Prime Video
  1. உங்கள் கணக்கு
2014 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 2 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஹவாய் ஃபைவ்-0

வாயில் ஒரு யானைத் தந்த செஸ் துண்டுடன் ஃபைவ்-0 தலைமையகத்தில் கொலையாளியின் உடல் விடப்படுகிறது. சீசன் பிரீமியரில், அறுவைச் சிகிச்சையிலிருந்து குணமாகி வரும் மெக்கேரட், கவலைப்படவேண்டாம் என்ற டேனியின் வேண்டுகோளைக் கேட்க மறுக்கிறார். 2வது தொடர் கொலையாளி இன்னொரு செஸ் துண்டுடன் இறந்துகிடக்கிறார். ஹவாய் பயணிப்பது பாதுகாப்பானதல்ல, ஃபைவ்-0 ஊர் மக்கள் உருவாக்கிய சட்டம் ஒழுங்குக் குழுவை வேட்டையாடுகிறது
IMDb 7.4201025 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ7 எ1 - நீங்கள் விளையாட தயாராக இருக்கிறீர்களா? (விளையாடத் தயாரா?)
    22 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-14
    ஃபைவ்-0விற்குச் சொந்தமான நிலத்தில் இரண்டு தொடர் கொலையாளிகளின் உடல்கள் வாயில் செஸ் காய்களுடன் கிடக்கின்றன. ஏழாவது சீசன் ப்ரீமியரில் ஹவாயில் சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பில்லை என்ற அச்ச உணர்வு பரவுகிறது. உள்ளூர் மக்கள் தாங்களாகவே ஏற்படுத்தியுள்ள சட்ட ஒழுங்குக் குழுவை மெக்கேரட் குழுவினர் தேடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ7 எ2 - (ராணிக்காகவும் நாட்டுக்காகவும்)
    29 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-14
    ஐரோப்பாவிலுள்ள அணுக்கரு உலைகளை உருகச்செய்யத் திட்டமிடும் ஒரு தீவிரவாதியைக் கண்டுபிடிக்க எம்ஐ-6 ஏஜென்ட் ஹாரி லாங்ஃபோர்டுடன் (கௌரவ வேடம் க்றிஸ் வான்ஸ்) ஃபைவ்-0 இணைந்து பணியாற்றவேண்டும். மெக்கேரட், டானி இருவரும் தங்கள் தொடர் கொலைகாரனுக்கான உள்ளூர் மக்களின் சட்டம் ஒழுங்குக் குழுவைத் தேடிக் கண்டுபிடிக்க ஓய்வுபெற்ற எஃப்பிஐ ப்ரொஃபைலர் அலீசியா ப்ரவுனிடம் (கௌரவ வேடம் க்ளேர் ஃபோர்லானி) உதவி கேட்கவேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ7 எ3 - ஹே மொஹொ ஹூ (புதிய ஆட்டக்காரர்)
    6 அக்டோபர், 2016
    43நிமி
    TV-14
    எஃப் பி ஐ ப்ரொஃபைலர் அலிசியா ப்ரௌன் (க்ளெயர் ஃபோர்லானி) தன் படுக்கையில் ஓர் உடலைக் காண்கிறாள். செஸ்-பீஸ் கொலைகாரனை வேட்டையாடுவதில் அவள் மெக்கேரட்டுடன் இணைந்துகொண்டே ஆகவேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் கோனோ முன்னாள் நீர்ச்சறுக்கு விளையாட்டுப் போட்டியாளர் ஒருவருடன் (கன்யா ஸெஸ்ஸர்) தொடர்ப்பைப் புதுப்பித்துக் கொள்கிறாள். அந்தப் போட்டியாளர் தற்போது ஒரு ஊனமுற்ற, வீடு வாசலற்ற முன்னாள் போர் வீரர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ7 எ4 - ஹூ ஏ கே அஹி லானாகிலா அ கமைல் (கமைலின் தீப்பிழம்புகள் வெற்றிக்களிப்பில் எழுகின்றன)
    13 அக்டோபர், 2016
    43நிமி
    TV-14
    மெக்கேரட், அலிசியா இருவரும் தாங்கள் வேட்டையாடிவந்த சீரியல் கொலைகாரனால் கடத்தப்படுகிறார்கள். ஃபைவ்-0 அவர்களைக் கண்டுபிடித்தாகவேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ7 எ5 - கே க்? 'அனா (ஸ்டான்ட்)
    20 அக்டோபர், 2016
    41நிமி
    TV-14
    ஒரு துப்பாக்கி ரேஞ்சிலிருந்து ஒரு துப்பாக்கித் தொகுப்பு களவாடப்படுகிறது. குற்றவாளி துப்பாக்கி வன்முறை பற்றி ஒரு அட்டகாசமான, மிகவும் கொடியதாக இருக்கச் சாத்தியமுள்ள ஓர் அறிக்கை விடும் உத்தேசத்தில் இருப்பதை ஃபைவ்-0 கண்டறிகிறான். மேலும் கோனோ, ஆதம் இருவரும் இறுதியில், அவன் சிறையிலிருந்து விடுதலையாகும்பொழுது ஒன்றுசேர்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ7 எ6 - (திகில் மாளிகை)
    27 அக்டோபர், 2016
    43நிமி
    TV-14
    ஹாலோவீன் அன்று ஃபைவ்-0 கறைபடிந்த கடந்தகாலம் கொண்ட ஒரு மீடியத்தின் கொலைவழக்கைப் புலன் விசாரணை செய்கிறான். அவன் ஒரு போல்ட்டர்ஜைஸ்டைக் கண்டு மிரண்டு அந்த அதிர்ச்சியில் இறந்துவிட்டதாகத் தெரிகிறது. மேலும் கோனோவும் ஆதமும் ஒரு இறப்பு கலாச்சாரம் போல் தோன்றும் ஒரு குழுவினரால் கடத்தப்படுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ7 எ7 - (தாயும் மகனும்)
    3 நவம்பர், 2016
    44நிமி
    TV-14
    வோ ஃபாட்டின் தந்தை சிறையில் இருக்கிறார். அவரை விடுவிப்பதற்கு மெக்கேரட்டின் தாய் டோரிஸ் முயற்சித்ததால் பிடிக்கப்பட்டு, மரண தண்டனை அளிக்கப்படும் நிலையில் இருக்கிறாள். இதை காத்தரீன் அவர்களிடம் கூறுகிறாள். ஃபைவ்-0 மெக்கேரட்டின் தாயை விடுவித்தாகவேண்டும். அத்துடன், சாராவின் தத்தெடுப்பைத் தள்ளிப்போடுவதால் சின் தன் மதிப்பை இழக்கிறான். அவள் மெக்ஸிகோவிற்குத் திரும்பியாகவேண்டும் - 150 வது பகுதியில்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ7 எ8 - (பாதையில் செல்வதற்கான உரிமை)
    10 நவம்பர், 2016
    43நிமி
    TV-14
    க்ரேஸின் குளிர்கால உடைகளுக்கான நிகழ்ச்சியை டானி மேற்பார்வையிடுகிறான். அப்போது தீவிரவாதிகள் நிகழ்ச்சி அரங்கத்தைக் கைப்பற்றி, ஒரு அரசு அதிகாரியின் மகனைக் கடத்துவதற்காக எல்லோரையும் பணயக் கைதிகளாக வைத்திருக்கிறார்கள். அத்துடன், வில் க்ரேஸின் இரகசியக் காதலன் என்பதை அறிந்து டானியும் க்ரோவரும் அதிர்ச்சியடைகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ7 எ9 - (நவம்பரில் இரண்டு நாட்கள்)
    17 நவம்பர், 2016
    44நிமி
    TV-14
    அதிபர் கென்னடியைப் படுகொலை செய்யும்படி ஆணை பிறப்பித்தது அவருடைய அமைச்சரவைதான் என்பதற்கான வலுவான ஆதாரங்களைத் திரட்டிவைத்துள்ள சதியியல் வல்லுநர் கொலை செய்யப்படுகிறார். அதைத் தொடர்ந்து ஃபைவ்-0 வரலாற்றின் மிகவும் பிரசித்திபெற்ற, தீர்வு காணப்படாத மர்மங்களுள் ஒன்றைப் புலன் விசாரணை செய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ7 எ10 - (சுமை)
    8 டிசம்பர், 2016
    43நிமி
    TV-14
    பதின்பருவப் பெண் ஒருத்தி காணாமல் போன 10-ஆண்டுகால வழக்கை ஃபைவ்-0 புலன் விசாரணை செய்கிறது. பிஎஸ்டிடி -யால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஹிப்னாஸிஸ் மேற்கொள்கிறான். கொலையைத் தான் நேரில் கண்டிருக்கலாம் என்று உணர்கிறான். அத்துடன், டானியின் சகோதரி பிரிட்ஜெட் வர்த்தக மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள ஓஆஹுவிற்கு வருகிறாள். அவள் தன் சக பணியாளருடன் மிக அதிக நெருக்கம் கொண்டுவிடுவாளோ என்று அவன் சந்தேகிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ7 எ11 - (பிடுங்கிக்கொள்ளுதல்)
    15 டிசம்பர், 2016
    43நிமி
    TV-14
    ஃபைவ்-0 மெக்சிகோவிற்கு விரைகிறது. அங்கு தன் மருமகள் சாரா (லண்டின் சில்சர்) கடத்தப்படும்பொழுது, சின் அவனுடைய உயிரைப் பணயம் வைக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ7 எ12 - (ஒப்பந்தம்)
    5 ஜனவரி, 2017
    44நிமி
    16+
    மெக்சிகோவில் ஒரு கார்ட்டல் சின்னைக் கடத்துகிறது. பழிதீர்க்க அலையும் கும்பல் அவனுக்கு மரணதண்டனை கொடுப்பதற்கு முன் ஃபைவ்-0 அவனைக் கண்டுபிடித்துக் காப்பாற்ற வேண்டும. மேலும், எதிர்பார்த்ததை விடவும் மிக சிக்கலாக, ஆபத்தானதாகத் தெரியவந்துள்ள ஒரு கொலையைப் புலன் விசாரணை செய்வதற்காக க்ரோவர் கார் விற்பனையாளர் வேடத்தில் செல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ7 எ13 - (மேகங்கள் எப்பொழுதும் அலாஉவாவிற்குத் திரும்புகின்றன)
    12 ஜனவரி, 2017
    44நிமி
    TV-14
    மாக்ஸ் தன்னுடைய ஃபைவ்-0வான ஒஹானாவிடம் விடைபெற்றுக்கொள்ளத் தயாராகிறான். தீவில் நடக்கும் போலீஸ் மாநாட்டில் நிகழும் ஒரு கொலையை அவர்கள் புலன் விசாரணை செய்யவேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ7 எ14 - (மணலில் ஒரு கோடு)
    19 ஜனவரி, 2017
    43நிமி
    TV-14
    கொலைக்காகத் தேடப்பட்டுவரும் ஒருவன் கைப்பற்றலிலிருந்து தப்பிக்கிறான்.ஹவாய் நாட்டிற்குச் சொந்தமான ராஜ்ஜியத்தில் தஞ்சம் புகுந்துகொள்கிறான். இந்த நிலையில், ஆக்ரோஷமான அமெரிக்க மார்ஷல் லிங்கனுக்கு (லூ டயமண்ட் ஃபிலிப்ஸ்) எதிராக ஃபைவ்-0 செயல்பட்டாக வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ7 எ15 - (பெரிய விளையாட்டு)
    2 பிப்ரவரி, 2017
    43நிமி
    TV-14
    சட்டத்திற்குப் புறம்பான சுறா இறக்கை வர்த்தகம் உள்ளிட்ட ஒரு கொலை வழக்கில் பணியாற்றுகிறது ஃபைவ்-0. அப்போது முன்னாள் நாட்ஸி போர் குற்றவாளி ஒருவன் ஹவாயிலுள்ள ஒரு பழைய தொழுநோய் காலனியில் ஒளிந்துகொண்டிருக்கலாம் என்ற சாத்தியக் கூற்றை அது கண்டறிகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ7 எ16 - (காதல் கிறுக்கு)
    9 பிப்ரவரி, 2017
    43நிமி
    TV-14
    மெக்கேரட், டானோ இருவரும் தங்கள் பெண் தோழிகளுடன் வாலென்டைன்ஸ் டே கொண்டாடுகிறார்கள். ஃபைவ்-0வில் உள்ள மற்றவர்கள் பெண்களை வசியப்படுத்துவது எப்படி என்று வகுப்பு நடத்திக்கொண்டிருக்கும் ஒருவனின் கொலை வழக்கைப் புலன் விசாரணை செய்துகொண்டிருக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ7 எ17 - (வேட்டையாடும் அரக்கர்கள்)
    16 பிப்ரவரி, 2017
    43நிமி
    16+
    தொடர் கொலையாளி டாக்டர். மாடிஸன் க்ரே (எலிசபெத் ரோம்) எச்பிடி ரத்தவெள்ளத்தில் கிடைப்பதைத் தற்செயலாகக் காண்கிறாள். அந்த இரத்தம் அலிசியா ப்ரவுனின் (க்ளேர் ஃபோர்லானி) இரத்தத்துடன் பொருந்துகிறது. அவள் தனக்கு அம்னீசியா ஏற்பட்டுள்ளதாக வாதாடுகிறாள். மெக்கேரட், ஃபைவ்-0 இருவரும் மீண்டும் அவளுடைய சிக்கலான மைன்ட் கேம்களில் மாட்டிக்கொள்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ7 எ18 - (கவனமாகக் கையாளவும்)
    23 பிப்ரவரி, 2017
    43நிமி
    TV-14
    மெக்கேரட், டானி இருவரும் முடிவில் காணாமல் போன யுரேனியத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். அது காட்டுக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ள வெடிகுண்டை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அவர்கள் நிலையற்ற அந்த வெடிப்பொருளை அது வெடித்துவிடுவதற்குள் நம்பத்தகாத பிரதேசத்தின் வழியே கவனமாக எடுத்துச்செல்லவேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ7 எ19 - (ஒழுக்கு)
    9 மார்ச், 2017
    43நிமி
    TV-14
    பழிகூறப்பட்ட இளம் பெண் தீவில் நடக்கும் பாலியல் வியாபாரத்தால் பாதிக்கப்பட்டவளாக இருக்கலாம் என்று மெக்கேரட், கோனோ இருவரும் சந்தேகிக்கிறார்கள். அத்துடன், சாதாரண குடியிருப்பு ஒன்றில் நிகழ்ந்த கொலை ஒன்றை சின், க்ரோவர் இருவரும் புலன் விசாரணை செய்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ7 எ20 - (மீன்பிடிப்பவர்களின் கொக்கிகள் பின்னிப் பிணைந்துகொள்கின்றன)
    30 மார்ச், 2017
    43நிமி
    16+
    ஒரு பணக்கார சீமாட்டி கடத்தப்படுகிறாள். அவளுடைய கணவன் எதையோ மறைக்க சாத்தியமுள்ளது. புலன் விசாரணையாளர் ஹாரி ப்ரவுனுக்கு (கௌரவ வேடம் வில்லியம் ஃபோர்சித்) அந்த வழக்கில் ஃபைவ்-0 உதவுகிறது. மேலும், ஸ்டானிடமிருந்து தான் விவாகரத்து பெறப்போவதாக டானி ராசெல்லிடம் கூறுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ7 எ21 - (நீர் வற்றிவிட்டது)
    6 ஏப்ரல், 2017
    43நிமி
    16+
    லெனாய் தீவைப் பழிவாங்கும் ஆபத்தைக் கண்டுபிடித்துள்ள நிலையில், மெக்கேரட், ஃபைவ்-0 இருவரும் பிடிபட்டு நிச்சயமான மரணத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள். அத்துடன், க்ரோவர் தன் மகனை ஷிகாகோவிற்கு அழைத்துச் செல்கிறான். அங்கு தன் கடந்த காலத்தைச் சேர்ந்த மோசமான போலீஸ்காரனுக்கு எதிராக சாட்சி கூறுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ7 எ22 - (கறுப்புக் கண்ணீர்)
    13 ஏப்ரல், 2017
    44நிமி
    16+
    யூஎஸ்எஸ் அரிசோனாவின் கடைசி உயிர்பிழைத்தவர்களுள் ஒருவரின் கொலை வழக்கில் பணிபுரிந்துகொண்டிருக்கும்பொழுது, மெக்கேரட் பேர்ல் ஹார்பரில் தன் தாத்தாவின் முக்கிய பங்கு பற்றி அறிந்துகொள்கிறான். மேலும், ஆதம் தன்னுடைய புதிய கட்டிடப் பணியில் எலும்புத் துண்டுகளைக் கண்டெடுக்கிறான். அதை இரகசியமாகப் புலன் விசாரணை செய்ய உதவும்படி ஜெர்ரியிடம் கேட்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ7 எ23 - (முன்னோட்டம்)
    27 ஏப்ரல், 2017
    42நிமி
    TV-14
    நினைவுக்குத் திரும்பும் அடையாளங்களைக் காட்டும் ஒரு கோமா நோயாளியை டானி பாதுகாக்கிறான். அவன் ஸ்டீவைச் சந்தித்து, ஃபைவ்-0வில் சேர்ந்துகொள்வதற்கு முன் அவனுடைய இறுதி எச்பிடி வழக்கில் அந்த நோயாளி ஒரு முக்கிய சாட்சி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ7 எ24 - (ஹினாவின் மட்ஹென் கரகரப்பாக ஒலியெழுப்புகிறது)
    4 மே, 2017
    43நிமி
    TV-14
    யாரோ ஒருவர் ஓஆஹுவின் மீது ஒரு தீவிரவாதத் தாக்குதலைத் திட்டமிட்டுவருகிறார்கள் என்று மெக்கேரட்டுக்கு ஒரு துப்பு கிடைக்கிறது. மிகவும் தாமதமாவதற்கு முன், அதன் பின்னணியில் உள்ளவர்களை ஃபைவ்-0 தேடிக் கண்டுபிடிக்க முயல்கிறது. மேலும் சின், அப்பி இருவரும் மிகவும் சிக்கலான தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ7 எ25 - (நாட்டின் உயிர் நேர்மையில் நிலைத்திருக்கிறது)
    11 மே, 2017
    43நிமி
    TV-14
    மெக்கேரட், ஃபைவ்-0 இந்த வருடம் பாலியல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதில் சிக்கிக்கொண்டுள்ள இளம் பெண்களைக் காப்பாற்றும் தங்கள் மிக ஆபத்தான முயற்சியில் ஃபைவ்-0 ஈடுபடும்பொழுது, மெக்கேரட் உயிரைப் பணயம் வைக்கிறான். மேலும், இந்த வழக்கால் ஆழமாகப் பாதிக்கப்பட்டுள்ள கோனோ, ஏழாவது சீஸனின் ஃபினாலேயில் வாழ்க்கையை மாற்றியமைக்கும் ஒரு முடிவை எடுக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Bryan SpicerPeter WellerJerry LevineMaja VrviloLarry TengEagle EgilssonBrad TurnerJoe DanteSteve BoyumDuane Clark
தயாரிப்பாளர்கள்
எரிக் கக்கன்ஹெய்ம்பீட்டர் லெங்காவ்
நடித்தவர்கள்
ஜார்ஜ் கார்ஸியாக்ரேஸ் பார்க்டானியல் டாயே கிம்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.