Prime Video
  1. உங்கள் கணக்கு

ஆகீ அண்ட் த காக்ரோச்சஸ்

இந்த சீசனில் மறுபடியும், ஆகீயின் வீட்டில் வாழும் கரப்பான்களின் அராஜகங்கள் தொடர்கிறது. அவைகளின் எண்ணம், அவனுக்கும் மற்றவர்களுக்கும் கலவரத்தை உண்டு பண்ணுவதுதான். அவ்வப்போது உயிர் நண்பன் ஜாக்கிடம் உதவி கிடைத்தாலும், அவை எல்லாமே குழப்பத்தில்தான் முடியும். பக்கத்தில் ஒரு கோபக்கார அண்டை வீட்டுக்காரருடனும், கரப்பான் ரவுடிகளுடனும் ஏற்படும் சிக்கல்களில் இருந்து ஆகீ எப்படி எழுகிறான் என்பதைப் பாருங்கள்.
IMDb 7.521நிமி199826 எப்பிசோடுகள்
7+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - லவ் அன் கிஸ்ஸஸ், டூ நாட் லீன் அவுட் ஆஃப் விண்டோ, ஃபேம் ஆன் க்ளோரி
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    ஆகீயின் சகோதரி ஆகீயைப் பார்க்க வரும்போது, ஜாக் காதல் வயப் படுகிறான். ஜாக் அவளைப் போல தானும் சாகச விளையாட்டை விரும்புவதாக நடிக்கிறான். கரப்பான் பூச்சிகள் இதைக் கெடுக்கின்றன. ஆகீ விடுமுறைக்கு ரயிலில் போகும்போது ரயிலை கரப்பான் பூச்சிகள் கடத்துகின்றன. கரப்பான்களை ரயிலில் பார்த்த ஜாக், அவற்றைத் தொடர்கிறான். இறுதியாக, சர்க்கஸ் பார்க்க ஆகீயிடம் பணம் இல்லை. ஜாக் அவனுக்கு சர்க்கஸ் செய்து காட்டுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - ஆல் ஆவுட் ஆஃப் ஷேப், போ ஆன் த ரன், ஹைட் அன் சிக்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    ஆகீ களி மண்ணில் விளையாட, கரப்பான் பூச்சிகள், அவனது ஊடூ பொம்மை செய்து, அவனது உடல் உறுப்புக்களை அசிங்கமான வடிவங்களாக்குகின்றன.அடுத்து, ஆகீயும் ஜாக்கும் மிருகக் காட்சி சாலையிலிருந்து எதிர்பாராமல் கூடையில் ஒரு பாம்பைக் கொண்டு வந்து விடுகின்றனர். பாம்பு, ஜாக்கையும், கரப்பான்களையும் விழுங்கிவிட,ஆகீ வெளியில் எடுக்க முயல்கிறான். இறுதியில் ஆகீக்கு உடல் நலம் பாதிக்க, ஜாக் தனது மருந்தை அவனுக்கு கொடுக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - ஹிப்-ஹிப்-ஹிப் ஹிப்னாசிஸ், அன்-பேர்-அபில் பேர்ஸ் பெர்பெச்சுவல் மோஷன்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    மார்க்கி ஹிப்னாடிசம் கற்று, ஆகீயை மயங்கச் செய்து, மக்களிடையே அவனை முட்டாளாக்குகிறான். அடுத்து, ஆகீ, ஜாக் விருந்தளிக்க தயாரான சமயத்தில் கூப்பிடாத விருந்தினர் கலந்து கொள்கின்றனர். இரண்டு கரடிகள் வழி தவறி வர, கரப்பான் பூச்சிகள் ஆகீக்கு தொந்தரவு தர முயல்கின்றன. இறுதியாக, ஜாக்குக்கு டிவி ரிமோட்டின் ஆட்களை உறைய வைக்கும் வியப்புச் சக்தி சாதகமாக்க, கரப்பான் பூச்சிகள் அதைப் பயன் படுத்த முயல்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - லாஸ்ட் இன் ஸ்பேஸ், சோல்ஜர் ஃபர் எ டே, தட் இஸ் த லாஸ்ட் ஸ்ட்ரா!
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    ஆகீ விண்வெளி நிலையம் செல்லும்போது கரப்பான் பூச்சிகள் விண்வெளி உடையில் மறைந்து அவனுடன் செல்கின்றன. ஆகீ விண்வெளியில் கூட கரப்பான்களிடம் இருந்து தப்ப முடியவில்லை. அடுத்து ஆகீ இராணுவத்தில் பணி செய்ய செல்லும்போது கரப்பான் பூச்சிகள் தொந்தரவு தருகின்றன. கரப்பான் பூச்சி தொல்லையால் பூனைகள் கிரகத்தை விட்டே வெளியேற முடிவு செய்கின்றன. கரப்பான் பூச்சிகளும் ராக்கெட்டில் ஆகீயுடன் அடுத்த உலகம் செல்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - த ஜோக்கர் ஜோக்ட், கீப் கூல், லைஃப் இஸ் எ பீச்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    ஆகீ டெர்ராவுடன் டேட் போக தயாராகும் போது குழப்பத்தில் மந்திரவாதி உடையை அணிந்து கொள்கிறான். பின்னர் கரப்பான் பூச்சிகள் ஆகீயின் ஃப்ரிட்ஜெய் திறந்து விட்டு விடுவதால், உலகமே உறைந்து விடுகிறது. ஆகீயும் ஜாக்கும் புதிய உலகில் வாழ முயற்சிப்பதைப் பாருங்கள். பின்னர், ஆகீ தனது புழக்கடையை, கடற்கரையாக மாற்றி, வாடிக்கையாளர்களை மகிழ்விக்கிறான். ஆகீ உடனே தொந்தரவில் மூழ்குவதைப் பாருங்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - கிரீன் பீஸ், சாட்டர்டே பிளாக் ஃபீவர், மிஸ்ஸிங் இன் ஆக்ஷன்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    கிறிஸ்துமஸ் பைன் மரத்தை அலங்கரிக்கும் போது, அவனது மன பூதம் கரப்பான்களுடன் சேர்ந்து கொண்டு, அவை ஆகீயின் கிறிஸ்துமஸ் மரத்தை பாழாக்குகின்றன. தோட்ட வேலை செய்யும் ஆகீ எண்ணெய்க் கிணற்றைக் கண்டு பிடிக்கிறான். எப்படியானாலும், அந்த லாபத்தை கரப்பான் பூச்சிகள் ஒழிக்கின்றன. பின்னர் ஆகீ பெவன்யூ பார்க்கில் ஓட்டத்துக்குப் போகிறான். ஜாக்கைத் தேடி வழி தவறும் போது, கரப்பான் பூச்சிகள் நிலைமையை மோசமாக்குகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - ஃபேஸ் ஆஃப்ஃப், ஸ்லீப்லெஸ் நைட், சேவிங் ப்ரைவேட் டீடீ
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    ஆகீக்கு ஒரு விபத்து ஏற்பட்டு, முகத்தைத் திருத்தியமைக்கும் சிகிச்சை செய்கிறார்கள். ஆகீயின் முகம் சரியாகும் வரை, கரப்பான் பூச்சிகள் குழப்பம் செய்கின்றன. ஆகீ ஒரு விருந்தில் இருந்து களைப்பாகத் திரும்பி நன்றாகத் தூங்க முயலும் போது முடியவில்லை. காரணம் கரப்பான்களின் ரகசிய குறும்புகள். ஆகீ கரப்பான் பூச்சிகள் தோட்டத்தில் இருப்பதைப் பார்த்து வேலி போட்டுவிடுகிறான். டீடீ தனியாக மாட்டிக் கொள்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - வால்ஸ் ஹேவ் இயர்ஸ், த பைடு பேக் பைப்பர், த ஹங்ரி ஆஸ்ட்ரிச் எம்பயர்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    ஆகீயை மின்னல் தாக்கிய பின், சுவர்களை ஊடுருவிச் செல்ல முடிகிறது. இதை கரப்பான் பூச்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றன. பின் நீச்சல் குளத்தில் ஆகீ நெஸ்ஸியைச் சந்திக்கிறான். அதை பாதுகாக்க முயன்றாலும், நெஸ்ஸியை விரட்டி விடவே முனைகிறான். ஆகீ ஜாக்கின் நெருப்புக் கோழியைப் பார்த்துக்கொள்ள வீட்டில் வைத்திருக்கிறான். அது வீட்டில் உள்ள எதையும் சாப்பிட்டுவதைப் பார்த்து கரப்பான் பூச்சிகள் பின் தொடர்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - பேப்பர் சேஸ், ஆஃப்ஃப் லிமிட்ஸ், மைபியூட்டிஃபுல் பிரிஸன்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    கரப்பான் பூச்சிகள் புதிய குறும்புகளுடன் ஆகீ ஓர் ஜெராக்ஸ் மிஷினுள் விழா வைத்து தான் ஒரு காகிதத்தில் பதிக்கப பட்டிருப்பதைப் பாரத்து போராடுகிறான். பாப் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்ற ஆகீயின் மரக்கலன்களில் கரப்பான்களைப் பார்க்கிறான். பொருட்களை மீட்க முடியாத ஆகீ வன்முறையால் அவற்றைத் திரும்பப் பெற நினைக்கிறான். பின்னர், ஆகீயை ஒரு புதையல் வரைப் படத்தை காட்டி ஏமாற்றி, சிறையிலிருந்து தப்ப முயல்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - டோன்ட் ராக் த க்ராடில், பெனால்டி ஷாட், ஒர்கிங் கேட்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    ஜாக் தனது குட்டித் தங்கை செலினாவுடன் பயணிக்கும் போது அவளைப் பாதுகாக்கும் வேலை ஆகீயுடையதாகிறது. ஜோயி பணத்துக்காக செலினாவைக் கடத்த முயல்வதைப் பாருங்கள். பின்னர், ஜோயி ஒரு கால்பந்துப் போட்டியைப் பார்த்து, டீடீ, மார்க்கியுடன், அதைத் தனது வடிவில் விளையாட விரும்புகிறது. கட்டணங்களுக்கும் உணவுக்கும் பணம் இல்லாமல் போகவே, வேலைக்குப் போவதற்காக ஒரு தேர்வை ஆகீ எழுதுவதைப் பாருங்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - சஃபாரி சோ குட்... ஃபார்னஃப், பிவேர் ஆஃப் த பாடி கார்ட்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    ஆகீயும் ஜாக்கியும் ஆஃப்ரிக்காவில் சஃபாரி பயணம் போய், காட்டின் கட்டற்ற தன்மையை எதிர் கொள்கின்றனர். பெட்டிகளை சிம்பன்சி குரங்குகள் திருடிய பின் இருவரும் சோதனைக்குள்ளாகி, கட்டற்ற ஆஃப்ரிக்க சூழலில் இருந்து விலக விரும்புகிறார்கள். அவர்கள் எகிப்து பயணத்தில், சேதங்கள் விளைக்க திட்டமிட, பிரமிடுகளின் உள்ளே போகும் வாய்ப்பைப் பெறுகின்றன. கரப்பான் பூச்சிகள் தொல்லையால் ஆகீ மெய்க் காவலனை நியமிப்பதில் முடிகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - ப்ளாக் அன் ஒயிட், ஹோம் பிரேக்கர், 7 மினிட்ஸ் அன் கவுன்டிங்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    ஆகீ புதிய துணி சோப்பைப் பயன் படுத்த முயற்சிக்கும் போது கரப்பான் பூச்சிகள், வாஷிங் மிஷின் நிரம்ப நிரப்பி விடுகின்றன. அதிகமாக சுமையினால் சிவப்பு நிற திரவம் பொங்கி, ஆகீயின் வீடு முழுவதும் நிரம்பி விடுகிறது. மழை பெய்து, வீட்டின் வண்ணம் கரைந்து விடுகிறது. பின்னர், பாப் வீடு கட்டும் வரை ஆகீயின் வீட்டிலேயே தங்குகிறான். பின்னர், தோட்டத்தில் விஷப் பாம்பு கடித்து, சிகிச்சைக்குப் பின் தேறுகிறான் ஆகீ.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - கிரேசி ஷாப்பிங், சிட்காம், மே டே! மே டே!
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    ஆகீ கரப்பான் பூச்சிகளுடன் சூப்பர் மார்க்கெட் செல்கிறான். அவர்களது தொடர்ந்த சண்டையால், துணிசோப்பு வரிசையை ஆகீ கீழே தள்ளிவிடுகிறான். கடையில் வாங்குவதை முடிக்க, ஆகீ மாறுவேஷம் போடுகிறான். பின்னர், ஆகீ நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை பார்க்கும்போது, ஒரு அதில் புத்திசாலித் தனமாக நுழைக்கின்றன. ஆகீ கடல் பயணத்தில் அவன் அமைதி டீடீயால் குலைகிறது. ஜாக், மார்க்கி, ஜோயிக்கு கடற்பயண நோய் வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ14 - மில்க் டயட், ஃப்ளவர் பவர், கோல்ஃப் கோர்ஸ்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    தனக்கு லாட்டரியில் பரிசாக கிடைத்த பசுவை, டீடீ ஆகீயின் வீட்டுக்கு கொண்டு வந்து அதிக பாலைப் பெறும் பேராசையில், ஒரு காளையைக் கொண்டு வந்து அது தோல்வியில் முடிவடைகிறது. ஆகீயும் கரப்பான்களும் தினமும் போடும் சண்டையில் ஆகீ பூவின் மதிப்பை உணர்கிறான். இதைப் பார்த்து, ஜாக் திரும்பத் தாக்கி, கரப்பான்களை அடக்குகிறான். ஜாக் தான் நல்ல கால்ஃபர் என்பதை ஆகீ மறுக்கிறான். ஜாக் கால்ஃப் விளையாட முயன்று அது மோசமாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ15 - ஸ்கை பக்ஸ், ஜோயி அன் தி மேஜிக் பீன், ஆகீ இஸ் பஸ்ல்ட்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    ஸ்கை பயணத்தில் கரப்பான் பூச்சிகள் (ஜோயி, டீடீ, மற்றும் மார்க்கி) ஆகீ, ஜாக்குக்கு எதிராக சதி செய்ததால், அது பனிச் சரிவில் முடிகிறது. ஜோயி ஆகீயை அடிப்பதற்காக, ஒரு டப்பா மாய பீன்சை சாப்பிட்டு, மிகப் பெரிய உருவமாக வளர்கிறான். இறுதியாக, ஜோயி ஆகீயின் ஜிக்சா புதிரில் கடைசி பகுதியை திருடிவிடுகிறான். ஆகீ இந்த குமட்டும் கரப்பான்களை எப்படி சமாளிகிறான்?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ16 - வாஷ்டே, கன்ட்ரோல் ஃப்ரீக், தி பம்ப்கின் தட் பிரிட்டேன்ட்டட் டு பி எ ஃபெராரி
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    டீடீயைக் குளிப்பாட்டும் ஒரு முயற்சியில், தவறாகி, தங்கள் பகுதியையே வெள்ளக் காடாக்கிவிடுகின்றன கரப்பான் பூச்சிகள். டிவி ரிமோட்டுக்காக ஆகீயும் ஜாக்கும் மோதிக் கொள்கின்றனர். தங்கள் பூசலை, ஒரு ஓட்டப் பந்தயம் மூலமாக தீர்த்துக் கொள்ள ஒப்புக் கொள்கின்றனர். இறுதியாக ஆகீ ஒரு தவளை மேல் வண்டியை ஏற்றிவிட்டதால், வீட்டுக்குக் கொண்டு வந்து நலம் பெற முத்தமிடுகிறது. ஆனால், ஆச்சரியகரமாக அது தேவதையாக மாறுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ2 எ17 - ரோச்சி ரெட்நெக், வாட் எ டம்ப்! கோயிங் அப்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    செடிகளுக்கு உயிர் கொடுக்கக் கூடிய சண்டைக்கார கரப்பான் ஒன்று கரப்பான்களைப் பார்க்க வருகிறது. ஆகீயும் கரப்பான்களும் ஒரு அபாயகரமான குப்பைமேட்டில் மாட்டிக்கொள்கின்றனர். இப்போது ஆகீ அவை எல்லாவற்றையும் ஒழிக்க வழி காண வேண்டும். கரப்பான்களை வேகமாகச் சென்று துரத்த, ஆகீ வீட்டில் மின் தூக்கிகளை நிறுவுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ2 எ18 - ஹிட் த ரோட் ஆகீ! ஜாக்-இன்-எ-பாக்ஸ், ஆகீ'ஸ் பேக்
    31 டிசம்பர், 1998
    20நிமி
    7+
    ஆகீ ஒரு கேரவானை வாடகைக்கு எடுத்து அதில் ஒரு சுற்று சுற்றி வர ஆசைப் படுகிறான். ஆனால், கரப்பான் பூச்சிகள் கூடவே தொடர்கின்றன. கரப்பான் பூச்சிகள், ஜாக்கை ஒரு இயந்திரத்தில் போட்டு, அவனை வேறு ஒரு உருவமாக மாற்றுகின்றன. ஆகீயும் ஜாக்கைக் காப்பாற்ற அதில் குதிக்கிறான். இறுதியாக ஆகீ கரப்பான்களைத் துரத்தி, தனது மாய சலவைப் பையில் கடைசியாகச் சிறைப் படுத்தி, அவை ஒரு புதிய உலகத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ2 எ19 - பெங்குயின் பாண்டிமோனியம், மிஷன் டுஎர்த், எ டூத் ஃபர் எ டூத்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    ஆகீயும் டீடீயும் ஒரு நாள் தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்து, ஃபிரிட்ஜில் ஒரு பெங்குயின் முட்டையோடு வாழ்வதைப் பார்த்து வியக்கின்றனர். ஆகீயும் கரப்பான் ஜோயியும் செவ்வாய் கிரகத்துக்குக் கொண்டு செல்லப் படுகின்றனர். ஒரு அந்நிய இனம் பூமியின் படை எடுக்கும் திட்டத்தைத் தகர்க்க வேண்டிய அவசியத்தில் உள்ளனர். கரப்பான் பூச்சிகள் அசிங்கமான பற்களை ஆகீயின் வாயில் மிக இறுக்கமான பசையால் ஒட்டி வைத்து விடுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ2 எ20 - லாஃபிங் கேஸ், அப்சைட் டவுன், பார்பிக்யூ
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    கரப்பான்களுக்கு எப்படியோ திரவ சிரிக்கும் வாயு கிடைத்து விடுகிறது. அவை தந்திரமாக ஆகீயை குடிக்க வைக்கின்றன. ஆகீ தனது வீட்டின் பின் பகுதியில் ஒரு பார்பிக்யூவை உருவாக்குகிறான். பட்டம் விட்டுக் கொண்டிருந்த ஜாக்கின் நூல் கரப்பான்களின் டென்னிஸ் வலையில் சிக்கி மாட்டிக் கொள்கிறான். ஆகீயின் மரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாப், ஹாக் இருவரும் கரப்பான் பூச்சிகள் உருவாக்கிய கலாட்டாவில் மாட்டிக் கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ2 எ21 - டேக் ஓவர், த ப்ளோப், பாக்சிங் ஃபீவர்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    ஜாக்கின் அதீதமான பொம்மை வீரர்கள் பற்றிய மனப் பித்தத்தால், அவன் வீட்டுப் பின் புறத்தில் உண்மையான போர் நடக்கிறதென அவனை நம்ப வைத்து விடுகின்றன கரப்பான் பூச்சிகள். யார் என்றே தெரியாதவன் ஆகீக்கு தபாலில் ஒரு லாவா விளக்கை அனுப்புகிறான். குறும்புக்கார கரப்பான்கள, அதை சொதப்பி, அதில் இருந்த ப்ளாப் ஆவி ஒன்றை விடுவித்து விடுகின்றன. ஆகீக்கும் பாப்க்கும் மறுபடி தகராறு. பாப் ஆகீயை குத்துச் சண்டைக்கு அழைக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ2 எ22 - காபி கேட், ஸ்கை டைவிங், அப் டு நோ குட்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    அவைகளை விரட்ட ஒரு ரொபோவை கரப்பான் பூச்சிகள் செய்ததால் மதிப்புள்ள சிலை உடைந்து அந்த அதிர்ச்சியில் நகர முடியாமல் போனான் ஆகீ. ஜாக் காதலைச் சொல்ல இருந்த மோனிகாவோ ஜாக், ஆகீயையும் ஜாக்கையும், கட்டாயமாக ஸ்கை டைவிங் அழைத்துப் போகிறாள். டீடீ அவர்களைத் தொடர்ந்து போய் அனைத்தையும் முடமாக்குகிறது. தோட்டத்தில் ஒரு சுவிட்சைத் தவறுதலாகப் போடும் போது தனது வீட்டின் கீழே ஒரு ரகசிய மலையைக் கண்டு பிடிக்கிறான் ஆகீ.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ2 எ23 - ஹை ஃபிளையர்ஸ், பேபி பூம், பிரெய்ன் சைல்ட்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    ஆகீயின் நீச்சல் குளத்தை பறந்து கடக்கும் போட்டியை தங்களுக்குள் கரப்பான் பூச்சிகள் நடத்துகின்றன. ஆகீக்கும் பாப்க்கும் மறுபடி தகராறு. இந்த சமயம் அது நாரை அவர்கள் தோட்டத்தில் போட்டுவிட்ட குழந்தைகள் பற்றி. ஆகீ வீட்டுக்குத் திரும்பும் சமயம் ஒரு புத்திசாலி பையனைச் சந்தித்து, அவனுடன் வீட்டுக்கு வருகிறான். கரப்பான் பூச்சிகள் பற்றி, வினோதமான பரிசோதனைகள் நடத்துகிறான். கரப்பான் பூச்சிகள் தப்புமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ2 எ24 - த ஒன்டர் விசில், வெல்கம் டு பாரிஸ்! ஸ்ட்ரைக்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    கரப்பான் பூச்சிகள், ஆகீயின் நேரத்தை உறைய வைக்கும் புதிய விசிலை திருடி வைத்துக் கொண்டு தொந்தரவை உண்டாக்கப் போகின்றன. ஆகீயின் பாரிஸ் விடுமுறை அதற்குத் தெரியாமல் கூடவே வரும் கரப்பான்களால் பாழாகிறது. தங்கள் இடத்தில், கரப்பான் பூச்சிகள் பிக்-எ-ஸ்டிக் விளையாடுகின்றன, ஆகீயும் ஜாக்கும் உள்ளூர் பவுலிங் பாதையை எதிர்பாராமல் உடைத்துவிடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ2 எ25 - கோ ஃபர் இட், ஜாக்! சாட்டர் பாக்ஸ், த டெக்னோ-ஃபைல்ஸ்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    இந்த எபிசோட் ஆகீயும் ஜாக்கும் டேபிள் டென்னிஸ் விளையாடுவதில் ஆரம்பிக்கிறது. மோனிகா வந்து சேரவும், ஜாக் அவளைக் கவரச் செய்பவை நகைச்சுவை நிகழ்ச்சிகளாக மாறுகின்றன. சூப்பர் மார்க்கெட்டில் ஆகீ வாங்கிவந்த ஒரு தின்பண்டத்தை உண்கின்றனர் ஆகீயும் டீடீயும். சாப்பிட்ட பின், வினோத விளைவுகள் ஏற்படுகின்றன. கரப்பான் பூச்சிகள் தொல்லையால் நொந்து போகிறான் ஆகீ. கரப்பான்களை வேட்டையாடும் கருவியை ஜாக் தருவதைப் பாருங்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 26 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Olivier Jean-Marie
தயாரிப்பாளர்கள்
மார்க் ட்யூபான்டவிஸ்
நடித்தவர்கள்
NANANA
ஸ்டுடியோ
Xilam Animation Studio
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.