Prime Video
  1. உங்கள் கணக்கு

ஆகீ அண்ட் த காக்ரோச்சஸ்

நான்கு சண்டைகள் நிறைந்த பருவங்களும், கிட்டத்தட்ட 20 வருஷங்கள் மற்றும் 300 பாகங்களினூடே ஆக்கி கடுமையாக மூன்று கரப்பான்களுடன் போராடினான். அவை அவன் வீட்டில் குடி புகுந்தது மட்டுமல்லாமல் அவன் வாழ்வையும் ஆக்கிரமித்தன. இதுதான் நவீன கால போர் என்று நினைக்கிறீர்களா? மீண்டும் சிந்தியுங்கள். ஐந்தாம் பருவத்தில் நாம் அறிவது ஆக்கிக்கும் கரப்பான்களுக்குமான யுத்தம் என்றென்றும் உள்ளது! (என்றென்றும் நீடிக்கும்).
201226 எப்பிசோடுகள்
7+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - பெரிய பிரமிட் மர்மம்/ ஆக்கியும் வெட்டுக்கிளி கூட்டமும்/ ஆக்கி நைல் நதியில்
    29 ஜூன், 2017
    22நிமி
    TV-Y
    ஆக்கி தன் சாண்ட்விச்சை திரும்பிப் பெற, கரப்பான்களை, பிரமிட் கட்டுமான இடத்தில் துரத்துகிறான்./ ஆக்கியின் பறவைகளை கூப்பிடும் ஊதலில் ஜோயி ஊதி விளையாட, ஒரு வெட்டுக்கிளி கூட்டம் வந்து, பிரமிடை ஆக்கிரமித்துவிடுகிறது./ஆக்கி ஒலிவியாவை ஒரு அருமையான நைல் நதி பயணத்திற்கு அழைக்கிறான். கரப்பான்கள் பயணத்திற்கு அனுமதிக்கப் படாதலால் கோபம் கொண்டு, அப்பயணத்தை நாசம் செய்ய முடிவெடுக்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ5 எ2 - வாள்வீரன் ஆக்கி/ அந்த ரதத்தை நகர்த்து ஆக்கி!/ஆக்கியின் விசேஷ சுடு நீரூற்று
    31 டிசம்பர், 2011
    22நிமி
    7+
    ஆக்கியும் ஒலிவியாவும் கோலீசியதிற்கு வாள்வீரர் சண்டையைக் காண செல்கின்றனர். கரப்பான்கள் ஆக்கியின் பாப்கார்னை திருடுகின்றன. அவற்றை துரத்திப் போகும் ஆக்கி, வாள்வீரனாக சேர்க்கப்படுகிறான்!/பாபின் ரதத்தில் ஒலிவியா ரோமிற்கு செல்வதை பார்த்த ஆக்கி வருந்துகிறான். அவனால் எப்படி போட்டியிடமுடியும்?/ஆக்கி அருமையான ரோமன் குளியலறை வேலை பெறுகிறான். இன்று எதிர்பார்க்கப் படும் சிறப்பு விருந்தினர்: ஜூலியஸ் சீசர்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ5 எ3 - குதிரை போட்டியில் ஆக்கி/ ஷெரிஃப் ஆக்கி/ தேடப்படுபவர்
    31 டிசம்பர், 2011
    22நிமி
    7+
    பஃபல்லோ பில் நடத்தும் குதிரை போட்டியிபங்கேற்க ஜாக் முனைகிறான். ஜோயியும் முதல் பரிசை வெல்ல முயன்று ஜாக்கை வெளியேற்றுகிறான்./ஷெரிஃப் ஜாக் ஒரு குட்டி தூக்கம் போட முயல்கிறான். அந்த நேரத்துக்கு ஆக்கியை ஷெரீஃப் பதவியில் அமர வைக்கிறான். ஆக்கி ஒலிவியாவை அசத்த அந்த பதவியை ஏற்கிறான். ஆனால் காரியம் கெடுகிறது./ கரப்பான்கள் ஆக்கியின் போட்டோ ஒன்றை "தேடப்படுபவர்- பாப்" என்ற போஸ்டரின் புகைப்படமாக்ஒட்டுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ5 எ4 - பச்சை கட்டைவிரல் / அரசனின் தேரோட்டியாக ஆக்கி / அரசனின் வரவேற்பு விழா
    31 டிசம்பர், 2011
    22நிமி
    7+
    வேர்செயில் அரண்மனை தலைமை தோட்டக்காரன் பாப், ஆக்கியிடம் தோட்டங்களை அழகுபடுத்த வேலைகளை சொல்கிறான்./அரசனின் தேரோட்டியாக பணிபுரியும் ஆக்கி ரதத்தை அழகுபடுத்தி அரசன் வெளியே செல்ல வெர்ஸெயிலுக்கு எடுத்து செல்ல வேண்டும்./ அரசனின் வேலைக்காரன் ஜாக்கிற்கு ஆக்கி உதவி செய்கிறான். அரண்மனை ஓவியன் வரைய வரும் முன் அரசனை முழு அலங்காரத்துடன் ஒப்பனை செய்ய வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ5 எ5 - மார்க்கியின் போட்டி/கரப்பான்கள் கோட்டையைப் பிடிக்கின்றன/ மாதாகோயில் கூனன்.
    31 டிசம்பர், 2011
    22நிமி
    7+
    ஜாக், ஆக்கியை அடியாளாக கொண்டு ஒரு மத்திய கால போட்டியில் கலந்து கொள்கிறான். மார்க்கி இளவரசி பாபெட் (பாபின் மகள்) மீது காதல் கொண்டு போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்கிறான்./ ஜாக்கையும், ஆக்கியையும் கோட்டையை காவல் செய்யவிட்டு, சீமான் பாப் வேட்டையாட போகிறார். கரப்பான்கள் அவர்களை வெளியேற்றுகின்றன./ஆக்கியின் சான்ட்விச் நாட்றடாம் தேவாலயம் கட்டுமிடத்தில் திருடு போகவே, அவன் கரப்பான்களை சந்தேகிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ5 எ6 - பட்டணத்தில் மனிதக் குரங்கு/ ஆக்கியும் வழிபோக்கனும்/டீடீ கபோன்
    31 டிசம்பர், 2011
    22நிமி
    7+
    1920ன் அமெரிக்க சாகச வீரன் ஜாக், ஒரு மனிதக் குரங்கை, ப்ராட்வேயில் காட்டுவதற்கு கொண்டு வருகிறான். ஜோயி மனிதக் குரங்கைத் திருடி செல்வம் சேர்க்க எண்ணுகிறான்./ 1930ல் ஒலிவியா நியூ யார்க் தெருவில் பூக்கள் விற்கிறாள். ஜோயி அதை லேடி கேயிடம் கொடுக்க திருடி, அவனுக்குப் பதில் ஆக்கியை கைதாக வைக்கிறான்./ மது விலக்கின் போது, ஜோயியும், மார்க்கியும் பதப்படுத்திய உணவைக் கைப்பற்றுமாறு டீடீயை பணிக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ5 எ7 - ஆக்கியும் புதையலும்/ தி ஆக்டபஸ் மாஸ்டர்ஸ்.
    31 டிசம்பர், 2011
    22நிமி
    7+
    கடற்கொள்ளையன் ஜாக்கின் கப்பலில் ஆக்கி ஒரு பணியாளன். புதையல் தேடும் பொழுது அவர்கள், பாபின் கப்பலை மூழ்கடித்து, ஒலிவியாவை கடத்திச் செல்கின்றனர்./ ஆக்கி கப்பல் சிதைவு தளத்தில் ஒரு மந்திர பதக்கத்தைக் கண்டு அதை ஒலிவியாவிடம் கொடுக்கிறான். அவள் அதை அணிந்தவுடன், அவளின் எல்லா ஆசைகளயும் நிறைவேற்ற ஒரு ஆக்டபஸ் தோன்றுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ5 எ8 - அருமையான பாண்டா/ நொறுங்ககூடிய பொருட்கள்/அரசருக்கு குழந்தை காப்பகம்.
    31 டிசம்பர், 2011
    22நிமி
    TV-Y
    ஆக்கி அழகான ஒரு பாண்டா குட்டியை தத்து எடுத்துகொள்கிறான். பகோடாவில் இந்த குட்டி பாண்டாதான் முக்கியமானவன்: பொறாமை பிடித்த கரப்பான்கள் அதை ஒழிக்க தீர்மானிக்க, ஆனால் குட்டியின் அழகில் மார்க்கி மயங்கி அவன் ஜோயி, டீ டீ யுடன் ஒத்துப் போகவில்லை./ஆக்கி - பீங்கான் நிபுணர் - அரசரின் அருமையான மிங் ஜாடியை புதுப்பிக்கும் பொறுப்பு கொடுக்கப்படுகிறான்./ சீனாவின் குட்டி அரசன் ஒரு சிம்ம சொப்பனமாகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ5 எ9 - புலி வேட்டை/ஆக்கி சாமியார்/ கிரிக்கெட் விளையாடும் கரப்பான்கள்
    31 டிசம்பர், 2011
    22நிமி
    7+
    மகாராஜா சடபாட்-அபாடின் யானைப் பாகன் ஆன ஆக்கி, தன் ராஜாவையும், வேலைக்காரன் ஜாக்கையும் ஒரு புலி வேட்டைக்கு அழைத்துச் செல்கிறான்./ ஆக்கி, ஒலிவியாவை அவள் அரண்மனை மச்சில் சந்திக்க ஏங்குகிறான் ஆனால் அவனுககு அரண்மனையில் நுழைய அனுமதி இல்லை./ மஹாராஜாவுக்கு பொழுது போகவில்லை. அவர் ஜாக்கை ஏதாவது செய்யச் சொல்கிறார். ஜாக் ஒரு திட்டத்தை வகுக்க திண்டாடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ5 எ10 - ஆக்கியின் டிராகன்/நீள்படகு உஷார்/ஆக்கி மின்னலின் தலைவன்
    31 டிசம்பர், 2011
    22நிமி
    7+
    பாப் பிடிக்க முயன்று கொண்டிருந்த ஒரு குட்டி டிராகனை ஆக்கி காப்பாற்றி ஒளித்து வைக்கிறான். அதன் மேல் பாசம் கொண்டு, அதற்கு பறக்க சொல்லி கொடுக்கிறான்/ வைகிங் தலைவன், மித சீதோஷணம் கொண்ட நாட்டை தேடும் படலம் ஒன்றை துவங்கும் போது ஆக்கி, தான் போவதாக சொல்கிறான்./ ஆக்கியின் வைகிங் கிராமம், அரக்கரிடமிருந்து காப்பாற்றுமாறு மின்னல் தெய்வம் தாரிடம் வேண்டுகிறது. அதிசக்தி வாய்ந்த தார் அவர்களை எளிதில் ஒழிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ5 எ11 - ஆக்கியின் 1001 இரவுகள்/ புத்திசாலித்தனம்
    31 டிசம்பர், 2011
    22நிமி
    7+
    ஆக்கி பாக்தாத்தில் ஒரு கம்பளம் சுத்தம் செய்பவன். ஒலிவியா கம்பளம் வாங்க சின்ன கடைக்குள் வரும் பொழுது, முதல் அதிகாரி, பாப், அவளை கடத்துகிறான்./ஆக்கி ஜாக்கின் கம்பள கடையில் வேலை செய்கிறான். கரப்பான்கள் பறக்கும் கம்பளம் தேடுகின்றன. தேடும் பொழுது ஆக்கியும், கரப்பான்களும் ஒரு ஜீனியை கண்டெடுகின்றன! அந்த விசித்திர பிறவி ஜீனி, தன் புதிய சுதந்திரத்தை அனுபவிக்க முயலுகிறது!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ5 எ12 - நிலவில் படம்/ தொடக்க இறக்கைகள்/ஆக்கியின் கண்டுபிடிப்பு
    31 டிசம்பர், 2011
    22நிமி
    7+
    பாரீஸ் 1900ல். ஆக்கியும் ஜாக்கும் கரப்பான்களை துரத்த, அவை ஜார்ஜ் மீலீஸ் புரட்சிகர ஸ்டுடியோவிற்குள் ஒளிகின்றன./ சாரல்ஸ் லிண்ட்பார்க் நியூ யார்க்கிலிருந்து முதல் முறையாக விமானத்தில் அட்லாண்டிக் கடலை கடக்கும் இறங்காத பயணம் மேற்கொள்கிறார். ஆனால் அவர் மூன்று திருட்டு பயணிகளையும் எடுத்து செல்கிறார்./ 1700. கரப்பான்கள் ஜாக் வாங்கிய ப்ரெஷர் குக்கரை திருடுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ5 எ13 - சூரியனின் ஒளியில்/ தங்க காய்ச்சல் / சிறப்பு பலிபூஜை
    31 டிசம்பர், 2011
    22நிமி
    7+
    மச்சு பிச்சுவில் ஜோயி சூரியக் கடவுளைக் கட்டுப் படுத்துவதற்காக, ஒரு இயந்திரம் வைத்து செயற்கை கிரகணங்களை உண்டாக்குகிறான்./ மச்சு பிச்சுவில் கோயிலுக்கு வரும் காணிக்கைகளை மேற்பார்வையிட நியமிக்கப்படுகிறான் ஆக்கி. கரப்பான்கள் ஒரு கிறுக்குபிடித்த ஆக்கரமிப்பாளர் உதவியுடன் ஆக்கியை வெளியேற்றி காணிக்கைகளைத் திருடுகின்றன./ ஒரு இன்கா மந்திரவாதி, பாப், தன் சாங்கிய பூஜைக்கு ஒரு பலி தேடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ5 எ14 - அடி மட்டம் / அபோல்லாக்கி பயணம் / வட துருவத்திற்கு செல்ல பந்தயம்
    31 டிசம்பர், 2011
    22நிமி
    7+
    ஆக்கி கொச்டோவின் காலிப்சோ பயணத்தில் சேர்கிறான். ஆக்கி ஒரு மோதிரத்தை தண்ணீரில் நழுவ விடுகிறான். அதை அவன் ஒலிவியாவிடம் கொடுக்க எண்ணியிருந்தான்./ ஆக்கி தன் காருடன் கேப் கானவெரல் அருகில் தொலைந்துவிடுகிறான், ஜோயி அவனுடைய வரை படத்தை திருடி அவனை விண் வெளி கப்பலுக்குள் அனுப்புகிறான்./ ஏப்ரல் 1909இல் ஜாக் வட துருவத்தை முதலில் அடைய முயல்கிறான். ஆக்கி அவன் குழுவில் இருக்கிறான்தான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ5 எ15 - ஜாக் ரோமியோவும் பாபெட்டும்/முகமூடிகள்/மார்க்கி டா வின்சி
    31 டிசம்பர், 2011
    22நிமி
    7+
    வெனிசில் கோண்டோலா ஓட்டும் ஜாக் பாப் டோகேவின் மகள் பாபெட் மீது பரிதாபமாகக் காதல் கொள்கிறான்./ ஆக்கி ஒரு கான்ஃபெட்டி தயாரிப்பு நிபுணன். டாகே மாறு வேட நடனத்தில் ஒரு பெரிய கான்ஃபெட்டி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்கிறான். / வெனிஸ் 1500ல். ஆக்கி, மார்கியின் முன்னால், ஒரு தோல்வி அடைந்த கலைஞன். மார்கியோ கலையிலும் விஞ்ஞானத்திலும் கை தேர்ந்த பல்துறை வித்தகன்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ5 எ16 - ஒரு நாள் அரசர்/ஒரு கரடி பொம்மைக்கு என் ராஜ்ஜியம்/ஆக்கியும் எகிப்து எழுத்துக்களும்
    31 டிசம்பர், 2011
    22நிமி
    7+
    நெப்போலியன் போர் நடந்த போது ஆக்கி ஃப்ரென்ச் படையில் பணியாளனாய் இருக்கிறான். நெப்போலியன் காதலியை ரகசியமாக சந்திக்க, ஆக்கியை அவனாக மாறுவேடம் போடச் சொல்கிறான். /ஆக்கி நெப்போலியனின் வலது கை சட்டையின் உள்ளே வைkkum மர்மத்தை அறிகிறான். பேரரசர் ஒரு பொம்மையை மறைத்து வைத்திருக்கிறார்/ எகிப்து போரில் நெப்போலியனின் வலது கையாக இருந்த ஆக்கி சாம்போலியனை சந்திக்க அவன் தொல் பொருள் ஆராய்ச்சி வேலைக்கு அழைக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ5 எ17 - உயர் கூடார வண்டி /சாநாடு பால்/ யாக் பண்டிகை
    31 டிசம்பர், 2011
    22நிமி
    7+
    ஜாக்கும், ஆக்கியும் உயர் வண்டி கூடாரத்தில் ஒரு இளைப்பாறும் நிலையம் நடத்துகின்றனர். ஒலிவியா அங்கு உணவுக் கடை நடத்துகிறாள்./ மங்கோலியாவில் ஆக்கி, ஒலிவியா ஒரு உயர் வண்டி கூடார இளைப்பாறும் நிலையம் நடத்துகிறார்கள். கரப்பான்கள் ஆட்டுப் பால் தட்டுப்பாடு ஆகிறது./உயர் வண்டிக் கூடாரத்தில் யாக் பண்டிகை. ஆக்கியின் உதவியோடு, ஒலிவியா தன் சிறிய யாக்குடன் சிறந்த யாக் நிபுணர் பட்டத்திற்கு போட்டியிடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ5 எ18 - கரப்பான்களின் விழிப்பு/விண்வெளியில் வீட்டுவேலை/ விண்வெளி வேற்று மனிதன்
    31 டிசம்பர், 2011
    22நிமி
    7+
    கேப்டன் ஆக்கிக்கு ஒரு உறைந்த கிரகத்தில் பூமி உருவாக்கப் பணி. தன் உயர் தொழில் நுட்பம் நிறைந்த விண்கலத்தில், ஆக்கி பனிக்கட்டியில் உறைந்த மூன்று கரப்பான்களை விடுவிக்கிறான். / ஆக்கி, ஒரு சுகாதார நிபுணன், எல்லாவற்றையும் சுத்தமாக வைத்திருக்க விரும்புபவன். ஆனால் தலைவன் பாப் சுத்தம் 99.97% மட்டுமே என்கிறான்./ பாப் ஆக்கியையும் ஒலிவியாவையும் ஒரு அழகான கோளையும் ஒரு பெரிய கோழி கப்பலையும் காண அனுப்புகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ5 எ19 - முதல் சமுராய்/ஆக்கி-சுமோ/ மங்கா நட்சத்திரம் ஆக்கி
    31 டிசம்பர், 2011
    22நிமி
    TV-Y
    நிஞ்சா கரப்பான்களால் சமுராய் ஜாக் அடிபட அவன் ஆக்கியை மாற்று சமுராயாக தயார் செய்ய வேண்டும். இதில் ஆக்கிக்கு விருப்பம் இல்லை. ஆனால் சமுராயாக ஆவது ஒலிவியாவின் கனவு./ மத்திய காலத்தில் ஜப்பானின் தலை நகரான எடோ. ஆக்கி சீமான் பாப்புடன் மோதுகிறான். / ஆக்கி பிரபல ஓவியக் கலைஞன் ஹோகொசாயின் உதவியாளன். வாழ்க்கையில் அயர்ச்சி அடைந்த ஆக்கி ஜப்பானிய சித்திரக் கதை மங்காஸ் வரைந்து சரி செய்ய முனைகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ5 எ20 - வண்ணக் கோளாறு /மோசடி வணிகம்/ மகா திட்டம்
    31 டிசம்பர், 2011
    22நிமி
    7+
    ஜாக் அடி வாங்குவதைப் பார்த்து ஆக்கி வண்ணத்தை கண்டு பிடிக்கிறான்-வேட்டைக்கு போவதை எளிதாக்க முதலில் திட்டங்களை வரைவதற்கு வசதியாக./ ஆக்கி சக்கரம் என்பதன் பலன்களை திடீரென உணர்ந்து, அதை மேம்படுத்துகிறான். கற்கால கிராம வாசிகளுடன் அவன் கண்டுபிடிப்பை பகிர துடிக்கிறான்!/ ஒரு கோழியைப் பிடிக்கும் கிறுக்குத்தன ஓட்டத்தின் பின், கரப்பான்கள் ஒரு பாவ்பாப் மரத்தை - ஆக்கி, ஜாக்கின் வீட்டை - கொளுத்தி விடுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ5 எ21 - அதிசய நால்வர்/உலோகமனிதன்/காப்பாற்றும் இசட்மென்
    31 டிசம்பர், 2011
    22நிமி
    7+
    டீடீ மைக்ரோவேவை தவறாக உபயோகிக்கிறான். ஆக்கி, ஜாக், ஒலிவியா, பாப் அபூர்வ சக்திகள் பெறுகின்றனர்!/ ஆக்கி ஒரு விஷேச ஆடை வாங்குகிறான், கரப்பான்களை பிடிக்க பறப்பதற்காக! சீக்கிரம் அவன் எல்லா இடத்திற்கும் பறக்கிறான், நகரத்துள்ளோருக்கு உதவ./ மூன்று ஆபத்தான கரப்பான்களும் சிறையிலிருந்து தப்பிக்கின்றன. ஒலிவியா, ஜாக், பாப் - இந்த மூன்று இசட்மென் தங்கள் கைவரிசையை காட்டுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ5 எ22 - புராணக் கதை ஆக்கி/ஆக்கியின் 12 வேலைகள்/ஆக்கியும் மினோடாரும்
    31 டிசம்பர், 2011
    22நிமி
    TV-Y
    ஆக்கியும், கரப்பான்களும் ஒருவரை ஒருவர் துரத்தியவாறு ஒலிம்பிய கடவுளரின் மாளிகையில் வந்து சேர்கின்றனர்./ஒலிம்பிய கடவுள் மாளிகையில்: அதேனா, ஜீயஸும் ஹேட்ஸும் வீட்டுவேலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறாள்./ ஜீயஸ் ஒரு புதிய ரோமானிய மேலுடையை, ஒலிவியரியானிடம் செய்ய பணிக்கும் பொழுது, கரப்பான்கள் அவள் தையல் கலைக் கூடத்தை நாசம் செய்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ5 எ23 - பன்றி சாபம்/ ஆக்கியும் கிட்டப்பார்வை கொண்ட சைக்லாப்சும்/ஆக்கியும் பனி மூட்ட கடல் கன்னிகளும்
    31 டிசம்பர், 2011
    22நிமி
    7+
    ஆக்கி கடவுளின் விருப்பங்களுக்கு இரையாகிறான். அவனுடைய கப்பல் மந்திரவாதி ஸர்செ தீவுப் பகுதியில் மூழ்குகிறது./ வீடு திரும்பும்போது ஆக்கிசியஸ் தூங்கிக் கொண்டிருந்த பொசீடியனை தொந்தரவு செய்துவிட, அவன் எழுந்து கோபத்தில் ஒரு புயலையே உண்டு செய்கிறான்./ கரப்பான்கள் திசை மானியை கெடுத்துவிடுகின்றன. அதனால் ஆக்கிசியசின் கப்பல் திசை மாறி கடல் கன்னிகள் இருக்கும் இடத்திற்கு வருகின்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ5 எ24 - கோப வாழைப்பழங்கள் / காட்டின் குழந்தை / சிலையின் விழிப்பு
    31 டிசம்பர், 2011
    22நிமி
    7+
    1150ன் கிமர் அரசு. ராஜா இரண்டாம் சூர்ய அமன் ஜாக்கையும் ஆக்கியையும் ஒரு கோயில் கட்ட உத்தரவிடுகின்றான். (இதுவே பிற்கால அங்கோர் வாட் ). ஆனால் ஆக்கிதான் ஜாக்கின் ஒரே உதவியாளன்./ ஆக்கி ஒரு சிறுவனை தெருவில் காண்கிறான். ஜாக்கின் கண்காணிப்பில் அவனை விட்டு பெற்றோர்களை தேடுகிறான்./ 12ம் நூற்றாண்டு: கரப்பான்கள் ஆக்கியின் வீடு, படுக்கை, குளியல் அறை, சமையல் அறை எல்லாவற்றையும் ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ5 எ25 - என் மரத்தின் கீழ்/ பகல் கனவு/ சூப்பர் டெமோர்
    31 டிசம்பர், 2011
    22நிமி
    7+
    ஆக்கியின் கையில் உள்ள பூச்சி விரட்டியால் அடி வாங்கிய பின், ஊரில் உள்ள ஒரே பாவ்பாப் மரத்தை வெட்டி அவன் மேல் விழ செய்வதன் மூலம் கரப்பான்கள் பழி வாங்க நினைக்கின்றன./ஆக்கியின் ஒரு அதிசய சக்தி: அவன் பாடும் போது, மழை பெய்து கிராம மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும். ஆனால் ஜோயி அவனது குரல் வளையைக் கட்டி விடுகிறான்./ கரப்பான்கள் ஆக்கியை பைத்தியமடிக்கின்றன. அவன் ஒரு தீர்வு தரும் சூனியக்காரனின் உதவி நாடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 26 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.