உதவி

சிக்கல்தீர்வு

உங்கள் இணைக்கப்பட்ட சாதனத்துடனான இணைய இணைப்புச் சிக்கல்களைச் சரிசெய்தல்

உங்கள் இணைக்கப்பட்ட சாதனத்தில் உள்ள Prime Video செயலியை இணையத்துடன் இணைக்க முடியாவிட்டால் என்ன செய்வது.

உங்கள் இணைய இணைப்பில் சிக்கல்களை எதிர்கொண்டால், Prime Video செயலியைப் பயன்படுத்தும் போது பிழைச் செய்தி கிடைக்கலாம். சிக்கல்கள் இருந்தால் பின்வரும் படிகளை முயலவும்:

  • உங்கள் இணைக்கப்பட்ட சாதனம் (Smart TV, செட்-டாப் பாக்ஸ் போன்றவை) இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும். பொதுவாக உங்கள் சாதனத்தின் அமைப்புகள் மெனு மூலம் உங்கள் இணைப்பைச் சரிபார்க்கலாம்.
    Wi-Fi வழி இணைப்புகளுக்கு, உங்கள் Wi-Fi நெட்வொர்க்கிற்கான சரியான கடவுச்சொல்லை உள்ளிட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • உங்கள் சாதனம் உங்கள் ரூட்டருடன் இணைக்கப்பட்டிருக்கும் போதும் பிழைச் செய்திகள் காட்டப்பட்டால், உங்கள் இணைக்கப்பட்ட சாதனம் மற்றும் மோடம்கள் அல்லது ரூட்டர்கள் போன்ற எந்த ஹோம் நெட்வொர்க் சாதனங்களையும் மறுதொடங்கவும்.
  • உங்கள் சாதனத்தின் ஃபர்ம்வேர் அல்லது இயங்குதளம் புதுப்பித்த நிலையில் உள்ளதைச் சரிபார்க்கவும்.