

சட்டங்கள் மற்றும் தனியுரிமைகள் மீறப்படுவதை நாங்கள் மிகவும் தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம். பொருந்தும் சட்டங்கள் அல்லது பதிப்புரிமை, வர்த்தகச்சின்னம், தனியுரிமை, பிரபலம் ஆகியவற்றை உள்ளடக்கம் மீறாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டியது, உரிமதாரரின் பொறுப்பாகும் (இதில் உள்ளடக்கத்தில் உள்ள பின்னணி இசை அல்லது காட்டப்படும் உருப்படிகள் போன்ற உள்ளடக்கத்தின் கூறுகளும் அடங்கும்). உள்ளடக்கம் இலவசமாகக் கிடைப்பதால் மட்டும், அதை நகலெடுத்து, விற்பனை செய்ய உரிமதாரருக்குச் சுதந்திரம் இருப்பதாக அர்த்தம் கொள்ளக்கூடாது.

பதிப்புரிமை

 • முழுப் படைப்பு அல்லது அதில் உள்ள இசை அல்லது விளக்கங்கள் போன்ற கூறுகள் உள்ளிட்ட நீங்கள் உருவாக்காத மற்றும் விநியோகிக்க உங்களுக்கு உரிமம் இல்லாத உள்ளடக்கம்.

வர்த்தகச்சின்னங்கள்

 • உங்களுக்குப் பயன்படுத்தும் உரிமைகள் இல்லாத வர்த்தகச்சின்னங்களைக் கொண்ட உள்ளடக்கம்.

தனியுரிமை தொடர்பான மீறல்கள் அல்லது அவதூறு

 • மற்றொருவரின் தனிப்பட்ட தகவல்களைக் கொண்ட உள்ளடக்கம்.
 • தனிநபரின் நற்பெயருக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் அவரைப் பற்றிய தவறான அறிக்கையைக் கொண்ட உள்ளடக்கம்.

பொதுவான டொமைன் உள்ளடக்கம்

பொதுவான டொமைன் உள்ளடக்கம் அல்லது, ஒன்று அல்லது பல தலைப்புகளில் வித்தியாசமில்லாத அல்லது சிறியளவு வித்தியாசம் மட்டுமே கொண்ட உள்ளடக்கத்தை நாங்கள் ஏற்பதில்லை.

மோசமான வாடிக்கையாளர் அனுபவம்

வெளிப்புற இணைப்புகள், டிராக்கிங் குறிகள், Prime Video-ஆல் ஆதரிக்கப்படாத செயல்பாடு கொண்ட உள்ளடக்கம் அல்லது பிற வழிகளில் மோசமான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கும் உள்ளடக்கத்தைக் கொண்ட வீடியோக்களை நாங்கள் ஏற்பதில்லை. ஏமாற்றமளிக்கும் அனுபவத்தை வழங்கும் எந்தவொரு வீடியோக்களையும் எங்கள் சொந்த முடிவின்படி ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ செய்யும் உரிமையைக் கொண்டுள்ளோம்.

தரச் சிக்கல்கள்

 • ஆடியோ மற்றும் வீடியோ கால அளவுகள் பொருந்தாத மூலக் கோப்பை உள்ளடக்கிய உள்ளடக்கம்.
 • தலைப்புப் பெயர் இல்லாத கவர் படம் கொண்ட உள்ளடக்கம்.
 • கேப்ஷன்கள் விடுபட்டுள்ள, ஒத்திசைவில் இல்லாத அல்லது துல்லியமற்ற உள்ளடக்கம்.
 • வாட்டர்மார்க்குகள், லோகோக்கள் அல்லது தவறான விநியோகச் சேனலுக்கான குறிப்புகளைக் கொண்ட உள்ளடக்கம்.
 • Prime Video செயலியில் ஆதரிக்கப்படாத செயல்பாடு அல்லது செயல் அழைப்புகள்.
 • உள்ளடக்கத்தைத் தவறாகச் சித்தரிக்கும் மெடாடேட்டா மற்றும்/அல்லது கவர் படம்.
 • ஆதரிக்கப்படாத மொழியில் உள்ள உள்ளடக்கம் அல்லது மெடாடேட்டா.
 • ஏற்கனவே Prime Video-இல் நேரலையில் இருக்கும் தலைப்பின் நகல் உள்ளடக்கம்.
 • வீடியோ அனுபவத்தை வழங்காத உள்ளடக்கம் (எ.கா., அசையா பட(களின்) உள்ளடக்கம் மற்றும்/அல்லது குறிப்பிடத்தக்க காட்சி மாறுபாடு இல்லாத உள்ளடக்கம்).
 • திறந்த/பொதுவான பதிப்புரிமைகள் உள்ளிட்ட இணையத்தில் இலவசமாக கிடைக்கும் உள்ளடக்கம்.

வணிக விளம்பரம் மற்றும் வெளிப்புற இணைப்புகள்

 • Amazon உடன் கூட்டுறவைக் குறிக்கும் அல்லது Amazon துணை நிறுவனங்கள் உள்ளிட்ட Amazon லோகோ அல்லது Amazon பிராண்ட் தயாரிப்பைத்(களைத்) தவறாக வழிநடத்தும் உள்ளடக்கம்.
 • Prime Video செயலியின் வெளியே நடவடிக்கை எடுக்கக்கூறும் URL, வெளிப்புற இணைப்பு அல்லது அழைப்பைக் கொண்ட உள்ளடக்கம்.
 • விளம்பரம் அல்லது விளம்பரங்களை மட்டுமே உள்ளடக்கிய உள்ளடக்கம்.
 • வாடிக்கையாளர்களுக்குக் குழப்பம் விளைவிக்கும் விதத்தில் வேறு தரப்பின் பிராண்டைக் காட்டும், தவறாகப் பயன்படுத்தும், இணைப்பு உள்ளதாகக் கூறும் அல்லது பிற வழிகளில் பயன்படுத்தும் உள்ளடக்கம்.

நாடு அல்லது பிராந்தியம் சார்ந்த கட்டுப்பாடுகள்

நாங்கள் உள்ளடக்கத்தை விநியோகிக்கும் சில நாடுகளில், "முறையற்ற உள்ளடக்கம்" அல்லது "சட்டவிரோத மற்றும் சட்டத்தை மீறுகின்ற உள்ளடக்கம்" எனத் தகுதிபெறக்கூடிய உள்ளடக்கத்திற்கு மற்ற நாடுகளை விட அதிக தடை விதிக்கப்படலாம். இதில் புகையிலை பிராண்டிங் மற்றும் போதைப் பொருள் பயன்பாடு ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகள் இருக்கலாம்; சில பிராந்தியங்களில் முறையற்ற, சட்டவிரோத அல்லது சட்டத்தை மீறும் சித்திரங்களை உள்ளடக்கிய உள்ளடக்கத்தின் வெளியீட்டிற்குக் கட்டுப்பாடுகள் இருக்கலாம்.

குறிப்பிட்ட நாட்டினரின் அல்லது பிராந்தியத்தின் சட்டங்கள், கலாச்சார நெறிமுறைகள் அல்லது உணர்ச்சிப்பூர்வ விஷயங்கள் அல்லது எந்தக் காரணத்திற்காகவும் எங்கள் விருப்பப்படி எந்தவொரு உள்ளடக்கத்தின் விற்பனை அல்லது விநியோகத்தையும் அந்த நாட்டில் அல்லது பிராந்தியத்தில் நாங்கள் கட்டுப்படுத்தலாம்.