Prime Video
  1. உங்கள் கணக்கு

ஆகீ அண்ட் த காக்ரோச்சஸ்

ஒலிவியா எனும் பூனை ஆகீயின் பகுதிக்கு வருகிறாள். ஆகீ அவளுடன் காதல் கொண்டாலும், வழக்கம் போல, ஆகீககு நினைத்தது போல் எதுவும் நடப்பதில்லை. அவனது உயிர் நண்பனும், அவனது அண்டைவீட்டுக் காரனும் ஒலிவியா மீது கண் வைப்பது போதாதென்று, பயங்கரமான கும்பலான கரப்பான் பூச்சிகளும் வந்து சேர்ந்து, அவர்களது ஒவ்வொரு அடியிலும் அளவிட முடியாத குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. ஆகீ இந்த கெடுமதி பிறவிகளை வென்று மேலே எழுவானா?
IMDb 7.5199826 எப்பிசோடுகள்
7+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - ஒலிவியா, ரன், ஒலிவியா, ரன்! த லைட்ஹவுஸ் கீப்பர்.
    31 டிசம்பர், 2011
    20நிமி
    7+
    ஆகீ புது அண்டைவீட்டு ஒலிவியாவிடம் காதல்கொள்கிறான், ஆனால் பாப், ஜாக்கும் கூடஅவளை காதலிக்கிறார்கள். பாப், ஜாக் இருவரும் கரப்பான்களுடன் கூட்டு சேர்ந்து, ஆகீயின் தனித் தன்மையை ஒலிவியா எதிரில் இழிவாக்க முனைகிறார்கள். ஆகீ ஒலிவியாவுக்கு மாரத்தான் போட்டியில் உதவுகிறான். ஜாக் உறுதியாகத் தோன்றினாலும் அரக்னோஃபோபியா சிலந்தி பய நோயால், கலங்கரை விளக்கத்ததை காப்பாற்ற அகீக்கு உதவ இயலாதது தெரிய வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ4 எ2 - எ ஜெலஸ் கை, மைண்ட் த ஜயன்ட், டம்ப் த ரோச்சஸ்!
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    ஆகீ ஒலிவியாவைக் கவர எல்லா முயற்சிகளும் எடுக்கிறான். கரப்பான்களோ, எல்லா வகையிலும் கெடுக்கின்றன. ஒலிவியா தங்கள் பக்கத்தில் தோன்றும் போலி புகைப் படத்தை அவை தயாரித்து, ஆகீயின் மனத்தை உடைக்கின்றன. இதறகிடையே மார்க்கி ஒரு ஐயத்துக்கு இடமான உணவைச் சாப்பிட்டு, பூதாகாரமாக வளர்ந்து விடுகிறது. ஆகீ, ஜோயி டீடீயையும் சேர்த்து மிரட்டுகிறது. கரப்பான்களின் விஷமத்தால், ஆகீயின் கழிவு சேகரிக்கும் வேலைக்கு ஆபத்து.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ4 எ3 - பேனிக் ரூம், ஜாக்'ஸ் நெவ்யூ, வாஷிங் டே
    31 டிசம்பர், 2012
    21நிமி
    7+
    ஆகீ வீட்டின் அமைப்பையே மாற்றி, கரப்பான்களை வெளியேற்றி, கட்டுப்பாட்டு அறையிலிருந்து அதை ரசிக்கிறான். இது கொஞ்ச காலமே. கரப்பான் பூச்சிகள், கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைந்து அதை அவனுக்கே சிறையாக்குகின்றன. இதற்கிடையே, ஜாக்கின் மைத்துனன் ஆகீயுடன் இருக்க வருகிறான். ஜோயியுடன் நட்பாகி, அவனுடன் மகிழ்கிறான். இறுதியாக, ஆகீ துணிகளை உலர்த்தும் போது கரப்பான் பூச்சிகள் நச்சரிக்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ4 எ4 - ஆகீ'ஸ் ஷேடோ, மிஸ்டர் கேட், பட்டி பேர்ரட்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    கரப்பான் பூச்சிகள் உணவை திருட வசதியாக ஆகீயின் நிழலை அவனிடமிருந்து துண்டிகிக்கின்றன. அதைத் திரும்ப பெற ஆகீ முயல்கிறான். அவ்வாறு செய்த பின் ஆகீ ஒரு உடையலங்காரப் போட்டியில் கலந்து கொள்கிறான், அவன் தோல்வியடைய பாப், கரப்பான் பூச்சிகளுடன் சேர்ந்து முயற்சி செய்கிறான். இறுதியில், ஆகீ ஒரு கிளியை செல்லப் பறவையாக வீட்டுள் கொண்டு வரும் போது, டீடீ உணவு எடுக்க அதன் சிறகுகளை பிடுங்க எத்தணிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ4 எ5 - த மேஜிக் பேன், ஜர்னி டு த செண்டர் ஆஃப் எர்த், த க்யூப்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    கரப்பான் பூச்சிகளுக்கு மாய சக்தி உடைய பென்சில் கிடைக்கிறது. ஆகீயை நன்றாக மட்டம் தட்ட சிறந்த வாய்ப்பாக அதைப் பயன் படுத்த அவை திட்டமிடுகின்றன. ஆகீயும் ஜோயியும் ஒரு குழிக்குள் விழுந்து விட, அது அவர்களை பூமியின் மையத்துக்கே தள்ளிவிடுகிறது. அதிலிருந்து வெளி வரும்போது மர்மமானவை சிலவற்றைப் பார்க்கின்றனர். பின்னர், ஆகீ ஒரு கன சதுரத்தைக் கண்டெடுக்கிறான். அதை விலக்க முற்படும் ஆகீக்கு தொந்தரவுகள் வருகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ4 எ6 - எ சார்மிங் கை, வாட் எ லவ்சி டே, ஃப்ளை ஃபர் ஃபன்
    31 டிசம்பர், 2011
    20நிமி
    7+
    ஆகீ தனது ஆசையை ஒலிவியாவிடம் சொல்லி அவளை கவர நினைக்கிறான், கரப்பான் பூச்சிகள் அதைக் சிரமமாக்குகின்றன. பின்னர், ஆகீ, ஜாக், பாப் மூவரும் ஒரே சீப்பை பயன்படுத்தி,யதால் அவர்கள் வாழ்க்கை நரகமாகிறது. அதாவது ஒலிவியா கரப்பான் பூச்சிகளோடு தொலைத்த பேன் அவர்கள் தலையிலேயே ஏறின. ஜோயி ஹெலிகாப்டரை, தும்பி என நினைத்து காதலிக்க ஆரம்பித்து விடுகிறது. ஆகீக்கு அதை கட்டுப் படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ4 எ7 - த ஐஸ் ரிங்க், ரூம் மேட் வான்டட்! ஃபைட் டு த சன்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    இது குளிர்காலம். ஆகீ, ஒலிவியா, ஐஸ் ஸ்கேட்டிங் போகிறார்கள். கரப்பான் பூச்சிகள் ஆகீயை தொந்தரவு செய்து தங்களை உறைய வைத்துக் கொள்கின்றன. ஆகீயும் ஒலிவியாவும் அறைக்கு சென்று விடுகிறார்கள். ஆகீ தனிமையை உணர்ந்து, அறை நண்பர்களை தேட, அது கரப்பான் பூச்சிகளாக அமைகிறது. கரப்பான் பூச்சிகள் உணவைத் திருட முயற்சி செய்கையில், வீட்டையே விண்வெளியில் சூரியனை நோக்கிச் செலுத்தி விடுகின்றன. ஜாக் வந்து காப்பாற்றுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ4 எ8 - ஃபர் ரியல்! த பாத் டப் ரேஸ், ஸ்போர்ட் ஃபேன்ஸ்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    ஒரு வினோத விபத்து, ஆகீயை, பூனையாக, ஜோயியை கரப்பான் பூச்சியாக மாற்ற, இதைக் கண்டவர்கள் சகஜ நிலைக்குத் திரும்ப வர உதவுகின்றனர். சலிப்பான நாளில் ஆகீயும் அண்டை வீட்டாரும் குளியல் தொட்டி பந்தயம் ஏற்பாடு செய்கின்றனர். ஆனால், கரப்பான் பூச்சிகள் வருவதால் நினைத்தபடி நடக்கவில்லை. கரப்பான் பூச்சிகள் ஆகீயின் தொலைக் காட்சிப் பெட்டியை உடைத்தன. அவை இப்போது விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கு கொள்ள ஏற்பாடுகள் ஆகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ4 எ9 - நவ் யூ சீ மி, நவ் யூ டோன்ட், இன்ஸ்பெக்டர் டீடீ, த ஈஸ்டர் எக்
    31 டிசம்பர், 2011
    20நிமி
    7+
    ஆகீ விபத்தான கலவை ஒன்றை குடித்து, கண்ணுக்குத் தெரியாதவன் ஆகிறான். அந்த நிலையை ஜாலியாக அனுபவித்த பின் சகஜ நிலைக்குத் திரும்புகிறான். இப்போது ஆகீயின் பொருட்கள் திருடு போக, டீடீ குற்றவாளிகளைப் பிடித்து பொருட்களை மீட்கிறது. ஆகீ தன் புல்வெளியில் இருந்த ஈஸ்டர் முட்டையை ஒலிவியாவுக்குப் பரிசளிக்கப போக, அதன் உண்மை உரிமையாளர் கேட்பதால் கொடுத்துவிட நேர்கிறது. ஆகீ கரப்பான்களை ஈஸ்டர் முட்டையாக்கி விடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ4 எ10 - ஆகீ அன் த மேஜிக் ஸ்மைல், (அன்)ஹேப்பி கேம்பர், பட்டர் ஃளை ரேஸ்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    ஆகீ மந்திரவாதி கடையில் தமாஷ் பொய்ப்பல் ஜோடி வாங்கி அணிய, அணிந்ததும் பெரும் சக்திகள் வருகின்றன. கரப்பான் பூச்சிகள், பாப் எல்லோரையுமே எதிர்க்க முடிகிறது. அடுத்து ஒலிவியா, ஆகீ காதல் முகாம் போக, பாப் இடையூறு தருகிறான். ஆகீயும் கரப்பான்களும் பாப்ஐ ஒழிக்க கூட்டு சேர, இறுதியாக, ஆகீயின் புதிய செல்ல பட்டாம் பூச்சிக்கும், பட்டாம் பூச்சியாக பாப் வேடமிட வைத்த மார்க்கிக்கும் சிறந்தவர் யார் என போட்டி வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ4 எ11 - ஸ்கேர்டி-கேட், கிரீஸ்-மங்கி ஆகீ, ஹெப் டேக்சி!
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    ஹாலோவீனுக்கு, ஒரு நிஜ பூதம் ஆகீயின் வீட்டுக்கு வருகிறது. ஆகீயும் ஜாக்கும், பூத வேடத்தில் இருப்பது மற்றவன் என நினைக்கிறார்கள். ஜாக் மோட்டார் பழுது நிலையத்தை திறந்து, எல்லா வேலையையும் ஆகீயைச் செய்யச் சொல்கிறான். ஒரு பொறியாளனாக ஆகீ சிறப்பாகச் செய்கிறான். ஆனால் கரப்பான் பூச்சிகள் கெடுக்கின்றன. இறுதியில் ஆகீ ஒரு டாக்சி ஓட்டுனராக முடிவு செய்ய, கரப்பான் பூச்சிகள் டாக்சியைக் கெடுத்து தொந்தரவு தருகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ4 எ12 - பார்டி பூப்பர், ஃபார்மர் ஃபர் எ டே, ஆர்ட்ஸி ஆகீ
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    ஒலிவியாவுக்கான பிரத்தியேக விருந்துக்காக, ஒரு அழைப்பிதழ் அடிக்கிறான் ஆகீ. மூன்று கரப்பான்களும் பிரபல நடனக்காரர்களாக வருவது ஒரு சாதனைதான். ஆகீ ஒலிவியாவின் பண்ணையில் தனது பண்ணைத் திறமையைக் காட்டுகிறான். கரப்பான்களின் வெறித் தனத்தில் இருந்து ஒரு குட்டிப் பன்றியைக் காப்பாற்றி கதா நாயகன் ஆகிறான். ஆகீ ஓவியம் வரைய முயல,கரப்பான் பூச்சிகள் கெடுக்கின்றன. அப்போது அங்கிள் ஆர்ட்-ஜாம் அவன் உதவிக்கு வருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ4 எ13 - லேடி கே, ஆகீ ஸ்பிளிட்ஸ் ஹேர்ஸ், லிட்டில் டாம் ஆகீ
    31 டிசம்பர், 2011
    20நிமி
    7+
    ஆகீ ஒலிவியா வீட்டுக்கு டீ அருந்தச் செல்கையில் கரப்பான் பூச்சிகள் தொந்தரவு செய்ய செல்கின்றன. அவை அங்கு ஒரு பெட்டைக் கரப்பானை காண்கின்றன. அடுத்து ஜாக்கும் ஆகீயும் ஒரு முடிதிருத்து நிலையம் திறக்க, பாப் முதல் வாடிக்கையாளர். பாப் மீது குறும்புகள் செய்து பழியை பூனைகள் மேல் போடுகின்றன. இறுதியாக ஆகீயும் டீடீயும் வீட்டுக்கு திரும்பும் போது வழி தவருவது ஜாக், ஒலிவியா, கரப்பான் பூச்சிகளுக்கு கவலையளிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ4 எ14 - ஆகீ அன் த ஃப்ளர் மேன், டோன்ட் பார்ஜ் இன்! எ ஃபைவ் லெக்ட் ஷீப்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    ஆகீ விருந்துக்கு பாஸ்ட்ரி செய்ய முனைகிறான். ஆனால் டீடீ அந்த மாவை திருடும்போது பிரச்சினையாகி சண்டை உண்டாகிறது. அது ஒரு மாவு மனிதன் உருவாவதில் முடிகிறது. ஆகீ இந்த வினோத உயிரை நட்பாக்குவது எப்படி என பாருங்கள். பின்னர், ஆகீயும் ஒலிவியாவும் உல்லாசக் கப்பலில் போகிறார்கள். உடனே கரப்பான் பூச்சிகள் மோசமாக்குகின்றன.வினோத ஐந்து கால் ஆட்டை இப்போது புல் வெட்டி இயந்திரம் போல ஆகீ வேலை செய்ய வைப்பதைப் பாருங்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ4 எ15 - த குகரச்சா, வாட்டர் ஸ்போர்ட்ஸ், கேவியார் ஆன் த ஹவுஸ்!
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    கரப்பான் பூச்சிகளைப் பார்க்க, மெக்சிகன் கரப்பான் வருகிறது. உடனே அவனும் லேடி கே வும் காதலிக்கிறார்கள். .ஜோயி பொறாமை அடைகிறான். ஜோயி அவனை விரட்ட திட்டமிடுகிறான். ஆகீயும் நண்பர்களும் பூங்காவிற்கு போகின்றனர். உடனே கரப்பான் பூச்சிகள் குழப்புகின்றன. ஆகீக்கு ஒலிவியாவை கவர விலையுயர்ந்த மீன் உணவு வாங்க ஆசை. ஆனால், ஒரு மீன் முட்டைக்கு மட்டுமே காசு இருக்கிறது. கரப்பான் பூச்சிகள் மீனைத் தொடர்வதைப் பாருங்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ4 எ16 - நார்த்-போல் பானிக், ட்ரீம் ஆன்!
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    கரப்பான் பூச்சிகள் அன்டார்டிகாவுக்குப் போய் சாண்டாவை கடத்த திட்டமிட, ஒரு குட்டி தேவதை ஆகீயையும் நண்பர்களையும் உதவி கேட்கிறது. ஆகீயும் ஒலிவியாவும் சாண்டாவை தேடி அன்டார்டிகா போக, ஜாக்கும் குட்டி தேவதையும் சான்டாவின் கிறிஸ்துமஸ் பணிகளைப் பார்க்கிறார்கள். சான்டாவைக் கண்டு பிடித்து நெருக்கடி தீருமா? பின்னர் ஆகீ சிம்ம சொப்பனத்தால் தூக்கம் இழக்கிறான். தூக்கப் பிரச்சினையில் ஆகீ விடுபடும் விதம் பாருங்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ4 எ17 - பேக் டு த பாஸ்ட்! ஸ்கேட் ஃபீவர்
    31 டிசம்பர், 2011
    20நிமி
    7+
    ஆகீ முற்றத்தில் ஒரு சூனியக்காரியின் தொப்பி வந்து விழுகிறது. கரப்பான் பூச்சிகள் அதை கிழித்து எறிய, சூனியக்காரி வந்து பார்த்து, ஆகீயும் நண்பர்களுமே குற்றவாளிகள் என நினைத்துச் சாபம் தருகிறாள். ஒலிவியா அதை நீக்க முற்படுகிறாள். ஆகீ ஸ்கேட் போர்டு ஒன்றை தெருவில் காண்கிறான். மோசமாக துவங்கி, பிறகு நன்றாக அதில் மகிழ்கிறான். ஆனால், துரதிருஷ்ட வசமாக கரப்பான் பூச்சிகள் ஆகீயின் பொழுது போக்கை சிதைக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ4 எ18 - ஃப்ரம் மும்பை வித் லவ், ஷாப் லிஃப்டிங்!
    31 டிசம்பர், 2011
    15நிமி
    7+
    ஆகீயும் ஒலிவியாவும் உலக கிரிக்கட் கோப்பை பந்தயம் 2012ஐ காண மும்பைக்கு செல்கிறார்கள். ஒலிவியாவின் விருப்பத்தால், ஆகீ வேண்டா வெறுப்பாக வருகிறான். ஒரு பிரபல பெண்மணி அந்தப் போட்டியை பார்க்க வந்தால், அவளது வைர அட்டிகையைத் திருட கரப்பான் பூச்சிகள் விரும்புகின்றன. ஆகீயும் ஒலிவியாவும் டேட்டில் இருக்க, மார்க்கி, டீடீயைக் கடைகளில் திருட லேடி கே தூண்டுகிறாள். இப்போது கொள்ளையைப் பங்கு போட சண்டையிடுகிறார்கள்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ4 எ19 - ஆகீ இஸ் கெட்டிங் மேரீட்! ஆகீஅன் த டோடோ பேர்ட்
    31 டிசம்பர், 2011
    22நிமி
    7+
    ஆகீ ஒலிவியாவுக்கு தனது காதலைத் வெனிஸ் நகரில் தெரிவிக்க நினைக்கிறான். ஆனால், அவள் இன்னொருவனிடம் பேசியதை பார்த்து தன்னை ஏமாற்றுவதாக நினைக்கிறான். இதற்கிடையே, லேடி கே வுக்கு ஒரு திருமண மோதிரத்தை திருட கரப்பான் பூச்சிகள் முயலும் போது எல்லாம் தவிடு பொடியாகிறது. ஆகீ ஒரு அநாதை டோடோ பறவைக்கு வீட்டில் இடம் தருகிறான். ஆனால், டீடீ அதை சாப்பிட முயல்கிறது. ஆகீ அதனை மீட்டு, பறக்க விட்டு விடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ4 எ20 - டீடீ'ஸ் டயட், பிக்னிக் பேனிக், டெலிபோர்டேஷன்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    டீடீ தான் குண்டாவதைப் பார்த்து உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆகீ, ஒலிவியா, ஜாக் சுற்றுலா போகிறார்கள். ஆனால், அவர்கள் உணவை கரப்பான்களும் எறும்புகளும் திருடிச் செல்வதால், அது பாழாகிறது. ஃபிரிட்ஜை சூறையாட டீடீ, மார்க்கி டெலிபோர்டிங் இயந்திரம் மூலம் முயல்கையில், சிக்கிக் கொள்கிறார்கள். ஜாக், பாப் இருவரும் டெலிபோர்ட் செய்ய முயன்று, ஒன்றாக மாட்டிக் கொள்கிறார்கள். ஆகீதான் அவர்களை விடுவிக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ4 எ21 - லெட்'ஸ் பார்டி, கைஸ்! லைட்டனிங் விசிட், பைசைகிள் கிரேசி!
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    ஜோயியின் பிறந்த நாளுக்கு ஒரு பெரிய விருந்தை மார்க்கி, டீடீ அளிக்கிறார்கள். ஆனால் நிலைமை மோசமாகி, ஆகீயும் ஜாக்கும் கோபம் கொள்கின்றனர். தனது உறவினர்கள், கரப்பான்களால் விரட்டப் படுவார்கள் என நினைத்து தயங்கி, புறக்கணிக்கிறான் ஆகீ. சைக்கிள் ரேஸ் பார்க்க வருபவர்கள் வாங்குவார்கள் என நினைத்து, ஒரு பார்பிக்யூ கடையை ஜாக் திறகிக்கிறான், கரப்பான் பூச்சிகள் மற்றும் பாப் அதை திசை திருப்புவதில் அது முடிகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ4 எ22 - ஏர்ஷிப் ஹவுஸ், ரெஸ்ட்லிங் டைம்! ஒலிவியா'ஸ் பிம்பிள்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    ஜாக் பிறந்த நாள் விருந்தில், கரப்பான் பூச்சிகள் பலூன்களில் ஹீலியம் வாயு அடைத்து கூரையில் கட்டிவிட, வீடே வானில் பறக்கிறது... உள்ளே மாட்டிக் கொண்ட ஆகீக்கு என்ன செய்வதென தெரியவில்லை. ஜாக் ஆகீயை ஒரு மல்யுத்தக்காரனாக சொல்கிறான். பின்னர் டீடீ ஒரு குண்டான ஆளை வீழ்த்தி பெல்ட் பரிசு பெற ஆகீக்கு உதவுகிறது. ஒலிவியா நெற்றியில் ஒரு பருவைப் பார்த்து அதிர்ந்து, வீட்டிலேயே அடைகிறாள். ஆகீ அவளுக்கு எப்படி உதவுவான்?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ4 எ23 - இன்டு த வைல்ட், த அபாமினபிள் ஸ்னோக்ரோச், ஹை ரைஸ் நைட்மேர்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    ஆகீயும் ஜாக்கும் நடைப்பயணம் போக, கரப்பான் பூச்சிகள் அவர்களது திசைமானியை கெடுப்பதால் இரண்டு பூனைகளும் வனத்தில் வழி தவறுகிறார்கள். அந்தப் பகுதியில் பனிப்புயல் வீச, உள்ளூர்வாசிகள் பள்ளம் தோண்டி பாதுகாத்துக் கொள்கிறார்கள். கரப்பான் பூச்சிகளோ பனிமனிதன் பொம்மையில் நுழைந்து ஆகீக்குத் தொந்தரவு தருகின்றன. இறுதியில் பாப் புது இல்லத்துக்கு மாறும் போது ஆகீயின் முற்றத்தைக் குப்பை மேடாக மாற்ற, ஆகீ கோபமடைகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ4 எ24 - எ சாஃப்ட் வர்ல்ட், ஸ்டீம்டு அவுட்! த கிச்சன் பாய்
    31 டிசம்பர், 2011
    20நிமி
    7+
    கரப்பான் பூச்சிகள், எதையும் மிக மிருதுவாக்கும் ஒரு பொருளைக் கண்டு பிடித்து, அந்தப் பகுதியையே நாசமாக்குகின்றன. ஆகீ இன்னொரு பொருளால் அதை சரி செய்கிறான். ஆகீ, ஜாக், பாப் தங்கள் வீட்டில் வெந்நீர் குளியலை அமைக்க, கரப்பான் பூச்சிகள் கூட்டுச் சதியால் அதைக் கெடுக்கின்றன. ஆகீ ஒரு உணவு விடுதியில் சமையல்காரனாக, ஒலிவியா வாடிக்கையாளராக வருகிறாள். அப்போது கரப்பான் பூச்சிகள் சமையல் அறையில் துவம்சம் செய்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ4 எ25 - ஆகீ கோஸ் க்ரீன், எ ஸ்ட்ரீட்கார் ஆன் த லூஸ், லைட்ஸ் அவுட்!
    31 டிசம்பர், 2011
    20நிமி
    7+
    இந்த முறை, கரப்பான் பூச்சிகள் ஆகீயின் பகட்டுப் சாதனங்களை இலக்காகக் கொண்டு முடிந்ததை எல்லாம் செய்கின்றன. அவனது புதிய பிரியத்துக்குரிய சோலார் பேனலை சிதைப்பது முதல், திருட வசதியாக விளக்குகளை பாழ் செய்வது வரை, தங்கள் தொந்தரவுகளை ஒரு படி உயர்த்துகின்றன. அவனது புதிய ட்ராம் ஓட்டுனர் வேலையையும், கருவிகளின் மின் சுற்றுக்களைச் சேதமாக்கிக் கெடுக்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 26 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Olivier Jean-Marie
தயாரிப்பாளர்கள்
மார்க் ட்யூபான்டவிஸ்
நடித்தவர்கள்
NANANA
ஸ்டுடியோ
Xilam Animation Studio
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.