Prime Video
  1. உங்கள் கணக்கு
2014 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 2 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஹவாய் ஃபைவ்-0

ஹவாய் ஃபைவ்-0 சூரிய ஒளியில் குளிக்கும் தீவின் கடற்கரைகளில் ஒதுங்கியுள்ள குற்றச் செயல்களை முற்றிலுமாய்த் துடைத்தெறியும் பணியைத் தொடர்கிறது. நூற்றாண்டு பழைய தொலைந்துபோன கொள்ளையர் புதையல், கொலைகாரக் கைதியின் விடுதலைக்காக அழைப்பு விடும் பிரதியெடுக்கும் தீ வைப்பாளன், கேப்ரியல் வைன்க்ராஃப்டைக் கண்டுபுடிப்பதற்கான ஓயாத வேட்டை உட்பட பல வழக்குகளை மெக்கேரட் மற்றும் அவருடைய குழுவினர் எடுத்துக்கொள்கிறார்கள்.
IMDb 7.4201025 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ6 எ1 - மாய் ஹோ ஒனி இ கா வாய் லானா மாலி (அமைதியான தண்ணீரைக் கலங்கச் செய்யாதே)
    24 செப்டம்பர், 2015
    44நிமி
    TV-14
    கடற்கொள்ளையர்கள், புதையல், திருடப்பட்ட வரைபடங்களை ஓவியமாகப் பயன்படுத்தும் ஒரு கொலைகாரன் ஆகியவை குறித்து துப்பறிவதற்காக மேற்கொள்வதற்காக ஒவாஹூவில் உள்ள பழங்கால மாளிகைக்கு ஃபைவ்-0 குழுவினர் செல்கின்றனர். அவர்களின் திருமணம் முடிந்த மறுநாள் காலையில், கோனோவையும் ஆடமையும் கேப்ரியேல் மிரட்டித் தொந்தரவு செய்கிறார், கேத்ரின் தீவுக்குத் திரும்புவது தொடர்பான கவலையை மெக்கேரட்டிடம் டானி தெரிவிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ6 எ2 - லேஹு எ லேஹு (சாம்பல் முதல் சாம்பல் வரை)
    1 அக்டோபர், 2015
    44நிமி
    TV-14
    கைதி ஜேசன் சின்கிளேரை சிறையில் இருந்து விடுதலை செய்யாவிட்டால், மறைத்து வைத்துள்ள வெடிகுண்டை வெடிக்கச் செய்துவிடுவோம் என்று குற்றவாளி மிரட்டி, வெடிகுண்டு நிபுணரைத் தாக்குகிறான். இந்த சம்பவத்தை ஃபைவ்-0 விசாரிக்கின்றனர். ஆடம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார். தங்களை யாரோ கண்காணிப்பதாக கோனோ சந்தேகிக்கிறார். கேத்ரினுடனான தனது உறவை மெக்கேரட் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல நினைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ6 எ3 - உவா ஓ ஒலோகு கே அணு ஐ நா மவுனா (மலையின் மீது குளிர்ப்புயல்)
    8 அக்டோபர், 2015
    44நிமி
    TV-14
    ஒரு ஸ்கூபா டைவரின் மரணத்தை ஃபைவ்-0 விசாரிக்கின்றனர். அந்தக் கொலையில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி வேறொரு கொலையிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மெக்கேரட் தனது காதலை கேத்ரினிடம் சொல்லத் தயாராகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ6 எ4 - கா பபஹானா ஹோலோ போனோ (சிறப்பாக வகுக்கபட்ட திட்டம்)
    15 அக்டோபர், 2015
    44நிமி
    TV-14
    கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மதிப்பிலான போலி பில்களுடன் ஒரு பணக்கார மனிதர் யாருமில்லாத இடத்தில் கொல்லப்படுகிறார். இந்த வழக்கை ஃபைவ்-0 விசாரிக்கின்றனர். மேலும், யகுசாவால் ஆடம் கடத்திச் செல்லப்பட்டு, கேப்ரியலின் கைக்கூலியால் துன்புறுத்தப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ6 எ5 - கா ‘அலபாஹி நுயி (பெரிய பொய்)
    22 அக்டோபர், 2015
    44நிமி
    TV-14
    கட்டிடத்தின் மேற்கூரையின் மீது தாவிச் சென்று தனது மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பித்த ஒரு கொலைகாரனைக் கண்டறிவதற்காக, ஸ்டண்ட் பைக்கர்களின் உறுப்பினர்களை ஃபைவ்-0 விசாரிக்கிறது. மேலும், டஃப் மட்டர் பந்தயத்திற்காக குழுவினர் தயாராகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ6 எ6 - நா பிலாகுவா நுய் (அரக்கர்கள்)
    29 அக்டோபர், 2015
    44நிமி
    TV-14
    ஒவாஹூவில் இது ஹாலோவீன் சமயம் மற்றும் ஃபிரான்கென்ஸ்டீனால் ஈர்க்கப்பட்ட பெரு தொடர் கொலைகாரனை ஃபைவ்-0 குழுவினர் கண்டறிய வேண்டும். மேலும், ஆயுதமேந்திய குழுவினர் ஒரு இரத்த வங்கியை முற்றுகையிடுகின்றனர். பொய் சொல்லிவிட்டு, ஹாலோவீன் பார்ட்டிக்க்குச் சென்ற கிரேஸை கண்டறிவதற்காக டானி செல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ6 எ7 - நா காமா ஹீலே (டே டிரிப்பர்ஸ்)
    5 நவம்பர், 2015
    44நிமி
    TV-14
    தனிமையான தீவில் லின்னுடன் முதல் டேட்டிங் பயணம் மேற்கொள்கிறார் மெக்கேரட். தன்ய இடத்தின் இரகசியத்தை யாரும் அறியாமல் இருக்க, அங்குள்ள ஒரு கொள்ளைக்கூட்டத் தலைவன் அவர்களை வேட்டையாட முயலும்போது அந்தச் சூழல் கொடுமையானதாக ஆகிறது. கல்லூரி கால்பந்து நட்சத்திரத்திற்கு ஒரு பெரிய விளையாட்டு சவாலை உள்ளூர் சூதாட்டக்காரன் செய்கிறான். அதில் வெற்றிபெறவில்லை என்றால், அவனின் தந்தையைக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ6 எ8 - பிகோ பாவ் இயோலே (கலைத்துவம்மிக்க ஏமாற்றுக்காரர்)
    12 நவம்பர், 2015
    44நிமி
    TV-14
    கான் மேன் ஹாங்க் வெபரின் (கிறிஸ்டோஃபர் போலாஹா) பெண் தோழி கொல்லப்படுகிறாள். அவருடன் இணைந்து ஃபைவ்-0 குழுவினர் கொலையாளியைக் கண்டுபிடிக்க வேண்டும். மேலும், சான் பிரான்சிஸ்கோ இன்ஸ்பெக்டர் அப்பி டேன் ஒவாஹூ வந்து, ஐந்து சீன ஆயுதக் கடத்தல்காரர்களின் கொலைகளைக் கண்டறிவதற்காக சின்னுடன் இணைந்து வேலை செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ6 எ9 - ஹானா கீகா (சொல் விளையாட்டு)
    19 நவம்பர், 2015
    44நிமி
    TV-14
    ஒரு கல்லூரி பேராசிரியர் கொல்லப்பட்ட வழக்கை ஃபைவ்-0 விசாரிக்கிறது. அவருக்கு மாற்றாக டானி அந்தப் பணிக்கு வந்து இரகசியமாக கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ6 எ10 - கா மகாவு கா கவுவா (இனிமையான அறிவியல்)
    10 டிசம்பர், 2015
    44நிமி
    TV-14
    ஒரு பிரபல உள்ளூர் பாக்ஸரின் சகோதரர் ல்யூக் நாகானோ (லூயிஸ் டான்) கொலை செய்யப்படுகிறார் மற்றும் முக்கிய சந்தேகப்படும் நபராக மெயின்லேண்டை சார்ந்த அவுட்ஸ்போக்கன் ரெயினிங் சாம்பியன் டேவன் ஹய்ன்ஸ் (ஹெரால்ட் ஹவுஸ் மூர்) இருக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ6 எ11 - குலீனா (ஒருவரின் தனிப்பட்ட பொறுப்புணர்வு)
    7 ஜனவரி, 2016
    44நிமி
    TV-14
    மெக்கேரட்டும், டானியும் ஒரு தம்பதியர் அளிக்கும் விருந்துக்காக மாவுய் செல்கின்றனர். தம்பதிகளுக்கு இடையேயான பிரச்சனைகளை அவர்கள் தீர்க்க முயலும்போது, காமேகோனாவின் அபாயகரமான கடந்தகாலம் மீண்டும் வந்து அவரை அச்சப்படுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ6 எ12 - உவா ஓலா லோகோ இ கே ஆலோஹா (காதலினுள்ளே வாழ்க்கை இருக்கும்)
    14 ஜனவரி, 2016
    44நிமி
    TV-14
    மெக்கேரட்டின் அத்தை டேப், ஒரு சிறப்புப் பணிக்காக ஒவாஹூ வருகிறார். அந்தத் தீவில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையற்ற ஜப்பானிய WWII வெடிகுண்டை யார் திருடியது என்பதை ஃபைவ்-0 கண்டறிய வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ6 எ13 - உமியா கா ஹானு (மூச்சை அடக்கு)
    21 ஜனவரி, 2016
    44நிமி
    TV-14
    கிளே மேக்ஸ்வெல் தனது மனைவியைக் கொன்றதை ஒப்புக்கொள்ள வைப்பதற்காக இறுதியில் குரோவர் சிகாகோ பயணிக்கிறார். சின்னும் கோனாவும் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ6 எ14 - ஹோவா இனியா (துன்பத்தின் போது நட்பு தேவை)
    11 பிப்ரவரி, 2016
    43நிமி
    TV-14
    திருமண உறவிலான துரோகம் தொடர்பான இரட்டைக் கொலை வழக்கை ஃபைவ்-0 விசாரிக்கின்றனர். மெக்கேரட்டும், அவரின் குழுவினரும் தங்களின் மோசமான காதலர் தின அனுபவங்களை நினைவுகூர்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ6 எ15 - கே கோவா லோகோமைகா’இ (நல்ல வீரர்)
    18 பிப்ரவரி, 2016
    44நிமி
    TV-14
    டானியின் அம்மாவை FBI விசாரிக்கிறது. தனது நண்பரை கொலை செய்த நபரைக் கண்டறிவதற்கான ஆதாரத்துக்காக ஒரு ஆட்டிசம் பாதித்த இளைஞருடன் மெக்கேரட் பழகுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ6 எ16 - கா போஹாகு கிஹி பா’ஆ (திடமான அடித்தளம்)
    25 பிப்ரவரி, 2016
    44நிமி
    TV-14
    தங்களின் இரகசிய தகவலாளரின் மீது கொலைக் குற்றஞ்சாட்டப்படும்போது, அவரைக் காப்பாற்றுமாறு தனது பழைய நண்பர் ஓடெல் மார்ட்டினை மெக்கேரட் கேட்டுக்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ6 எ17 - வாய்வாய் (சொத்துக்கள்)
    10 மார்ச், 2016
    44நிமி
    TV-14
    NSA -வின் இரகசியத் தகவல்கள் அடங்கிய ஒரு ஃபிளாஷ் டிரைவை திருடிய ரஷ்ய உளவாளியை மெக்கேரட்டும், ஃபைவ்-0 வும் கண்டறியவேண்டும். மேலும், கேத்ரின் எதனால் தன்னை விட்டுச் சென்றாள் என்பது இறுதியாக மெக்கேரட்டுக்கு தெரியவருகிறது மற்றும் சீன மற்றும் ஃபைவ்-0 -விடமிருந்து அவளின் இரகசிய மிஷனை அப்பி தொடர்ந்து மறைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ6 எ18 - கனகா ஹஹாய் (வேட்டைக்காரன்)
    31 மார்ச், 2016
    43நிமி
    TV-14
    ஒவாஹூவின் கடற்கரையில் ஒரு நபர் உயிருக்குப் போராடும் நிலையில் இருக்கிறார். ஒரு சட்டவிரோத கப்பலின் உள்ளே கொடூரமான அடிமை வர்த்தகம் மேற்கொள்ளப்படுவதை ஃபைவ்-0 கண்டறிகிறது. மேலும், டானி தனது குழந்தைகளுடன் வெளியே சென்றிருக்கும் போது, அவரின் கார் திருடப்படுகிறது. அந்தத் திருடர்களைப் பிடிப்பதற்காக அவர் ஒரு பஸ்ஸை தனது கட்டுப்பாட்டில் எடுக்கிறார். 61
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ6 எ19 - மலாமா கா போ’யே (ஒருவரைச் சார்ந்தவர்களின் மீது அக்கறை கொள்ளுதல்)
    7 ஏப்ரல், 2016
    44நிமி
    TV-14
    15 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு வழக்கில் குரோவரை பழிவாங்குவதற்காக ஒரு கும்பல் குரோவரின் குடும்பத்தைத் துரத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ6 எ20 - கா ஹாவுனாலே (வெறியாட்டம்)
    14 ஏப்ரல், 2016
    42நிமி
    TV-14
    அமெரிக்க இராணுவத்துக்காக கட்டப்பட்ட இடிக்கமுடியாத சூட்டின் ஹைடெக் திருட்டை ஃபைவ்-0 விசாரிக்கின்றனர். பிடித்து வைக்கப்பட்ட யானையைக் காப்பாற்றுவதற்காக ஜெர்ரி தனது சகோதரிக்கு உதவுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ6 எ21 - கா போனோ கு’ஓகோ’ஆ (சுதந்திரத்தின் விலை)
    21 ஏப்ரல், 2016
    44நிமி
    TV-14
    திட்டமிட்ட இரசாயனச் சிந்தல் காரணமாக ஆறு அபாயகரமான கைதிகள் தப்பியோடி விடுகின்றனர். அதில் கோனோவின் கணவர் ஆடமும் (இயான் ஆண்டனி டேல்) அடக்கம். இதற்குக் காரணமான நபரை ஃபைவ்-0 துப்பரிகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ6 எ22 - ஐ’இகே கே ஆவோ (உலகம் அறிவதற்காக)
    28 ஏப்ரல், 2016
    44நிமி
    TV-14
    கடத்தப்பட்ட கல்லூரி மாணவரை அபாயகரமான நபரிடம் இருந்து ஃபைவ்-0 காப்பாற்றவேண்டும். கப்பல் விபத்தில் சிக்கிய மேக்ஸ், கமேகொனா மற்றும் ஃபிலிப்பா ஆகியோர் உயிருக்குப் போராடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ6 எ23 - புலினா கோகோ (இரத்த பந்தம்)
    5 மே, 2016
    44நிமி
    TV-14
    ஒரு பெண் தனது வீட்டில் வைத்து கொல்லப்படுகிறார். இறந்தவரின் சின்ன மகளுக்கு இதனுடன் தொடர்பு இருப்பதை ஃபைவ்-0 கண்டறிகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ6 எ24 - (நுழைவு ஒரு சிலந்தி வலையால் தடுக்கப்படுகிறது)
    12 மே, 2016
    43நிமி
    TV-14
    ஓஹூவின் சைனாடவுனில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில் மாட்டிக்கொண்டிருக்கிறான் ஃபைவ்-0. ஆறாவது சீசன் ஃபினாலேயின் முதல் மணிநேரத்தில் அவனையும் தங்கள் வழியில் குறுக்கிடும் வேறு எவரையும் கொள்ளும் எண்ணத்துடன் அந்தக் கட்டிடத்திற்குள் எதிரி துப்பாக்கிவீரர்கள் ஆவேசமாகப் புகுந்துவருகிறார்கள். ஃபைவ்-0 காயப்பட்ட கேப்ரியலை (கிரிஸ்டஃபர் ஷான்) பாதுகாத்து, தாங்கள் தப்பிப்பதற்கான வழியையும் திட்டமிடவேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ6 எ25 - (என் ஆசை தலைவன் மீது மட்டும்தான்)
    12 மே, 2016
    44நிமி
    TV-14
    தீவில் ஒரு மெத் பரவலைத் தடுப்பதற்காக, மெக்கேரட், டானி இருவரும் பைலட்டுகள் வேடத்தில் பதுங்குகிறார்கள். ஆனால் மெக்கேரட் தீவிரமாகக் காயமடையும்பொழுது, தன் கூட்டாளரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக டானி தங்கள் மறைவிடத்தை விட்டு வெளிவரும் கட்டாயத்தில் இருக்கிறான் - ஆறாவது சீசன் ஃபினாலேயின் இரண்டாவது மணிநேரத்தில்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Bryan SpicerPeter WellerJerry LevineMaja VrviloLarry TengEagle EgilssonBrad TurnerJoe DanteSteve BoyumDuane Clark
தயாரிப்பாளர்கள்
எரிக் கக்கன்ஹெய்ம்பீட்டர் லெங்காவ்
நடித்தவர்கள்
டேனியல் டே கிம்க்ரேஸ் பார்க்அலெக்ஸ் ஓ லாஃப்லின்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.